Sunday, April 20

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 08

ஸ்ரீவிஜயகுமார சுவாமியின் உரை தொடர்கிறது..,


"....உன் திருவடிய பாக்க ஆசைப்படுறேன்..அப்படின்னிட்டு,

வராக அவதாரம எடுத்து நோண்டிகிட்டே உள்ள போறாராம்.கீழே,

அது என்ன காரணம்..தன்மை..தன்னடக்கம்டெடிகேஷன்..,

நான் எப்படி இருக்கேன் பார்றா..

நான் எவ்ளோ பெரிய ஆளு..அவனும் எவ்ளோ பெரிய ஆளு..ஈக்வல்..,

இருந்தாலும்கீழே போறேன் பாரு..,

ஆனா, பிரம்மா அப்படி இருக்கமாட்டாரு..,

ஏன்னா, அவருக்கு நாலு தல..,

தல அதிகம்..அப்படின்னா என்ன அர்த்தம்..கர்வம் அதிகம்னு அர்த்தம்..,

அவர் என்னா பண்றாருன்னா மேல போயிட்டே இருக்காரு..,

இது எல்லாருக்குமே தெரியும்திருப்பி நாம ரிப்பீட் பண்ண வேண்டியதில்ல..,

ஏன்..வராக மூர்த்தி அவதாரம் எடுத்தாருன்றதுக்கு

அப்படி சொல்ல வேண்டியதா இருக்கு.

அப்படி எடுத்துட்டு போய்ட்டே இருக்கும்போது பாத்தீங்கன்னா

அவரு கால பாக்கல..,

ஏன்னா,சப்போஸ் கால பாக்கக்கூடிய தன்மை மஹாவிஷ்ணுவுக்கு உண்டு..,

அதுல மாற்றுக்கருத்து இல்ல..நினச்சா அவரு பாத்துட்டு போயிருப்பாரு…,

போய் தொட்டு கும்பிட்டுட்டு போயிருப்பாரு..,

அவரு டிரை பண்லேன்னு எல்லாம் இல்ல..நோ..நோ..,

அதாவது, சிலசமயம்..ரைட்..ஈகுவல் பவர் இருக்கறவங்க..,

ஜெயிப்பு, தோப்பு இல்லாம காட்டிக்குவாங்கஅந்த மாதிரி..,

அப்ப என்ன பண்றாரு..,

இவரு பிரம்மா பொய் சொல்லி மாட்டிக்கிறாரு..அது வேற விஷயம்..,

இறையனார் இப்படி கீழே பாக்கறாரு..,

ஆயிரம் இருந்தாலும் மும்மூர்த்திகள்ல நீயும் ஒருத்தன்..,

எந்த வித பிரஸ்டீஜ் இஷ்யூவும் இல்லாம, என் கால பாக்கறதுக்குன்னு போறயே..,

நீ இப்ப வராக அவதாரம் எடுக்கும்போது 

என் பாதத்தை நோக்கி பயணிக்கிறாயே..,

என்றாவது, அவதாரம் நீ எடுக்கும்போது,

உன் பாதத்தில் நான் அமர்ந்திருப்பேன்..அதுதான் ஆஞ்சநேயர்..,

அப்ப என்ன சொல்றாரு..,

சிவபெருமான் என்ன சொல்றாரு..,

டேய்..எந்த பிரஸ்டீஜூம் இல்லாம, வராக அவதாரம் எடுத்து

என்னுடைய   காலடிய பாக்க நீ டிரை பண்ற இல்ல. …

எவ்ளோ பெரிய விஷயம்..

இதே மாதிரி ஒரு விஷயத்துல..நீ அவதரிக்கும்போது..நீ கஷ்டப்படும்போது

உன் காலடியில அமர்ந்து நான் சேவகம் பண்ணுவேன்ங்கறாரு..,

அவருதான் ஆஞ்சநேய சுவாமி..,



ஆஞ்சநேய சுவாமிங்கறது சிவ சொரூபம்அத ஆழ்ந்து புரிஞ்சுக்கணும்..

 இப்ப எதுக்கு பெருமாள்,

வராக அவதாரம்  எடுத்தாரு..அப்படிங்கறத நாம புரிஞ்சிக்கிறோம்..

ஒன்னொன்னும் பாத்தீங்கன்னா

சிவனோட ஐக்கியம் ஆகி போயிட்டே இருக்கும்.

சரி..வந்தாச்சு..,

அடுத்து என்ன..?

விலங்கும் மனிதனும் கலந்ததைப்போன்ற..நரசிம்மம்..,

இந்த நரசிம்ம அவதாரத்துல பார்த்தீங்கன்னா

ஒரு பெரிய கான்செப்ட் சொல்லியிருப்பாருஎன்ன..?

.................நாளை தொடரும்,


3 comments:

R.Puratchimani said...

நல்ல தொடர்....

தனிமரம் said...

அருமையான விளக்கம்.

பிரபஞ்சவெளியில் said...

உங்கள் வருகைக்கும்,பாராட்டுதல்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி