Tuesday, April 15

தசாவாதாரம் - அறிவியலும் அவதாரமும் 03


சிறப்பான முத்திரை

சமஸ்கிருதத்தில(Sanskrit) 

சின் அப்படின்னா சிறப்பான.. இருக்குற முத்திரைகள்லயே..சிறப்பான முத்திரை 

எதுடான்னா,  சின்முத்திரை..,




இப்படி இருந்தா என்ன அர்த்தம்..

எதாவது ஒரு சாப்பாடோ எதோ ஒன்னு கொடுத்து..

ஒரு நகைய கொடுத்தோ..

ஒரு புடவைய கொடுத்தோ.. 

எப்படி இருக்குன்னா .. டக்கரா இருக்குன்னு சொல்வோமில்ல..

அதான் சின் முத்திரை.

நல்லா இருக்குஅதத்தான் நல்லா இருக்குன்னு..கைகளால சொல்றது..

சிலபேரு வாயால சொல்லமாட்டான்..

ஏன்னா, அந்த பழக்கத்தை நாம் மறந்துவிட்டோம்.

முன்னாடியெல்லாம் பாத்தீங்கன்னா,

எப்படி இருக்கீங்க..அப்படின்னும்போது..நல்லா இருக்கேங்க..

நீங்க எப்படி இருக்கீங்க.

அப்படின்றது இருந்தது

இப்ப அந்த டிரெண்ட் மாறிப்போச்சு.

இப்ப யாராவது,யாரையாவது ரோடுல பாத்து,

நல்லா இருக்கீங்களான்னு கேட்டா

நாம நல்லா இருக்கோம்னு சொன்னா அவன் நல்லா இல்லாம போயிடுவான்..,

நம்ம கிட்ட கஷ்டத்த எதிர்பார்ப்பான்..அவன்..,

"..எங்க சார் ரொம்ப கஷ்டமா இருக்கு..,

முந்தநேத்துதான் ஆஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் பண்ணாங்க..,

கேட்டுட்டு இருக்குறவருக்கு, அப்பா..ஒரு பெரிய சிறப்பு..,

"..வாங்க..காபி சாப்டுட்டு போலாம்..அப்படிம்பார்..,

இன்னும் சிலபேர் இருக்கான்..,

ஹாஸ்பிடலுக்கு போறதே எப்படிதெரியுமா  போவான்..,

பேஷண்ட் பைபாஸ் சர்ஜரி பண்ணி படுத்துகிடப்பான் ஐசியூனிட்ல..,

அவருக்கே டிரிப்ஸ் மூலமாத்தான் குளுக்கோஸ் ஏறிகிட்டு இருக்கும்..

சாத்துக்குடி வாங்கிட்டுப்போவான்..

எங்கிட்ட வருகிறவங்களுக்கு நான் அறிவுறுத்தறது உண்டு.

சாமி உங்க ஆசிரமத்தின் மூலமாக நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..

இதுக்கு முன்னாடி இருந்த  சப்ஜக்ட்ட விட்டு,

நாம எங்கயோ போயிட்டு இருக்கோம்.

முதல்ல ஆசிரமம்னா என்ன..?

ஒவ்வொரு ஆசிரமத்திற்கும் ஒரு பணி உண்டு.

+ ஷிரமம்னு பிரிங்க..

ஷிரமம்னா கஷ்டப்படறது இல்ல

ஷிரமம்னா சுயமாக கஷ்டப்படுவது அல்ல.

பிற ஜீவனை நினைத்து ஷிரமத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல்

'ஆ' ன்னா என்ன..?

ஆன்மா..பிற ஆன்மாவுக்காக சிரத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல்,

அதுதான் ஆசிரமம்..அது எந்த வகையாக இருந்தாலும் சரி.

உங்க ஆசிரமம் எதை வலியுறுத்துகிறது.

முதல்ல தன்னிலை விளக்கம் கொடுக்கனுமில்ல.

விஜயகுமார சுவாமிகள் ஆசிரமம் என்ன சொல்ல விரும்புகிறது..

ஒன்றுமே சொல்ல விரும்பவில்லை.

ஞானமடைதலுக்கான எளிதான வழியை,

விஜயகுமார சுவாமிகள் ஆசிரமம் கற்பிக்கிறது.

எப்படி..இத ஆசிரமம்னு சொல்றத விட

ஆழ்ந்து புரிஞ்சிக்கணும..,

நான் எப்படி சொல்ல விரும்பறேன்னா..

விஜயகுமார சுவாமிகள் ஆசிரமம்,

அத்தனை பெண்களுக்குமான ஒரு அம்மா வீடு.

அத்தனை ஆண்களுக்குமான மனோரீதியான ஒரு ஒர்க்ஷாப்.

அனைத்து பெண்களுக்குமான..,அது அம்மாவா இருக்கலாம்..,

சகோதரியா இருக்கலாம்..பேத்தியா இருக்கலாம்..,

அத்தனைபெண்களுக்குமான ஒரு அம்மாவீடாக இருக்கும்ங்கறதுக்கு 

உறுதி கூறுகிறேன்.

இரண்டாவது, அத்தனை ஆண்களுக்குமான மனோரீதியிலான 

ஒரு ஒர்க் ஷாப்..,

இதைத்தான் மச்ச அவதாரத்தில மகாவிஷ்ணு சொன்னாரு.

அப்படியே திரும்புவோம்..

அதுக்கப்புறம் என்ன சொல்றாருன்னா..சின்முத்திரைன்னு சொன்னேன்..

என்ன அர்த்தம்..?

நம்ம பகவானுக்கு முன்னாடி போய் நின்னாவே,

அவரு என்னா தெரியுமா சொல்லுவாரு..நீ எதுவுமே  கேக்கவேணாம்..,

நீ நல்லாதான் இருக்கே..

நாம எதுவுமே கேக்கறதுக்கு முன்னே ..அவரு பயப்படுவாரு..

அய்யயோ..ஒண்ணு கிடக்க ஒண்ணு கேட்டுடப்போறான்..

ஏன்னா..நாம எப்போதுமே கேக்கறோம்னாவே என்ன அர்த்தம், 

தகுதியில்லாததைத் தான்  கேக்கமுடியும்.

"நிரஞ்சாபாதாபா..,(சமஸ்கிருத சுலோகம்)

அப்படின்னா என்னன்னா..

உன்னை நிறைவாக நான் அனுப்பியிருக்கிறேங்கறாரு.


அழகா இருக்கும்.. மச்ச அவதாரத்தில இந்த ஸ்லோகம்..,

'...பிரபச்சம்ரே…(சமஸ்கிருத சுலோகம்)

கொஞ்சம் லென்தியா இருக்கும்
என்ன அர்த்தம்னா..

அத அந்த அர்த்தத்துல சொன்னா நமக்கு புரியாது..

அப்படியே இப்ப கலியுகத்துக்கு தகுந்தமாதிரி..

அப்படியே டிரான்ஸ்லேட் பண்ணி கொஞ்சம் கலோகியலா சொல்லிர்றேன்.
பகவான் என்ன பண்ணார்னா..ஒரு டிக்கெட்ட கையில கொடுக்கிறாரு.

தியேட்டர்ல போய் படத்த பாத்துட்டு திருப்பி வந்துடுன்னு
ஆனா, நாம என்னா பண்றோம்..தியேட்டர்லயே உக்காந்து இருக்கோம். 

அந்த கேரக்டரோடயே ஒன்றி போயிடுறோம்.

அந்த கேரக்டர் அழும்போது அழுவுறோம்..

கேரக்டர் சிரிக்கும்போது சிரிக்கிறோம்..

அந்த கேரக்டரோடவே ஒன்றிபோயிடறோம்...

நாம் சாட்சி என்பதையே மறந்துவிடுகிறோம்.

இதைதான் மச்ச அவதாரத்துல என்ன சொல்றாருன்னா, 

இப்படி இருந்தா உன்னால சர்வைவல் பண்ணமுடியாது

எப்படி இருந்தா நீ சர்வைவல் பண்ணலாம்..

மச்ச அவதாரத்துலயே சின்முத்திரைய பத்தி அவரு சொல்லிட்டாரு.

எப்போழுதுமே..நீ நிறைவாக இருப்பதாக  நினைச்சிகிட்டே இரு.

நீ எப்பவுமே நல்லாதான் இருக்க..இப்ப நீ எப்படி இருக்க..?
நல்லா இருக்குற மாதிரி இருக்கியா.. இல்ல நல்லா இல்லயா..?

நீ சொல்றதுல தான் இருக்கு.
சிலபேர்..என்னா இருந்தாலும் சரி..நிறைவடையமாட்டான்..

என்ன இருந்தாலும் சரி

நீங்க நல்லா பாருங்களேன்..ஆழ்ந்து பாருங்களேன்.. 

எதாவது கல்யாணத்துக்கு போங்க..
எல்லாவகையான டிஷ்ஷூம் இருக்கும்..

கைகழுவும்போது எப்படி இருந்ததுன்னு கேட்டா, 

எதாவது ஒரு குறை சொல்லுவான்…

நல்லா இருக்குன்னு சொல்லவே மாட்டான்..

அந்த பொறியல்ல கொஞ்சம் உப்பு தூக்கலா போயிருச்சில்ல..

நானும் சொன்னதில்ல..

சிலபேர் இருக்கான்..கைகழுவும்போது, 

உங்க இலைக்கு ஜாங்கிரி வச்சாங்களா அப்படின்னு கேப்பான்.. 

இல்லன்னதும்..அப்பாடா எனக்கும் வைக்கல..

அப்படின்னு நிம்மதி பட்டுக்குவான்..!
சோ..மச்ச அவதாரம் என்பதென்ன..நீந்துதல்..

ஜலத்திலே நான் பிறந்திருக்கிறேன்…

முதமுதல்ல..அதான் மச்சமாக உருவெடுத்திருக்கிறேன்.

அதோட வேலையென்ன..சிறப்பாக நீந்துதல்..,

அதனாலதான்..மீன்குஞ்சுக்கு நீந்த கத்துகுடுக்கணுமா அப்படின்னு கேக்கறது..

ஸர்வைவல்..நீந்துதல்..

சரி சாமி..
இதான் மச்ச அவதாரம்..மீன் அவதாரம் ----நாளை தொடரும்,

0 comments: