Sunday, September 30

'அவரை மூன்று திசைகளிலிருந்தும் முதலைகள் சுற்றி வளைத்தன'- தொடரும் குருபரம்பரை


இதுவரை பேசப்படாத ஒரு விஷயம். கண்ணுக்குப் புலப்படாத வெர்ச்சுவல் தளத்துல இயங்கிவரும் சக்தி மையம், நாம புரிஞ்சுக்கக்கூடிய விஷயமா, அதே வெர்ச்சுவல் தளத்துல இங்க தகவல்களா மலரப்போகுது. ஒவ்வொரு விஷயத்துலயுமே முரண்பாடுகள்லதான் அழகு மறைஞ்சிருக்கு. இது வெறும் அழகோட தரிசனம் மட்டுமில்லைங்க. ஆன்மதரிசனம்.

இதப்படிக்கிற எல்லாருக்கும் தன்னைத்தானே கண்ணாடியில பாக்குற உணர்வு வரும். ஏன்னா, இது ,ஒவ்வொருத்தருக்குள்ளயும் ஒளிஞ்சிகிட்டு இருக்குற மகத்தான ஒரு உணர்வு, உறைஞ்சு கிடக்குற உண்மை.

கோவிந்தா, கோவிந்தான்னு கூட்டம்,கூட்டமா மக்கள் வெறித்தனமா மலையேறி போனபடியே இருக்காங்க, அழகான பொண்ணுங்ககூட தன்னோட முடிய மழிச்சி மொட்டை போட்டுக்கிறாங்க. முகத்துல கலர், கலரா நாமம் போட்டுகிட்டுஇதெல்லாம் என்ன கோலம். அறிவு கேள்வி கேக்குது.

சலசலத்து ஓடிட்டு இருக்கும் ஆறு, நட்டநடுவுல நின்னுகிட்டு கண்ண மூடி தியானம் செஞ்சிட்டு இருந்தாரு அந்த சாமியார். கரையோரமா இருந்த ஊர்க்காரங்க அவர பார்த்துட்டு இருந்தாங்க.

திடீர்னு, ஆற்றுத்தண்ணியில ஒரு சலனம் தெரிஞ்சது. வெவ்வேற திசைகள்ல இருந்து மூன்று முதலைகள் அந்த சாமியார நோக்கி வந்துட்டு இருந்தது.
கரையில இருந்தவங்க எல்லாம் அலறத்தொடங்கிட்டாங்க.
''சாமி முதலை வருதுசீக்கிரம் வந்துடுங்க..வந்துடுங்க..''

ஆனா, இது எதையும் சாமியார் காதுல வாங்கினமாதிரியே தெரியல. அவர்பாட்டுக்கு தியானத்துல தீவிரமா இருந்தாரு.
திசைக்கு ஒண்ணா மூணு முதலைகள்அவர நெருங்க..நெருங்க..பாத்துட்டு இருந்த மக்களுக்கு ஒண்ணுமே புரியல.

''சாமியார்ங்க எல்லாம் ஒருவகையில் கிறுக்குங்கதான்தன்னைசுத்தி என்னை நடக்குதுன்னு கூடவா பாக்க மாட்டாங்க''

''இத்தனை வருஷமா நம்ம கண்ணு முன்னாடி ஒரு பைத்தியக்காரன் மாதிரி சுத்தி திரிஞ்ச இந்த ஆளு கதை இன்னையோட முடிஞ்சது''    ஆளுக்கொரு விதமா புலம்பி தீத்தாங்க.

Rang Avadhoot

இப்ப தான் சாமியார் ஒரு வழியா கண்ண திறந்து பாத்தாரு. தன்னை சுத்தியும் ஒரு வியூகம் அமைச்சு மூணு முதலைங்க நிக்கறதையும் பாத்துட்டு…..அடுத்து அவர் சொன்னது ,'' என்னோட பிரார்த்தனை ஏத்துகிட்டு என்னை நேர்ல ஆசீர்வாதம் செய்ய நீங்க எல்லாரும் வந்ததுல எனக்கு ரொம்ப ஆனந்தம். என்னோட ஆசீர்வாதமும் உங்க எல்லாருக்கும் உண்டு. ஆனா, தேவையில்லாம, இதையெல்லாம் பாத்துட்டு இருக்குற மக்கள் பயப்படுறாங்க. அதனால, நீங்க எல்லாரும் இங்க இருந்து போயிடுங்க'' அப்படின்னு, முதலைங்கள பாத்து சாமியார் வணங்க, அத்தனையும் சரசரவென நீரில் வந்தவழியே திரும்பிச்சென்றன.

சாமியார் தனது பிரார்த்தனைகளை முடித்துவிட்டு நிதானமாக கரையேறி வந்தார்.
பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை.
ஒரு மனிதனை உணர்வதற்கு நமக்கு சில அற்புதங்கள் தேவைப்படுகிறது.

அந்த மூன்று முதலைகளும் ஒரு மகானை அடையாளம் காட்டிவிட்டுச்சென்றன.  
அவர்தான் ரங் அவதூத் மகராஜ்.                                               


--------------- தொடரும் குருபரம்பரை