Saturday, April 19

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 07

அடுத்த அவதாரம் என்ன...,

வராகம்..!

இந்த வராக அவதாரம்தான் இருக்குறதுலயே, பாவமான அவதாரம்.

என்னன்னா, வேற எந்த ஆக்ஸிடென்ட்னாலும், 

அவன் கவலைப்படமாட்டான்,

பன்னி மேல மட்டும் வாகனம் மோதிடுச்சின்னு வச்சிக்கங்களேன்...,

உயிரே போயிடும்.

ஆக்சுவலா, உயிர் போறது பன்னிக்கு..,

ஆனா, இவங்க பதட்டமா ஆசிரத்துக்கு வருவாங்க..,

சாமி ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்..,

நிறைய தப்பு பண்ணியிருப்பான்..அதெல்லாம் விட்டுறுவான்.., 

பெரிய தப்பு பண்ணிட்டேன்..என்ன..?

வரும்போது ஒரு பன்னி குறுக்கால வந்திருச்சு..,

இவன் பாத்து ஓட்டியிருக்கமாட்டான்..,

அதுக்கு என்ன பண்ணனும் சாமி…?

அப்படி போட்றா..ஒகே..ஒரு அஞ்சாயிரம் ரூபாய்க்கு,

ஒரு லிஸ்ட்ட போடுவோம்..,

பண்ணியே ஆவனும்பன்னி அடிச்சிட்டா, பண்ணிதான் ஆவணும்..,

எதுக்காக வந்து பெருமாள் வந்து ஒரு வராக அவதாரத்த போய் எடுக்கணும்..,

வேற எதோ..அழகழகா எல்லாம் இருக்கே.. எடுக்கலாமில்ல..,

எவ்ளோ இருக்கே அவதாரம்..,

ஏன் எடுக்கலன்னா..,

ஞானத்தபத்தி தன்னோட இரண்டாவது அப்ஸர்வேஷன்லயே சொன்னாலும்,

இந்தப்பய கேக்கலயே அப்படின்னுட்டு,

என்ன பண்றாரு..மூக்கு நீளமா இருக்கக்கூடிய அவதாரமா எடுப்பாரு.

வராக அவதாரத்த ஆழந்து பாத்தீங்கன்னா


அந்த மூக்குக்கு மேல லோகம் இருக்கற மாதிரி காட்டியிருப்பாரு.

நாம புராண ரீதியா விளக்கம் கொடுக்கலாம்..,

ஒரு அசுரன் இருந்தான்... அவன் பேர சொல்லி

அவன் கடலுக்குள்ள வந்து பூமிய வச்சுட்டான்,

அவரு நோண்டி எடுத்துட்டு வந்தாருன்னு..,

அதெல்லாம் விட்டுருங்க..நாம மெமரி பண்றதுக்காக சொல்றது..,

அப்படி போகவேண்டாம்..புராண ரீதியா போகவேண்டாம்..,

இன்டலெக்சுவலா போலாம்..,

அவரு என்ன சொல்றாரு..?

நிறைய மெடிடேஷன் டெக்னிக்ச பாத்தீங்கன்னா

மூக்கு நுனிய உற்றுப்பார்..அப்படிம்பாங்க..,

அப்படிபாத்தீங்கன்னா, 

மூக்கு நுனிய உற்றுப்பாத்தீங்கன்னு வச்சுக்கங்களேன்…,

சரசரன்னு குண்டலினி புருவமத்திக்கு ஏறும்..,

சுவாசம் கட்டுக்குள் இருக்கும்..,

அந்த வராக அவதாரத்துல வந்து தன்னோட தோற்றத்த 

எப்படி வெளிப்படுத்துவார்னா, மூக்கு நுனிய அந்த பன்றி,

வெளிப்புறமா..பார்க்கல,உள்புறமா..மூக்கு நுனியை பார்க்கும்..,

நாளைக்கு எங்கயாவது வராகர் கோயிலுக்கு போனீங்கன்னா

அங்க இருக்குற சிலைய கவனிச்சு பாருங்க..,

அவரு நேருக்குநேரா பார்க்கிறமாதிரி நிக்கமாட்டாரு

சைடாதான் இருப்பாரு..,

அப்ப பாத்தீங்கன்னா, கண்ணு இந்த மூக்க பாக்கறமாதிரி இருக்கும்..

அப்படி மூக்கு நுனியை பார்க்கும் பட்சத்திலே..லோகம் தன்வயப்படும்.

வேற எதாவது ஆப்ஜெக்ட்ட அங்க வைக்கல..,

அங்க..என்ன பண்றார்..,

மூக்கின் நுனியை உற்று பார்க்கும் பட்சத்தில் இந்த லோகம்

லோக மாச்சர்ய பவித்தார்த்யம்...(சமஸ்க்ருத ஸ்லோகம்)

அந்த அரக்கன்  ஒருத்தன் பூலோகத்த அப்படி சுருட்டி கொண்டுபோய் 

கடலுக்கடியிலுக்குள்ள  வைக்கறான்னா

அந்த அரக்கன்றது வேற யாருமில்ல அஞ்ஞானம்.

அந்த அஞ்ஞானம்ன்றது என்ன பண்றது..,கடல்னு இருக்கக்கூடிய

ஒரு அவநம்பிக்கை, ஒரு நெகடிவ் எனர்ஜிக்குள்ள போய் 

ஆழ்ந்து மறைச்சு வச்சுருவான்..அந்த ஞானத்தையும்..அறிவையும்..,

அத மூக்கின் நுனியை உற்றுப்பார்க்கும் பட்சத்தில்

தோண்டி மேல எடுத்துனு வந்துறலாம்ன்றதுதான் சயின்ஸ் இங்க..,

ரைட்இவ்ளோதூரம் போயிட்டோம் நாம..,

தண்ணியில பொறந்தா..மச்ச அவதாரம்..,

தண்ணியிலயும்,தரையிலயும் வாழுவதைப்போல..கூர்ம அவதாரம்..,

தரையில மட்டும் வாழும்படி பன்றி அவதாரமும் எடுத்தாச்சு..,

நாளைக்கு பன்னி மேல அடிச்சிராதீங்க..,

அதுமேல அடிச்சா வருத்தபடமாட்டோம்னு சொல்றதில்ல..

ஃபார் எக்சாம்பிள் உண்டு…,

ஒரு வேள உங்க வண்டியில.. சப்போஸ் அடிபட்டுருச்சின்னா

குறைந்தபட்சம் எறங்கி

நீங்க ஜெனரலா பாக்கலாம்..குரங்குக்கு கொடுக்கக்கூடிய மதிப்பை 

பன்றிக்கு கொடுக்கமாட்டோம் நாம..,

ஒரு குரங்க நாம அடிச்சிட்டோம்னு வச்சிக்கங்களேன்..,

உடனே, போன் பறக்கும்..,

பக்கத்துல..அப்படியே, தோண்டி

அங்க ஒரு சிலை வச்சி,அப்படியே பெரியகோயில் கட்டிடெவலப்பண்ணிடுவாங்க..,

ஆனா, பன்றியா இருந்தா அதோகதிதான்..,

இதுல ஒருபெரிய ஆழ்ந்த தத்துவம் என்னான்னா,

சிவபெருமான் அண்ணாமலையாரா வானுக்கும்,

பூமிக்குமாக உயர்ந்து நிற்கும்போது,

..அப்ப எடுக்குறது பன்றி அவதாரம்..வராக அவதாரம்..,

என்ன பண்றாரு..பிரம்மாவுக்கும்..விஷ்ணுவுக்கும் போட்டி வருது..

மூணுபேருமே..சூப்பர்ஸ்டார்ஸ்தான்..

இவரு என்னா பண்றாரு மஹாவிஷ்ணு..,

நீ எந்த ஆப்ஜெக்ட்ட பாக்கற..தலையா..காலா..?

நான் காலையே பாக்கறேன்..,

எப்படி..நீ பெரிய ஆளாக இருந்தாலும்..நானும் பெரிய ஆள்தான்.. ,

இருந்தாலும்.. உன் திருவடி எவ்வளவோ சிறந்தது.

சிவபெருமான்....நடராஜ மூர்த்தியா இருக்கும்போது..,

தன்னோட லெப்ட் கால தூக்கி ஆடுவாரு..,

அது ஏன் லெப்ட் கால எடுக்கறாரு..நடராஜ மூர்த்தி...,

ரைட் கால எடுத்திருக்கலாம் இல்ல..

எல்லா மிலிட்டரியிலயும் பாத்தீங்கன்னா,

பரேட்ல  லெப்ட்..ரைட்ன்னுதான் வைப்பான்..,

என்ன காரணம்..லெப்ட் அப்டிங்கறது ..ஒப்புக்கொடுத்தல்..உயிரை..,

லெப்ட..லெப்ட்ன்னா..என்ன சார் இழத்தல்தானே..அதான்..லெப்ட்..,

லோக ஷேமத்திற்காக, இந்தியன் மிலிட்டரி

லெப்ட், ரைட்னு அப்படின்னு பரேட் பண்றான்னா

என்னா இந்தியாவுக்காக ஒப்புக்கொடுக்கிறேன் என் உயிரைன்றதுதான் ,

லெப்ட் கால எடுத்து முதல்ல வைக்கறது

அதே போல நடராஜ மூர்த்தி..என்ன பண்றாரு..,

லோக ஷேமத்திற்காக, பிரபஞ்ச ரட்சிப்பிற்காக

லெப்ட் கால தூக்கி வைக்கிறாராம்..தன்னையே ஒப்பு கொடுக்கிறாராம்..,

அப்படியாபட்ட பகவான்றா நீ..,

நான் உன் திருவடிய பாக்க ஆசைப்படுறேன்..,

அப்படின்னிட்டு வராக அவதாரம் எடுத்து நோண்டிகிட்டே உள்ள போறாராம்.

கீழே..,

அது என்ன காரணம்..?

................நாளை தொடரும்,

0 comments: