Friday, June 21

திருமலை திருப்பதியின் தீர்த்தரகசியங்கள்- கம்பராமாயணக் குறிப்புகள் !

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களோட வலைப்பதிவுகள தொடர்ந்து வாசித்துவருபவர்களில்
நானும் ஒருவன். அப்படி பார்த்துட்டு இருந்தப்பதான் சமீபத்துல பசுபதிவுகள் - ன்னு ஒரு வலைப்பதிவ அறிமுகப்படுத்தியிருந்தாரு. 
கம்பராமாயண அகராதி பத்தின  பதிவு அது. சுவாரசியமா இருந்த அவரோட மற்ற பதிவுகளையும்
தேடி படிச்சுட்டு இருந்தப்பதான் சித்திர ராமாயணம் பத்தின ஒரு பதிவையும் பார்க்க நேர்ந்தது. 
ரொம்பவும் அரிதான சித்திர ராமாயண புத்தகத்தைபத்தின குறிப்புகளோட அந்தபுத்தகத்தையும்
ஸ்கேன் செஞ்சு தன்னோட பக்கத்துல இணைச்சிருந்தாரு.
அதநான்  ஒரு ரெஃபரன்ஸ்க்காக இங்க உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.(’சித்திரலேகா’வின் ஓவியங்களுடன் ஆனந்த விகடனில்
50-களில் வந்தசித்திர ராமாயணம்‘ என்ற தொடர்தான்  என்னைப் போன்ற அன்றைய 
பல இளைஞர்களுக்குக் கம்பனை அறிமுகம் செய்து வைத்தது. 

பி.ஸ்ரீ என்று அழைக்கப் பட்ட பி.ஸ்ரீநிவாசாச்சாரி எழுதிய தொடர் அது.
அவர் எழுதிய பல படைப்புகள் இன்று பதிப்பில் இருந்தாலும்,
‘சித்திர ராமாயணம்’ இன்னும் நூலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
சித்திரலேகாவின் இயற்பெயர் நாராயணசாமி ....,)


இப்படியாக அந்தப்பதிவு நீண்டது. இந்த அரிய பொக்கிஷத்தில் இருந்து
மின்னல்வெட்டியதுபோல் எனக்கு ஓர் செய்தி உதித்தது. 
அதைத்தான் இங்கே முன் வைக்க விரும்புகிறேன்.


திருமலை திருப்பதி பற்றின குறிப்புகள் கம்பராமாயணத்தில் இடம்பெற்றிருப்பது எல்லோரும் 
அறிந்திராத ஓர் ஆச்சரியம்! 
ஆனால், இன்னமும் பலர் அறிந்திராத திருமலை திருப்பதியில் உள்ள தீர்த்தங்களைப்பற்றி 
கம்பர் குறிப்பிட்டிருப்பதைத்தான் இங்கு முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும் 
என விருப்பம் கொண்டேன்.

திருமலை திருப்பதி பற்றி கம்பராமாயணத்தில் வருகிற முதல் பாடல் இதுதான்,

  ஸ்ரீ பூமாதேவி சமேத ஸ்ரீவாராஹ மூர்த்தி, திருமலை திருப்பதி


  அருந்ததிக்கு அருகு சென்று, ஆண்டு
        அழகினுக்கு அழகு செய்தாள்
  இருந்த திக்கு உணர்ந்திலாதார்
        ஏகினார்; இடையர் மாதர்
  பெருந் ததிக்கு அருந் தேன் மாறும்
        மரகதப் பெருங் குன்று எய்தி,
  இருந்து, அதின் தீர்ந்து சென்றார்,
        வேங்கடத்து இறுத்த எல்லை -


       (அருந்ததிக்கு அருகு சென்று (அவ் வானர வீரர்) அருந்ததி
  மலைக்குப் பக்கத்திற் சென்றுஆண்டு அந்த இடத்தில்அழகினுக்கு
  அழகு செய்தாள் அழகுக்கும் அழகை உண்டாக்கக் கூடியவளான சீதை
  இருந்த திக்கு இருந்த இடத்தைஉணர்ந்திலாதார் அறிய
  முடியாதவர்களாய்ஏகினார் அந்த இடம் விட்டுச் சென்றுஇடையர் மாதர்
  இடைப் பெண்கள்பெருந் ததிக்கு (தங்களது) சிறப்பான தயிருக்கு
  அருந்தேன் மாறும் மலைவாணர் சேகரித்த அருமையான மலைத்தேனைப்
  பண்டமாற்றாகக் கொள்ளும்பெருங்குன்று எய்தி யிருந்து
  மரகதமலையென்னும் பெரிய மலையை அடைந்து அங்கே தங்கியிருந்து
  அதில் தீர்ந்து (அங்கும் சீதையைக் காணாமல்) அதை விட்டு நீங்கி
  இறுத்த எல்லை (தமிழ் நாட்டின்) வரையறுக்கப் பெற்ற வடக்கு
  எல்லையாகியவேங்கடத்து திருவேங்கட மலையினிடத்துசென்றார்
  சென்று சேர்ந்தார்கள்.)

  ராவணனால் கடத்தப்பட்ட சீதையைத்தேடிய வானரப்படைகள் பல
  இடங்களில் தேடிக்கொண்டே திருமலைக்கும் வந்திருக்கின்றனர்.

  அடுத்தபாடலில் திருமலை திருப்பதியின் சிறப்புகளை பட்டியலிடுகிறார் கம்பர்

     
  ஆனந்த நிலையம்
     முனைவரும், மறை வலோரும்,
        முந்தைநாள் சிந்தை மூண்ட
  வினை வரும் நெறியை மாற்றும்
        மெய் உணர்வோரும், விண்ணோர்
  எனைவரும், அமரர் மாதர்
        யாவரும், சித்தர் என்போர்
  அனைவரும், அருவி நல் நீர்
        நாளும் வந்து ஆடுகின்றார்.

     (  முனைவரும் (வேங்கடமலையில்) மாமுனிவர்களும்மறை வலோரும்
  வேதமறிந்த அந்தணர்களும்முந்தை நாள் முற்பிறப்பிலேசிந்தை
  மூண்ட மனம் மேலிட்டுச்செய்தவினைவரும் நெறியை மாற்றும்
  தீவினைகளின் பயனாகத் தொடர்ந்து வரும் அல் வழியை மாற்றி நல்வழியில்
  திருப்பவல்லமெய் உணர்வோரும் தத்துவ ஞானிகளும்விண்ணோர்
  எனைவரும் தேவர்கள் எல்லோரும்அமரர் மாதர் யாவரும் தெய்வப்
  பெண்கள் யாவரும்சித்தர் என்போர் அனைவரும் தேவரில் ஒரு
  கையினரான சித்தர்கள் எல்லோரும்அருவி நல்நீர் (அம்
  மலையிலுள்ள) அருவியின் தூய்மையான புண்ணிய தீர்த்தங்களில்நாளும்
  ஒவ்வொரு நாளும்வந்து ஆடுகின்றார் வந்து நீராடுகின்றார்கள்.)

    இந்தப்பாடலின் பொருள்தான் மிகமிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது.

     முனிவர் முதலான இவ்வுலகத்தவரும், தேவகணங்களாகிய
  மேலுலகத்தவரும் வந்து நீராடுவதற்குரிய பெருமை மிக்க அருவிகளாலாகிய
  பல புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டுள்ளது திருவேங்கடமலையென்பது
  அங்குள்ள தீர்த்தங்கள்: கோனேரி, ஆகாய கங்கை, பாபவிநாசம், பாண்டவ
  தீர்த்தம், குமாரதாரை, தும்புரு தீர்த்தம், ஆழ்வார் தீர்த்தம் ஆகியன
  சித்தர்:பதினெண்கணத்துத் தேவர்களில் ஒரு வகையினர்.

  கபில தீர்த்தம் எனப்படும் ஆழ்வார் தீர்த்தம்

  திருமலை திருப்பதியில் பல புண்ணிய தீர்த்தங்களில் முனிவர் முதலான பலர்
  வருவதைப்பற்றின இந்தக் குறிப்பு மிகமிக முக்கியமான ஒன்று


  பெய்த  ஐம் பொறியும்,
        பெருங் காமமும்,
  வைத வெஞ் சொலின்,
        மங்கையர் வாட் கணின்,
  எய்த வஞ்சக வாளியும்,
        வென்ற நல்,
  செய் தவம் பல
        செய்குநர் தேவரால்.
    (   (அந்த மலையில்)தேவர் - தேவர்கள்பெய்த ஐம்பொறியும்(தமது
  உடம்பில்) பொருந்திய மெய் முதலாய ஐந்து பொறிகளையும்பெருங்
  காமமும்ஐம்புலன்களால் விளையும் பெரிய காம உணர்ச்சியையும்வைத
  வெஞ்சொலின் (பிறர் தம்மை) ஏசிய கொடிய சொற்களையும்மங்கையர்
  வாட்கணின் மகளிரின் வாய் போன்ற கொடிய கண்களால்எய்த
  தூண்டியவஞ்சக வாளியும் வஞ்சகத் தன்மையுள்ள பார்வையாகிய
  அம்புகளையும்வென்று (எளிதிலே) வெற்றிகண்டுசெய் நல் தவம்
  பலசெய்யத்தக்க அரிய தவங்கள் பலவற்றைசெய்குநர்செய்கின்றார்கள்.

  தேவர்கள் அந்தத் திருவேங்கட மலைக்கு வந்து
  ஐம்பொறிகளையும் அடக்கிக் காமவேதனையில்லால் பிறர் தம்மை ஏசினாலும்
  பழியே பேசினாலும் பொறுத்துப் பெண்களை மனத்தாலுங் கருதாமல் பல
  தவங்களைச் செய்கின்றார்கள் .)

  அனந்தா..அச்சுதா..கோவிந்தா..!
    
  அரிய தவங்கள் இயற்றக்கூடிய , புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த திருமலை திருப்பதி
  என்பதை இந்தப்பாடல் உணர்த்துகிறது.

  ஓம் நமோ வேங்கடேசாய..!


  வலம் கொள் நேமி
        மழை நிற வானவன்
  அலங்கு தாள் இணை
        தாங்கிய அம் மலை
  விலங்கும் வீடு உறுகின்றன;
        மெய்ந் நெறி
  புலன் கொள்வார்கட்கு
        அனையது பொய்க்குமோ?
   (    வலம் கொள் நேமி வெற்றி கொள்ளும் சுதரிசனம் என்ற சக்க
  ராயுதத்தைக் கையில் கொண்டமழை நிற வானவன் கார் மேகம்
  போன்ற கருநிறத்தையுடைய கடவுளான திருவேங்கடவனதுஅலங்கு தாள்
  இணை விளங்குகின்ற இரண்டு திருவடிகளையும்தாங்கிய தாங்கி நின்ற
  அம்மலை அத் திருவேங்கடமலையில் வாழ்கின்றவிலங்கும்
  மிருகங்களும்வீடு உறுகின்றன மோட்சத்தையடைகின் றன
  (அவ்வாறானால்); மெய்ந் நெறி புலன் கொள்வார்கட்கு உண்மை
  நெறியான தவ நியமங்களில் தன் மனத்தைச் செலுத்தும் யோகியர்
  முதலோர்க்குஅனையது அந்த மோட்சமானதுபொய்க்குமோ
  கிடைக்காமல் தவறிப் போகுமோ? (தவறிப் போகாது).

  வேண்டியதை வேண்டியபடி தரும் 'விமான வெங்கடேஸ்வரா'

       மிகப் பெருஞ்சிறப்பு வாய்ந்த அத் திருவேங்கட மலையில் வாழும்
  மிருகங்களும் வீட்டுலகத்தையடையுமென்றால்(மோட்சம்) தவவொழுக்கங்களில் நடக்கின்ற
  யோகியர் முதலோர்க்கு அந்த வீட்டுலகம் கிடைப்பது தவறுமோ என்பது.
  திருவேங்கடமலை வீட்டுப் (மோட்சம்)பதவியைத்
  தவறாது அளிக்கவல்லதாகையால்தான் 'எம்பெருமான் பொன்மலையில்
  ஏதேனும் ஆவேனே' (பெருமாள் திருமொழி 4 : 10) என்றார் குலசேகராழ்வார்.     )
  திருமலை திருப்பதியில் உள்ள பெருமாளை அடைந்தவர்களுக்கு
  மோட்சம் உறுதி என்கிறது இந்தப்பாடல்! 


  காணக்கிடைக்காத அற்புதம்- கோவிந்தனின் அபிஷகக் காட்சி  ஆய குன்றினை எய்தி, அருந்தவம்
  மேய செல்வரை மேயினர், மெய்ந் நெறி
  நாயகன்தனை நாளும் வணங்கிய
  தூய நல் தவர் பாதங்கள் சூடினார்.
       (ஆய குன்றினை (வானரவீரர்) அத்தகைய தூய்மையும் சிறப்பும்
  அமைந்த திருவேங்கடமலையைஎய்தி அடைந்துஅருந்தவம் மேய
  செல்வரை அரிய தவத்தைப்பொருந்திய தவயோகிகளைமேவினர்
  அடைந்துமெய்ந்நெறி நாயகன்தனை என்றும் அழியாத
  மோட்சநிலைக்குத் தலைவனான திருவேங்கடநாதனைநாளும் வணங்கிய
  தினமும் வணங்கி வழிபாடு செய்ததூய நல்தவர் தூய்மையான சிறந்த
  தவத்தையுடைய அப் பெரியவர்களின்பாதங்கள் சூடினார் திருவடிகளைத்
  தம் தலைமேல் சூடி வணங்கினார்கள்.

  திருவேங்கட நாதனை வணங்குகின்ற பெரும்பேறு பெற்றுள்ளவராதலால்
  அவர்களை 'அருந்தவமேய செல்வர்', 'தூய நல் தவர்' என்றுகூறினார்.   )

  திருமலைக்கு சென்ற வானரங்கள் பெருமாளை வணங்கியவர்களின் திருவடிகளை 
  வணங்கியதாக சொல்லப்படுவது எத்துணை சிறப்பு என்பதை நினைக்கும்போதே 
  உள்ளம் சிலிர்க்கும்.

  திருமலை திருப்பதியிலிருந்து வானரர்கள் விடைபெறுவதை சொல்வது இந்த கடைசிப்பாடல்

  வேங்கடவனை தரிசக்க நம்மை இட்டுச்செல்லும்
   திருமலை படிக்கட்டுகள்  சூடி, ஆண்டு அச்
        சுரி சூழல் தோகையைத்
  தேடி, வார் புனல் தெண்
        திரைத் தொண்டை நல்
  நாடு நண்ணுகின்றார்,
       மறை நாவலர்
  வேடம் மேயினர், வேண்டு
        உரு மேவுவார்.
       வேண்டு உரு மேவுவார் விரும்பிய வடிவங்களை எடுக்கும் திற
  மையுடைய வானரர்கள்சூடி (தவயோகிகளின் திருவடிகளைத் தம்)
  தலையில் சூடிய பின்புஆண்டு அத் திருவேங்கட மலையில்அச்
  சுரிகுழல் தோகையை சுருண்ட கூந்தலையுடைய மயில் போன்ற சீதையை
  தேடி அங்கே தேடிப் பார்த்து(க் காணாமல்); மறைநாவலர் வேடம்
  மேயினர் வேதங்களில் வல்ல அந்தணர்களின் வேடத்தைப்
  பூண்டவர்களாய்தெண் திரை தெளிந்த அலைகளையுடையவார் புனல்
  மிக்க நீர் நிறைந்ததொண்டைநல் நாடு சிறந்த தொண்டை நாட்டை
  நண்ணுகின்றார் சேர்பவரானார்கள்.  இந்தப்பாடலுடன் திருமலை திருப்பதி பற்றின விவரங்கள் கம்பராமாயணத்தில்
  நிறைவு பெறுகின்றன. 

  திருமலை திருப்பதியைப் பொறுத்தவரை அங்கு மிகவும் சக்திவாய்ந்த தீர்த்தங்கள்
  நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. 

  நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் திருமலை சென்றுவரும் பக்தர்களில் சொற்பமானவர்களே
  அத்தகைய புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வருகின்றனர். 

  அத்தகைய திருமலை திருப்பதியின் புண்ணிய தீர்த்தங்களை 
  உலகறிய பிரபலமடையச்செய்யவேண்டும் என்பது எமது குருநாதரின் உத்தரவு.

  எத்தகைய பாவத்தையும் போக்கும் ஆற்றல்கொண்ட புண்ணிய தீர்த்தங்கள். 
  நினைத்த மாத்திரத்தில் சக்தி தரும் அபூர்வதன்மை கொண்டவை..!

  குருவருளால் நானும் சில தீர்த்தங்களை தரிசித்திருக்கிறேன். 

  திருமலை திருப்பதி தீர்த்தங்கள்..,
  எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள்ளே புதைத்து வைத்திருங்கின்றன. 

  குருவருளால், இறையருள் கூடிவரும் வேளையில் திருமலை தீர்த்தங்கள் பற்றின 
  ஆச்சரியமான பல தகவல்கள் உங்கள் முன்னே மலரும்...,
  அதற்கு அந்த வேங்கடவன்..கோவிந்தன்..நாராயணன் துணைபுரிய வேண்டுகிறேன்.

  குருவே சரணம்!