Monday, April 14

மறுபிறவியில் வெள்ளைமயிலாக வந்த சீடர்..! பகவான் ரமணரின் மஹாசமாதி தினம்..இன்று..!

சாயந்திரம் 5 மணி இருக்கும்..

சாமியோட உடம்ப பிடிச்சிவிட்டுகிட்டு இருந்தோம்…என்ன எழுப்பி உட்கார வைங்கன்னாரு..உடனே, அவர படுக்கையில இருந்து தூக்கி உட்கார வச்சோம். அப்போ,அங்க இருந்த பக்தர்கள் எல்லாம், சாமி எழுந்து உட்கார்ந்ததுமே, 
‘ அருணாச்சல சிவ…அருணாச்சல சிவ.. ஜெபிக்கத்தொடங்கிட்டாங்க..

இத கேக்க, கேக்க சாமியோட முகத்துல அப்படி ஒரு பிரகாசம் ஒளி வீசத்தொடங்குச்சு..,
கண்ல இருந்து தண்ணி வழிஞ்சபடியே இருந்தது.. அத தொடச்சி விட்டுகிட்டே இருந்தோம்.., 

சாமியோட மூச்சு விடுற வேகம் கொஞ்ச,கொஞ்சமா குறையத்தொடங்கியது..,
ஏற்கனவே, அவருக்கு சுவாசிக்க முடியலங்கறதால..டாக்டர்ஸ் ரெஸ்பிரேட்டர்ஸ் வச்சிருந்தாங்க..ஆனா, அது சாமிக்கு பிடிக்கல..எடுத்துட சொல்லிட்டாரு..,


பார்த்துட்டு இருந்த எங்களுக்கெல்லாம் ஒரே பதட்டமா இருந்தது..,
எல்லாரோட பார்வையும் அவர்மேலதான்..,

எல்லாரோட உதடுகளும், அனிச்சையா…அருணாச்சல சிவ..அருணாச்சல சிவ.. ஜெபிச்சிகிட்டு இருந்ததே ஒழிய…உள்ளுக்குள்ள எல்லோருக்கும் ஒரு நடுக்கம்தான்..

அந்த ஹாலே..ஒரு வித நிசப்தமான அமைதியோடதான் இருந்தது…முன்னயவிட இப்போ..சுவாசம் இன்னமும் குறைய ஆரம்பிச்சது….,

ஆசிரமத்துல இருந்த பகவானுக்கு ரொம்பவே பிரியமான, வெள்ளை மயில், ஒருவித பதட்டத்தோட, ஆசிரமத்த சுத்தி, சுத்தி வந்தது.., 

சாமி அந்த மயில  மாதவான்னுதான் கூப்பிடுவாரு..

ஏன்னா, சாமிக்கு 12 வருஷமா, கூடவே இருந்து சேவைசெஞ்ச மாதவசாமியோட மறுபிறவியா எல்லாரும் அந்த மயில பார்த்தாங்க. 

காரணம், மாதவசாமி இறந்த பிறகு, 3 மாசம் கழிச்சி பரோடாவுல இருந்து பரோடா மகாராணியால, ஆசிரமத்துக்கு பரிசா கொடுக்கப்பட்டதுதான் இந்த வெள்ளை மயில்.

இவரோட பேரு 'மாதவா' (வெள்ளை மயில்)

அது, ஆசிரமத்துக்கு வந்த நாள்ல இருந்து , மாதவசாமி எந்த இடத்துல உட்காருவாரோ, அதே இடத்துலதான் போய் உட்காரும்..சாமி வரும்போது, மாதவசாமி உள்ளே, வந்துட்டு போறமாதிரியே..இப்படி அந்த மயிலோட எல்லா செயல்களுமே, மாதவசாமிய நினைவுபடுத்தறமாதிரியே இருந்த்து. 

இதெல்லாம், நம்மள மாதிரி மத்தவங்களுக்குதான், ஆனா, பகவானோட முதல் பார்வையிலயே, அது யார்னு அவருக்கு புரிஞ்சிடுச்சு..

மயிலுக்கும், பகவானுக்குமான உறவு..ரொம்பவே அற்புதமானது..அந்த மயிலப்பத்தி  பக்தர் ஒருத்தர் எழுதின் சில பாடல்கள, அந்த மயில கூப்பிட்டு வச்சு அது முன்னாலயே, வீணை இசையோடு பாடவச்சாரு..பகவான். 

பாடி முடிச்சதும், அந்த வெள்ளை மயில் (மாதவா) மெதுவா நடந்து வீணையோட பக்கத்துல போனது.

வீணையோட தந்திய தன் வாயால பிடிச்சு ‘டொய்..’இழுத்து விட்டிருக்கு.

உடனே, சிரிச்சிகிட்டே, பகவான், மாதவனுக்கு திரும்பவும் பாடணுமாம்னு, சொல்லி பாடவும் வச்சிருக்காரு..

இதையெல்லாம் நினைச்சபடி, தவிப்போடு ஆசிரமத்த சுத்தி,சுத்தி வந்திட்டு இருந்தாரு மாதவர் (வெள்ளை மயில்)

ஏறக்குறைய எந்த நேரமும், சாமிக்கு எதுவும் நடக்கலாம்..அப்படிங்கற ஒரு நிலைமை,
அதனால, வெளிநாட்டுல இருந்தெல்லாம் பக்தர்கள் ரெண்டு,மூணுநாள் முன்னாலயே,இங்க வந்துட்டாங்க..

அப்படி வந்திருந்த ஒரு பிரான்ஸ் போட்டோகிராபர் தன்னோட ரூம்ல இருந்தப்போதான் ஒரு ஆச்சரியமான நிகழ்வ பாத்திருக்காரு..,

“  அத என்னால நம்பவே முடியல..நான் அப்போ வீட்டுக்கு முன்னால இருந்தேன்..என்னோட பிரெண்ட்ஸ்தான், வானத்துல எதையோ பாத்துட்டு ஆச்சரியப்பட்டு எனக்கு காட்டினாங்க..உடனே, நானும் வானத்துல பார்த்தேன்..,

அங்க..ஒரு பெரிய வால் நட்சத்திரம்..இதுக்கு முன்னால இப்படி ஒரு வால் நட்சத்திரத்த நான் பார்த்த்தே இல்ல..ரொம்ப பிரகாசத்தோட ஜொலிச்சபடி, நீளமான வாலோட..தென்திசையில இருந்து, அப்படியே…மெதுவா..மெதுவா…நகந்து வானத்த தொட்டபடி, அருணாச்சல மலையோட உச்சிக்கு போய் அப்படியே மறைஞ்சிடிச்சு..

உடனே, இது ஸம்திங் ஸ்பெஷல்னு, என்னோட வாட்ச்ல நேரத்த பார்த்தேன்…மணி..8.47…

மனசு எதேதோ கணக்கு போட்டுச்சு..ஓ..காட்…அப்படி இருக்க க்கூடாதேன்னு, பயந்தபடியே, வேகவேகமா, ஆசிரமத்த நோக்கி ஓடினேன்…

அங்க…சாமியோட உடல் மட்டும்தான் இருந்த்து..அவர் இந்த பிரபஞ்சத்தோட கலந்துட்டாருன்னு..தெரிஞ்சது..அவரோட உயிர் பிரிஞ்ச நேரம்..8.47..,

ஜொலிக்கும் வால்நட்சத்திரமா நாங்க பார்த்த அந்த காட்சி…ஒரு அற்புத தரிசனம்..

இப்பவும், நினைச்ச மாத்திரத்துல, எங்கயும், நாம அவர உணரமுடியும்..அப்படி ஒரு அற்புதஞானி..அவர்.

பகவான் ரமண மகரிஷி

பகவான் ரமண மகரிஷி..1950வருடம், ஏப்ரல் 14 ம் தேதி, இரவு 8.47 மணிக்கு, மஹாசமாதி அடைந்தார்..

அவர் மஹாசமாதி தினமான இன்று 8.47 க்கு பகவானை நினைவுகூறுவோம்..,


ஓம் அருணாச்சல சிவ..ஓம் அருணாச்சல சிவ..ஓம் அருணாச்சல சிவ.., 

0 comments: