Sunday, April 27

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 15

முந்தைய பதிவு (பாகம் 14) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கிறது..,


"..வாலிக்கும், சுக்ரீவனுக்கும் ஒரு சண்டை நடக்குது..,

சுக்ரீவன் என்ன சொல்றான்..ராமா..ஆஞ்சநேயர் மூலமா 

உன் பிரச்னை எல்லாம் கேள்விப்படேன்..,

நீ மட்டும் வாலிய கொண்ணு எடுத்துட்டேன்னா

எனக்கு சாம்ராஜ்யம் வந்துடும்..நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்..,

அப்படின்னா என்ன அர்த்தம்..,

நமக்குள்ளயேதான் வாலியும் இருக்கு..நமக்குள்ளயேதான் சுக்ரீவனும் இருக்கு.

உன்னுடைய ஆணவத்தை நீ அழித்துவிட்டேயானால்

புத்தியான நான் உனக்கு செயல்பட ஆரம்பிப்பேன்..

சரி..நீங்கஆஞ்சநேய சுவாமி யாரு சாமி..,

ஆஞ்சநேய சுவாமிதான் சத்குருநாதர்..!

ராமாயணத்துல பார்த்தீங்கன்னா

எல்லா வேலையுமே ஆஞ்சநேய சாமி என்டர் ஆனபிறகுதான்

வேகமா போகும்..அதுவரைக்கும் மைல்ட்டா போயிட்டு இருக்கும்.., 

இன்டர்வல்லுக்கு அப்புறம் பாஸ்ட்டா போகும்.

ரெண்டுபேருக்கும் சண்டை நடக்குது..வாலிக்கும்..சுக்ரீவனுக்கும்..,

நீங்க பாத்தீங்கன்னா, ஆணவத்துக்கும்,புத்திக்கும் 

அவ்ளோ ஈசியா ஐடன்டிபை பண்ணமுடியாது.

ஆணவம் என்ன பண்ணும்..,

திறமசாலி மாதிரி தன்ன காட்டிக்கும்..எல்லாம் தெரியுமே..,

எல்லாம் தெரியுமே..அப்டிம்பாங்க..கடைசியில தோத்துப்போவான்..,

பர்ஸ்ட் என்ன பன்றாரு ராமன்..அந்த ஜீவாத்மா..,

யாரு ஆணவம்..யாரு புத்தின்னு அவரால ஐடன்டிபை பண்ணமுடியல..,

இங்கதான் நான் ஒரு விஷயத்த கேட்க விரும்புகிறேன்..,

ராமன் அப்படிங்கறவன, கடவுளா ஏத்துக்கொள்ள நாம மறுக்கிறோம்..,

ஆனா,ராவணனை தமிழனா, நாம ஏத்துக்கிறோம்

ஆயிரந்தான் ஆனாலும், ராமன் மேல இருந்து வந்திருக்கான்யா..,

அங்கயிருந்து வந்திருக்கான்யா

கைபர் போலன் கணவாய் வழியா வந்திருக்கான்யா..,

ராவணன் நம்மாள்யா..,

அத முதல்ல கட் பண்ணி எரிஞ்சிரணும்..,

ராவணன் என்ன பண்றான்…,

அடுத்தவன் பொண்டாட்டிய கைய புடிச்சி இழுத்திருக்கான்..,

அது தமிழர் பண்பாடா..?

அரசியல் மாதிரி போயிடுது..வேணா ரைட்..,

என்ன பண்றாங்க..ஆஞ்சநேயர் சாமி..சத்குரு நாதர் ஐடியா கொடுக்கிறாரு..,

ரைட் பாலம் கட்டு..காண்ட்ராக்ட் விடாத..நாமளே கட்டலாம்..,

பின்னாடி பிரச்னை வரும்..அரஸ்ட்..கிரஸ்ட் பண்ணுவான்..,

ரைட் கட்டியாச்சு..இங்கயிருந்து அங்க போறாங்க..எல்லாருமே..,

ஆஞ்சநேயர் போறாரு..அப்படியே போய் ஒரு சர்வே பாக்கறாரு..,

சத்குரு நாதர் என்ன பண்ணுவார்னா, எப்பவுமே..இதப்பா..இவன் நல்லவன்..,

இவன் கெட்டவன்..இவன்கூட நீ சேரதே..அப்படின்னு சொல்லுவாரு கண்டிப்பா..,

நீங்க யார சத்குருநாதரா நம்பிட்டு இருக்கீங்களோ…,

யார நாம குருவ நம்பிட்டு இருக்கோமோ..,

அவரு ஐடெண்டிபை பண்ணி சொல்லுவாரு..ஆனா, நாம கேக்கமாட்டோம்.

நல்லவேள ராமன் கேட்டான்..இவன் என்ன பண்றான்..,

கும்பகர்ணன அப்படி எட்டிப்பாக்கறான்..,

நல்ல தூங்கறான்..சரி ரைட் இவன வென்று விடலாம்..,

டக்குனு..ராவணனோட இடத்த பாக்குறான்..நிறைய பெண்கள்…,

நிறைய மதுப்புட்டிகள்..ஈசியா காலி பண்ணிடலாம் இவனை..,

டக்குனு போனாவிபீஷணன்..தியானம் பண்ணிட்டு இருக்கான்..,

ஆஹா..இவன வெல்லமுடியாது..நம்ம சைடு இழுத்திடணும்.. எப்படி..?

ஒருத்தன் நல்லா தூங்கறான்..இவன வென்று விடலாம்..,

அந்த கும்பகர்ணன் வேற யாருமில்ல..நம்மகிட்டயே இருக்கக்கூடிய தூக்கம்தான்..,

அப்பாஏழுநாள்ல எக்ஸாம் வருது.. அப்படின்னா...,

நாளைக்கு படிச்சிக்கலாம்..நாளைக்கு பாத்துக்கலாம்..,

நாளைக்கு எக்ஸாம்னா, இன்னைக்கு வரும்பாருங்க தூக்கம்.. ,

அற்புதமா இருக்கும்..,

அதுதான் கும்பகர்ணன்..,

நம்மகிட்டயே உறக்கம்னு இருக்கக்கூடிய சோம்பேறித்தனம்தான் கும்பகர்ணன்.

ராவணனும் நம்மக்கிட்டயே இருக்ககூடியதுதான்.. டிஸ்போசல் கப்

அங்க விபீஷணன பாக்கறாரு ஆஞ்சநேயர்..,

ஆஹா..அவன் தியானம் பண்றான்..மெடிடேட் பண்றான்….,

சிவச்சின்னங்கள் அணிஞ்சிருக்கான்இவன வெல்லமுடியாது.

இவன நம்ம பக்கம் இட்டுக்கணும்..,

வால்மீகி ராமாயணத்த ஆழ்ந்து படிச்சீங்கன்னா,

விபீஷனனுக்கும், ஆஞ்சநேய சுவாமிக்கும் பெரிய உரையாடலே நடக்கும்..,

விபீஷணன தன்பக்கம் இழுப்பதற்காக, ஆஞ்சநேய சுவாமியான சத்குருநாதர்,

சர்வ வல்லமையும் காட்டுவாரு..,

எப்பா என்னைப்பாரு..,

என்னைமாதிரி ஒருகோடி பேரு அங்க இருக்கான்..ஒரு உதைக்கு தாங்க மாட்டே நீ..,

இருந்தாலும்..அவன் நல்ல தியானி..நல்ல யோகி..,

தர்மம் தெரியும்..ஆட்டோமேடிக்கா, இங்க வந்துர்றான்..,

ராமாயணக்கதை நமக்கு நல்லா தெரியும்..

சாமி அந்த இந்திரஜித் யாரு..?

என்னன்னா, நம்மள நாமளே பெரிசா நினைச்சிக்கறது..,

ஏன்னா, இந்திரஜித் அதனாலதான் அழிஞ்சிப்போவான்.., 

எப்படி..தன்னைத்தானே,பெருமையாக எண்ணிக்கொள்ளுதல்..,

தம்பி நான் இப்ப ஒரு போன்போட்டா, பத்துபேர் வருவான் பாக்கறீயா..,

நான் டைரக்டா சிஎம்கே போன் பண்ணி  பேசுவேன்..,

அவன்கிட்ட போனே இருக்காது.இல்லாட்டி கார்டுல காசு இருக்காது..,

எப்படி...தன்னைத்தானே, பெருமையாக எண்ணிக்கொள்ளுதல்..,

மனோநிலை சார்ந்த மாயாஜாலம்னு பேரு அதுக்கு.

நம்மள நாமே தப்பாக கற்பித்துக்கொள்ளுதல்..அதுதான் இந்திரஜித்..,

இந்த மாயா வேலையிலதான் சமயத்துல நம்மளே மாட்டிக்குவோம்.. , 

அதனாலதான்,பாத்தீங்கன்னா

லட்சுமணன் மூர்ச்சயடைஞ்சு கீழே விழுந்துடுவான்..,

ராம, லட்சுமணரை பாத்தீங்கன்னா,

அந்த மாயா என்ற விஷயத்துல,மயங்கி கீழே விழுதல்..,

அப்பயும் யாரு காப்பாத்தறா..சத்குருநாதராகிய ஆஞ்சநேயசுவாமி..,

இந்த சஞ்சீவி மூலிகைன்னு எடுத்துட்டுவர்றாரே..அது ஒரு மலை..,

அதுல நிறைய செடிகள் இருக்கும்னு சொல்றோமே..அதுதான் ஹீலிங் டெக்னிக்..,

சாமி..எனக்கு என்னான்னு தெரியல..ரொம்ப தலைவலிக்குது சாமி..,

சரி அப்படின்னுட்டு கை வைப்பாரு..சரியாபோயிடும்..,

அந்த சஞ்சீவி மூலிகைதான்..இட்ஸ் கால்டு ஹீலிங் டெக்னிக்ஸ்..,

ரைட்..அதுல இருந்து மீட்டு எடுத்தாச்சு..,

அடுத்து..கும்பகர்ணன்..இது உங்களுக்கு தெரியும்..,

கும்பகர்ணன் வான்ட்டனா, சொல்லுவான்..,

நீர்க்கோள வாழ்வு நச்சி நெடுதுநாள் ……..,

அண்ணே..நீர்க்கோளம் வாழ்வு மாதிரிதான் லைப்….,

ஆயிரம்தான் தூங்கினாலும் அவன் நல்லவன்..

நீர்க்கோள வாழ்வை நச்சி..,

நீர்க்கோளம் போன்ற வாழ்க்கைண்ணே..நம்ம வாழ்க்கையெல்லாம்..,

அவங்கள பாத்தா சாதாரணமான ஆட்கள் மாதிரி தெரியல..,

நான் எழுந்த உடனேயே பாத்தேன்..நம்மள்ல பாதிபேர காணோம்..,

எப்படி..இது வரைக்கும் ஒரு பயகூட செத்துப்போகலை..,

இந்திரனோடு சண்டைபோடும் போதுகூட.. இப்பபாத்த..பாதிபேர காணோம்..,

பாதி யாணைகளைக்காணோம்..பாதி குதிரைகளைக்காணோம்..,

ஒருவேள நான் போர்க்களத்துக்கு போயி மடிஞ்சுட்டா, தயவுசெய்து சீதைய உட்ரு…,

என்னால் வெல்ல முடியாத ராமன..உன்னால் வெல்ல முடியாது..

எப்படி..இந்த கும்பகர்ணன் வேற யாருமில்ல…,

நம்ப ஆழ்ந்து உள்ளேயே இருக்கக்கூடிய மனசாட்சி..,

நம்ம தோல்வியை நாமே ஒப்புக்கொள்ளுதல்.

அய்யோ..தெரியாம தூங்கிட்டோமோ..

ஆஹா..தெரியாம போஸ்ட்போன் பண்ணிட்டமே..,

சரி..நாளைக்கு ஒருநாள் ஒக்காந்து படிச்சிமுடிச்சிடலாம்..,

அப்படி நினைக்கறவன் கூட தப்பிச்சுடுவான்..,

கடைசி நேரத்திலே கரை சேருதல்..,

கடைசி நேரத்துக்குள்ள உங்க இன்ஸ்டிங்ட் சொல்லும் பாருங்களேன்..எப்படி..?

சிகரெட் பாக்கெட்ல தெளிவா எழுதியிருப்பான்..,

ஸ்மோகிங் இஸ் இன்ஜூரியஸ் டு ஹெல்த்..அப்டின்னு..,

அதுதான் கும்பகர்ணன்..

நோநோ..எடுத்து அடிக்கிறோம் பாருங்க..அதுதான் ராவணன்…,

இன்னும் உள்ள போனீங்கன்னா, பச்சை லைட்டு கடை நிறைய இருக்கும்..,

அந்த பாட்டில்ல பாத்தீங்கன்னா, எழுதி இருக்கும்..,

குடி குடியை கெடுக்கும்..,

நம்ம கண்ணு அத பார்க்கும்…,

நம்ம கும்பகர்ண மூள அங்க வேலை செய்யும்குடிக்கக்கூடாது..,

இன்னைக்கு மட்டும் குடிச்சுக்கலாம்..அது ராவணன்..,

ஏன்னா..கும்பகர்ணன் சொல்லுவான்..அறிவுருத்துதல்..,

ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல்..ராவணன்

அறிவுருத்துதல் கும்பகர்ணன்..,

ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் ராவணன்..,

எப்படி அறிவுருத்தறது..இவ்ளோநாள் தோத்துட்டோம்..,

இவ்ளோநாள்...தப்பு செஞ்சுட்டோம்.இப்பவாவது திருந்திடுவோம்..,

நம்ம மனமே நம்ம உறுத்தும்..அட்டா நாம தப்பு பண்ணிட்டோம்..

சிலபேர் சொல்லுவாங்க..சாமி நான் எந்த தப்புமே பண்ணல..,

எனக்கு ஏன் இந்த நிலைமை..?
  
எந்த தப்புமே பண்ணலையா..நாம..?

எறும்புக்குக்கூட இவரு துரோகம் பண்ணலையாம்..,

அப்படியா..?

நல்லவங்க நாலுபேரு சொல்லுபாப்போம்.. அப்படின்னா.. யோசிப்பாரு..,

ஏன் அவரு பேர சொல்லவேண்டியதுதானே..,

சாமி..நான் எந்த தப்புமே பண்ணல சாமி யாருக்குமே..,

எனக்கு ஏன் இந்த நிலைமை..ஒகே.

நான் எறும்புக்கு கூட துரோகம் பண்ணல சாமி..,

அப்படியா..ஒரு நல்லவங்க ஒரு நாலுபேரு சொல்லுங்க .., 

அப்படின்னா..புத்தர்....யேசு..காந்தின்னு..அந்த நாலாவது பேர 

உலகம் இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறது..,

இதல மத்தவங்களாவது பராவயில்ல..காந்தியோட நிலைமை படுபரிதாபம்..,

காந்தியப்பத்தி ஒரு மாபெரும் விழிப்புணர்வு நமக்கு இருக்கு..,

என்ன..அன்னைக்கு கடை கிடையாது..,

எப்படி ஒரு விழிப்புணர்வு..,

எப்பதெரியுமா..நமக்கு காந்திஜெயந்தின்னே தெரியுது..,

காந்தி சிலைக்கு மாலை போடும்போதெல்லாம் இல்ல…,

கடை லீவ் உட்டானே..என்ன இன்னைக்கு காந்தி ஜெயந்தியா மாப்பிள்ள..?

இன்னைக்கு காந்தி ஜெயந்தியை எப்படி ஐடன்டிபை பன்றோம்னா..,

என்னைக்கு கடை இல்லயோ அன்னைக்கு காந்திஜெயந்தியா..ரைட்..,

அது ஒரு பெரிய விழிப்புணர்வு..,

முன்னாடியே வாங்கி வச்சுக்குவோம்..விழிப்புணர்வு..,

கண்ணாடிய பாக்கும்போது நாம கரெக்டான்னு தெரியனும்..,

நம்மள நாமளே..உற்றுநோக்குதல்…,

................நாளை தொடரும்,