Friday, April 25

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 13

முந்தைய பதிவு (பாகம் 12) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,


".....அடுத்த அவதாரம் என்ன..?

தி கம்பிளீட் மேன்..,

இப்பதான் அந்த இடத்துக்கு வர்றார்தி கம்ப்ளீட் மேன்..,

என்ன...பரசுராமர்..,

இந்த பரசுராமருக்கு பாத்தீங்கன்னா, அநேகமா, நிறைய கோயில்கள் இருக்காது..

மச்ச அவதாரத்துக்கும் கோயிலே கிடையாது..,

நாம அதிகமா பேசமாட்டோம்..அத….என்ன காரணம்னா..,

பரசுராமருடைய காலத்திலே..,

உடல் வலிமையைக் கொண்டு உலகத்தை ஆண்டுகொண்டிருந்த காலம்..,

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டமாகாது தம்பின்னு கூட,

ஒரு திரைப்படத்துல வரும்..

பரசுராம அவதாரம் என்னன்னா..உடல் வலிமையக்கொண்டு உலகத்தை ஆளுதல்..,

புஜபல பராக்கிராமங்கள வச்சு மத்தவங்கள நசுக்கறது..,

கட்டபஞ்சாயத்து பண்றது..அப்ப மிகுதியாக இருந்தது.

அதுலதான் பாத்தீங்கன்னா, சத்திரியர்கள தேடித்தேடி கொல்வாரு..,

இங்க சத்திரியர்னா

உடனே, எதோ கம்யூனிட்டி வைசா போகுதுன்னு நினைக்க வேண்டாம்..

(புத்தியை சுட்டிக்காட்டி) இந்த பலம் இல்லாமல்..,

(புஜபலத்தை காட்டுதல்) இந்த பலத்தை மட்டும் நம்புதல்..,

அது பரசுராம அவதாரம்..,

என்ன அர்த்தம்..உடல் திறன் கூட தேவையில்ல தம்பி

ஜர்த்தேதா..தபஸ் பரிபாலனா..(நெத்திப்பொட்டை சுட்டிக்காடுவது)அது இந்த இடம்

சரி ரைட்.. பரசுராம அவதாரம்..,

அடுத்ததாக என்ன..?

அதாவது பெருமாளுடைய அவதாரங்கள்லயே..பாத்தீங்கன்னா

ரெண்டு அவதாரம் சூப்பர்ஸ்டாரா இருக்கும்..,

என்ன ஒண்ணு ராம அவதாரம்..இன்னொன்னு கிருஷ்ண அவதாரம்..,

இருக்குற அவதாரங்கள்லயே பாத்தீங்கன்னா, ராமரும், கிருஷ்ணரும் ஸ்பெஷல்..,

சரி சாமி..ராமா அவதாரத்தை பகவான் எடுக்க வேண்டிய அவசியம் என்ன..?

இங்க ஆழ்ந்து பாக்கணும்..,

இங்க ராமன் அப்படின்றவன் பாத்தீங்கன்னா, கடவுள் அல்ல.

ராமன் அப்படின்னா ஜீவாத்மா..சீதை என்பவள் பரமாத்மா..,

இந்த இடத்துலதான் கம்பளீட்டா லைப் ஸ்டைல சொல்லியிருப்பாரு..,

ஆழ்ந்து புரிஞ்சிக்கணும்..,

இப்ப..ரொம்ப ராமாயணமெல்லாம் போய்ட வேண்டாம்..,

அதுக்கு பத்து நாள் வேணும்..ராமாயணம் பேசறதுக்கு..,

ஒருவேளை ஜீவாத்மாவாகிய நீ,

பரமாத்மாவை மாயம் எனும் விஷயத்தைக் கொண்டு

காணாம அடிச்சுட்டேன்னா,ரொம்ப கஷ்டப்பட்டுடவடா படுவா..,

கரெக்டா..இங்க பாத்தீங்கன்னா, மாயமான்..மாரீசன்,

கொஞ்சம் ராமர் யோசிச்சிருந்தா

எங்கயாவது ஸ்கின்னு பளபளன்னு மான்  இருக்குமா..?

மனைவி எது கேட்டாலும் செஞ்சுர்றது..,

நீங்க இந்த எக்சிபிஷன்ல்லாம் போய் பாத்தீங்கன்னா

நம்மாளு நிலைமை பார்க்க ரொம்ப வேதனையா இருக்கும்..,

இவங்க என்ன பண்ணுவாங்க லேடீஸ் பாத்தீங்கன்னா

பிரீயா வருவாங்க.., எதையுமே தூக்கமாட்டாங்க..,

நம்மாளு, ஒருபக்கம் குழந்தைய தூக்கியிருப்பாரு..,

இன்னொரு பக்கம் வெயிட்ட வச்சிருப்பாரு..,

போர்ட் லிப்ட்டர் மாதிரி போவாரு... பரிதாபமா இருக்கும்..,

உள்ள போவும்போது நல்லாதான் இருப்பாரு..,

வெளியில போகும்போது இந்த அம்மா சிரிச்சிட்டு இருக்கும்..,

இவரு பரிதாபமா இருப்பாரு..அநேக விஷயங்கள்ல இப்படித்தான்..,

நான் கோயில்ல குருக்களா இருக்கும்போது,

விசித்திரமான அனுபவங்கள்லாம் கிடைக்கும்.

ஒருமுறை ஒரு மனிதர் வந்தாரு..நல்ல மனிதர்..,

பட்டை கிட்ட எல்லாம் போட்டு நல்லா பிரஷ்ஷா..,

அர்ச்சனை பண்ணனும் சாமிசரி ரைட்..,

பேரெல்லாம் சொல்லுங்கனேன்..,

அவரு மனைவி பேர சொன்னாரு..பையன் பேர சொன்னாரு..,

பேரன் பேரெல்லாம் சொன்னாரு..,

அப்படியே ..வாட்ச் பண்ணிட்டு..ஏன் சார் உங்க பேர சொல்லலியே..,

உங்களுக்கு அர்ச்சனை வேணாமா..?

எனக்கு வீட்ல இருக்கும் அப்டின்னாரு..,

அந்த நேரத்துல பாத்தீங்கன்னா, தேங்காய் ஒடச்சா, தேங்காய் அழுவிப்போச்சு..,

அவருக்கு உயிரே போச்சு..

நாம சில சென்டிமெண்ட்..ஆனா, தப்பா வச்சிருக்கோம்..,

தேங்காய் அழுகினா, நல்லதா, கெட்டதா..?

உங்களுக்கெல்லாம் ஒரு ஆச்சரியமான விஷயம் காத்திருக்கு..,


............நாளை தொடரும்,

1 comments:

Anonymous said...

வணக்கம்

நன்றாக உள்ளது... தேங்காய் விஷயம்..ஆவலுடன் எதீர்பார்க்கிறேன்.... தொடருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-