முந்தைய பதிவு (பாகம் 13) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,
"...நாம சில சென்டிமெண்ட்..ஆனா, தப்பா வச்சிருக்கோம்..,
"...நாம சில சென்டிமெண்ட்..ஆனா, தப்பா வச்சிருக்கோம்..,
சாமிக்கு தேங்காய் உடைக்கும்போது,
அது அழுகிப்போயிருந்தா, நல்லதா, கெட்டதா..?
ஒண்ணு தெளிவா வச்சுக்கணும்…
ஒருவேளை..நீங்க..உங்க கோயில்லயோ..சாமி ரூமுலயோ..,
நற்காரியத்து விஷயமாக தேங்காய் ஒடைக்கும்போது,
அழுவியிருந்தா நீங்க காலர தூக்கி விட்டுக்கலாம்.
அன்னையிலிருந்து நம்மள புடிச்ச எல்லா கெட்ட விஷயமும்
போயிடுச்சு..அழுவிபோயிடுச்சு..அவ்ளோதான்..,
ஆழ்ந்து புரிஞ்சிக்கணும்..
சாமவேதத்துலயே இதபத்தி ஒரு குறிப்பு உண்டு..,
பகீரதி அப்படின்னு ஒருத்தி..பகவானுக்கு தேங்காய் உடைப்பா..,
108தேங்காய்..108 தேங்காயும் அழுகிடும்..,
அதுல இருந்து அவ வேற ஒரு பிறவியாக மாறிடுவாள்..,
இப்படியே விரிவா சொன்னா அந்தக்கதை இன்னும் ரொம்பதூரம் போகும்..,
ஒருவேளை நீங்க ஒரு நற்காரியத்த முதற்கொண்டோ, என்னாதோ,
தேங்காய் உடைக்கும்போது அழுவிபோயிடுச்சின்னு வச்சிக்கங்களேன்..,
ரொம்ப ஜாலியா இருக்கலாம்..டிரீட்லாம் கொடுக்க ஆரம்பிச்சிடலாம்..,
நல்லநேரம் ஆரம்பிச்சிடுச்சின்னு.. ,
ரைட்ரா..
கடலூர்ல இருந்து ஒரு சாமியார் வந்தாரு....,
மீட்டிங் போட்டு..தேங்காய் ஒடைச்சு அழுவுச்சின்னா,
நல்லதுன்னு சொன்னாருன்னு சொல்லிட்டு,
கோயிலுக்கு போகும்போதெல்லாம்,
தேங்காய் கடைக்காரரே..தேங்காய் கடைக்காரரே...,
ஒரு அழுவன தேங்காயா கொடுங்கன்னு எல்லாம் கேக்கக்கூடாது..,
அது ஆட்டோமேடிக்கா அமையணும்..,
எங்கயோ போயிட்டோம்..,
ராமன் அப்படின்றது ஜீவாத்மா..சீதை அப்படின்றது பரமாத்மா..,
இந்த பொய்யென்ற மாய மானைப்பார்த்து,
அந்த ஜீவாத்மா என்ன பண்றது,
மயங்கி தேவையில்லாம போய் தேடுது..தப்பா போய் தேடுறது..,
அப்ப பார்த்தா பரமாத்மாவ..கர்வம்....மாயை..கன்மம்..,
என்ற ராவணன் தூக்கிட்டு போயிடுவான்…
எந்த பத்து அவதாரமும் எடுக்கணும்னு இவரு ஆசைப்பட்டாரோ,
அந்த பத்து அவதாரத்தினுடைய மகிமையை அளிப்பதற்காக,
இருக்ககூடிய தலைதான் அந்த பத்து…,
அதுதான் ராவணனுக்கு பத்து தலை..,
சரி ரைட்.. காணாம போச்சு..திருப்பி வறாங்க..,
லட்சுமணனும், ராமனும் அழுது புலம்பிகிட்டே தேடிகிட்டேபோறாங்க..,
போயிட்டே இருக்கும்போது பாத்தீங்கன்னா,
சீதை ராவணனோட போகும்போது,
தன்னோட அணிகலன் எல்லாம் கழட்டி வழியெல்லாம்,
போட்டுகிட்டே போயிட்டு இருப்பா,
இத கண்டுபிடுச்சு வருவாங்களா,கண்டுபிடுச்சு வருவாங்களான்னு..,
இதேபோலத்தான் உங்களோட பரமாத்மாவும்,
உங்களுக்காக எதாவது ஒண்ண கொடுத்துகிட்டே இருக்கும்..நமக்கு தெரியாது.
இவங்க என்னா பண்ணுவாங்க..,
ஒன்னுஒண்ணா..கலெக்ட் பண்ணிகிட்டே வருவாங்க.
அது என்ன...?
பரமாத்மா..ஜீவாத்மாவாகிய நமக்கு கொடுக்கக்கூடிய சின்ன சின்ன கான்பிடன்ஸ்..,
தன்னை இருப்பதாக உணர்த்திக்கொண்டே இருப்பது..,
ரைட் கலெக்ட் பண்ணிட்டே போனான்..அவ்ளோதான் அவங்களால முடியுது…,
அப்போதான் பாத்தீங்கன்னா,ஜடாயு அப்படிங்கறவர் வந்து தடுத்து நிறுத்துவார்..,
அவருடைய இறகையெல்லாம் வெட்டி கொல்லப்படுவதாக,
ஒரு ஐதீகம் உண்டு..புராணத்துல..,
அந்த ஜடாயுன்றது வேற யாருமில்ல..,
நமக்கு அறிவுரை சொல்லக்கூடிய பெரியவர்கள்..நாம அத கேக்க மாட்டோம்..,
அவரு சொல்லுவார்..இப்படியெல்லாம் தேடிட்டு இருக்காதீங்கப்பா..,
இந்த சைடா போங்க..கிஷ்கிந்தான்னு வரும்..பாக்கி நீங்க பாத்துக்கங்க..,
அங்க நடந்த கதை உங்களுக்குத் தெரியும்..,
சுக்ரீவனுக்கும் வாலிக்கும் நடந்த பிரச்னை..,
வாலி அப்டிங்கறது பாத்தீங்கன்னா, ஆணவம்…,
சுக்ரீவன் யார்னா, புத்தி..,
ஆழ்ந்து புரிஞ்சிக்கணும்..,
இந்த இடத்துல..ஏன்னா, ராமாயணம் என்பதே
மோஸ்ட் இன்டலக்சுவல் கான்சப்ட்.
இங்க வாலிங்கறவன் பாத்தீங்கன்னா, ஆணவம்..,
சுக்ரீவன் யார்ன்னா, புத்தி..,
ராமன் ஜீவாத்மா..,
என்னைக்கும் ஆணவத்துக்கும், புத்திக்கும் பிரச்னை இருந்துட்டே இருக்கும்..,
ஆணவம் அதிகமா போச்சுன்னா, புத்தி வேலை செய்யாது..,
எவ்ளோதான் நாம அறிவாற்றலோட விளங்கினாலும்,
ஆணவம்னு வந்துச்சின்னா, நாம பாதி பலத்தை இழந்திடுவோம்..,
ஓவர் கமெண்ட் பண்ணிடுறது..ஒவர் டாமினேஷன்..,
சரி ரைட்..ஏன்னா, நாம ரொம்ப புராணத்துக்குள்ள போக்ககூடாது..,
வாலிக்கும், சுக்ரீவனுக்கும் ஒரு சண்டை நடக்குது..,
சுக்ரீவன் என்ன சொல்றான்..,
ராமா..ஆஞ்சநேயர் மூலமாக உன் பிரச்னை எல்லாம் கேள்விப்படேன்..,
நீ மட்டும் வாலிய கொண்ணு எடுத்துட்டேன்னா,
எனக்கு சாம் ராஜ்யம் வந்துடும்..நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்..,
அப்படின்னா என்ன அர்த்தம்..?
..............நாளை தொடரும்,
0 comments:
Post a Comment