Saturday, June 28

' சென்னையில் வாழ்ந்த பறக்கும் பெண் சித்தர்..! ' தமிழ்த்தென்றல் திருவிகாவே நேரில் பார்த்திருக்கிறார்..!!

"…சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும்

அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார்.  
ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா

அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர் சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர்

அப்போது சென்னை மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது

அம்மையார் பறவை இனத்தில் சேர்ந்தவர் என்றும் அவரிடம் பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன என்றும், ஊர்தல் (Evolution) அறப்படி அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று அவரால் விளக்கப்பட்டது

அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லலை

யான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்டாவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்

பறவை நாயகியர் நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்…"

-இது 'உள்ளொளி' நூலில் தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள் 
பறவை சித்தர் பற்றி எழுதிய குறிப்பு.

இப்படிக் குறிப்பிடப்படும் அந்த பறவை சித்தரின் பெயர் ஸ்ரீசக்கரை அம்மா..,

ஸ்ரீ சக்ர அம்மா

சிவனையும், ஸ்ரீசக்ரத்தையும் வழிபட்டு வந்ததால், இவருக்கு ஸ்ரீசக்ர அம்மா என்றிருந்த பெயர் மருவி, காலப்போக்கில் ஸ்ரீ சக்கரை அம்மாவாக மாறிப்போனது..,

அட்டமா சித்திகளில் ஒன்றான, லஹிமா எனும் காற்றில் பறக்கும் சித்து கைவரப்பெற்ற மகாயோகி இவர்.அப்படி இவர் பறந்ததால் அப்போது சென்னையில் ஏற்பட்ட பரபரப்பைத்தான் திருவிகவே தனது நேரடி சாட்சியமாக பதிவு செய்து வைத்திருக்கிறார்..,

சுவாமி விவேகானந்தர், ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப்பரதேசி, போளூர் விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ ரமண மகரிஷி போன்றோருடன் ஸ்ரீ சக்ர அம்மாவிற்கு சந்திப்பு நிகழ்ந்தவைகளுக்கான ஆதாரங்கள் உள்ளன..,

அம்மா மஹாசமாதி அடைந்த பிறகு, இவரது சமாதிக்கு வந்த மஹாபெரியவா இங்கு ஐந்து நாட்கள் தங்கி இருந்து தவம் செய்திருக்கிறார்..,

'மஹாபெரியவா'

எத்தனை பெரிய சக்திமையமாக அம்மாவின் மஹாசமாதி இருக்கும் என்பதை மஹாபெரியவா இந்த இடத்தை தேர்வு செய்ததிலிருந்தே  நாம் புரிந்துகொள்ளலாம்..,

இத்தனை மகத்துவம் வாய்ந்த ஸ்ரீசக்ர அம்மாவின் மஹாசமாதி சென்னை திருவான்மியூரில் கலாஷேத்திரா ரோடில் அமைந்துள்ளது.

ஸ்ரீசக்கரத்தின் சக்தி பிரவாகமாக, திகழும் இந்த மஹாசமாதியில் அம்மாவின் சிலையுடன் ஒரு கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நாளை 29 (ஜூன்) காலை 7.30முதல் 9மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

நேரில் தரிசிக்க வாய்ப்பு இருப்பவர்கள் சென்று, ஸ்ரீ சக்ர அம்மாவின் பரிபூரண அருளை பெறுங்கள்..குருவே சரணம்..!

தொடர்புகொள்ள ; விஸ்வநாத குருக்கள் -9444017389

Thursday, June 26

அதிசய நிகழ்வின் வீடியோப்பதிவு...! ராம நாமத்தை நேரில் கேட்க வந்த குரங்கார் (அனுமன்)..!


'ராமநாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள்' (முந்தைய பதிவு)

இதுதான் நம்ம பிரபஞ்சவெளியில் பிளாக்ல இதுவரை எழுதப்பட்ட பதிவுகள்லயே, அதிகம் பேரால் ரசிக்கப்பட்ட ஒரு பதிவு..,

காரணம், இந்த படங்கள்ல இருக்குற பக்தி பலரையும் சிலிர்க்கவைத்தது..,

அப்படிப்பட்ட நிலையிலதான், இன்னைக்கு எதிர்பாராம, 
அதே நிகழ்வோட ஆதாரமா, 

அந்த ராமாயண உபன்யாசத்துக்கு குரங்குவந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் கிடைச்சது..,

புகைப்படங்களப்பாத்து நம்பிக்கை வராதவங்க கூட இந்த வீடியோவ பார்த்தா, நிச்சயம் பிரமிச்சுதான் போவாங்க..,


ஒரு சின்ன ரீகேப்

இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஒரு முக்கிய நகரம் ரட்லம் (Ratlam). இங்கு ஊரின் மையப்பகுதியில காளிகாமாதா கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ ராமாயண சரிதம் உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. 

அப்போது, யாருமே எதிர்பாராமல் திடீரென, மேடைக்கு வந்த ஒரு வெண்குரங்கு, சிறிதுநேரம் ராமாயண உபன்யாசத்தை மேடையில் அமர்ந்து கேட்டுவிட்டு, அந்த உபன்யாசகரை கட்டித்தழுவி, தலைமீது, கைவைத்து ஆசி கூறிவிட்டு, அங்கிருந்த ஸ்ரீ ராமர் படத்தை வணங்கிவிட்டு சென்றது.., 

பார்த்து ரசியுங்கள்...ராமநாமம் ஜெபியுங்கள்..!


ஜெய்ராம்..ஸ்ரீராம்..ஜெய்..ஜெய்ராம்..!


Sunday, June 15

'வெள்ளிப்பேழையை பரிசளிப்பவர்தான் உனது குரு..!' வெளிநாட்டு அன்பருக்கு விவேகானந்தர் சொன்ன தீர்க்க தரிசனம்..!!

உலகம் ஓர் அற்புதம்…அந்த அற்புதம் எத்தனையோ கோணங்களில் எத்தனையோ முறைகளில் வெளிப்படும் விதங்கள்கூட அதிசயங்களே…

அந்த அதிசயங்கள் பலநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஞானியாக, ஒரு சித்தபுருஷனாக பூவுலகில் அவதரிக்கின்றன.

ராமனோ, கண்ணனோ, ஏசுவோ, நபிகளோ…அப்படி அவதரித்தவர்களே.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் அப்படி அவதரித்தவர்களே ஆவர்.


விவேகானந்தர் (பழைய படம்)
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.

மாக்ஸ்முல்லர் என்ற மகான், “உலகில் மனிதனாகப் பிறப்பதோடு பாரதத்திலும் பிறக்க வேண்டும். ஆன்மிக உலகில் பாரதத்திற்கு அப்படி ஒரு சிறப்பு உண்டு” என்று கூறினார்.

இந்த மண்ணில் எத்தனையோ சித்த புருஷர்கள். 
நரேந்திரன் என்ற சாதாரண மனிதன் சுவாமி விவேகானந்தனாக நிமிர்ந்ததும் 
இங்குதான்- ராமகிருஷ்ண தேவர் கருணையால்!

அந்த விவேகானந்த சித்த புருஷனை உலக அரங்கினுக்கு அனுப்பிவைத்த பெருமையும், அந்த ஞானவள்ளல் நாடு திரும்பியதும் அரசரே முன்னின்று அடியார்கள் புடைசூழ வரவேற்ற பெருமையும் இந்த மண்ணுக்கு உண்டு!

திக்குதிசை தெரியாத அமெரிக்க நாட்டில் அவருக்கு இந்த நாட்டின் சமயம் சார்ந்த மடம் ஒன்றை சான்று கேட்ட சமயம், “அந்த நாய் அங்கேயே பனியில் விரைத்துச் சாகட்டும்”
(Let the dog freeze and die) என்று பதில் அளித்த தாம். ( இதனை எடுத்துக் கூறியவர் லூயி ஃபிஷர்)
  
அச்சமயம் அவரை அடையாளம் கண்டுகொண்ட ஹார்வார்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ரைட் விவேகானந்தரைப் பார்த்து, “ஐயனே உங்களைப் பார்த்து சான்றிதழ் கேட்பது சூரியனைப் பார்த்து ஒளி வீச உனக்கென்ன தகுது இருக்கிறது என்று கேட்பது போல இருக்கிறது” என்றாராம்!

“To ask you, Swami, for credentials is like asking the sun to state its right to shine”
என்று கூறுவிட்டு, அந்த சர்வ சமய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பாரோசுக்கு தானே இவ்வாறு கடிதமும் எழுதினாராம்:
“நம்முடைய மிகவும் படித்த எல்லா பேராசிரியர்களையும் ஒன்றாகக்கூட்டினாலும், அவர்களைவிட, மெத்தப் படித்த மனிதர் இவர்…” என எழுதினாராம். அங்கு அவரது வாக்கெல்லாம் ராமகிருஷ்ணரது வாக்காகவே இருந்தது.

அவரை சித்தபுருஷனென ஏன் கூறுகிறோம்?


விவேகானந்தர் (பழைய படம்)

ஒரு அமெரிக்க அன்பர் விவேகானந்தரை குருவாக ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொண்ட சமயம், “உனக்கென குருநாதன் பிற்காலத்தில் வரப் போகிறார்” என்று கூறினாராம்.

அவரை எப்படி அடையாளம் காண்பது எனக் கேட்டபோது, “அவர் உனக்கு ஒரு வெள்ளிப் பேழையை பரிசளிப்பார்”  என்று கூறினாராம்.

 அவர் கூறியதைப் போலவே பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமெரிக்க அன்பருக்கு பரமஹம்ஸ யோகானந்தர் வெள்ளிப் பேழையைப் பரிசாக அளித்தாராம்!
அந்த அமெரிக்க அன்பர் விவேகானந்தரின் தீர்க்க தரிசனத்தை வியந்தாராம்!

“கோடிக்கணக்கான மக்கள் பட்டினியாலும், பசியாலும், அறியாமையாலும் வாடும்வரை யாருடைய வாழ்வையும் அழித்து தாம் கல்வி கற்றார்களோ அவர்களை கொஞ்சமும் நினைக்காத அவர்களை துரோகிகள் என குற்றம் சாட்டுகிறேன்”  என விவேகானந்தர் குமுறினார். 

ஒருமுறை விவேகானந்தர் ஐரோப்பா சென்றபொழுது, ஜெர்மனியில் வேதங்களை ஐம்பது ஆண்டுகள் முயன்று மொழிபெயர்த்து புத்தகங்களாக்கிய மாக்ஸ்முல்லரையும், உபநிடதங்களையும் கீதையையும் மொழிபெயர்த்த டஸ்கன் என்பவரையும் சந்தித்திருக்கிறார்.
(இந்த டஸ்கனின் மொழிபெயர்ப்பிலே திளைத்த ஸ்கோபன்ஹேவர் என்பவர் அவரது நூல்களை தலையில் வைத்து தெருவெல்லாம் கூத்தாடினாராம்).

விவேகானந்தர் தம் கடைசி நாட்களில் இவ்வாறு கூறினார்:

“…இந்த உடம்பை பழைய, கிழிந்த சட்டையைப் போல களைந்து எறிந்தாலும், இந்த உலகம் இறைவனோடு ஒன்றி இருப்பதை உணரும் வரை ஒவ்வொரு மனிதனையும் உள்நின்று ஊக்கிக் கொண்டே இருப்பேன்…”

விவேகானந்த சித்த புருஷர் நம் மக்கள் மத்தியில் 150 ஆண்டுகள் முன் வாழ்ந்து மறைந்தாலும் இன்றும் நம் மனதில் வாழ்கிறார்.


பகவான் யோகிராம் சுரத்குமாருடன் கவிஞர் பெருமாள் ராசு  
 கட்டுரையாளர் அறிமுகம்: ஸ்ரீ இரா.பெருமாள் ராசு, ஆசிரியராக 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். கவிதை, ஓவியம் ஆகிய துறைகளில் இன்றும் தொடர்ந்து ஈடுபடுபவர், திருவண்ணாமலை சித்தர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்தவர், ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் எழுதிய "மாத்தி யோசி" தொடர் பிரபலமானது. 10 நூல்களை எழுதி இருக்கிறார்.

நன்றி : பாபாஜி சித்தர் ஆன்மீகம் - தீபாவளி மலர் - 2013


Tuesday, May 13

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 24


முந்தைய பதிவு (பாகம் 23) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,


"....இந்த ஊருக்கு ஏன் சென்னைன்னு பேரு வந்தது தெரியுமா..?

சென்னப்பநாயக்கர்னு ஆண்டாராம்..நோ..நாம வச்சிக்கிட்டோம்..,
சென்னை அப்டின்னு இருக்கும்.. அத பிரிச்சீங்கன்னா, செம்மையான நெய்னு அர்த்தம்..
செம்மையான நெய் எப்ப வரும் தெரியுமா..உடலிலே எந்த குறையும் இல்லாத பசுமாடு கன்றை ஈன்ற பிறகு,  முதல் 7 வாரத்தில் கிடைக்கக்கூடிய பாலில் இருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு பேருதான்  சென்னை..,

அப்படியாப்பட்ட பசுமாடுகள் மிகுந்த ஏரியாதான் இந்த  சென்னையாம்..இது நான் சொல்லல..கல்கி எங்க தன்னை பிறப்பிப்பதாக காட்டிக்கொள்கிறாரோ.. சென்னையின்னு அவரு குறிப்பிடல..அது வேற..ஏய்..நீ என்ன சென்னைன்னு புதுசா கதை உட்றனு நினைக்காவேணா..,

அவரு அப்படி குறிப்பிடுகிறார்மூணுபக்கமும் கடல் சூழ்ந்திருக்கும்..அந்த இடத்திலே..அதற்கும் கீழே ரத்தக்களறியாக ஆகும்..ஸ்ரீலங்கா பிரச்னை..அதிகமான வலம்புரிசங்குகள் விளையும்..பே ஆப் பெங்கால்..,

சங்குன்னதும் ஒரு விஷயத்த சொல்லணும்..நம்ம ஆஸ்ரமத்துக்கு..நல்ல ஒரு சகோதரி..மிகப்பெரிய ஒரு கிப்ட் கொடுத்தாங்க..அது ஒரு வலம்புரி சங்கு…,

அந்த பத்திரிகையில போட்டிருப்பேன்..விஷ்ணு சொல்றதா..ருக்வேதத்துல 8வது பரீட்சத்துல சொல்லுவாரு..என்னை இந்தலோகத்தில் சங்காகவும், அல்லோகத்தில் சக்கரமாகவும் பார்க்கலாம்..,

ஆக்சுவலா, சங்குன்னாலே..வலம்புரியா இருந்தாதான் பிராப்தம்.. வலம்புரின்னா,ரைட்..
இடம்புரின்னா, லெப்ட்..சங்கு பாத்தீங்கன்னா, மோர்ஆர் லெஸ் லெப்ட்டாதான் இருக்கும்..நோ..நோ..நீ வலம்புரிசங்காக என்னை காணும் பட்சத்தில் என்னை பூலோகத்திலேயே பாத்துடலாம்..அப்படி இல்லன்னா, நீ மேல தான் வரணும்..சக்கரமாத்தான் பாக்கணும்..,

சர்ரா நமக்கு கிடைக்குமா..கிடைக்குமான்னா, ஒரு நாள் கிடைச்சிருச்சி..,
இப்ப நம்ம ஆசிரமத்துல அந்த வலம்புரிசங்கு இருக்கு..உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது வந்து அந்த வலம்புரிசங்கை பாருங்கள்..,

சரி சாமி..சந்தடி சாக்குல மார்க்கெட்டிங்கெல்லாம் பண்ணாதீங்க..இல்ல..,

கல்கி அவதாரம் பத்தி என்ன சொல்றீங்க..ஒண்ணுமில்ல..,

யார் யாரெல்லாம் கல்கி..

நாம கல்கின்னா, ஒரு குதிரையில கத்தி வச்சிட்டு வருவாரு..நோ..,

அவரு ஆழ்ந்து சொல்றது நீங்க புரிஞ்சிக்கணும்..,

அப்படியே வேறமாதிரி டிரான்ஸ்லேட் பண்ணனும்..,

சாமி..நாம கல்கி அவதாரமா எடுக்கலாமா.. எடுக்கலாமே..எப்ப..?

ஷாம்பு போட்டு குளிச்சிட்டு சலூனுக்கு போனீங்கன்னா, நீங்கதான் கல்கி..,

யாராவது போயிருப்பமா..,

இதுக்கு முன்னாடி ராமரே போயிருக்க மாட்டாரு..,

சரி..என்ன சாமி..உளர்றீங்க..நோ..நோ..பேக்ட்..,

கல்கின்னா, என்ன..,

இப்படி நீங்க இருந்தா கல்கி..,

சவரம் பண்றவருக்கு அந்த இடம்தான் தொழில்..அந்த இடம்தானே தெய்வம்..அது அப்ப கோயில்தானே..அப்ப கோயிலுக்கு ஏன் பல்லு விளக்காம போற..நிறைய பேரு இதுக்குன்னே சட்டை வச்சிருப்பான்..அத துவைக்கவே மாட்டான்..அங்க போயிட்டு அப்படியே..என்னவோ சலூன் கடைக்குப்போனா..வீட்ல உள்ள பெண்கள் எல்லாம் பதறுவாங்க..அப்படியே தொடாததொடாதன்னு.. வாட்..நோ..அவன் கோயிலுக்கு போயிட்டு வர்றான்யா..அப்ப என்ன பண்ணனும்..போகும்போதே..அவரும் ஒரு மனிதர்தானே..அவன மதிக்கணும்..ஆசையா முடிவெட்டணும்..ஊருபட்ட அழுக்கோட போவான்..
அந்த சட்டையப்பாத்தா பரிதாபமான முறையில அவனுக்கே இருக்கும்..பிச்சை போடற அளவுக்கு  போட்டுட்டு போவான் சட்டைய..சலூனுக்கு போடற சட்டையோட நம்மாளுங்க..கோயிலுக்கு முன்னால உக்காந்தா நிறைய சில்லற தேத்தலாம்..அந்தளவுக்கு போறாங்க..அப்படியெல்லாம் இருக்ககூடாது..,

அது ஒரு கோயில்..அது ஒரு மனிதநேயம்..நீங்க எங்கயும் இறைநேயம் ஒண்ணு இல்ல பாருங்களேன்..மனிதநேயம்..,ஆண்கள்தாங்க அப்படி இருக்காங்க..பெண்கள் பாருங்க..பியூட்டி பார்லர்க்கு போகும்போதே அழகாதான் போறாங்க..வெளியேவரும்போது அசிங்கமா வறாங்க..,பெண்கள் எதாவது தப்பா நினைச்சிக்க போறாங்க..,

சரி..ரைட்..,

சரி சாமி வேற எப்படி நாம கல்கியாக மாறலாம்...?

என்னைக்காவது உங்கள..ரோடுல நீங்க போகும்போது 108டோ...ஒரு ஆம்புலன்சோ..உங்கள கடந்து செல்லும்போது..ஒரு நிமிஷம்…உங்களுக்கு எந்த தெய்வம் பிடிக்குதோ…பகவானே அந்த உயிர் திரும்பி நல்லபடியா வரணும்னு வேண்டிக்கிட்டீங்கன்னா நீங்கதான் கல்கி..,

ஆகையால..நீங்கள் அத்தனைபேருமே..பத்தாவது அவதாரத்தை எதிர்நோக்கி இருக்கவேண்டாம்..,


நீங்கள் அத்தனை பேருமே தசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி தான்…!"


                                                    ..............நிறைவுபெற்றது..................நன்றி

Monday, May 12

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 23

முந்தைய பதிவு (பாகம்22) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கிறது..,


"...எந்த ஒரு மனிதனும் கடவுளைத்தேடி கண்டடைய முடியவே  முடியாது..நீங்க தேடினீங்கன்னாவே மாட்னீங்க..,தேடறதுக்கு வந்து எங்கயோ மறைந்திருக்ககூடிய மறைபொருள் எல்லாம் அல்ல  இறை தத்துவம்..,

வேகண்டா இருக்கு..வாப்பா..தயவுசெய்து என்ன அலவ் பண்ணேன்..உள்ள அலவ் பண்ணு..கெஞ்சுது..இறை அனுபூதி கெஞ்சுது..நாம தயாரா இல்ல..நோ..,ஆகையால இப்ப நாம என்னா கத்துக்கணும்..அலவ் பண்ண கத்துக்கணும்..எந்த ஒரு விஷயத்தையும் அலவ பண்ண கத்துக்கணும்..ரைட் சாமி..,

அவதாரப்பெருமைகள்ல பாத்தீங்கன்னா,கிருஷ்ண அவதாரம் நடந்துகொண்டிருக்கும்போதே, பலராம அவதாரம் நடந்துரும். ஆனா, பலராம அவதாரம் என்னாத்துக்கு எதுக்குன்னு நம்ம நிறையபேருக்கு தெரியவே தெரியாது..,பலராம அவதாரம்தான் இருக்குற அவதாரங்கள்லயே பெஸ்ட் அவதாரம்..,இதுல பெஸ்ட்..பெட்டரு..இது சூப்பர் குவாலிட்டி..இது தரை டிக்கெட்..இது பர்ஸ்ட் கிளாஸ்ன்ல்லாம் பிரிக்கல..ஒரு பேச்சுக்கு சொல்றேன்..,
என்ன காரணம்னா, பலராம அவதாரத்துல எந்த ஒரு ஆயுத த்தையும் அவரு எடுக்கவே மாட்டாரு..

ஏர்கலப்பைய வச்சிருப்பாரு..பலராம அவதாரத்துல ஆழ்ந்து பாத்தீங்கன்னா, ஏர்கலப்பைய வச்சிருப்பாரு..என்ன சொல்றாரு..தசாவதாரங்கள்ல பாத்தீங்கன்னா,
எங்கயுமே எந்த ஒரு அவதாரத்துக்குமே வேலை கிடையாது..பலராம அவதாரத்துல மட்டும்தான் அவரு ஒர்க் பண்ணுவாரு..என்ன விவசாயி..,

மஹாவிஷ்ணு..அவதாரம் எடுக்கும்போது புரபஷனலா எடுத்தது பலராம அவதாரம்..என்ன சொல்றாரு..தம்பி..ஏர்முனைக்கு எதிர்முனை எதுவுமே இல்ல..ஒரு பாட்டுல கூட வரும்..விவசாயத்த தயவுசெய்து கைவிட்றாத..பிளாட்டெல்லாம் அதிகமா போட்றாத..எதிர்காலத்துல வீடு இடிச்சி விவசாயம் செய்யறமாதிரி ஆயிடும்..எப்படி..இப்ப பிளாட்டு போட்டுடற..ஓகே ரைட்எதிர்காலத்துல என்னா ஆகும்..,வீட்ட இடிச்சி நீ விவசாயம் பண்ணுவே..அந்த நிலைமைக்கு வரக்கூடாது..,

நாங்கூட அறிவுறுத்துவேன்..இருக்கற புரபஷன்லயே..பகவானே காட்டின புரபஷன்..விவசாயம்..,

இருக்குற தொழில்லயே பெரிய தொழில் விவசாயம்..நாங்கூட சொல்லுவேன்..நிறையபேரு வருவாங்க..என்ன பண்றீங்க..சும்மா விவசாயம் பண்றேங்கம்பாங்க..யோவ்….அதான்யா பெரிசுவிசிட்டிங்கார்டு போடு..ராமசாமி, கீழே விவசாயின்னு போடு..ஏன் போடமாட்டேன்ற..இசிட்..கம்ப்யூட்டர் இன்ஜினியர்னு போட்டுக்கிற..டாக்டர்னு போட்டுக்கிற..லொட்டு லொசுக்கெல்லாம் போட்டுக்கிற..,

சாப்பிட்டு ஆவனுமா எல்லா பயலும்..ஆகையால..போடு..
பேர போடு..விவசாயின்னு போட்டு விசிட்டிங்கார்டு அடி..கொடு..,

தட் இஸ் கால்ட் பை ரெவல்யூஷன்..,

இருக்கற அவதாரங்கள்லயே..இந்த ரெவல்யூஷன்..புரட்சின்னு பாத்தீங்கன்னா,பலராம அவதாரம்..என்ன. .எல்லாம் போதும்டா..ஞானமாவது கீனமாவது..வயிறு முக்கியம்டா..,

எப்படி...அது ஞானமெல்லாம் பாத்துக்கலாம்...நாளைக்கு..நாளான்னிக்கு பாத்துக்கலாம்..ஒன்னும் பிரச்னையில்ல..சாப்பாட்டுக்கு என்ன வழி இப்ப..விவசாயத்த தயவுசெய்து கைவிட்றாத..அதைத்தவிர வேற ஒண்ணும் பண்ணமுடியாது..தட் இஸ் த பஸ்ட் புரபஷன்..காட்றதுதான் பலராம அவதாரம்..ரைட்சார்..,

முடிவா என்ன..கல்கி..கல்கி அவதாரத்த நான் எப்ப எடுக்கப்போறேன்..
நான் சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்..,

                                                                                                     ...............நாளை தொடரும்,

Sunday, May 11

உயிரோடு மீன் முழுங்கிய குரு, சிஷ்யர்களுக்கு ஒரு யோக பாடம்..!

கோரக்நாத்

அடர்ந்த காடுகரடுமுரடான பாதை,
எங்களோட குருநாதர் முன்னால நடந்து போயிட்டே இருந்தாரு ..,
அவர நாங்க எல்லாரும் பின்தொடர்ந்து போயிட்டே இருந்தோம்.. எல்லாவகையிலயும், குருவோட வழியத்தானே சீடர்கள் பின்பற்றனும்..நாங்களும் அவர் பின்னாலயே போய்ட்டு இருந்தோம்..அப்பதான் வழியில நீர்தேக்கம் குறுக்கிட்டது. அது ரொம்பவே, அழுக்கா, பார்க்க சாக்கடையாட்டமா இருந்தது..கொஞ்சநேரம் அந்த நீர்த்தேக்கத்த நின்னு கவனிச்சிட்டே இருந்தாரு குருநாதர்.

இத எதுக்கு இப்படி பார்க்கிறாருன்னு நாங்களும் அவரையே பார்த்துட்டு இருந்தோம்..அப்பதான் அந்த நீர்த்தேக்கத்துல நிறைய மீன்கள் இருக்கறத கவனிச்சோம்..குட்டி, குட்டி மீன்கள்..துள்ளி விளையாடிட்டு இருந்துச்சு..,

இதத்தான் எங்க குருநாதரும் ரசிக்கிறதா நினைச்சு நாங்களும் பார்த்துட்டே இருக்கும்போதுதான், திடீர்னு, அப்படி ஒரு காரியத்த செஞ்சிட்டாரு…,
எங்களால நம்பவே முடியல..எங்க கண்ணுமுன்னாலயே
ஒரு குட்டி மீன புடிச்சு லபக்குனு, வாயில போட்டு முழுங்கிட்டாரு…,

என்னடா இது அநியாயமா இருக்கு..ஒரு சாமியாரு..அதுவும் எங்களுக்கெல்லாம் குருவா இருக்கிறவரு..எங்க முன்னாலயே, பச்சையா ஒரு மீன பிடிச்சி திங்கறாரே ..அப்படின்னு எல்லாரும் ஒருத்தர் முகத்த ஒருத்தர் ஆச்சரியத்தோட பார்த்துகிட்டோம்அவரும் எங்களோட ரியாக்ஷன கவனிச்சிட்டு ஒண்ணுமே சொல்லல..,

நாங்க எல்லாருமேகுருவ அச்சு அசலா, பின்பற்றி நடக்கறதா, உறுதிமொழி எடுத்துட்டுதான், அவருகூட வந்துட்டு இருக்கோம்..இந்த நிலையில, அவரு திடுதிப்புனு, மீன புடிச்சி முழுங்கிட்டாரு..ஆனா, எங்களமாதிரி, சாமியாருங்க அசைவ உணவு சாப்பிடக்கூடாது, அது எங்களோட ஆன்மீக பயிற்சிக்கு தடையா இருக்கும்னுதான் இதுவரைக்கும் எங்களுக்கு சொல்லிகொடுக்கப்பட்டது. ஆனா, ஆன்மீகத்துல உச்சநிலைய அடைஞ்ச எங்க குருநாதரே, இப்படி மீனபுடிச்சு முழுங்கனதும், எங்களுக்கெல்லாம், கொஞ்சம் குழப்பமாயிடுச்சு..,

இப்ப நாங்க அவர பின்பற்றாம..சாஸ்திரப்படி, இருக்கலாம்னு இருந்தா, குருவ பின்பற்றாத குற்றம் வரும், அதுக்காக, அவரு சாப்பிட்டமாதிரியே, நாங்களும் சாப்பிட்டா, எங்களோட ஆன்மீக முன்னேற்றம் தடைபடும்..இப்ப என்ன செய்யறது.. எல்லாரும் யோசிச்சோம்..,

குருக்கள் எப்பவுமே, இதுமாதிரி எதாவது, சிக்கலான பரிட்சைகளை சிஷ்யர்களுக்கு வச்சிகிட்டே தான் இருப்பாங்க..அதனால, குருவ பாலோப்பண்றதுதான் சிறந்த வழின்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டோம்..,

உடனே, எல்லாரும், அந்த நீர்த்தேக்கத்துல இருந்து, ஆளுக்கொரு குட்டி மீன புடிச்சி, வாயில போட்டு முழுங்கிட்டோம்.., அவ்ளோதான்,

குருநாதர் இதையெல்லாம் அமைதியா பார்த்தாரு.., எதுவுமே சொல்லல..திரும்பவும் காட்டுக்குள்ள நடக்கத்தொடங்கிட்டாரு..,

நாங்களும், வெற்றிக்களிப்போட நடக்கத்தொடங்கிட்டோம்..,

கொஞ்சதூரம் கழிச்சி, திரும்பவும் ஒரு நீர்த்தேக்கம் வந்தது..ஆனா, இது முன்ன வந்ததுமாதிரி இல்லரொம்ப தெளிவான நீர்த்தேக்கமா இருந்தது..பார்க்கும்போதே அதுல இருக்குற தண்ணிய குடிக்கணும்போல இருந்தது.

நாங்க நினைச்சமாதிரியே, எங்க குருநாதரும் அந்த நீர்த்தேக்கத்துக்கு பக்கத்துல போய் நின்னாரு

கொஞ்சநேரம், மூச்ச இழுத்துபிடிச்சு, வயித்த உள்ளுக்கு இழுத்து, ஏதோ விக்கல் எடுக்குறமாதிரி என்னமோ பண்ணாருதடால்னு, அவரு வாயில இருந்து அந்த குட்டிமீனு உயிரோட வெளிய வந்துச்சு..அத பிடிச்சு..இந்த புது நீர்த்தேக்கத்துல விட்டாருஅதுவும் சுத்தமான அந்த தண்ணியில ஜம்முனு நீச்சல் அடிச்சி, இப்படியும், அப்படியுமா, ஆனந்தமா எங்க எதிர்லயே குறுக்கும், நெடுக்குமா நீந்தி விளையாடியது..,

எங்களுக்கெல்லாம், ஒரு நிமிஷம் பக்குனு ஆயிடுச்சு...என்னடா, இந்த மனுசன் பாட்டுக்கு, வாய்க்குள்ள போன மீன உயிரோட வெளிய எடுத்துட்டாரு...இது தெரியாம, நாம ஆளுக்கொரு மீன முழுங்கி தொலைச்சிட்டமேன்னு, ஒருத்தர ஒருத்தர் பார்த்து திருதிருன்னு முழிக்க தொடங்கிட்டோம்...

இப்போதான் எங்க குரு எங்க எல்லாரையும் பார்த்து கேட்டாரு..

"..நான் செஞ்சத பார்த்து நீங்க எல்லாரும் மீன புடிச்சு முழுங்கினீங்களே..,இப்பவும், என்ன மாதிரியே, நீங்களும், முழுங்கன மீன உயிரோட வெளிய எடுத்து, இந்த தண்ணியில விடுங்க.."அப்படின்னாரு..,

அவரு மீன சாப்பிடராருன்னு நினைச்சுதான் நாங்களும் மீன சாப்பிட்டோம்...ஆனா, அவரு சாக்கடையாட்டம் இருக்குற தண்ணியல இருந்து, அந்த குட்டிமீன உயிரோட அவருடைய வயித்துல வச்சி காப்பாத்தி எடுத்துவந்து , இந்த நல்ல தண்ணியில விட்டிருக்காரு..,

ஒரு மீன உயிரோட தன்னோட வயித்துக்குள்ள வச்சி எடுத்துவந்து, திரும்பவும் அத பாதுகாப்பா வெளிய எடுக்கறதும், யோக்ககலையில இருக்குற ஒரு அம்சம்தான்,அதத்தான் இன்னைக்கு நமக்கெல்லாம் குரு செஞ்சி காட்டியிருக்காரு..அது புரியாம.. மீன புடிச்சு உயிரோட முழுங்கி, நாங்க பட்டபாடு..,

கோரக்நாத் மகான்..இவருதான் தன்னோட சிஷ்யர்களுக்கு முன்னால மீன் முழுங்கி அத திரும்பவும், உயிரோட எடுத்த காட்டின யோகி. சாமியார்கள்ல நாத் பரம்பரைன்னு ஒன்னு இருக்கு, அந்தவகையில இந்து நாத் யோகப்பரம்பரைய சேர்ந்தவருதான்  இவரு. இந்தியா முழுக்க சுற்றித்திரிஞ்சிருக்காரு.., நிறைய இடங்கள்ல இவரு தியானம் செஞ்ச குகைகள் இன்னைக்கும் இருந்திட்டு இருக்கு...,இவங்களோட வாழ்க்கை முழுக்கவே நிறைய ஆச்சரியங்களும், அதிசயங்களும் ஏராளமா இருக்கு, அதையெல்லாம், நாம அடுத்து வரும் பதிவுகள்ல பார்ப்போம்..,

  

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 22


முந்தைய பதிவு (பாகம் 21) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,

"...சிம்ப்ளா ஒரு விஷயம்..எனக்கே நடந்த ஒரு விஷயம் பாருங்களேன்..,
ஆசிரமத்துல யங்ஸ்டர்ஸ் நிறைய வருவாங்க..நம்பள தேடி..நல்ல பசங்க..,

தம்பிவாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்ணனும்னா, எதிரிகள் இருக்கக்ககூடாதுயா..எதிரிகளே இருக்கக்கூடாது..அப்படின்னு சொல்லிட்டு எல்லாருக்கும் ஒரு டம்மி ஷீட்டு கொடுத்தேன்..பேனா கொடுத்தேன்..யார்..யார் உனக்கு நெகடிவ்வா தெரியறாங்க..எழுதுறா..அப்படின்னேன்..எல்லா பயலும் அடிசனல் ஷீட்டு கேக்கறான்..,

ஒரே ஒருத்தன் மட்டும்  பாத்தீங்கன்னா, புஷ்பா, ரங்கதுரைன்னு எழுதியிருந்தான்..எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது..என்னடா, பரவாயில்ல ரெண்டே ரெண்டு பேர்தானா உனக்கு பிடிக்காது ஆளு இந்த உலகத்துல..,யார்ரா அதுன்னேன்..எங்க அம்மா, அப்பாங்கறான்..,

ஒன்னு இப்படி இருக்கான்..இல்ல..அப்படி இருக்கான்..அப்படி இருக்ககூடாது..,

ஜீவாத்மா..இந்த குசேலர் என்னா பண்றாரு..அப்படி வாயில்ல போறாரு..அங்க டிஸ்டர்ப் பண்றான்..வரக்கூடாதுன்னு..இந்த இடத்துலதான் மீறனும் நாம..உடைக்கறான் அந்த இடத்த..நோ..நான் என் பரமாத்மாவ பாக்காம திரும்பவே மாட்டேன்..அப்படின்னு சொல்லிட்டு என்ன பண்றான்..ஒரு கால தூக்கி மட்டும்தான் வைக்கிறான் குசேலன்..அங்க மேல இருந்து கிருஷ்ணர் பாக்கறாரு..,

எப்படிதெரியுமா ஓடியார்ராரு..ஒரு அடி தான் எடுத்து வைக்குது ஜீவாத்மா..பரமாத்மா என்னா பண்ணுது..டப்..டப்புனு தட்டி விடுது..அந்த கிரீடத்த கழட்டி வீசுது..போட்டிருக்கற நகையெல்லாம் கழட்டி வீசுது.. என்ன காரணம்..ஓடிப்போய் அரவணைக்கனும் அவன..அப்படி அரவணைக்கும்போது எதாவது குத்திரப்போகுது அவனை..எப்படி..கடவுள் எப்படி நினைக்குது பாருங்க..கடவுள் அப்படி நினைக்குமாம்..,

நம்ம  எத்தனித்தால்..அந்த இறை அனுபூதியை அனுபவிக்க எத்தனித்தால், கடவுள் என்ன பண்ணுமாம்..அது மிக எளிமையா மாறிடுமாம்..அதத்தான் அங்க கிருஷ்ணர் உணர்த்தராரு..

குசேலன் ஒரு அடிதான் வைக்கிறான்..இவரு நூறு அடிக்கு மேல ஒடிவர்ராரு..தடதடன்னு ஓடியாருராரு..,

டேய்..நண்பா..அப்பான்னு இறுக்கி கட்டி பிடிச்சிக்கராரு..இன்னும் கொஞ்சம் இறுக்கியிருந்தாருன்னா அவன் செத்துபோயிருப்பான்..,

அந்த நகையெல்லாம் கழட்டி வீசாராராம்..அய்யோ..நண்பனை கட்டிப்புடிக்கும்போது குத்திடுச்சின்னா என்ன பண்றதுன்னு..,

எடுத்த உடனேயே கேக்கறாரு..எப்பவுமே பாத்தீங்கன்னா, கடவுளை அடைய வேண்டும்..ஒரு நல்ல விஷயத்தை அடையவேண்டும்னா..ஞானம்ங்கரது மஸ்ட்..அந்த ஞானத்த அடையறதுக்கு புத்திசாலித்தனங்கறது ரொம்ப மஸ்ட்..,

அப்ப கிருஷ்ணர் என்ன கேக்கறாரு..பரமாத்மா..எனக்காக வேண்டி சிஸ்டர் என்ன கொடுத்தாங்க..சிஸ்டர்னா..யாரு..புத்தி..என்னா கொடுத்துச்சி..,

டக்குன்னு இவரு கையில இருந்த அந்த அழுக்குமூட்டைய கொடுத்தாரு..மத்தவனெல்லாம் பதர்றான்..,ஆஹா..ஆஸ்பிடல்ல சேக்கறமாதிரி ஆயிடப்போகுது..ஜான்டீஸ் கீண்டிஸ் வந்துடுப்போகுது.., ஒன்னுகெடக்கு ஒன்னு ஆயிடப்போகுது கிருஷ்ணருக்கு..,
கண்டதையும் சாப்பிடறானே..அய்யோ பாவம்..அப்டின்னு..நோ..நோ..அள்ளி ஒரு வாய் தான் போடறான்..குசேலர் வீட்டுக்கு போறதுக்கு முன்னாலயே அங்க எல்லாம் மாடமாளிகையா ஆகிப்போயிடுச்சு..,

கிருஷணருடைய மாளிகைய விட அவரு பெரிசா கட்டிட்டாரு அங்க..இப்படியாக..கிருஷணர பேசினாலே..குசேலர பேசச்சொல்லும்..அப்படின்னு..கிருஷ்ணர் என்ன சொல்ல வருகிறார்…,

நான் இறை அனுபூதி.. என்னை நீ அனுமதி அவ்ளோதான்..,

நம்முடைய கிறிஸ்துவ மதத்துல கூட அற்புதமான ஒரு பைபிள் வாசகம் உண்டு..,

கேளுங்கள்  தரப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்..,

பகவத் கீதையில அற்புதமான ஒரு வசனம் உண்டு..,

ஸர்போதகேஸ்தத்தி…..தாந்தரதாயஹா..,

அப்படின்னா என்ன அர்த்தம்..நீ கேக்கவேண்டிய அவசியமே கிடையாது..ஆல்ரெடி உனக்கு கொடுத்து அனுப்பிச்சிட்டேன்..எப்படி..?
நீ கேக்கவேண்டிய அவசியமே இல்லயப்பா..உங்கிட்டயே இருக்கு..நீ தட்டவேண்டிய அவசியமே இல்ல..ஏன்னா, என்கிட்ட கதவே இல்ல..நீபாட்டுக்கு திபுதிபுன்னு உள்ள வரவேண்டியதுதான்..,

நீ கேக்க வேண்டிய அவசியமில்ல..ஆல்ரெடி உனக்கு கொடுத்துட்டேன்..உனக்கு தெரியல..,

என்னாச்சுன்னா, ஒரு பெரிய ஜமீன்தார்..ஒரு பெரிய ஆள்..அவரு காசிய நோக்கி போறாரு..நிறைய பணம் எடுத்துட்டுப்போறாரு..இத ஒரு திருடன் பாத்துடுறான்..ஆஹா, இவரு பணத்த அடிச்சிடுவோம்னு சொல்லிட்டு..ஐயா..ஐயா..பட்டைகிட்டையெல்லாம் போட்டுக்கிறான்..குபுகுபுன்னு..ஐயா..எங்க போறீங்க..காசிக்கு..நானும் காசிக்குதான்யா வறேன்..வா..வாப்பா..ரைட்..,

அங்க ஒரு மண்டபத்துல படுத்து தூங்கறாங்க..இவரு பணத்தையெல்லாம் எண்ணி பாக்கறாரு..திருடன் அப்படியே பாக்கறான்..சரி..நாம ஒரு ஒன் அவர் கழிச்சி இவரு தூங்கினபிறகு எடுத்துட்டு போயிடலாம்..,

அதேமாதிரி..தூங்கிடறாரு..அந்த ஜமீன்தார்..அந்த பணக்காரர்..உடனே, திருடன் எந்திருச்சி..தேடிகீடி பாக்கறான்..கிடைக்கல...,

மறுநாள் அதேமாதிரி பணத்த எண்றாரு..இவன் பாக்கறான்..ஒன் அவர் கழிச்சி எந்திரிச்சி பாக்கறான்..பணத்த காணோம்..என்னா சரி ரைட்..,

போயிட்டு திரும்பியே வந்துட்டாங்க..கடைசிநாள் விடைபெறப்போறான்.. அப்ப இவனே கேக்கறான்..சார்..சார்  எனக்கு ஒன்னு புரியவே இல்ல..நானும் டெய்லி பாக்கறேன்..பணத்த எண்ற நீ..நான் திருடன்தான் அதுக்காகத்தான் வந்தேன்..அந்த பணத்த நீ எங்க வைக்கற..,

நீ திருடன்றது எனக்கு நல்லாவே தெரியும்..நான் எண்ணி முடிக்கும்போது நீ தூங்கற இல்ல..உன் தலையாணிக்கு அடியிலதான் வைப்பேன்..,

இதுபோல்தான்..நம்முடைய எல்லாத்தையுமே கொடுத்ததாக கிருஷ்ணர் கூறிக்கொண்டே இருக்கிறாரு..,

பத்தா ஷப்த..சகல பூஷண சகல லோக ஷேம..போயிட்டே இருக்கும்..,
எல்லாமே கொடுத்துட்டேன்..நீ கேக்க வேண்டிய அவசியமே கிடையாது..எல்லாமே உன்கிட்டயே இருக்குங்கறத தெரிஞ்சிக்க தட்ஸ் ஆல்..,

அதேமாதிரி தட்ட வேண்டிய அவசியமே கிடையாது..,ஏன்னாக்கா..என்கிட்ட கதவே இல்ல..,

ஏய்..நான் உன்கிட்ட நான் பக்கத்துலயே இருக்கேன்.. என்ன அலவ் பண்ணு..நீ என்ன தேடி கண்டடைய எல்லாம் வேண்டாம்..,நான் ஒன்னும் திருடன் கிடையாது..நீ தேடறதுக்கு..

அப்பா தம்பி..நான்தான்டா உன்னை தேடிட்டு இருக்கேன்..,

ஆழ்ந்து புரிஞ்சுக்கணும்..,

                                                                                        .................நாளை தொடரும்,