Thursday, April 24

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 12

முந்தைய பதிவு (பாகம் 11) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது,"...இந்த மஹாபலி என்ன பண்றான்..,

இந்த வேள்வி ஷக்ஷஹார ஹரேம்னு பேரு..கடுமையா இருக்கும் அந்த வேள்வி..

யாரு எதை கேட்டாலும் அந்த ஸ்பாட்லயே கொடுக்கறது..,

டேபிள் சாங்ஷன்..,

என்ன..?

அவளோ வலிமையை தான் பெற்றிருப்பதாக

தன்னைத்தானே நினைத்துக்கொண்டிருக்கிறான் மஹாபலி..,

ஏய் .யாரு என்னவேனாலும் கேளு..

எல்லாம் கேட்டு முடிச்சிட்டான்..,

யாரும் இல்லையாப்பா..ஒகேவா..முடிச்சாகணும்..,

ஓ.. நோஒரே ஒருத்தன் மட்டும் வரான் சின்னதா..,


என்ன பண்றான்..?

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்னு வள்ளுவர் சொல்லியிருப்பாரு..,

அத முன்னாடியே இவரு சொல்லிடுராரு..வாமனம்….சின்னதா வர்றாரு..,

இங்க பாத்தீங்கன்னா, எல்லா அவதாரங்கள்லயும் பாத்தீங்கன்னா

டேமேஜ் பண்ணி, அழிச்சிருப்பாரு 

அசுர..கையால வதம் பண்ணுவாரு..,

மஹாபலிய மட்டும் காலால..,

ஆழ்ந்து பாக்கணும்..,

இது என்னாடா இது எல்லாரையும் டேமேஜ் பண்றாரு.. ,

ஒரு வில்லால அடிக்கிறாரு..கத்தியால வெட்ராரு..,

கதையால ஒடைக்கறாரு..,

ஆனா, மஹாபலிய மட்டும் திருவடிய தூக்கி தலையில வைக்கிறாரே..,

சாமியுடைய பாதம் நம்ம தலையில பட்டா என்ன..பாக்கியம் இல்லயா..,

அப்படி மட்டும் பண்றது என்னன்னா..,

ஆயிரம் இருந்தாலும் அவன் யோகி..

தம்பி என்னப்பா வேணும்..,

ஆனா, சுக்ராச்சாரியாருக்கு தெரியுது..வர்றது யாருன்னு..,

மஹாபலி எந்திரிக்காத..முடிச்சிரலாம்..,

நோ..நோ..என்ன கேட்றபோறான்யா அவன்..,

என்னப்பபா வேணும் உனக்கு..,

கொஞ்சம் லேண்ட்ஸ் இருந்தா கொடுக்கமுடியுமா உங்களால..?

எவ்வளோ வேணும்..?

இல்ல ஒரு மூணு அடிமட்டும் இருந்தா கொடுங்க..

எடுத்துக்க..எடுத்துக்க..அந்த சைடா எடுத்துக்க..,

ஹூம்..நீங்க வாங்க..சர்வே பண்ணனுமில்ல..,

சர்வேயர கூப்பிட்டுட்டு எல்லாம் வரமுடியாது,

அப்ப..நீயே வா..,

மூணுதானேப்பா..சீக்கிரம் எடுப்பாமுடிக்கப்போறேன்..,

நெக்ஸ்ட்..முத அடி..,

இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச கதைதான்..

பூலோகம் முடிந்தது

அடுத்த அடி பிரபஞ்சமே முடிஞ்சது..,

மூணாவது அடி எதுவுமே இல்ல..,

ஆட்டோமேடிக்காவே..என்ன பண்ணிடுறான் மஹாபலி..,

அப்படியேதலை குனிந்து விடுகிறான்..,


என்னா அர்த்தம்..,

மூணாவது அடிய என் தலையில வைடான்னு அர்த்தமில்ல..,

தன் தோல்விய ஒத்துக்கொள்ளுதல் பகவான்கிட்ட..,

ஆழ்ந்து புரிஞ்சிக்கணும்..,

நாம புராண ரீதியா விளக்கிட்டு இருக்கோம்..,

மூணாவது அடின்னு கேட்ட ஒடனே..அவன் தலைய காமிச்சான்ன்னு…,

அப்படி அர்த்தமல்ல..,

அவன் என்ன பண்றான்..தன் தோல்வியை ஒத்துக்கொள்ளுதல்..,

சிலபேரு..பிடிச்ச முயலுக்கு மூணுகாலும்பாங்க..,

நீங்க பாத்தீங்கன்னா, வாதத்துலயே நாலு வாதம் இருக்கு,

ஜல்பம்..,

வாதம்..,

பிடிவாதம்..,

சம்வாதம்..அப்டின்னு..,

ஜல்பம்ன்னாஎன்ன..?

நீங்க சொல்லுங்க நான் கேக்கறேன்..ஒகே..,

வாதம்ன்னா..என்ன…?

நீ சொல்றத சொல்லுநான் சொல்றத சொல்றேன்..,

புடிச்ச முயலுக்கு மூணுகால்..இதுதான் வாதம்..,

சரிஅப்ப பிடிவாதம்னா..என்ன..புடிச்சது முயலே இல்லன்றது..,

அப்ப சம்வாதம்னா..என்ன..?

அதுதான் மஹாபலி பண்ணது.

என்ன அர்த்தம்..,

நான் உணர்ந்து விட்டேன்...பகவானே என்ன மன்னிச்சிடு..ரைட்..,

ஆஹா..இவருக்கு என்ன பண்றதுன்னு புரியல..,

ரைட்..அப்படியே அழைச்சிட்டு போயிட்டாரு..,

என்னா அர்த்தம்..தன்னோட ஐஞ்சாவது ஸ்டேன்சே என்ன பணறாரு,

நீ என்னுடைய திருவடிப்பெருமையை நேர்ந்து கொண்டால், நீ நானாகிறாய்.

நீ என்னுடைய திருவடிப்பெருமையின் மகிமையை 

அறிந்துகொண்டால்,நீ நானாகிறாய்.

அந்த இடத்துலதான் அகோரி த்துவம் வரும்

அஹம் பிரம்மாஸ்மி..அப்படின்னுட்டு..,

அதாவது, பாத்தீங்கன்னா

மஹாபலியினுடைய காத்தபரிபட்சத்துல,

அஹம் பிரம்மாஸ்மின்னே வந்துரும் 

அதுல..நமக்கு அது எப்ப தெரியும்னா, நான் கடவுள் படம் மூலம்தான் தெரியும்..

தன்னை ஒப்புக்கொடுத்தல்..,

.....நாளை தொடரும்,

2 comments:

Anonymous said...

வணக்கம்

நல்ல சிந்தனையுள்ள தொடர் தொடருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பிரபஞ்சவெளியில் said...

தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், நன்றி ரூபன்..,