Tuesday, December 11

ஓஷோவின் பிறந்தநாள்

உலகம் முழுக்க பலருக்கு ஆன்மதரிசனத்த போதிச்ச பகவான் ஓஷோவுக்கு இன்னைக்கு பிறந்தநாள். ஒவ்வொரு கணமும் அவர் மூலமா உலகம் முழுக்க பலருக்கு இன்னைக்கும் அவரோட தொடர்பு கிடைச்சிகிட்டேதான் இருக்கு. ஓஷோ மாதிரியான ஞானிக்கெல்லாம் உடல் ஒரு கருவி மட்டும்தான். அவரோட பேச்சுகளும், புத்தகங்களும் கூட ஒரு சாதாரண மனிதனுக்கு அவரோட அருகாமைய உணரவைக்கக்கூடிய அபூர்வ சக்தி பெற்றவை. அந்த மாபெரும் ஞானி, ஆன்மப்பேரொளி பகவான் ஓஷோ இந்த உலகத்துக்கு ஆசானாக வந்துதித்த இந்த நாளில் அவரை வாழ்த்துவோம்...தொடர்ந்து இந்த மானுடகுலத்துக்கு ஞான வழி காட்ட வேண்டுவோம்..!
                                                 
                                                               HAPPY BIRTHDAY OSHO


 
மிகவும் அரிய வீடியோவான இது 1972ல் அவரது பிறந்தநாள் விழாவின்போது எடுக்கப்பட்டது. (இதில் வீடியோ மட்டும்தான் பதிவாகியுள்ளது, ஆடியோ இல்லை )

நீங்களும் இந்த மகானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மகிழுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு ஆன்மவெளிச்சம் பரவுவதை உணருங்கள்.
குருபரம்பரையின் மிகமுக்கியமான ஒரு குரு ஓஷோ!
வணங்குவோம்! வாழ்த்துவோம் அவரை!

Tuesday, December 4

திருமலைக்கு வரும் காணிக்கைகள் பாகம்-01

ரொம்பநாளாகவே திருமலைக்கு வரும் காணிக்கைகளப்பத்தி எழுதணும்னு விருப்பம் இருந்துட்டே இருந்தது. பத்திரிகைகள்ல வரும் செய்திய பார்க்கற எல்லாருக்குமே, அந்த காணிக்கைய பத்தின ஒரு மலைப்பு மனசுல எழுவதுண்டு. அத பாக்கணும்னு எல்லாருமே ஆசைப்படுவாங்க. அதற்கான முதல் முயற்சி பெருமாள் அருளால இன்னைக்குதான் உத்தரவாகியிருக்கு.
திருமலை திருப்பதியில பெருமாளுக்கு வரும் வித்யாசமான காணிக்கைகள பத்தி இந்தத் தொடர் உங்களுக்கு விளக்கமாக சொல்லும்.


பெருமாளுக்கு காணிக்கையாக்கப்பட்ட தங்கச்சங்கு

 

டிசம்பர் 3ம்தேதியான நேற்று, திருமலை திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் சார்பாக ஒரு கிலோ எடையுள்ள தங்கச்சங்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.இதன் மதிப்பு ரூ.30 லட்சம். விசேஷநாட்கள்ல சுவாமிக்கு இந்த தங்கச்சங்கின் மூலமாக அபிஷேகம் செய்யப்படும்னு தேவஸ்தானம் அறிவிச்சிருக்கு.
இதுக்கு முன்னாடி (இப்பதான் கொஞ்சநாளுக்கு முன்னால) எல்லாரையும் ஆச்சரியப்படுத்துன ஒரு காணிக்கை யாரோ ஒரு பக்தர் பெருமாள் உண்டியல்ல மூன்று தங்கசிலைகளை காணிக்கையா செலுத்தியிருந்தாரு.(தன்னோட பெயரை வெளியிட விரும்பாத  சென்னை பக்தர்)

திருமலை உண்டியலுக்கு காணிக்கையாக வந்த அந்த மூன்று  தங்கவிக்ரகங்களில்
முதலாவது ஸ்ரீவெங்கடேஸ்வரா  விக்ரகம் 2கிலோ571கிராம் எடை கொண்ட தங்கத்தாலானது. இந்த விக்ரகத்தில் 1014 வைரம், 552 ரூபி, 197 பச்சைக்கல்,1நீலக்கல் பதிக்கப்பட்டிருந்தது.

இரண்டாவதாக ஸ்ரீ பத்மாவதி தாயாரின் சிலை 101கிராம் தங்கத்தாலானது.

மூன்றாவதாக ஸ்ரீ லட்சுமிதேவியின் சிலை 81கிராம் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது.

ஆக மொத்தம் இந்த மூன்று சிலைகளும் சேர்த்து 

 

இவற்றின் மதிப்பு  ஒரு கோடியே இருபத்தைந்து லட்சத்து இருபத்தேழு ஆயிரத்து எண்ணூறு ரூபாய்!(Rs.1,25,27,800.00/-) 


காணிக்கையா வந்த அந்த மூன்று விக்ரகங்களை இந்த வீடியோவுல பாருங்களேன்!       

 

 

 

 

 

     ஓம் நமோ வேங்கடேசாய !
Monday, December 3

புத்தரின் போதிமர தரிசனம் - தொடரும் குருபரம்பரை

தொடரும் குருபரம்பரை

இந்தத் தொடரில் என்னுடைய பணி அவர்கள் என்னை எழுதத் தூண்டும்போது எழுதுவது மட்டுமே, மற்றபடி முன்கூட்டியே திட்டமிட்ட எதையுமே இங்கு செயல்படுத்தமுடிவதில்லை.
நானும் பலமுறை பலபுத்தகங்களை தரவிறக்கம் செய்து அவசரஅவசரமாக படித்து எழுத முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு பதிவேற்றமுடியாமல் ஆகிவிடும்.
அதனால், இப்போதெல்லாம், இயல்பில் விட்டுவிட்டேன். அது சிறப்பாகவே நடந்துவருகிறது, அப்படித்தான் இதுவும்...,


புத்தம் சரணம் கச்சாமி


குருபரம்பரையில் இடம் பெறவேண்டிய மிகமுக்கியமான ஒரு அம்சம் போதிமரம்.  சித்தார்த்தனாக இருந்தவர் கௌதம புத்தராக ஆன்மதரிசனம் பெற்ற இடம் புத்தகயா.

புத்தரின் ஆன்மதரிசனத்தின் சாட்சியாக இன்றும் பலருக்கு காட்சி தந்துகொண்டிருக்கிறது புத்தகயாவில் இருக்கும் இந்த போதிமரம் (வழக்கத்தில் இது அரசமரம்தான், புத்தபிரானால் இந்த மரத்திற்கும் கிடைத்த புனிதத்துவம்தான் போதிமரம் என்றழைக்கப்படுவதன் காரணம்).
இன்றும்  பிரபஞ்சசக்தியின் அதிர்வுகளுடன் பலரது ஆன்மதரிசனத்திற்கு இந்த இடம் வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.

மரங்களில் அரசமரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இரவு, பகல் என இருவேளையும் இந்த மரம் ஆக்சிஜனை வெளியிடுவதால் இது மரங்களுக்கு எல்லாம் அரசன்.
ஆம்,அதுமட்டுமல்ல ' மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் ' என கீதையில் கண்ணன் குறிப்பிட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


மனிதகுலம் தழைக்க வேதங்களை முதன்முதலில் எழுத்தில் கொண்டுவர காரணமாக இருந்தவர் ஸ்ரீகிருஷ்ணர்.
அத்தகைய வேதங்களை அவரவர் மொழியில் தரவேண்டும் என பாலி மொழியில் கொடுத்தவர் புத்தர்.
ஒருசேர ஸ்ரீகிருஷ்ணரையும், புத்தபிரானையும் நம் நினைவில் கொண்டுவர இந்த போதிமரம் நமக்கு உதவிக்கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் ஒளிரூபமாக அவரை இருந்த இடத்தில் இருந்தபடியே தரிசிக்க நமக்கு வாய்த்திருக்கும் நல்வாய்ப்பு இது!
தரிசிப்போம் புத்தபிரானை!

                                                          புத்தரை தரிசிப்போம்!


Saturday, November 17

குருபரம்பரை -அன்பின் அழைப்பு

குருவேசரணம்..!
கேள்விகளோடு இவர் இருக்கும் திசைநோக்கித் தொழுதாலே போதும், பதில்கள் தானாக நம்மைத்தேடி வரும்.
என்னை  இவர்கள்தான் ஒவ்வொருகணமும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
திருமலை திருப்பதி பெருமானே இங்கு குடிகொண்டு 
இவர்களைத்தேடி வருகின்றவர்களுக்கு இவர்கள் மூலமாகஆசி வழங்கிக்கொண்டிருக்கிறார் .அந்த அற்புத அனுபவத்தை நான் மட்டுமல்ல..என்னைப்போல் உணர்ந்தவர்கள் ஏராளம். இவரை எல்லோரும் அன்புடன் கருமலை சித்தர் என்றும் அழைப்பதுண்டு.

குருபரம்பரை எனும் இந்தத்தொடர் மூலம்  மகான்களின் உலகிற்குள் என்னை கரம்பிடித்துக்கொண்டு உலாவருபவரும் அவர்தான்.
இதோ...என் குருநாதருக்கு ஒரு விழா...எங்கள் மனமெல்லாம் பூரிக்கும் திருவிழா..வாருங்கள்..வந்து ஆசிபெறுங்கள்..!
----------------------------------------------------------------------------------------------------------------------------


ஆன்மீகப் பெரியவர் கவிஞர்  பெருமாள் ராசு அவர்களின்
                  பிறந்தநாள் விழா அழைப்பிதழ்
அம்மா ஸ்ரீமதி மகாலட்சுமி-அப்பா கவிஞர் பெருமாள் ராசு

நாள் ; 18.11.2012.ஞாயிற்றுக்கிழமை
இடம்; DSR GRAND சேலம் பெங்களூர் பை-பாஸ் சாலை
ஆஞ்சநேயர் கோயில் அருகில், கிருஷ்ணகிரி


அன்பின் அழைப்பு

வருகின்ற நவம்பர் மாதம் 18-ஆம் நாள் ஞாயிற்று க்கிழமை

ஆன்மீகப் பெருங்கவிஞர் பெருமாள்ராசு அவர்களின் 

பிறந்தநாள் விழா இனிதே நடைபெறவுள்ளது. 

அவ்வமயம் அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம்,
ஆன்மீக நிலையம்
கிருஷ்ணகிரி.

நிகழ்ச்சிகள்

     காலை 10.00மணி ;    பஜனை, ராம்ஜி பஜனைக்குழு,
                                               பகவான் யோகிராம்சுரத்குமார் 
                                               பஜனை மந்திர், ஒசூர்.
       
        காலை 11 மணி ;    கவி அரங்கம்

                       12 மணி ;      அனுபவப் பகிர்வு
                        
                         1 மணி ;      ஏற்புரை

                     1.30 மணி;      மதிய உணவு


--------------------------------------------------------------------------------------------------------------------------------

கவிஞர் பெருமாள்ராசு அவர்களின் படைப்புகள்
-------------------------------------------------------------------------------
 • ஆனந்தப் பரவசம்
 • பிரணவப்பிரவாகம்
 • கூடல் சங்கமம்
 • பிரபஞ்சக்கவிதைகள்
 • மாத்தியோசி
 • ஞானத்தூறல்
 • விடியலைத்தேடி
 • உன்னைத்தேடி
 • இதோ ஒரு இதிகாசம்
 • ஒளியைத்தேடி

--------------------------------------------------------------------------------------------------------------------------------

.....தொடர்புக்கு...

--------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                
                                               ஆன்மீக நிலையம்
54/177 திருவண்ணாமலை சாலை, கிருஷ்ணகிரி - 635 001
அலைபேசி ; 99767 21635 , 9791339157

Monday, October 15

திருமலையில் திருவிழா!

                                     திருமலை திருப்பதி தேவஸ்தானம்ஸ், திருப்பதி

                    

                                          ஸ்ரீவாரி நவராத்திரி பிரமோற்சவம்ஸ்-2012 

                                   

                                                        அக்டோபர் 15 முதல் 23 வரை       அருள் பாண்டுரங்க தேவா!

 

 • ஒவ்வொரு நாளும்  ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி  விசேஷ வாகனங்களில் நான்கு மாட   வீதிகளிலும் உலா வருவார்கள்.

 • இந்த வாகனங்களில் ஏழுமலையானை தரிசனம் செய்து, ஈடுஇணையற்ற ஆசீர்வாதங்களைப் பெறுவது என்பது பாரம்பரிய நம்பிக்கை
 • பார்வையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

 • கருடசேவாவிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

 • கூட்டநெரிசல் அதிகமுள்ள இடங்களில் நிகழ்ச்சிகளை எல்லோரும் தரிசிக்க LED  திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 • ஒவ்வொரு இடத்திலும் சிறப்பான பஜனை ஏற்பாடுகள்.

விசேஷ ஏற்பாடுகளுடன் -  '2012 பிரம்மோற்சவம்ஸ்

                            வாருங்கள் !   அவரது ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்!!      

நேரடி ஒளிபரப்பை S.V பக்தி சேனலில் கண்டு, பெருமானின் அருளைப் பெற்று ஆனந்தத்தில் திளையுங்கள்!

   (பல்வேறு நலத்திட்டங்களில் பங்கேற்று வரிச்சலுகையை பெற்றிருங்கள்)


மேலும் விபரங்களுக்கு :    www.tirumala.org    /   www.tirupati.org
கால் சென்டர்: 0877-2233333
பிரம்மோற்சவம் நிகழ்ச்சிநிரல் விபரங்களை இங்கிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்: Navarathri Brahmotsavams -Oct.2012

தலைவர்&

அறக்கட்டளை குழுவினர்

 

 

 


Sunday, October 14

' 9 வருடங்களாக போதிதர்மர் தவம் செய்த குகையின் வீடியோ ! '

                                                                      

BODHIDHARMAR

இந்தியாவுல இருந்து சீனாவுக்கு போனபோது போதிதருமர் இந்த மலையிலதான் தங்கியிருந்தாரு. இந்த குகையிலயே தொடர்ந்து 9 வருஷம் தியானத்துல இருந்திருக்காரு.அதனால அவரோட நிழல் எதிர்ல இருந்த கற்கள்ல ஒரு அடையாளமா படிஞ்சிருக்கு. அத இப்போ போதிதர்மரோட நினைவா(Stone of Bodhidharma’s Shadow) இங்க இருக்கற மடாலயங்கள்ல வச்சு வணங்கிட்டு வறாங்க. 

போதிதருமர் இந்த குகையில தொடர்ந்து 9 வருஷம் தியானத்துல இருக்கக் காரணம் என்ன?

இன்னொரு புத்தரா கருதப்பட்ட போதிதருமருக்கும் அவருடைய குருவுக்குமான தொடர்புகள் இதபத்தியெல்லாம் கண்டிப்பா இந்தத் தொடர்ல நாம பேசியே ஆகனும்.

சூட்சுமவெளியிலயே உங்களயெல்லாம் அழைச்சிகிட்டு சுத்திகிட்டு இருக்கமே, அப்படின்னு ஒரு மாற்றத்துக்காகத்தான் இந்த வீடியோபதிவு..!Tuesday, October 9

'தேனீக்களுக்கு ஒரு மந்திரம்' - தொடரும் குருபரம்பரை - பாகம்04


குருபரம்பரை


ஹிமாலயாஸ்ல என்னை மாதிரி நிறையபேர், ஆளுக்கு ஒரு குருகிட்ட பயிற்சி எடுத்துட்டு இருந்த காலம் அது !

என்னோட குருவோ சில பயிற்சிகளுக்காக, வேறொரு குருகிட்ட கொஞ்சநாள் இருந்துட்டு வரச்சொல்லி என்னை அனுப்பியிருந்தாரு.

ரிஷிகேஸ்ல ஒரு மலைக்குகையில எப்பவும் தவம் செய்துட்டு இருப்பாரு அந்த சாமியாரு 

அவர பார்க்கபோகனும்னா, கங்கை ஆத்த கடந்து மலைமேல போகணும். ரொம்ப ஆபத்தான இடமது.

அப்பவெல்லாம் ரிஷிகேஸ்ல மக்கள் நடமாட்டமே பெரிசா இருக்காது .

சாமியார் தவம் செஞ்ச குகைக்கு பக்கத்துல சின்னதா தென்னங்கீத்தால ஒரு கொட்டாய் போட்டிருக்கும். அங்கதான் நாம தங்கணும்

திடீர்னு கூட்டம், கூட்டமா யானைங்க வந்து கொட்டாயில இருக்குற தென்னங்கீத்துல பாதிய தின்னுட்டு போயிடும். குடிசை பாதி காணாம போயிருக்கும். புலிகள் வேற சுத்திகிட்டு இருக்கும்.

இப்படிப்பட்ட இடத்துலதான் எங்களுக்கு பயிற்சி.

காலையில சாமியோட போயி கங்கையில எல்லாரும் குளிச்சிடுவோம். அங்கயிருந்து திரும்பி வரும்போது  மலையில உயரமா  இருந்த ஒரு மரத்துமேல சாமி திடீர்னு 'சரசர'ன்னு ஏறத்தொடங்கினாரு.

அந்த கிளையில மலைத்தேனீக்கள் பெருசா கூடு கட்டியிருந்தது.

நாங்க எல்லாரும் பதறத்தொடங்கிட்டோம்.

தேனீ டென்ஷனாகி கொட்டத்தொடங்கினா, தப்பிச்சு ஓட அக்கம்பக்கத்துல வழியே இல்ல.

''வேணாம் சாமி, இது எல்லாமே பயங்கரமான காட்டுத்தேனீ. கொட்டுனா விஷந்தான். வேணாம் இறங்கிருங்க'' அப்படின்னு நான் மட்டும் கத்துனேன்.

கூட வந்த சிஷ்யகோடிகள் அப்புறம்தான் எனக்கு விளக்கம் சொன்னாங்க

''பல்லு வெளக்க எல்லாருமே இப்படித்தான் மரத்துல ஏறி, குச்சி ஒடிக்கணும். அதனாலதான் சாமி மரத்துல ஏற்ராரு. பதறாதே''

டென்ஷனோட மரத்தையே பார்த்துட்டு இருந்தேன். சாமியார் குச்சி ஒடைக்கறதுக்கு முன்னால, அந்த தேன்கூட்டு கிட்ட போனாரு.

நான் திரும்ப, 'சாமீ..'ன்னு கத்த, 

அவரு, ''அமைதியாயிரு..தேனீ கொட்டாம இருக்க ஒரு மந்த்ரம் இருக்கு. அத  சொல்லிட்டு வந்துடுறேன் ''-னு சொல்லிட்டுதேன்கூட்டு கிட்ட போயி ஏதோ முனுமுனுத்தாரு

எனக்கு பயங்கர ஆர்வம் வந்துடுச்சு

இந்த ஆன்மீக பயிற்சியில இதுவரைக்கும் நான் நிறைய சாமியார்கள்கிட்ட பயிற்சி எடுத்துட்டு இருக்கறதால, அந்த சமயத்துல எனக்கு இந்த மாதிரியான மந்திரங்கள் மேல ஒரு தனிஈடுபாடு  இருந்துட்டு இருந்தது.

அப்போ என்னோட வயசும் ரொம்ப குறைவு. அதனால, மந்திரங்கள நிறைய கத்துகிட்டு, நாம மத்தவங்ககிட்டபோயி மேஜிக் மாதிரி நிறைய விஷயங்கள செஞ்சுகாட்டனும்னு  எனக்கு ஆசை .

அதனால மரத்துமேல சாமியார் செய்யறத எல்லாம் நான் கூர்ந்து கவனிச்சிட்டே இருந்தேன்.

சாமியார் மந்திரங்கள சொல்லி முடிச்சிட்டு, அந்த மரத்துல இருந்து குச்சிய ஒடச்சிட்டு கீழே இறங்கினாரு.  

தேனீக்கள் அவர ஒண்ணுமே பண்ணல. எனக்கு ஆச்சரியமா இருந்தது.

கீழே வந்ததும், ''..ம்..நீ போயி உனக்கு குச்சி ஒடைச்சிட்டு வா'' அப்படின்னாரு சாமி.

இங்க அவங்கவங்களுக்கு வேண்டியத அவங்களே செஞ்சிக்கணும்ங்கறதுதான் நடைமுறை.

நான் பதறிட்டேன்.

'' என்ன சாமி, உங்களுக்கு மந்திரம் தெரியும், எனக்கு தெரியாது. தேனீ என்னை கொட்டிடுமே...நான் எப்படி மேல ஏற்ரதுன்னு …?'' தயங்குனேன்.

உடனே அவரு, ''நீ மரத்து மேல ஏறு, 
உனக்கு நான் மந்திரத்த சொல்லித்தரேன்''னாரு.

பயந்துகிட்டே மரத்துல ஏறினேன். கொஞ்ச உயரம் போனதும்தான் தேன்கூடு பக்கத்துல தெரிஞ்சது. கொஞ்ச, கொஞ்சமா பயம் அதிகமாச்சு.

''சாமி..சாமி..'' ன்னு நான் கதறத்தொடங்கிட்டேன்.

உடனே,சாமியாரு,'பதறாத..இப்ப நான் சொல்றமாதிரி செஞ்சிட்டு, மந்திரத்த சொல்லனும் புரியுதா..? அப்படின்னாரு.

புதுசா ஒரு மந்திரத்த கத்துக்கபோறோம்கிற சந்தோஷம் ஒருபக்கம்..இந்த தேனீகொட்டுனா உயிரே போயிடுமேங்கிற பயம் இன்னொருபக்கம்.

குரு தரையில நின்னுகிட்டுநான் மரத்து மேலஇப்படி ஒரு மந்தரோபதேசம் வேற யாருக்கும் வாச்சிருக்குமான்னு தெரியல.

அப்பதான் சாமியாரு சொல்லத்தொடங்குனாரு,'' அந்த தேன்கூட்டுக்கு கிட்ட போதேனீக்களுக்கு ரொம்ப நெருக்கமா போ. அதுகள நேருக்கு நேரா பாத்து இப்ப நான் சொல்றத சொல்லு…'நீங்க இருக்குற இடத்துக்கு பக்கத்துலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். அதனால, நான் உங்கள தொந்தரவு செய்ய மாட்டேன். நீங்களும் என்ன தொந்தரவு செய்யாதீங்க' … அப்படீன்னு சொல்லு. அதுங்க ஒண்ணும் செய்யாது.''

''சாமி..இதுவா மந்திரம்..?''இது நான்.

''நான் சொல்றத சொல்லு..குறிப்பா.. உன்னோட உதடு தேனீக்களுக்கு  ரகசியம் பேசற அளவுக்கு நெருக்கமா இருக்கணும்..''

''சாமிஅதுங்களுக்கு எப்படி  ஹிந்தி புரியும்...?''

''அதுகளுக்கு இதயங்களோட மொழி தெரியும். அதனால, எல்லா மொழியும் அவங்களுக்கு புரியும். நீ பேசு..''

பயந்துகிட்டே சாமி சொன்னமாதிரியே செஞ்சேன். தேனீங்க என்ன ஒண்ணுமே பண்ணல. நான் குச்சிய ஒடைச்சிட்டு கீழே வந்துட்டேன்.

''எப்படி சாமி இப்படி அமைதியாயிடுச்சுங்க…!''

''அதுதான் இந்த மந்திரத்தோட சக்தி. இன்னொரு விஷயத்த நீ ஞாபகத்துல வச்சிக்கோ. இந்த மந்திரம் உனக்குமட்டும்தான் பலன்தரும். இத நீ வேற யாருக்கும் உபதேசிக்கக் கூடாது. ஜாக்கிரதை. இத நீ எப்பவும் மறக்காம ஞாபகத்துல வச்சுக்கோ'' அப்படின்னாரு சாமி.

'அப்ட மந்தரா' (apta mantra)


யாருக்கு என்ன பிரச்னையோ அதுக்கு தகுந்த மாதிரி தவயோக குருக்கள் சாதாரண வார்த்தைகள்ல கூட தங்களோட சக்திய புகுத்தி பிரத்யேக மந்திரங்களாக்கி தருவாங்க. அத நேரடியா அனுபவிக்கிற பாக்கியம் கிடைச்சதும்  எனக்கு சொல்ல முடியாத ஆனந்தம்.


அதுல இருந்து நான் எங்க வெளியில போனாலும், ஊருக்கு வெளியில காட்டுப்பகுதிகள்லதான் தங்கறது வழக்கம். அங்கயும் இதுமாதிரி தேனீக்கள் இருக்குற மரங்கள்ல ஏறி இந்த மந்திரத்த பல முறை ஜனங்க முன்னாடி செயல்படுத்திக்காட்டியிருக்கேன்.

எல்லாரும் என்னோட தவசக்திய புகழும்போது எனக்கு ரொம்ப கர்வமா இருக்கும். அப்போ புகழ்ச்சிக்கு மயங்குற என்னோட வயசும், முடிவுபெறாத தவபயிற்சிகளும்., இதுலயே நான் எல்லாத்தையும் அடைஞ்சிட்டதா ஒரு திருப்திய எனக்கு கொடுத்தது.

இந்த சமயத்துல தான் பஞ்சாப்ல என்ன பாத்து ஆசீர்வாதம் வாங்கவந்த ஒரு பக்தருக்கு இந்த தேனீ மந்திரத்து மேல ரொம்ப ஆர்வம் வந்துடுச்சி

அவரு என்கிட்டவந்து எனக்கு எப்படியாவது  இந்த மந்திரத்த சொல்லிக்கொடுங்கன்னு கெஞ்சி கேட்டுகிட்டாரு.

'இந்த மந்திரம் உனக்கானதுஇத வேற யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு' சாமி எனக்கு சொன்னத நான் சுத்தமா மறந்தே போயிட்டேன்.

உடனே,,அந்த பஞ்சாபிக்கார்ருக்கு தேனீ மந்திரத்த சொல்லிகுடுத்தேன்.

அவளோதான்அவருக்கு தாங்கமுடியாத சந்தோஷம்.

எனக்கு நன்றி சொல்லிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு ஓடிப்போன அந்த மனுஷன் உடனடியா இந்த மந்திரத்த செயல்படுத்தி பாக்க தொடங்கியிருக்காரு.

நல்ல மலைத்தேனீங்க இருக்குற காட்டுப்பகுதியில போயி மரத்துல ஏறி..தேன்கூட்டுக்கு பக்கத்துல முகத்த வச்சிகிட்டு....மந்திரத்தச்சொல்ல சொல்ல 

அடுத்த விநாடி அவர விரட்டி.. விரட்டிதேனீக்கள் கொட்டி தீத்திருச்சு.

மனுஷன் மயக்கமாகி கீழே விழுந்துட்டாரு. ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு எனக்கு தகவல் கொடுத்தாங்க..

அங்க போயி பாத்தாஅந்த பக்தர் கோமாவுக்கு போயிட்டாருன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்கமூணுநாளு ஆகியும் அவரு கண்ணு திறக்கல.

அநியாயமா ஒரு பக்தர சோதனைக்கு ஆளாக்கிட்டமேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்.  

ஒருவேள..இனி..பொழைக்கமாட்டாரோ... 
நாமதான் இவர கொன்னுட்டமோன்னு..நினைச்சதும்,
என்னோட கலக்கம் அதிகமாகிடுச்சு.

உடனே, அந்த ஹாஸ்பிடல்ல இருந்துகிட்டே, எனக்கு இந்த மந்திரத்த உபதேசித்த சாமிய நினைச்சு தியானிக்கத் தொடங்குனேன்.

எப்படியாவது இந்த பக்தர காப்பத்துங்கன்னு தீவிரமா பிரார்த்தனை செஞ்சேன்.

திடீர்னு, அந்த ஹாஸ்பிடல்லயே சாமி எனக்கு முன்னாடி வந்து நின்னாரு. ''என்ன வேலை செஞ்சு வச்சிருக்கே நீ.. 
உன்னோட சக்திய நிரூபிக்கறதுக்காக ஒருத்தன சாகற அளவுக்கு செஞ்சிட்டியே. இதுவே உனக்கு கடைசி பாடம். இந்த ஆள்  நாளைக்கு காலையில சரியாயிடுவாரு. ஆனா, உனக்கு நான் குடுத்திருந்த இந்த மந்திரசக்திய நான் திரும்ப எடுத்துகிட்டேன். இனிமே, அது உனக்கும் வேல செய்யாது''

அப்படின்னு சொல்லிட்டு அங்கேயிருந்து போயிட்டார.

மகான்களோட சாதாரண வார்த்தைகள் கூட மந்திரம்தான்னு அப்பதான் எனக்கு  புரிஞ்சது.

இப்படி ஒரு தேனீ மந்திரத்த சொல்லிக்கொடுத்து, அது மூலமா ஒரு பாடத்த புரியவச்ச அந்த சாமியார் டாட் வாலா பாபா(TAT WALA BABA)

TAT WALA BABA

 தன்னோட குருமூலமா கிடைச்ச இந்த அனுபவங்கள  பகிரங்கமா உலகத்தோட பகிர்ந்துகிட்டவர்  சுவாமி ராமா

SWAMY RAMA

    ஹிமாலயாஸ்ல ஏராளமான குருக்கள்கிட்ட பல அற்புதமான யோகசாஸ்திரங்கள கத்துகிட்டு, பின்னாள்ல உலகம் முழுக்க பிரபலமா இருந்தாரு சுவாமி ராமா.--------------------தொடரும் குருபரம்பரை
Saturday, October 6

'11 வயது சிறுவனின், 700 வருடங்களுக்கு முந்தைய முற்பிறவி அனுபவம்!' -தொடரும் குருபரம்பரை -பாகம்-03

வேப்பமரத்தடியில மக்கா பாபா காத்துகிட்டு இருந்தது ஒரு சிறுவனுக்காகன்னு சொல்லியிருந்தோமே அந்த சிறுவனோட பேரு ராஜா.வயசு 11!


தாத்தா வயசுல இருக்குற ஒரு சாமியாருக்கும், பேரன் வயசுல இருக்குற ஒரு சிறுவனுக்குமான சந்திப்புல நமக்கு என்ன தெரிஞ்சுக்க வேண்டியிருக்குஇருக்குங்ககுருபரம்பரையோட பல சூட்சுமங்கள நாம இதுல புரிஞ்சிக்கலாம்.


Magga Baba

மக்கா பாபா(Magga Baba)!

இங்க எப்படி கையில எப்பவும் விசிறியோட இருந்தவர விசிறி சாமியாருன்னு அடையாளப்படுத்தினமோ, அதேமாதிரிதான் எப்பவும் டீகுவளைய கையில வச்சிட்டு இருந்ததால குவளைய(மக்கு) குறிப்பிடும்படியா மக்கா பாபான்னு ஆயிட்டாரு.

இவர மதராசி பாபான்னு அங்க இருந்தவங்க குறிப்பிட்டிருக்காங்க. சென்னையிலிருந்து இமயமலைக்கு போன இவரு அங்க இருந்து வட இந்தியாவுக்குபோயிசிறுவன் ராஜாவோட ஆன்மதரிசனத்துக்கு குருவா இருந்து உதவியிருக்காரு.


அந்த கிராமத்துல மக்கா பாபாவ பொறுத்தவரைக்கும் பேசத்தெரியாத, காதுகேக்காத ஒருமாதிரியான ஆளாத்தான் எல்லாரும் அவர பார்த்துட்டு இருந்தாங்க.ஆனாலும் அவருகிட்ட ஏதோ ஒரு சக்தி இருக்கிறதா நம்பி அவர ஒரு சாமியாரா கும்பிட்டாங்க.

ஒருநாள், வேப்பமரத்தடியில இருந்த மக்கா பாபாவ எல்லாரும் வேடிக்கை பார்த்திட்டு இருந்த சமயத்துலதான்  முதன்முதலா அவர பாத்திருக்காரு சிறுவன் ராஜா.   ஆனா, அந்த  முதல் சந்திப்புலயே சில சூட்சுமமான விஷயங்கள் ரெண்டுபேருக்கும் நடுவுல நடந்திருக்கு.

அவரோட கண்ண நேருக்குநேரா பார்த்ததுமே,   ''இன்னைக்கு ராத்திரி வா..உன்கிட்ட பேசனும்''னு மக்கா பாபா சொன்னமாதிரி ராஜாவுக்கு தோணியிருக்கு.

அதே மாதிரி அன்னைக்கு ராத்திரி 2மணிக்கு வேப்பமரத்தடிக்கு போயிருக்காரு சிறுவன் ராஜா.

சாக்குபைய போத்திட்டு படுத்திருந்தாரு மக்கா பாபா. எதிரில குளிருக்காக நெருப்பு எரிஞ்சிட்டு இருந்தது.

சிறுவன் ராஜா வந்தத பார்த்து எழுந்திரிச்ச மக்கா பாபா அந்த இரவே அதிரும்படியா குலுங்கி,குலுங்கி சிரிச்சிருக்காரு. அதப்பாத்து ராஜாவும் சிரிக்க அந்த இடத்தோட தன்மையே மாறிப்போயிருக்கு

தனக்கு பக்கத்துல வரும்படி பாபா கூப்பிட ராஜா பக்கத்துல போயிருக்காரு. எதுவோ ஒண்ணு தன்னை அவர நோக்கி இழுக்கறதாவும் உணர்ந்திருக்காரு சிறுவன் ராஜா.

''ஹூக்லிபூக்லிடக்லி…''ன்னு எதையோ புரியாம கத்தப்போறாருன்னு அந்த வேடிக்கையான மொழிய கேக்க ஆவலா இருந்த ராஜாவுக்கு அடுத்து பாபா திடீர்னு நல்லா பேசனத கேட்டதும்  ஆச்சரியம் தாங்கமுடியல.


''எனக்கு பேசத்தெரியுங்கறத யாருக்கும் சொல்ல வேண்டாம். இப்ப எல்லாரும் பார்த்துட்டு இருக்கிற ஆள் இல்ல நீ. அத உனக்கு நினைவுபடுத்தறதுக்காகத் தான்  நான் இப்போ உங்கிட்ட பேசவேண்டியிருக்கு''


இதுவரைக்கும் பேசவேத்தெரியாதவர்ன்னு  ஊரே நெனச்சுகிட்டு இருந்த மக்கா பாபா அவ்வளவு அழகா தன்கிட்ட பேசினத ஆச்சரியமா பாத்துகிட்டே இருந்தாரு  சிறுவன் ராஜா.

ரெண்டுபேரோட கண்கள் ஒண்ணையொண்ணு சந்திச்சது. சில நிமிடம் மௌனம்.

நாம சொல்ல நினைக்கிறத மொழிகளைவிட மௌனம்தான் மிகச்சரிய கொண்டுபோய் சேர்க்கிறதாக ஞானிகள் உறுதியா நம்பறாங்க.
அதேதான் இங்கேயும் நடந்தது. பல செய்திகள் சூட்சுமா ரெண்டுபேருக்கிடையிலயும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

சிறுவன் ராஜாவுக்கு மக்கா பாபாவுக்கு பக்கத்துல இருக்கிறப்போ ஒருபுதுவிதமான புத்துணர்ச்சிய உணர்ந்திருக்காரு. பலநாட்களா குளிக்காத பாபாமேல இருந்து ஒருவிதமான சுகந்தமணம் வீசறதையும் ஆச்சரியமா பாத்திருக்காரு.

அடுத்ததா பாபா திரும்பவும், '' எனக்கு பேசத்தெரியும்ங்கறத ஊர்ல யார்கிட்டயும் சொல்லக்கூடாது. நான் பைத்தியம், காது கேக்காத ஊமைன்னே ஜனங்க நினைக்கட்டும். நான் சாகறவரைக்கும் இது ரகசியமாவே இருக்கட்டும். அதுதான் எனக்கு இந்த ஊர்மக்கள்கிட்ட தங்கியிருக்க சவுகரியமா இருக்கும்'' ன்னு சொல்ல,

ராஜாவும் ''நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன் கவலைப்படாதீங்க''ன்னு வாக்கு கொடுத்திருக்காரு.

அதுக்குப்பிறகு, ரெண்டுபேரும் அமைதியா கொஞ்சநேரம் பேசாம உட்கார்ந்திருந்திருந்தாங்க. அந்த சமயத்துல ஒரு ஆழந்த அமைதியும் பெரும்சக்தியையும் தனக்குள்ள மீண்டும் உணர்ந்திருக்காரு சிறுவன் ராஜா

இதுதான் ரெண்டுபேருக்குமிடையிலான முதல் சந்திப்பு.

அடுத்தடுத்தநாட்கள்லயும் இந்த ராத்திரி சந்திப்புகள் தொடர்ந்தன.  

அந்த சிறுவனுக்கு அவன் யார்ங்கறத சின்ன,சின்ன சம்பவங்கள் மூலமா புரியவச்சிகிட்ட வந்த மக்கா பாபா, ஒருநாள் அந்த சிறுவன்கிட்ட பகிரங்கமா அந்த பிரபஞ்ச ரகசியங்கள சொல்லத்தொடங்கினாரு.

 ''நாம ரெண்டுபேரும் 700 வருடங்களுக்கு முன்னாடி திபெத்துல லாமாக்களா பிறந்திருந்தோம். குகைகள்ல ஒன்னா தவம் செஞ்சிருக்கோம். இன்னும் சிலநாள்ல கொஞ்ச,கொஞ்சமா உனக்கு பழைய சம்பவங்கள் எல்லாமே நினைவுக்கு வந்துடும்...

...நீ இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், இன்னும் ரெண்டு பாபாக்கள் வந்து உனக்கு மத்தத நினைவு படுத்துவாங்க. அதுல ஒருத்தர் பாகல் பாபா, இன்னொருத்தர் மஸ்தோ பாபா...

...அதனால, இனியும் விளையாட்டுதனமா இருக்கறத விட்டுட்டு  கவனமா படிப்ப முடி. நீ பல மொழிகளயும் குறிப்பா, எல்லாநாட்டு மொழிகள் மட்டுமில்லாம, உலகம் முழுக்க இருக்கற எல்லா தத்துவங்களையும் கற்றுக்கொள். இது எல்லாத்தையும் புத்தகங்கள ஒருமுறை பார்த்தாலே போதும், அது உனக்கு புரிஞ்சிடும். ஏன்னா, எல்லாமே நீ முன்னாடி பிறவியிலயே படிச்சிட்டே.இனிமே, படிக்க எதுவுமே இல்லங்கற வரைக்கும் எல்லாத்தையும் படிச்சிடு...

... மேற்கத்திய நாடுகளுக்கும் கிழக்கத்திய நாடுகளுக்கும் இடையிலிருக்கும்  இடைவெளியை குறைக்கவேண்டியவன் நீதான். தூக்கத்திலிருக்கிற விழிப்புணர்ச்சியற்று இருக்கிற ஏராளமானவர்களை தட்டி எழுப்ப வேண்டியவன் நீ....

...இது எல்லாமே உன்னால் உனது தியானத்தின் மூலமாக சாத்தியமாகும்.அந்த சக்தியை நீ அடைந்ததுமே, தியானத்திலேயே முழுவதுமாக மூழ்கிவிடாமல், இந்த உலகிற்கும் மனிதகுலத்திற்கும் அன்பையும், கருணையையும் வழங்கி, அவர்களையும் உன்னால் முடிந்த அளவிற்கு கரையேற்ற வேண்டும்.

மக்கா பாபா சொன்னது எல்லாமே நடந்தது.

அந்தச்சிறுவன் வேறு யாருமல்லஅவர்தான் ஓஷோ..!

 
OSHO
இன்னைக்கும் சூட்சுமவெளியில உயிர்ப்போட இருந்தபடி ஆன்மப்பேரொளியா உலகம் முழுக்க பலருக்கு வழிகாட்டிக்கிட்டு இருக்கும் ஓஷோவுக்கும்   மக்கா பாபா(Magga Baba)வுக்குமான தொடர்பு நம்மளப்போல சாதாரணமானவர்களால அவ்வளவு எளிதா புரிஞ்சிக்கமுடியாது.ஆனாலும் இந்த குருபரம்பரை அனுபவம் நமக்கு ரொம்பவே அவசியம்.
 


--------------------தொடரும் குருபரம்பரை


Tuesday, October 2

'எங்க ஊர்ல இருந்த சாமியார(?) திருடிட்டு போயிட்டாங்க' -குருபரம்பரை -02

Rang Avadhoot Maharaj


ரங் அவதூத் மகராஜ் .
இவரைப் போன்றவங்களைபத்தி வெறும் தகவல்களா தெரிஞ்சிக்கிறதவிட, இவங்களோட அனுபவங்கள்தான் நமக்கு ரொம்பவே முக்கியம். அதுதான் குருபரம்பரைய நாம புரிஞ்சிக்கிறதுக்கு உதவியா இருக்கும்.அதனால, எழுத்துல ஒரு தொடர்ச்சிய எதிர்பாக்காம, கூடவே வாங்க, நாம போகவேண்டிய இடம் வந்துடும்.

முதல்ல ரங் அவதூத் மகராஜ், அடுத்ததா இவரு..!

அழுக்கு சாக்கு, கையில  'மக்கு'ன்னு சொல்லபடுகிற ஒரு டீக்குவளை. எந்நேரமும் அந்த வேப்பமரத்தடியில்தான் வாசம்.

எங்கேயிருந்து வந்தாரு. எப்ப வந்தாருன்னு ஊர்க்காரங்க யாருக்கும் தெரியாது.
ஜனங்கள பொறுத்தவரைக்கும் அவருக்கு காது கேக்காது, பேசத்தெரியாது. ஏறக்குறைய பித்துக்குளி. புரியாத பாஷையில அப்பப்போ கத்துவாரு. திடீர்னு சில சமயங்கள்ல கல் எடுத்து வீசத்தொடங்கிடுவாரு.

ஆனாலும்,எல்லாரையும்  ஏதோ ஒண்ணு காந்தம் மாதிரி அந்த மனிதரை நோக்கி இழுத்தது. அதுதான் என்னண்ணு யாருக்கும் புரியல.

எப்பவும் அவர சுத்தி ஜே
..ஜேன்னு கூட்டம் சுத்தி நின்னுட்டு இருக்கும்.

வர்றவங்க அவரபாத்து தங்களோட பிரச்னைகள சொல்லுவாங்க.

''ஹிக்காலால் ஹூ..ஹூஹூ..குலுஹிக்கா..ஹீஹீ…!''

இப்படி எதாவது ஒரு  புரியாத சத்தம்தான் பதிலா கிடைக்கும்.
வர்றவங்க தங்களுக்கு கிடைச்ச ஒரு ஆசீர்வாதமா  இத எடுத்துக்குவாங்க.

அடுத்து,நான் சொன்னது புரிஞ்சதான்னு கேக்கற மாதிரி,

''ஹீஹி..ஹி..?''-ன்னு  ஒரு சத்தம் எழுப்புவாரு.

Magga Baba

எதிர்ல இருக்கறவங்க புரிஞ்சதா தலையாட்டிகிட்டே அவரோட ஆசீர்வாதத்த வாங்கிக்குவாங்க.

அவர் அப்படி பேசினாலே, நாம அவருகிட்ட சொன்ன விஷயம் நல்லபடியா நடக்கும்ங்கிறது,  பலரோட நம்பிக்கை.

தனக்கு தரப்படற எல்லாத்தையுமே அவரு அந்த டீ மக்குலதான் போடச்சொல்லுவாரு. சாப்பாடு, காசு எல்லாமே.  எப்பவும்  அத (மக்கு) சுத்தபடுத்திகிட்டே இருப்பாரு.

அதேநேரம், மக்குல என்ன விழுந்தாலும், அது அங்க இருக்குற பிச்சக்காரங்களுக்குதான்தனக்குன்னு  எதையுமே அதுல இருந்து எடுக்க மாட்டாரு.

அவருகிட்ட எல்லாருக்கும் புடிச்ச இன்னொரு விஷயம், எதுக்குமே அவர் முடியாது, இல்லங்கற மாதிரி சொன்னதே இல்ல. யாராவது திடீர்னு வருவாங்க. ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவுல அவர தூக்கி உக்கார வச்சிகிட்டு அவங்களோட இடத்துக்கு அழைச்சிட்டு போயிடுவாங்க.தங்களோட வீடு, கடைகளுக்கெல்லாம் அவர அழைச்சிட்டு போயிட்டு  திரும்பவும் வேப்பமரத்தடிக்கு  கொண்டுவந்து  விட்டுட்டுப்போவாங்க. எதுக்கும் அவரு தன்னோடைய விருப்பு,வெறுப்ப வெளிப்படுத்தினதே இல்ல. எல்லாருடைய விருப்பத்துக்கும் அவர் ஒரு கைக்குழந்தை.

அந்த ஊரப்பொறுத்தவரைக்கும் தினந்தோறும் வேப்பமரத்தடியில அவர் இருக்கணும். எப்பவும் அவர பாக்கணும். அதையே ஒரு பாக்கியமா நினைச்சாங்க.

இப்படி இருந்த சமயத்துலதான் ஒருநாள், காலையில எல்லாரும் வந்துபார்த்தப்ப வேப்பமரத்தடி காலியா கிடந்தது. ஜனங்களுக்கு அவரு இல்லாம என்னவோ போல ஆயிடுச்சு. எப்படி இருந்தாலும் சாயந்திரத்துக்குள்ள வந்துடுவாருன்னு இருந்தாங்க.
ஆனா, வரல. ஊரே பதட்டமாயிடுச்சு. இளவட்ட பசங்க அங்கயிங்க விசாரிச்சு உண்மைய கண்டுபுடிச்சிட்டாங்க. பக்கத்து ஊரச்சேர்ந்தவங்கதான் சாமியார திருடிட்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சது.

ஊரே கூட்டமா திரண்டு பக்கத்து ஊருக்கு போனது. எதிர்பார்த்த மாதிரியே அந்த ஊர் ஜனங்களோட சாமியார் இருந்தாரு. உடனே, போனகூட்டம் சாமியார குண்டுகட்டா தூக்கி ரிக்ஷாவுல போட்டுகிட்டு புறப்பட, அந்த இடத்துல பெரிய பிரச்னை ஆரம்பமாயிடுச்சு. அந்த ஊர்க்காரங்க சாமியார விடமுடியாதுன்னு மறுக்க, இவங்களோ இவரு எங்க சாமியார்ன்னு சண்டை போட அந்த இடமே களேபரமானது.
இவ்வளவு பெரிய கலாட்டாவுல தனக்கு எதுவுமே தொடர்பில்லாதவரப்போல
சாமியார் அமைதியா இருந்தார்.

கடைசியா, ரெண்டுதரப்பும்  போலீசுக்கு போனாங்க.

பஞ்சாயத்து பண்ண வந்த போலீசுக்கு என்ன செய்யறதுன்னே புரியல.

சாமியார்கிட்ட போலீஸ் விசாரிச்சது, '' நீங்க என்ன சொல்றீங்க, அதுபடிதான் நாங்க முடிவு செய்யமுடியும்''

''யுட்டிலீ….ஃபுட்டிலீஷூட்டிலீ…! ''-இது சாமியார் கொடுத்த பதில்.

''இந்தாளு என்ன பைத்தியமா? யுட்டிலீ….ஃபுட்டிலீஷூட்டிலீ…! அப்படின்னா என்னன்னு யாருக்காவது தெரியுமாயா? நாங்க என்னன்னு ரிப்போர்ட்ல எழுதறது?'' 

ஒரு முடிவும் எடுக்கமுடியாம போலீஸ் அவரு இப்ப இருக்கற இடத்துலயே  விட்டுட்டுபோங்கன்னு
, வந்த ஜனங்கள விரட்டிடுச்சு. வருத்தத்தோட ஊர்திரும்பினவங்க  சாமியார எப்படியாவது அங்கயிருந்து மீட்டுடணும்னு  திட்டம்போட்டாங்க.

மறுநாள் ராத்திரியோட ராத்திரியாஅந்த பக்கத்து ஊர்ல இருந்த சாமியார தூக்கி ரிக்ஷாவுல வச்சி இவங்க ஊருக்கு எடுத்துட்டு வந்துட்டாங்க.

இப்போ..திரும்பவும் வேப்பமரத்தடியில சாமியாரோட அந்த வித்யாசமான ஒலிக்குறிப்புகள் அழகான பட்டம்பூச்சிகளப்போல பறக்கத்தொடங்கிடுச்சு.

''..@..!..*..ஹிக்காலால்.....ஹூ..ஹூஹூ.....குலுஹிக்கா.....ஹீஹீ…!..@..!..* ..ஹீஹி..ஹி..?..@..!..*..யுட்டிலீ….ஃபுட்டிலீஷூட்டிலீ…! ..@..!..*..'

எதிர்காலத்தில உலகம் முழுக்க வலம்வந்த  ஆன்மப்பேரொளிஅந்த கிராமத்தில அப்போதான் ஒருசிறுவனாக வளர்ந்துட்டு  இருந்தாரு. அவர சந்திக்கிறதுக்காகவே வேப்பமரத்தடியில வாழ்ந்துட்டு இருந்தவருதான் இந்த பெரியவர் -மக்கா பாபாஅப்படின்னாஅந்த சிறுவன்..?


………………தொடரும் குருபரம்பரை