Saturday, November 2

பூமியைத்தாக்க வந்த நரகா கிரகம், ராமர்,மஹாவீரர், 16ஆயிரம் கோபியர்கள், எஸ்கிமோக்கள்-தீபாவளியின் சுவையான பின்னணி


14 ஆண்டுகள் வனவாசம் முடிச்சிட்டு ராமர் இன்னைக்குதான் சீதையோடு நாடு திரும்பி பட்டாபிஷேகம் செஞ்சிக்கிட்டாரு..


ஜெயின் மதத்தை ஏற்படுத்தின மஹாவீரர் இந்த நாள்லதான் சமாதியடைஞ்சிருக்காரு…


நரகாசூரன் சிறைபடுத்தி வச்சிருந்த 16 ஆயிரம் கோபியர்களை அந்த சிறையிலிருந்து கண்ணன் விடுவித்த நாள் இன்னைக்கு…


ஆர்ட்டிக் வட்டத்திலே இருக்குற எஸ்கிமோக்கள், ஆறுமாத இருட்டுக்குப் பின்னால விளக்கு ஏற்றுவதும் இன்றுதான்..இந்த நாளை அவர்கள் நித்யஜோதின்னு குறிப்பிடறாங்க..


சுமார் ஐயாயிரம் வருஷங்களுக்கு முன், பூமியை நரகா எனும் கிரகம் தாக்கவிருப்பதாக இருந்த ஆபத்தினை கண்ணன் காப்பாற்றிய நாள் இது..அதை நினைவு கூறவே, விளக்கேற்றி மக்கள் இந்த தினத்தை கொண்டாடுவதாகவும் சொல்லப்படுவதுண்டு..


பிரக்ஜோதிஷ்பூர்..வட இந்தியாவுல இருக்குற இந்த ஊர்தான் நரகாசூரனோட தலைநகரம்…ப்ரக் அப்படின்னா முன்னாள் னு அர்த்தம். ஜோதி அப்படின்னா ஒளி ன்னு அர்த்தம். ஷ அப்படின்னா மறதின்னு அர்த்தம். புரம் அப்படின்னா, இடம் னு அர்த்தம் அதாவது உடம்பு அப்படின்னு அர்த்தம்

அதாவது முன்பு ஜோதியாக இருந்து பிறகு மறந்துபோன உடம்பு என்பது இதன் முழுமையான விளக்கம்..ஜோதியாக இருந்தது  வேறுயாருமல்ல..நாம்தான்..

அந்த ஜோதியை மறைத்த இருள்கள்.. நம் மனவருத்தங்கள்.. நோய்கள்.. வறுமை இன்னும் இவை போன்றவையே..

இவற்றை நீக்கிய வெளிச்சங்கள் ஆரோக்கியவாழ்வு..இன்பம்..செல்வம்.. ஞானம் போன்றவைதான்..!

நரகாசூரன் என்பது நரகம் என்ற இருளுக்கு அழைத்துச்செல்லும் தீய சக்தி..,
இந்த தீய சக்தியை கண்ணன் சத்தியத்தின் துணையோடு, அதாவது சத்தியபாமாவின் துணையோடு வெற்றிக்கொண்டான்.

முன்பு சொன்ன இருளை வென்று அதாவது அகற்றி ஞானம் என்ற வெளிச்சத்தை கண்ணன் பரப்பிய நாள்தான் தீபாவளி.

ஏன் இருளைத் தரவேண்டும்..பின் அதை அகற்றி வெளிச்சத்தைத் தரவேண்டும்..?

நாம் எத்தனை பேர் நம் மூக்கை நினைக்கிறோம்..? அதாவது சளி பிடித்தபோது தான் நமக்கு நம் மூக்கு ஞாபகம் வருகிறது. மூக்கை நினைக்கிறோம்..நாம் சுவாசிப்பதை இப்போழுதுதான் நினைக்கிறோம்..

நோய் என்ற அவதி வந்துபோன பின்பு தான் நமது ஆரோக்கியத்தின் அருமை புரிகிறது.

வெளிச்சத்தின் அருமை புரிய இருள் தேவைப்படுகிறது..

அறிவின் அழகு புரிய அறியாமை தேவைப்படுகிறது..

ஞானமும் இப்படித்தான்..!

இத்தனையும் நமக்குத் தெரிகிறதோ இல்லையோ..இந்த தீபாவளிக்குப்பின்னால் இவ்வளவு பின்னணி இருப்பது தெரிந்தால், நமக்குத் தெரியாதது இன்னும் எவ்வளவு இருக்கிறதோ என்று பிரமிக்கலாம்.

இந்த தீபாவளித் திருநாளில் குழந்தைகள், பெரியோர்கள் அனைவரும் மத்தாப்புகள் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து புதுப்புது ஆடைகளுடன், சிரித்து, செழித்து கொண்டாட எமது மகிழ்ச்சியும், அன்பும் கனிந்த வாழ்த்துகள்..


- அருட்பெருங்கவிஞர் பெருமாள் ராசு
நன்றி..பாபாஜி சித்தர் ஆன்மீகம் 2012 தீபாவளி மலர்

Saturday, October 5

'தேவலோகத்துக்கு பறந்து சென்ற கருடன்..!'

'தேவலோகத்துக்கு பறந்து சென்ற கருடன்'

"...வேதவிற்பன்னர்களும், பக்தர்களும் கூடி நின்னு, கருடனுக்கு எல்லா மரியாதையும் செஞ்சு, முறைப்படி எல்லா பூஜைகளையும் செஞ்சு, இதோ..இன்னைக்கு சாயந்திரம் 5 மணியில இருந்து, 6 மணிக்குள்ள அவர தேவலோகத்துக்கு வழியனுப்பி வச்சிருக்காங்க.

இந்த கலியுகத்துல மானுட குலத்தை பாவங்கள்ல இருந்து காப்பாத்தி, மோட்சத்துக்கு வழிகாட்டிட்டு இருக்கும்  அந்த வேங்கடவனுக்கு பிரம்மா நன்றி தெரிவிச்சு இன்னையில இருந்து ஒரு 9 நாளுக்கு விழா நடத்தறாரு.
இதத்தான் பிரம்மோற்சவம்னு குறிப்பிடறாங்க.

இந்த விழாவுக்கு தேவலோகத்துல இருந்து, விழா நடத்துற பிரம்மா,இந்திரன், யமன், அக்னி, குபேரன்,வாயுதேவன், மற்றும் சப்தரிஷிகள், யோகியர், முனிகள்னு சகலமானவர்களும் கலந்துகொள்கின்றனர்.

அவங்கள எல்லாம் முறைப்படி விழாவுக்கு வரச்சொல்லி அழைக்கிறதுக்காகத்தான், இன்னைக்கு கருடன் புறப்பட்டு தேவலோகத்துக்கு போயிருக்காரு.


கருடன் இருக்கும் கொடியினை கொடிமரத்தில் ஏற்ற தயாராகிக்கொண்டிருக்கும் காட்சி

இன்னைக்கு ராத்திரியில இருந்தே திருமலை ஒரு தேவலோகம் மாதிரிதான் ஜொலிச்சிட்டு இருக்கு..இன்னும் எல்லா தேவர்களும் வந்து சேர்ந்ததும், திருமலை முழுக்க அற்புதமான வைப்ரேஷன் நிரம்பி வழியும்..,

ரிஷிகளும், யோகிகளும், தேவர்களும் நிரம்பி வழியும் இந்த 9 நாட்கள்ல, திருமலையில எதோ ஒரு இடத்துல அமைதியா உக்காந்து வேங்கடவன மனசுல பிரார்த்தனை செஞ்சுட்டு இருந்தாகூடப்போதும்...,

கருடனை தேவலோகத்துக்கு அனுப்புவதற்கான பூஜைகள் 

இந்த மகான்களோட ஆசி நமக்கெல்லாம் பரிபூரணமா கிடைக்கும்..,போகமுடியலேன்னாலும் பரவாயில்ல..இருந்த இடத்துல இருந்தபடியேகூட 'ஓம் நமோ வேங்கடேசாய' -ன்னு மனசால அந்த வேங்கடவன நினைச்சு பிரார்த்தனை செய்யுங்க..,நீங்க வேற ஒரு ஆளா மாறுவீங்க..இதெல்லாம் வெறுமனே விளம்பரத்துக்காக செய்யப்படுகிற வெற்று விழாக்கள் இல்லீங்க..இதுக்கு பின்னால நிறைய சூட்சும மான சங்கதிகள் நிறைய மறைஞ்சு கிடக்கு.

...ஆரத்திய எடுத்துக்குங்க..

இதெல்லாம் சாமானிய மக்களான நம்மால புரிஞ்சிக்கமுடியாது. மானுட நலனுக்காக, ரிஷிகளும் ,முனிகளும், மகான்களும் இந்த திருமலையில நிறைய விஷயங்கள செஞ்சிக்கிட்டே இருக்காங்க.அதோட தொடர்ச்சிதான் இந்த பிரம்மோற்சவம்..இது ரொம்ப..ரொம்ப பவர்புல்..இவ்ளோமட்டும்தான், இப்போதைக்கு என்னால சொல்லமுடியும்..அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்..இந்த பூமிக்கு மட்டும் இல்லீங்க..இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கே தலைவன்தான் இந்த வேங்கடவன்..அவருக்கான இந்த விழா..நம்ம ஒவ்வொருத்தரோட நலனுக்காகவும், ஆன்ம முன்னேற்றத்துக்காகவும்தான் நடத்தப்படுது..நம்மோட அன்றாட தேவைகளுக்கான வேண்டுதல்களை மட்டுமே முன்வைக்காம, நம்மோட ஆன்ம முன்னேற்றத்துக்காகவும், இது போன்ற விழாக்களை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்..,

தங்கக்கொடிமரத்தின் அருகாமைக்காட்சி

அதனால, முடிஞ்சவங்க..திருமலைக்கு போயிட்டு வாங்க..அந்த அற்புத அதிர்வலைகள் உங்களுக்குள்ளும் சில மாற்றங்களை நிகழ்த்த, அந்த வேங்கடவன் அருள் புரியட்டும்..!

கோவிந்தா..கோவிந்தா..கோவிந்தா..குருவே சரணம்..!

Thursday, September 12

'தீயில் இருந்து பறந்து வந்தது…,' விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவின் அற்புத அனுபவம்..!

சாரதா தேவியுடன் நிவேதிதா

“….நல்ல தூக்கத்துலதான் அப்படி ஒரு கனவு…இராமகிருஷ்ண பரமஹம்சரோட உருவம் என் கண்ணுக்கு அச்சு அசலா காட்சி தந்தது..ஆனா, அடுத்து நான் நேரடியா பாத்த காட்சி, என்னை பதற வச்சிருச்சு..நான் பாத்துட்டு இருக்கும்போதே.... அந்த மகானோட ஆன்மா,தன்னோட உடல விட்டு வெளியேற..அந்தக்காட்சி எனக்கு துல்லியமா தெரிஞ்சது..இது என்ன பதட்டப்பட வச்சாலும், இப்படி ஒரு காட்சிய பாக்கறது எனக்கு ஒரு புது அனுபவம்..

..காலையில எழுந்ததும் இந்தக்கனவு..ஒரு தெளிவான பதிவா நினைவுலயே இருந்தது.... பரமஹம்சர்தான்  ஏற்கனவே, உடல விட்டுட்டு சமாதியாயிட்டாரேன்னு என்னோட உள்மனசு சொல்லுது..ஆனா, இங்கே என்னோட கனவுல..உயிரோட காட்சி தந்தாரு..அவரோட உயிர் உடலவிட்டு பிரியறதையும் நாம நேரடியா பாத்தோமே..இது எதுக்கான அறிகுறி..,

இப்படின்னு பலமாதிரி குழப்பிகிட்டே இருந்தப்பதான், அந்த காலை நேரத்துலயே என்னப்பாக்க பேலூர் மடத்துல இருந்து  ஒரு சாமியார் வந்திருக்கறதா, எனக்கு தகவல் சொன்னாங்க..உடனே, வெளியே வந்து அவர சந்திச்சேன்...அவரு எனக்கு ஒரு அவசர  தகவல கொண்டு வந்திருந்தாரு..

கனவுக்கும் இதுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ….கை நடுங்க..அத வாங்கிப் படிக்க... எனக்கு முன்னால இருக்குற எல்லாமே..அப்படியே ஒரு சூன்யமா மாறிட்டு இருக்கற மாதிரி ஒரு உணர்வு….

கண்கள்லாம் இருட்ட…நான் அப்படியே..மயங்கி சரிஞ்சிட்டேன்..அங்க இருந்தவங்க..என்னை ஆசுவாசப்படுத்தி திரும்பவும் எழுப்பி உக்காரவச்சாங்க..

என்ன கலங்கடிச்ச அந்த தகவல் இதுதான்..

நேத்து ராத்திரி..இராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்னோட கனவுல தன்னோட உடல விட்டு உயிர் பிரியுற மாதிரி நான் கனவுகண்ட அதே நேரத்துல, பேலூர் மடத்துல விவேகானந்தர் தன்னோட உடல விட்டுட்டாரு…,

விவேகானந்தர்

இந்த தகவல கேள்விப்பட்டு உடனே, நான் பேலூர் மடத்துக்கு புறப்பட்டுப்போனேன்…அங்க ஹால்ல, விவேகானந்தரோட உடல்,வைக்கப்பட்டிருந்தது.

விவேகானந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பேலூர் மடம்

காட்சி கண்ணுக்கு தெரிஞ்சாலும், புத்தியால அத ஒத்துக்கவே முடியல..அவருக்கு பக்கத்துலயே உக்காந்து விசிறிக்கிட்டே இருந்தேன்..

இனி,அவர பாக்கவே முடியாது.எப்பவும் அவருகூடவே நான் இருக்கணும்.என்ன செய்யலாம்..? அப்பதான் எனக்கு, ஒரு யோசனை தோணுச்சு…,

அவரோட கம்பீரமான, அந்த காவி அங்கியில இருந்து ஒரு சின்ன துண்ட கட் பண்ணி எடுத்து வச்சிக்கிட்டா என்ன..? 

இப்படி நான் நினைச்சிட்டு இருக்கும்போதே..அங்க இருந்த ஒரு துறவியும்,  என்னோட   மனசுல ஓடிட்டு இருந்த  விஷயத்துக்கு ஏத்தமாதிரி ஒரு பதில சொன்னாரு

"....நிவேதிதா..நீ வேணும்னா..சுவாமிஜியோட துணியில இருந்து அவரோட நினைவுக்காக ஒரு துண்டு எடுத்து வச்சிக்கோ.."

சமாதியான ஒரு துறவியோட காவியுடையில இருந்து இதுமாதிரி துணிய கட் பண்ணி எடுத்துவைக்கறது சாஸ்திரப்படி சரியா, தப்பா..? 

எனக்குத் தெரியல..அதனால, வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்..

அதக்கப்புறமா, விவேகானந்தரோட உடல் எரியூட்டு மேடையில வைக்கப்பட்டது..அவரோட உடல் எரியூட்டப்பட்டது.

சாயந்திரம் 6 மணி வரைக்கும் தீ கொழுந்து விட்டு எரிஞ்சிட்டு இருந்தது. இதையெல்லாம் ஒரு சாட்சியா மட்டுமே, இருந்து நான் பாத்துட்டே இருந்தேன்.கொஞ்ச,கொஞ்சமா, கொழுந்து விட்டு எரிஞ்ச தீ அடங்கினது.

நான் சிலை மாதிரி அதபாத்துட்டே அங்க உக்காந்துட்டு இருந்தேன்.

அப்போதான் என்னோட சட்டையபிடிச்சு யாரோ பின்னால இருந்து இழுக்க,நான் எரிஞ்சிட்டு இருந்த சுவாமியோட சிதையில இருந்து,பார்வைய திருப்பினேன்.

திரும்பி பாக்கிறேன்..., பக்கத்துல யாருமே..இல்ல...!

ஆனா, சுவாமியோட அந்த காவி உடுப்புல இருந்து ஒரு சின்ன துண்டு,
அந்த தீயில இருந்து பறந்து வந்து,நான் பாத்திட்டு இருந்து இடத்துல, அப்படியே,மிதந்துகிட்டு இருந்தது…!

இதோ…இன்னமும் நான் உன்னோடுதான் இருக்கேன்...."

அந்த நிமிஷத்துல இருந்து,  ஒவ்வொரு கணமும் சுவாமி தன்னோடயே இருக்கறதா, பரிபூரணமா உணர்ந்தபடியேதான் தன்னோட மீதி வாழ்நாள கழிச்சிருக்காங்க நிவேதிதா..,

(இது விவேகானந்தரோட சிஷ்யை நிவேதிதாவோட நேரடியான அனுபவம்)

Monday, September 9

என்னையும், ரஜினிகாந்தையும்(?) நேரில் வந்து பார்த்த மஹாஅவதார் பாபாஜி..! ஒரு யோகா மாஸ்டரின் நேரடி வாக்குமூலம்..!


மஹாஅவதார் குகைக்குள் ரஜினிகாந்த்..!

“..இன்னும் ஒரு மூணு மாசத்துக்குதான் நான் உயிரோடு இருப்பேன்னு டாக்டர்ங்க சொல்லிட்டாங்க..எனக்கு அத கேட்டதும், ஒண்ணுமே புரியல..

அப்போ நான் பாட்னா இன்ஜினியரிங் காலேஜ்ல முத வருஷம் படிச்சிட்டு இருந்தேன்..

அப்போதான், எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியாம போயிடுச்சுன்னு,டாக்டர பாக்க போயிருந்தேன்..

பரிசோதனை செஞ்சி பார்த்த டாக்டர்ஸ் என்னோட இதயத்துல
மூணு வால்வுமே பழுதடைஞ்சி போயிருந்தத கண்டுபிடிச்சாங்க..

அதுக்கப்புறமாதான்  என்னோட உயிருக்கு மூணு மாசம் கெடு விதிச்சாங்க...


அப்போ  பாட்னா மெடிக்கல் காலேஜ்ல ஹெட் ஆப் தி
டிபார்ட்மெண்டா இருந்தவரு  டாக்டர் சி பி டாக்குர்.

என்னோட கசின் ரஜினிகாந்த் அவரோட ஸ்டூடண்ட்..

அவருதான் என்னை டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போனாரு"..இல்ல..
இந்த பையன காப்பாத்தமுடியாது…இன்னும் மூணுமாசத்துல
இந்த பையன் செத்துடுவான்..."னு டாக்டர் உறுதியா சொல்லிட்டாரு..

அந்த டைம்ல பைபாஸ் சர்ஜரியெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்,அதுமட்டுமில்லாம, ரொம்ப காஸ்ட்லி.

அதுவுமில்லாம., ஹார்ட் வால்வு ரீபிளேஸ்மெண்ட்டெல்லாம்
ரொம்ப ரேர்..

அதெல்லாம் அப்போ யுஎஸ்ல மட்டும்தான் நடக்கும்..ரொம்ப
ரேராதான் இந்தியாவுல எங்கயாவது நடக்கும்..

அதனால, அப்ப எனக்கு சாகறத தவிர வேற வழியே இல்லன்னு
ஆயிடுச்சு..

இன்னைக்கும் இந்தியாவுல இருக்குற ஒரு மத சடங்கு…என்னன்னா,
தன் மகன் இறந்துபோயிட்டா, அந்த சடலத்த அவனோட
அப்பாதான் தோள்ல சுமந்துட்டு போகணும்னு
ஒரு  பழக்கம் இங்க உண்டு..

ஒரு அப்பாவுக்கு புத்திரசோகத்தவிட கொடுமையானது வேற எதுவுமே இருக்கமுடியாது..அதுலயும் இப்படி ஒரு கொடுமை..கூடவே கூடாது..,

தன்னோட மகன் சாகறத, பாத்து என்னோட அப்பா, கலங்கற
அந்த துக்கத்த நான் என்னோட அப்பாவுக்கு தர விரும்பல…

அதனால, நான் வீட்டு விட்டு ஓடிப்போயிட்டேன்..

எங்கேயாவது ஓடிப்போய் செத்துடலாம்..அது அப்பாவுக்கு தெரியாமயே போயிடும்..அவரும் என்னைக்காவது நா திரும்பிவருவேன்னு நம்பிட்டே வாழ்ந்திடுவாருன்னு நெனச்சுதான் நான் வீட்டவிட்டு ஓடிப்போனேன்.

நேபாள் நாட்டோட தலைநகர் காத்மாண்ட்,வழியா  திபெத்
காடுகளுக்குள்ள ஹிமாலயாஸ் போயிட்டேன்.

அங்கதான் ஒரு இளைஞர சந்திச்சேன்..நல்ல தேஜஸ்..பாக்கறவங்கள அப்படியே ஈர்க்குற அந்த கண்கள்...ஹிமாலயாஸ்ல சுற்றித்திரியுற விதவிதமான சாமியார்கள்ல..இவரு கொஞ்சம் வித்யாசமா தெரிஞ்சாரு..

மஹாஅவதார் பாபாஜி

என்னோட பிரச்னைய புரிஞ்சிகிட்டாரு.

உடனே, அவரு ஒரு கல்பாத்திரத்துல தண்ணிய ஊத்தி மரக்குச்சியால
கலக்கி ஏதோ, ஒரு மருந்து தயாரிச்சு எனக்கு குடிக்க கொடுத்தாரு..

அது குடிக்க குளுகோஸ் மாதிரிதான் இருந்துச்சு..அத குடிச்ச உடனே, எனக்குள்ள ஒரு நல்ல மாற்றத்த நான் உணரத் தொடங்கினேன்.

அவரோட ஒரு மூணு  நாள் அங்கேயே இருந்தேன்..அப்போ எனக்கு
அவரு சில மூச்சுப்பயிற்சிகளயும்  சொல்லிக்கொடுத்தாரு..

அதுக்கப்புறம் அங்கயிருந்து என்ன பொறப்பட்டு ஊருக்கு போகச்சொன்னாரு..ஊருக்கு வந்த கொஞ்சநாள்லயே..என்னோட
உடம்பு பழையபடி கொஞ்ச கொஞ்சமா சரியாகிடுச்சு.

என்னை என்னாலயே..நம்ப முடியல..ஆமா, மூணுமாசத்துல செத்துடுவேன்னு..டாக்டர்களால சொல்லப்பட்டவன்..இப்போ..ரொம்ப
நல்லா, ஆரோக்கியமானவனா, மாறிட்டே இருக்கேன்..

கொஞ்ச மாசம் கழிச்சுதான், டாக்டரைப் பார்க்கவே நான் போனேன்..அவங்களுக்கு நான் இன்னும் எப்படி உயிரோட இருக்கேன்னு பெரிய ஆச்சரியம்....அவங்களாலயும் நம்ப முடியல..,

எது எப்படியோ..என்னோட உடம்பு பரிபூரணமா சரியாயிடுச்சு..

என்னோட காலேஜ்லயே அப்பதைக்கு நான் தான்
ஆரோக்கியமான ஆள்னு சொல்ற அளவுக்கு நான் மாறியிருந்தேன்.

ஏதோ, சாகலாம்னு ஹிமாலயாஸ் ஓடினோம்..யாரோ, ஒரு சாமியார்
நமக்கு, ஏதோ, மருந்து குடுத்து காப்பாத்திட்டாருன்னுதான்
அதுவரைக்கும் நான் நம்பிட்டு இருந்தேன்.

அப்பதான் ஒரு நாள்..,

அப்ப நான் இன்ஜினியரிங் மூணாவது வருஷம் படிச்சிட்டு இருந்தேன்..என்னோட கசின் மெடிசன் படிச்சிட்டு இருந்தான்..நாங்க ரெண்டுபேருமே ஒண்ணாதான் தங்கியிருந்தோம்..

அன்னைக்கு காலையில 7 மணிக்கு என்னோட கசின் வந்து, (நாங்க அப்ப முதல்மாடி ரூம்ல இருந்தோம்)என்ன பாக்க யாரோ ஒரு சாமியார் வந்து,
கீழே, வெயிட் பண்ணிட்டு இருக்கிறதா, தகவல் சொன்னாரு..

உடனே, யாராயிருக்கும்னு நான் வேக வேகமா, , கீழே இறங்கிப்போனேன்..

அங்க....ஹிமாலயாஸ்ல எனக்கு மருந்து கொடுத்து, மூச்சுப்பயிற்சி
எல்லாம் சொல்லிக்கொடுத்தாரே.. அவரு..அந்த இளைஞன்தான்
என்ன தேடி வந்திருந்தாரு..எனக்கு தாங்கமுடியாத ஆச்சரியம்..!

இவ்ளோ பெரிய சிட்டியில, இவரு எப்படி , என்னோட முகவரிய
கண்டுபிடிச்சு இங்க வந்தாருன்னு, எனக்கு புரியவே இல்ல..

மாடிக்கு என்னோட ரூமுக்கு அவர அழைச்சிட்டு வந்தேன்…

"...எப்படி இருக்கீங்க..ன்னு வழக்கமான விசாரிப்புகள்..ஆனா, என்னோட மனசுக்குள்ள..இவரு எப்படி என்ன தேடி வந்தாரு..? அப்படின்னு தீவிரமான யோசனை ஓடிக்கிட்டே இருக்கு..

என்னால கொஞ்சம் கூட நம்பவே முடியல

அப்பதான் அந்த ரூம்ல இருந்த என்னோட கசின, "...கொஞ்சம்
பூ வேணும் போய் எடுத்துட்டு வாங்க.."னு வெளியே
அனுப்பிட்டு, எங்கிட்ட தனியா பேச தொடங்கினாரு..அந்த சாமியாரு

என்னோட கைய எடுத்து தன்னோட நெத்தியல வச்சிகிட்டு
"...அபி பி விஷ்வாஸ் நஹி ஹோ ரஹா ஹை..!"(இன்னும் உன்னால
நம்பமுடியல இல்ல..?)

"...இல்ல..இல்ல..நம்பறேன்…"
(அப்படின்னு,அவருகிட்ட சொன்னாலும்,என்னால,
இன்னமும் நம்ப முடியல.ஏன்னா,அது எப்படி எங்கேயோ
ஹிமாலயாஸ்ல இருந்தவரு..
என்ன தேடி கண்டுபிடிச்சு,இங்க வரமுடியும்..,)

இத பேசிட்டு இருக்கும்போதே..என்னோட கசின் பூ எடுத்துட்டு
ரூமுக்குள்ள வந்திட்டாரு.

உடனே, பேசிட்டு இருந்த டாபிக்க சாமியாரு மாத்திட்டாரு.

அந்த பூவ வாங்கி,"..எல்லாம் நல்லபடியா நடக்கும்.."னு எனக்கும்,
என்னோட கசினுக்கும் ஆசீர்வாதம் செஞ்சிட்டு..பூவ எனக்கு
கொடுத்தாரு,

"..சரி..நான் புறப்படறேன்.."னாரு..

நாங்க தனியா பேசிட்டு இருந்தப்போதான்..அந்த சாமியாரு..ஒரு
விஷயத்த என்ன நினைவுல வச்சிக்கச் சொன்னாரு..,

"..அடுத்தமுறை என்னை பாக்கும்போது எப்படி நீ என்னை
அடையாளம் கண்டுபிடிப்பே..."ன்னு கேட்டுட்டு அவரே
அதுக்கு ஒரு வழிமுறையும் சொல்லிக்குடுத்தாரு

"...என்னோட ரெண்டு பாதத்துலயும், கடைசி விரலுக்கு முந்தின விரல்,
மேல தூக்கினமாதிரி இருக்கும்.இதவச்சி நீ என்ன அடையாளம் கண்டுபிடிக்கலாம்..."னாரு.

அதுக்கப்புறமா, நானும், என்னோட கசினும், அவரோட
கீழே இறங்கிவந்து அவர வழி அனுப்ப வெளியே வந்தோம்..

எங்க ரூம்ல இருந்து வெளியே வந்து காம்பவுண்ட தாண்டினா,
வெளியே நேரே ஒரேயொரு பெரிய ரோடுதான்,

அப்படியிருக்க..எங்க கூடவே வெளியே வந்தவரு..வெளியே
 ரோடுக்கு வந்ததுமே, டக்க்குனு எங்க பார்வையில இருந்து  மறைஞ்சிட்டாரு..!

அவ்ளோ பெரிய ரோடுல, வேற எங்கயும் எங்க பார்வையில
இல்லாம மறையமுடியாது..

நாங்க ரெண்டுபேருமே, அப்படியே, ஷாக் ஆகிட்டோம்..
எப்படி உள்ளே இருந்து எங்களோடவே வந்த ஒருத்தர்
திடீர்னு இப்படி மாயமா மறையமுடியும்..?

அப்பதான் நான் சொன்னேன்,

"..இவரு நிச்சயம் பெரிய மகானா இருப்பாரு..இவருக்கு
நிறைய சக்தி இருக்கு.."அப்படின்னு சொன்னேன்.

அந்த வயசுல எனக்கு அப்படி ஒரு அற்புதமான அனுபவம்..

அப்பவே,நான் முடிவு பண்ணிட்டேன்,இன்ஜினியரிங்
முடிச்சிட்டு  வேலைக்கு போகப்போறதில்ல.
இந்த சாமியாரத் தேடித்தான் போறதுன்னு
அப்பவே முடிவெடுத்துட்டேன்..

அதுக்கப்புறமா..ஒரு ரெண்டு, மூணு மாசத்துக்கு அப்புறமா,
என்னோட பிரண்ட் ஒரு புக் கொடுத்தான்.

அது  ஆட்டோபயாகிராபி ஆஃப் ய யோகி.

அந்த புத்தகத்த பாத்திட்டு இருக்கும்போதுதான்,
திடீர்னு ஒரு படத்த பாத்தேன்..

மஹாஅவதார் பாபாஜி

அது..அது..அவருதான்..

நான் ஹிமாலயாஸ்ல  சந்திச்சவரு..இதோ,இங்க என்ன
தேடி வந்த சாமியாரு..,அவருதான் மஹாஅவதார் பாபாஜின்னு
அந்த புத்தகத்துல அவர பத்தி குறிப்பிட்டிருந்தப்போதான்
எனக்கு உண்மையெல்லாம் புரிஞ்சது.

நான் பாத்தது,அந்த மிகப்பெரிய மகான்..மஹாஅவதார்
பாபாஜியைத்தான்னு நினைச்சதுமே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு.

பாபாஜிதான் என்னை காப்பாத்தியிருக்காரு.

இனி இந்த வாழ்க்கை பாபாஜிக்குதான் அப்பவே தீர்க்கமா முடிவு பண்ணிட்டேன்..

எப்படியும், திரும்ப நான் அவர கண்டுபிடிச்சிடுவேன்னுற
உறுதியோட நாட்கள் கழிஞ்சது.

அதேமாதிரி என்னோட படிப்பு முடிஞ்சதும், பாபாஜியத்தேடி புறப்பட்டேன்.

அதே ஹிமாலயாஸ்ல நான் முன்னாடி அவர சந்திச்ச
அதே இடத்துக்கு போனேன்..

பாபாஜி குகைக்கு செல்லும் வழிகாட்டிப்பலகை

அங்க நான் முன்னாடி அவர சந்திச்சப்ப இருந்த அந்த குகை
இப்போ காணோம போயிருந்தது..,

அந்த இடமே மாறிப்போயிருந்தது..எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருந்தது.

அவரத்தேடி நான் ஹிமாலயாஸ்ல, இன்னும் உள்ளே
அவரத்தேடி போயிட்டே இருந்தப்பதான், சில சாமியார்கள சந்திச்சேன்.

அவங்க என்ன ரொம்ப அன்போட வரவேற்றுப் பேசினாங்க..,

நான் அங்க எந்த சாமியார பாத்தாலும், அவங்களோட
பாதத்தைதான் மொதல்ல பாப்பேன்..
அவரு பாபாஜியான்னு கண்டுபிடிக்க
அவங்களோட பாதத்துல விரல் தூக்கியிருக்கான்னு
பார்வையாலயே செக் பண்ணுவேன்.

ஆனா, அவங்க பாதம் சாதாரணமாத்தான் இருந்தது..

அங்க பாபாஜி இல்ல..ஆனா, நான் பாத்த அந்த சாமியாருங்க என்ன தங்களோட பாதுகாப்பா தங்க வச்சிகிட்டாங்க..அவங்களுக்கு
என்ன பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு..அதுதான் எனக்கு ஆச்சரியம்..

ஒரு மூணுமாசத்துக்கு அப்புறமாதான் அங்க பாபாஜி வந்தாங்க..அவர பாத்ததும்தான் எனக்கு போன உயிரு திரும்ப வந்தமாதிரி ஒரு நிம்மதி..

அவரோட பாதத்த பாத்தேன்..அந்த விரல்கள் தூக்கியிருந்தத பாத்ததுமே..அவர்தான் பாபாஜின்னு ஊர்ஜிதப்படித்திக்கிட்டு, உடனே, அவரோட கால்ல விழுந்துட்டேன்.

"..இனியும்..என்ன விட்டுடாதீங்க..இனிமே,என்னோட வாழ்க்கையே உங்களுக்காக மட்டும்தான்.நீங்கதான் இனி எனக்கு.."ன்னு,அவரோட
கால பிடிச்சிட்டு கதற தொடங்கிட்டேன்..

கூப்பிய கரங்களோட நான் சொன்னேன்,"…ஆப்கே சிவா..மேரா ஜீவன் கா..அஸ்தித்வ நஹி ஹை..!(நீங்க இல்லாம..என்னோட வாழ்க்கைக்கு அர்த்தமில்லை..)

உடனே, பாபாஜி என்ன ஆசீர்வதிச்சி ஏத்துக்கிட்டாரு,"..துமாரி பீனா, மேரி ஷோபா நஹி ஹை.."(நீ இல்லாம எனக்கு பெருமை இல்ல..)

எங்க ரெண்டுபேருக்கும் நடுவுல நடந்த அந்த உரையாடல்..உணர்ச்சிபூர்வமானது..

அதுக்கப்புறமா, அடிக்கடி அந்த சாமியார்களோட தங்கியிருந்த
 என்ன வந்து பாபாஜி பாப்பாரு..ஆனா, அப்பவும், பாபாஜி எங்க தங்கியிருக்காருன்னு எனக்கு தெரியாமத்தான் இருந்தது.

அடிக்கடி வந்து எனக்கு ஒவ்வொரு விஷயமா சொல்லிக்கொடுத்தாரு..
அங்க இருந்த மத்த சாமியார்களும், எனக்கு சில பயிற்சிகள சொல்லிக்கொடுத்தாங்க..(அட்வான்ஸ்ட் யோகா டெக்னிக்ஸ்)

அங்கயே ஒரு ரெண்டரை வருஷம் இருந்தேன்..இந்த உலகத்தையே மறந்திட்டு இருந்தேன்..

அதுக்கப்புறம்தான் பாபாஜி ஒருநாள், "..அவ்ளோதான்..உன்னோட
பயிற்சி எல்லாம் முடிஞ்சது.நீ ஊருக்கு போ,அப்படின்னு சொன்னாரு..

உடனே, நான் கரகரன்னு கண்ணீர் விட்டு அழத்தொடங்கிட்டேன்'..உங்கள விட்டு என்ன போகச் சொல்றீங்களே..நான் எங்க போவேன்…"

அப்பதான் பாபாஜி சொன்னாங்க,"..நீ போய் என்னோட வேலைகள செய்யவேண்டியிருக்கு..க்ரியாயோகவப் பத்தி உலகத்துக்கு நீ சொல்லணும்..
இப்போ உலகத்துல எல்லாரும் யோகவ பணம்பண்ற விஷயமா மாத்திட்டாங்க..,

..இப்போ, யோகா சொல்லித்தர்றது மூலமா பணம் சம்பாதிக்கலாம்னு
உலகம் முழுக்க ஒரு மோசமான நிலைமை உருவாகிட்டுவருது..

...யோகா ஒரு ஒழுக்கம்..ஆனா, இன்னைக்கு யோகாவ ஒரு சிகிச்சையா மாத்திட்டாங்க..அதுவும் பதஞ்சலி முனிவரோட பேர பயன்படுத்திகிட்டு எல்லாரும் யோகாவ வச்சி பணம் பண்ணிட்டு இருக்காங்க..

அதனால, நீ போய் இந்த சூழல மாத்து..பணத்துக்காக யோகான்னு இல்லாம..இதை எல்லாருக்கும் சொல்லிக்கொடு..அப்படின்னு என்ன ஆசீர்வதிச்சி அனுப்பி வச்சாரு.."

இப்படி மஹாஅவதார் பாபாஜிய நேர்ல சந்திச்சு அவருகிட்ட
க்ரியாயோகாவ கத்துகிட்டு வந்து உலகம் முழுக்க
அதை பலருக்கும் சொல்லிக்கொடுத்திட்டு இருக்கறவருதான்...
கியான் சுவாமி (GYAN SWAMI)  இப்ப இவருக்கு வயசு 62..

கியான் சுவாமி

இப்பவும் தான் ஆரோக்கியமான ஆளா இருக்கேன்னா அதுக்குக் காரணம்..மஹாஅவதார் பாபாஜிதான் என்கிறார் கியான் சுவாமி..!

."...இதயநோயால நான் அப்போ பாதிக்கப்படலேன்னா, பாபாஜிய நான் சந்திச்சிருக்கவே முடியாது..

பாபாஜி..இன்னைக்கும் உயிரோட சூட்சம ரூபத்துல இருந்திட்டு
இருக்கிற,ஒரு சக்தி வாய்ந்த மாஸ்டர்..,

அவருக்கு இறப்பு என்பதே கிடையாது..,

இன்னைக்கும் முழுமனசோட நீங்க அவர பாக்கணும்னு நினைச்சா,
 உடனே அவரே  உங்க முன்னால வந்து நிப்பாரு.
இது நூறு சதவீதம் சத்தியம்..

அவர நான் சந்திச்சது, சில வருஷங்கள் அவரோட இருந்தது எல்லாமே, அற்புதமான அனுபவங்கள்.."

இப்படிச்சொல்லி பரவசப்படுகிறார் கியான் சுவாமி.

இதுல ஒரு ஆச்சரியமான ஒற்றுமைய பாத்தீங்கன்னா, கியான் சுவாமியோட கசின் பேரும் ரஜினிகாந்த்...அவரு கியான் சுவாமியோட,சேர்ந்து
பாபாஜிகிட்ட, நேர்ல ஆசீர்வாதம் வாங்கினத நாம பாத்தோம்.

இங்க தமிழ்நாட்டுல பாபாஜிய சினிமா மூலமா (பாபா)
வெளியுலகத்துக்குக் காட்டி, அவரோட பக்தரா தன்ன அறிமுகப்படுத்திக்கிட்டவரு..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..,

இந்த குருபரம்பரையில வந்த இந்த பேரு பொருத்தமும் எனக்கு
ரொம்பவே ஆச்சரியத்த கொடுத்தது..அதனாலதான்..இந்த பதிவோட தலைப்புலயும்..பதிவோட தொடக்கத்துலயும் ரஜினிகாந்த்
பாபாஜி குகைக்கு போய்வந்த படமும் சேர்க்கப்பட்டிருக்கு..,

ஓம்..,
ஓம்..,
ஓம்..,

பிரணவப்பிரவாகம்.,ஊற்றாக பாயும் நாள்..இன்று...,

விநாயகர் சதுர்த்தி..,

எல்லோரும் ஞானத்தில் திளைக்க..அந்த மஹாஅவதார் பாபாஜியின் குருவருள் துணை செய்ய பிரார்த்திப்போம்..குருவேசரணம்...!

Monday, August 26

'தீ இவரைத் தொடுவதில்லை..,' வெளிநாட்டினர் ஆய்வு செய்த சாமியார்..!

' யாகத்தீக்குள் ராம்பாவ் சுவாமிகள் '

சமீபத்துலதான் இவரப்பத்தி நினைவு வந்தது..,

ஃபயர்யோகி (FIRE YOGI)…இப்படித்தான் அவர குறிப்பிடுவாங்க,

அவரோட பேரு, ராம்பாவ் சுவாமிகள்..!


ராம்பாவ் சுவாமிகள்

தஞ்சாவூரச் சேர்ந்தவரு..,

இவரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இவரு நடத்தும் 14 மணி நேர தொடர்யாகம்..!

நாலடிக்கு, நாலடியில யாகசாலை அமைச்சு, விநாயகருக்கு ஒரு ஸ்பெஷல் யாகம் நடத்துவாரு..,

அந்த யாகத்துல போட   50 கிலோ நெய், 400 கிலோ மரக்குச்சி, 200 கிலோ அருகம்புல், 400 வரட்டி, 4000 கொழுக்கட்டைன்னு எக்கச்சக்கமான பொருட்கள தயார் பண்ணி வச்சிருப்பாங்க..,


' யாகம் வளர்க்கும் ராம்பாவ் சுவாமிகள் '

இந்த யாகசாலையில நல்லா தீ வளர்த்து, அதுல எல்லா பொருளையும் அக்னிக்கு அர்ப்பணம் செஞ்சிட்டு, கடைசியா, தானும் அந்த தீயில படுத்துக்குவாரு…,

ஆனா, திகுதிகுன்னு, எரியற தீ ஜீவாலை இவரமட்டும் எதுவுமே செய்யாது.
இதகேள்விப்பட்டு, வெளிநாட்டுல இருந்து ஒரு டீம் வந்து, இது எல்லாத்தயும் ஷூட் பண்ணாங்க..,(இது 2002ல..அப்பவே சாமியாருக்கு வயசு 63..)

ராம்பாவ் சுவாமிகள் தன்னோட உடம்புல ஒரு சாதாரண ஷால் மட்டும்தான் சுத்திட்டு தீயில இறங்குவாரு..அந்த ஷால்ல எதேனும் ஸ்பெஷல் தீப்பிடிக்காத பொருள் கலந்திருக்குமான்னு கூட வெளிநாட்டு லேபுக்கே அனுப்பி டெஸ்ட் செஞ்சு பாத்தாங்க..,

ஆனா, அது சாதாரண ஷால்தான்னு ரிப்போர்ட் வந்திருச்சு..,

ராம்பாவ் சுவாமிகள், தீயில   இப்படி இறங்குறத, இதுவரைக்கும் கடந்த 45 வருஷத்துல ஒரு ஆயிரம் முறை செஞ்சிருப்பாராம்..அவரது உடம்புல ஒரு சின்ன தீக்காயம் கூட ஏற்பட்டதில்ல..

அதுமட்டுமில்லாம, 28 வருஷமா, தினமும் ரெண்டு வாழைப்பழமும், ஒரு டம்ளர் பாலும் மட்டும்தான் இவரோட உணவு, தண்ணியும் சிலதுளி மட்டும்தான்..,(பூஜையின்போது, உள்ளங்கையில விட்டு தீர்த்தம் அருந்துவது மட்டும்தான்)

தினசரி இவரு தூங்கறதும் 3 மணிநேரம் மட்டும்தானாம்..,

எப்படி இதெல்லாம் சாத்தியம்னு, எல்லாவிதமான மருத்துவ பரிசோதனையும் நடத்திபாத்தாங்க…,

கடைசியா, இதுக்கெல்லாம் காரணம் ராம்பாவ் சுவாமிகளோட யோகசக்திதான்னு இப்ப நிரூபிக்கப்பட்டிருக்கு..,

ராம்பாவ் சுவாமிகள் பத்தி வெளிநாட்டினர் நடத்துன அந்த ஆய்வு பத்தி விரிவா ஒரு டாக்குமெண்டரி படம் எடுத்து அதுல தங்களோட ஆச்சரியங்கள பதிவு பண்ணியிருக்காங்க.., (The Fire Yogi)

"...ஒரு குறிப்பிட்ட மந்திரத்த ஜெபிக்கும்போது, நானே, அந்த அக்னியாக மாறிடறதால, எனக்கு தீயால பாதிப்பு ஏற்படறதில்ல..." ன்னு ராம்பாவ் சுவாமிகள் சொல்லியிருக்காரு.

யோகத்தின் மூலமா நம்ம உடம்புல  பிராணசக்திய அதிகரிக்கச் செய்யறது மூலமா, இப்படி பல அதிசயங்கள செய்யமுடியும்னும் ராம்பாவ் சுவாமிகள் சொல்லியிருக்காரு.

தீ ஜீவாலைக்குள்ள  படுத்தும்  ராம்பாவ் சுவாமிகள, தீ எதுவுமே செய்யல..அப்படிங்கறத மட்டுமே, ஒரு ஆச்சரியமான நிகழ்வா, இங்க பதிவு செய்யவரல...,

பிரணவசக்தி மூலமா, இதவிட உச்சத்த ஒவ்வொரு மனிதனும் பெறமுடியும்ங்கறதுக்கான ஒரு உதாரணம்தான் இந்தப்பதிவு.

பொதுவா, மிகப்பெரிய ஞானிகள், இந்த மாதிரியான அற்புதங்கள் நிகழ்த்தறத விரும்பமாட்டாங்க, ஏன்னா, மேஜிக் மாதிரியான அற்புதங்கள சில பயிற்சிகள் மூலமா யோகபயிற்சியில இருக்குற யாராலயும் செய்யமுடியும், 

ஆனா, அடுத்தவங்கள பிரமிக்க வைக்கற, இதுமாதிரியான செயல்களால, முக்கியமான இலக்கான, ஞானத்தை அடைதல் அப்படிங்கறதுல இருந்து யோகபயிற்சியாளனோட கவனம் சிதறடிக்கப்படும்..,

அதனாலதான், ஞானமடைஞ்ச மகான்கள், இதுமாதிரியான, சின்ன, சின்ன அற்புதங்கள் செய்யுற ஆற்றல ஒரு யோகபயிற்சியாளன், கடந்து வரணும்னு வலியுறுத்துவாங்க..,

ஞானத்தின் பாதையில,வழிநெடுக, எத்தனையோ ஆச்சரியங்களும், அதிசயங்களும்,  காத்திருக்கு..,

ஒரு நீண்ட பயணத்துல வழியிலயே வேடிக்கை பாத்துட்டு நின்னுட்டோம்னா, போய்சேர வேண்டிய இடத்துக்கு போகமுடியாதுன்னு, உணர்த்தறதுக்காகத்தான் இந்தப்பதிவு..!

டெயில்பீஸ்;

ராம்பாவ் சுவாமிகளுக்கு, இப்போ வயசு 78.., இதோ இப்ப தான் சிங்கப்பூர்ல இந்த ஸ்பெஷல் யாகத்த முடிச்சிட்டு ஊர் திரும்பி இருக்காரு. இன்னும் ஒரு மாசம் மட்டும்தான் தஞ்சாவூர்ல இருப்பாராம். திரும்பவும் விநாயகர் சதுர்த்தி முடிஞ்சதும், வட இந்தியா பயணம் செய்யப்போறாராம்.

இவர் இந்த யாகம் செஞ்சா, அந்த இடத்துல மழை வரும்...அதுமட்டுமில்லாம, பலவிதமான மூலிகைகள போட்டு பலமணிநேரம் இந்த யாகம் நடத்தறதால, உடல்நல பிரச்னைகள், நோய் போன்றதற்கும் இது கண்கண்ட தீர்வாக இருப்பதா பலரும் உணர்ந்திருக்காங்க.., 

14 மணிநேரம் தொடர்ந்து செய்யப்படுகிற யாகம் இதுன்றதால, இதுக்கு அதிகமா செலவு ஆகுமாம்...அப்படியும் இந்த விநாயகர் ஹோமத்த செய்யணும்னு விரும்பறவங்களுக்குதான் இப்போ ராம்பாவ் சுவாமிகள் இத செய்து கொடுத்திட்டு இருக்காரு..,


Sunday, August 25

அனுமன்(குரங்காக வரும்) அனுமதித்தால் மட்டுமே தீர்த்தம்.., தீர்த்தமலையில்..ஓர் விநோதம்..!

தீர்த்தமலை

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல பழமையான கோயில்..தீர்த்தகிரீசுவரர் ஆலயம்.

தீர்த்தமலைய சம்திங் ஸ்பெஷல்னுதான் சொல்லணும்..!

பலமுறை இங்க போற வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு..இப்பவும் கொஞ்சநாளா  இங்க போகணும்னு மனசுக்குள்ள ஒரு ஏக்கம்..இந்த சமயத்துலதான், தீர்த்தமலையப் பத்தி தினந்தந்தியில அழகான ஒரு கட்டுரைய எழுதியிருக்காங்க..,

தினந்தந்தியில் வெளியான கட்டுரை

ஏறக்குறைய எனக்கு திரும்பவும் தீர்த்தமலைய நேர்ல பார்த்தமாதிரியே ஒரு உணர்வு..,

சாதாரணமா, குடிக்கிற தண்ணியவே, வெள்ளி டம்ளர்ல குடிச்சா ஒரு பலன், மண்பாத்திரத்துல வச்சு குடிச்சா ஒரு பலன், சில்வர்ல குடிச்சா ஒரு பலன்னு சொல்ல நீங்க கேள்விப்பட்டிருக்கலாம்...

அப்படிதாங்க..தீர்த்தம்னு சொல்றதுக்கும்..கண்டிப்பா சில விசேஷ குணங்கள் இருக்கத்தான் செய்யுது..,

இடம்,பொருள்னு சொல்றமாதிரி, தீர்த்தம்னு சொன்னா, அந்த இடத்துக்கு நிச்சயமா ஒரு தனித்தன்மை இருக்கும்..,

ஒரு குறிப்பிட்ட இடம், அந்த இடத்துல உருவாகிற ஊற்று, இதபொறுத்துதான் அதோட மகத்துவம் கூடுது. தீர்த்தமா சக்தியடையுது.

தீர்த்தங்களோட முழுபலனும் நமக்கு கிடைக்க, ஒவ்வொரு தீர்த்தத்துல குளிக்கறதுக்கும், ஸ்பெஷலான ஒரு டைம் இருக்கு..,

இன்னொரு முக்கியமான விஷயம்,

தேவர்கள்...ரிஷிகள்தான் தீர்த்தரூபத்துல இருக்காங்க..., அதனால..அவங்களோட அனுமதியில்லாம..நாம அந்த இடத்துக்கு போகவே முடியாது.

அதனால, தீர்த்தம் அப்படின்னு சொன்னால, மிகப்பெரிய சக்தி மையத்த நாம அணுகறோம்னு ஒரு உணர்வு நமக்கு இருக்கனும்.., தீர்த்தங்கள பொறுத்தவரைக்கும் ஏராளமான சூட்சுமங்கள் இருக்குங்க..,

ஆனா, அதையெல்லாம் சாதாரண ஜனங்க புரிஞ்சிக்க மாட்டாங்க.. இல்லன்னா, அதையெல்லாம் தெரிஞ்சிகிட்டா, சிலர் அதை தவறா பயன்படுத்திக்குவாங்கன்னுதான்,  பல விஷயங்கள் இன்னுமும் சூட்சுமமாவே இருந்திட்டிருக்கு..

சாதாரணமா, நாம வீட்டுல குளிச்சாலே, உடம்புல இருந்து கண்ணுக்குத் தெரிஞ்ச சில அழுக்குகள் விலகுறமாதிரி, தீர்த்தங்கள்ல குளிக்கறதால, நமக்குள்ள நமக்கு தொந்தரவு கொடுத்திட்டு இருக்கற ஏதோ ஒண்ணு நிச்சயமா விலகுது...அதுக்கு பாவம்..தோஷம்னு எல்லாம் பேர் கொடுக்கத்தேவையில்ல..,

தீர்த்தமலையில  மெயின் தீர்த்தம் ராமர் தீர்த்தம்..!

சின்னபையனா இருந்தப்பவே என்ன இங்க அழைச்சிட்டு போயிருக்காங்க..,(என்னோட பெரியப்பா தன்னோட தோள் மேல என்னை உக்காரவச்சிட்டு மலையேறுன அந்த அனுபவம்..எனக்கு ரொம்பவே புதுசு)

எக்கச்சக்கமான குரங்குகள் இங்க சுத்திட்டு இருக்கும்..அதனாலயே, மலை ஏறத்தொடங்கறதுக்கு முன்னாலயே, மலையடிவாரத்துல, குரங்குக்கு போட பொரி, பழம்னு எதாவது வாங்கிட்டுதான் நிறையபேர் மலை ஏறுவாங்க ...,

அதேமாதிரி, இந்த மெயின் தீர்த்தத்துல(ராமர் தீர்த்தம்) எப்பவுமே தண்ணி வந்தபடியேதாங்க இருக்கும். மழைக்காலமா இருந்தா கொஞ்சம் அதிகமா வரும்..

மத்த நாட்கள்ல மலைஉச்சியில சின்னதா ஒரு பைப் பொருத்தியிருப்பாங்க..அந்த பைப் வழியா மெல்லிசா, தண்ணி கொட்டிகிட்டே இருக்கும்..


(இந்தபடத்துல ஒரு வட்டம் போட்டு காட்டியிருக்கிற இடத்துல, அந்த சின்னகோபுரத்துக்கு நடுவுலதான் அந்த பைப் இருக்கு..)

இதுலதான்..சிலசமயம் ஒரு ஆச்சரியம் நடக்கும்...இந்த தீர்த்தத்துல சிலருக்குமட்டும் குளிக்க போய் நிக்கும்போது, தண்ணியே வராது..என்னன்னு மேல பாத்தா, சில குரங்குகள்(அனுமன்..?) வந்து அந்த பைப்ப கை வச்சு அடிச்சிட்டிருக்கும்..,

இவங்க...கீழே இருந்து பதறுவாங்க..நாம ஏதோ செய்யக்கூடாத தப்பு செஞ்சிருக்கோம்..அதான் ஆஞ்சநேயரு வந்து தீர்த்தம் கிடைக்காம செய்யறாருன்னு சொல்லிட்டு அவரபாத்து,
 "..ஆஞ்சநேயா ..ஆஞ்சநேயா.." ன்னு புலம்புவாங்க.


ஆனா, அந்த குரங்குகள் தீர்த்த பைப்ல இருந்து கைய எடுக்கவே எடுக்காது.அதுமட்டுமில்லாம, அவங்களப்பாத்து பயங்கரமா முகத்த வச்சிகிட்டு உறுமவும் செய்யும்..(இதோ மேல படத்துல இருக்கே அதுமாதிரி..)

இத டெஸ்ட் பண்றதுக்காகவே,  அங்க குளிக்க நின்னுட்டு இருக்கற, மத்தவங்க நகர்ந்து வந்து அந்த தீர்த்தம் விழுற இடத்துல வந்து நிப்பாங்க..இப்ப அந்த குரங்கு கைய எடுத்துடும்..திரும்பவும், தீர்த்தம் கீழே விழும்..மத்தவங்க எல்லாம் குளிக்கலாம்..,

ஆனா, திரும்பவும், அந்த பழைய நபர், தானும் இப்ப தீர்த்தத்துல குளிச்சிடலாம்னு கூட்டத்துல இருந்து நகர்ந்து வந்தார்னா, திரும்பவம், குரங்கு பைப்பை மூடிரும்..

இந்த கூத்து இப்படியேதான் நடந்திட்டு இருக்கும்.

சம்மந்தப்பட்ட நபர், அங்கிருந்து கோயிலுக்குப்போய் மனதார தான் எதோ தப்பு பண்ணியிருக்கேன்..அத மன்னிச்சிருன்னு வேண்டிகிட்டு திரும்பவும் வந்தா, சில சமயங்கள்ல தீர்த்தம் கிடைக்கும்..சிலருக்கு அதுவும் கிடைக்காது..,

இந்த காட்சிய நானும் நேர்ல பாத்திருக்கேன்.

தீர்த்தமலை, ஞானத்தேடல் இருக்கற ஒவ்வொருத்தரும் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய ஒரு சக்திமையம்...அதுல மாற்றுக்கருத்தே இல்ல.

திருவண்ணாமலை மாதிரி..இங்கயும் நிறைய சாமியார்கள் சுத்திட்டு இருக்கறத பார்க்கமுடியும்.


ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கவுரி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம்,அக்னி தீர்த்தம் இப்படி மிகமுக்கியமான தீர்த்தங்கள்..,

சின்ன மலைதான்..அதனால, ரொம்ப கஷ்டப்பட்டு மலை ஏறனுமோங்கற பயமெல்லாம் தேவையில்ல..

ஆனா, மேல ஏறினபிறகுதான், நாம வேற ஒரு உலகத்துக்குள்ள வந்திருக்கமோன்னு தோணும்.

அந்த அழக என்னோட வார்த்தைகள்ல வர்ணிக்கறதன்மூலமா, முழுமையா உங்களுக்கு உணர்த்தமுடியாது.., ஒவ்வொருத்தரும் அத நேர்ல தரிசிச்சுதான் உணரமுடியும்..,

முதல்ல அனுமந்த தீர்த்தம் போய் குளிச்சிட்டுதான், தீர்த்தமலை போகனும்னு ஒரு ஐதீகம்..,

அனுமந்த தீர்த்தத்துல பக்தர்கள் நீராடும் காட்சி!

 அரூர்ல இருந்து தீர்த்தமலைக்கு போகும்போதே, வழியிலயே தென்பெண்ணையாறு குறுக்கிடும் (கீழே இருக்குற படத்துல கோயில் பேக்டிராப்ல ஒரு பிரிட்ஜ் தெரியுது பாருங்க, அதுதான் மெயின் ரோடு, அரூர்ல இருந்து தீர்த்தமலைக்கு போறவழி..),

அனுமந்த தீர்த்தம்

இங்கதான் ஆற்றங்கரையில சின்னதா ஒரு கோயிலோட அனுமந்த தீர்த்தம் இருக்கு..

இங்கயிருந்து 12 கிலோமீட்டர் திரும்பவும் பயணம் தொடர்ந்தா, தீர்த்தமலை..,

நல்லதொரு சக்திமையத்துக்கு போய் வந்த திருப்தியை தீர்த்தமலை தரும்ங்கறத மட்டும் என்னால உறுதியா சொல்லமுடியும்..அதனால, தீர்த்தமலைக்கு ஒரு விசிட் போய்ட்டு வந்து உங்க அனுபவத்தயும் பதிவு செய்யுங்க..,

சில வலைப்பதிவர்களின் தீர்த்தமலை பயண அனுபவம், படங்களோட இங்க இருக்கு, அதயும் பாருங்க..,

தீர்த்தமலை ஓர் பயணப் பதிவு

தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை

Thursday, August 22

இமயமலை குகைகளுக்குள்ளே, வெளியுலகம் அறிந்திராத ரகசிய குருகுல வாழ்க்கை..!

இமயமலை குகைகளுக்குள்ள..நிறையபேரு தவம் செஞ்சிட்டு இருக்கறதா, நாம எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம்..,

அது எவ்ளோ பெரிய குகையா இருக்கும்..என்ன ஒரு ஆள் உட்கார்ற அளவு இருக்கும்..இல்லன்னா..இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கும்.. அவ்ளோதானே..,அப்படின்னுதானே கேக்கறீங்க..,

ஆமாங்க..நாமெல்லாம் இதுவரை கேள்விப்பட்டிராத ஆச்சரியமான தகவல்கள, இந்த இமயமலை குகைகளுக்குள்ள நேரடியா பாத்துட்டு வந்தவரோட அனுபவத்ததான் நாம இப்ப பேசிகிட்டு இருக்கோம்..

ஞானி லட்சுமணன்..நேத்துதானே..பிரபஞ்சவெளியில நம்ம முன்னால வந்து ஆஜராகி இவரு தன்னையும், இன்னும் சிலரையும் நமக்கு அறிமுகப்படுத்தினாரு…,(முந்தைய பதிவு)

இமயமலை குருகுல வாசத்துல ஞானி லட்சுமணன் கொஞ்சநாள் இருந்திருக்காரு..அதனால, அந்த அற்புத அனுபவங்கள பத்தி நமக்கு சொல்லும்படி கேட்டிருந்தோம்.. 

இதோ ..அவரே அந்த அனுபவங்கள சொல்றாரு..,

ஞானி லட்சுமணன்

“…..11 வயசுல என்ன அழைச்சிட்டுப்போன குருநாதர், ஒரு வருஷம் வரைக்கும் எதுவுமே சொல்லித்தரல..,

காடு,மலைன்னு என்ன இழுத்துட்டு சுத்தினாரு..பசிச்சா, அங்க இருக்குற எதாவது ஒரு வீட்டுல பிச்சை எடுத்து, அத சாப்பிடுவோம்.

தூக்கம் வந்தா, அது காடு, மேடோ..ஏன் சுடுகாட்டுல கூட படுத்து தூங்கியிருக்கோம்.

இப்படியே ஒரு வருஷம் போனது. பெரிய ஜமீனோட வாரிசா இருந்தும் எந்தபொருள்மேலயும் ஆர்வமில்லாம இருந்த என்னோட நிலை, குருவுக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு..

அதுக்குப்பின்னாடிதான், ஒவ்வொரு விஷயமா எனக்கு சொல்லிக்கொடுக்கத் தொடங்கினாரு…

11 வயசுல குருவோட வந்த நான் ஒரு வருஷம் சும்மா இருந்தேன். அதுக்குபிறகுதான், தொடர்ந்து பலவிதமான யோக மார்க்கங்களை குரு மூலமா கத்துகிட்டேன்.. என்னோட 23வது வயசுல முதல் குருகுல வாசம் முடிஞ்சது.

அப்போதான்..என்னோட குரு எனக்கு அடுத்த ஒரு உத்தரவு கொடுத்தாரு.
அதுதான் இமயமலை குருகுலவாசம்…,

ஆமாங்க..என்னோட அடுத்த குருகுலவாசம்..இமயமலைப்பகுதிகள்லதான்..!

அங்க இமயமலையிலயும், அதயொட்டின திபெத் பகுதியிலயும் ஏராளமான லாமாக்கள் தீவிரமான ஆன்மீக தேடலோடு தொடர்ந்து பலவிதமான பயிற்சிகள்ல ஈடுபட்டு ஞான நிலைக்கு உயர்வாங்க..,

அப்படி சில முக்கியமான லாமாக்கள் கிட்ட என்னோட குரு என்ன பயிற்சிக்காக அனுப்பி வச்சாரு.

லாமாக்கள்  எனக்கு ஒரு 6 வருஷம் சில முக்கியமான பயிற்சிகள சொல்லிக்கொடுத்தாங்க..

அப்பதான்..இந்த இமயமலை குகைகளுக்குள்ள இயங்கிட்டு இருக்குற குருகுலங்களுக்கும் நான் போகிற சந்தர்ப்பம் கிடைச்சது.

நாம யாருமே..அவ்ளோ பெரிய குகைகள இதுவரை பார்த்திருக்க வாய்ப்பேயில்லை.

இமயமலையில அப்படி வெளியே தெரியாத நிறைய குகைகளுக்குள்ள..நிறைய குருகுல பயிற்சிகள் இன்னைக்கும் தொடர்ந்து நடந்துட்டுதான் இருக்கு..,

இமயமலை குகை குருகுலங்களில் இதுவும் ஒன்று

அப்படி ஒரு குகைக்குள்ளதான் என்னையும் அழைச்சிட்டு போனாங்க..,

அங்க வழக்கமான நடைமுறை என்னன்னா..,

8 வயசு சிறுவனா, இந்த குகைக்குள்ள போறவங்க, பல வருஷம் உள்ளேயே இருந்து, எல்லா விதமான பயிற்சிகளையும் முடிச்சு, வளர்ந்து ஆளாகி, அதோட ஒரு அனுபூதி அடைஞ்ச குருவாத்தான் (The Enlightened Master) வெளியே வருவாங்க..,

அதுவரைக்கும், அவங்க வெளி உலகத்தையே பார்க்க முடியாது.

இந்த குகைக்குள்ளேயே, அங்க இருக்கறவங்களோட உணவு தேவைக்கான விவசாயம் செய்றாங்க..பாலுக்காக மாடுகள வளர்க்கறாங்க..,

ஆனா, இங்க ஒரு நாளைக்கு 2 ரொட்டி, ஒரு டம்ளர் பால் மட்டும்தான் எல்லாருக்குமே உணவு…அதுக்குமேல யாருக்கும் கிடையாது.

இமயமலை குகைகளுக்குள்ள இப்படி ஒரு இடம், அதுவும் விவசாயம் செய்யற மாதிரியெல்லாம் இருக்குமான்னு..அங்க அத நேர்ல பாக்கற வரைக்கும் எனக்கும் தெரியாது.

ஆனா, குகையோட வெளியில இருந்து பார்த்தா..உள்ளே அப்படி ஒரு அமைப்பு இருக்கறதே யாருக்கும் தெரியாது..அந்த குகையோட நுழைவு வாயில்கூட ரொம்ப சின்னதா….ஒரு ஆள் நுழையறதே ரொம்ப கஷ்டமாதான் இருக்கும்..உள்ளே இப்படி ஒரு பிரம்மாண்டம்..,

என்னோட குருவோட உத்தரவால, எனக்கு அந்த குகைக்குள்ளயும் சில பிரத்யேக பயிற்சிகள் கிடைச்சது.

இமயமலையில கொஞ்சநாள், அதுக்குப்பிறகும் என்னோட குருவோட கொஞ்சநாள்னு, இப்படியே என்னோட 36 வயசு வரைக்கும் என்னோட இரண்டாவது குருகுலம் நடந்தது.

ஞானமார்க்கத்த பொருத்தவரைக்கும் இரண்டு வழிகள் இருக்கு..அதுல ஒன்னு துறவியாகி ஞானியாவது..இன்னொன்னு..இல்லறத்துல இருந்தபடியே ஞானியாவது..,

இதுல என்னோட குரு எனக்கு உபதேசித்தமுறை..இல்லற ஞானி..,

அதனால, குருவருளால, எனக்கு திருமணமும் நடந்தது.

இல்லறத்துல இருந்தபடியே மக்கள்தொண்டு மூலமா ஞானத்தை அடையறதுதான் பேரானந்தம்..அந்த வழியிலதான் நானும் பயணித்தேன்..,

சீனா, ரஷியா தவிர உலகத்துல இருக்குற 220 நாடுகளுக்கு பரலோக சஞ்சாரமா பயணம் செஞ்சு உலகம் முழுக்கு இருக்குற யோக முறைகள ஆய்வு செஞ்சேன்.

அதன்மூலமா, உலகத்துல வெவ்வேறு வடிவங்களோட இருக்குற யோகமுறைகளோட அடிப்படை ஒண்ணுதான்னு புரிஞ்சுகிட்டேன்.

அதனடிப்படையில, உருவாக்கப்பட்டதுதான் இந்த ஞானபோதனாமுறை,

நம்ம உடம்புல, ஞான ஜோதி –5, கர்ம ஜோதி –5, ஆத்ம ஜோதி –1 ன்னு, மொத்தம் 11 ஜோதி நிலைகள் இருக்கு..

அத உணர்த்தத்தான் நம்ம சபையில 11 அணையாஜோதி ஏற்றப்பட்டிருக்கு.

ஒவ்வொருத்தரோட, சக்தியும் அவங்களுக்குள்ளேயேதான் இருக்கு..கடவுள்னு வெளியே எதுவும் இல்ல..கடவுள உருவ வழிபாட செய்யறது, அதுவும்  ஒரு முறை ..அவ்ளோதான்..ஆனா, நாமெல்லாம் இந்த முறையில சிக்கிகிட்டு அடிப்படைய விட்டுட்டோம்…,

அதனாலதான் இப்போ..இந்த அருள் பேரொளி சபை தொடங்கப்பட்டிருக்கு..,

ஞானமடையனும்னு தேடல் இருக்கறவங்க..இங்க வந்து அதுக்கான யோக முறைகள இலவசமா கத்துக்கலாம்..இது ஒரு உண்டியல் இல்லாத கோயில்.., ஆனா, உங்க தேடல் உண்மையா இருக்கணும்,அது ஒன்னு மட்டும்தான் நிபந்தனை, அப்படி இருந்தீங்கன்னா,  அதுக்கான வழிகாட்டுதல் கண்டிப்பா கிடைக்கும்..அது தானா உங்களுக்குள்ளயே நடக்கும்..உங்களால நிச்சயம் அந்த மாற்றங்கள உணரமுடியும்..”

இப்படியெல்லாம் உலகமக்களுக்கு ஞானப்பாதைக்கு புது வழிகாட்டிய ஞானி லட்சுமணன்…,

இதோ..இங்கேதான்..தஞ்சாவூரில் 2011 ஆகஸ்ட் 23ம்தேதியன்னிக்கு(இதுபத்தி ஒரு வருஷத்துக்கு முன்னாலயே தன்னோட சீடர்கள்கிட்ட அறிவிச்சிட்டாரு) அருள்பேரொளிசபையில் மஹாசமாதியடைந்திருக்கிறார்..,

அன்று முதல்..இங்கு சூட்சும ரூபத்தில் இருந்தபடி, இன்னும் பலருக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்…

அவரது மஹாசமாதி தினமான நாளை(ஆகஸ்ட்23ம்தேதி) இங்கே,(அருள்பேரொளிசபை,எண்;1, ரியாஸ் நகர், பைபாஸ் ரோடு, தஞ்சாவூர் 
போன்; 04362-257595, மொபைல் ; 94867 42791) குருபூஜை நடைபெறுகிறது..

வாருங்கள்..அந்த குருவருள் துணையோடு..நமக்குள் இருக்கும் ஜோதியை தரிசிப்போம்..குருவேசரணம்..!

11 வயது சிறுவனைத் தேடி வந்த குருநாதருக்கு வயது 360..!

11 அணையாதீபம்..அருள் பேரொளி..! 

மன்னார்குடிக்கு பக்கத்துல பெரிய ஜமீன்..1600 ஏக்கருக்கு நிலபுலன்..ஆனா வாரிசுதான் இல்ல..அந்த ஜமீன்தாரருக்கு ஏற்கனவே மூணு மனைவி…இதுல வாரிசுக்காகவே..நாலாவது மனைவியும் வந்தாச்சு..ஆனாலும்..குழந்தை இல்ல..

கோயில்,கோயிலா சுத்தியும் பலனில்ல..எத்தனையோ பரிகாரம் செஞ்சும் பிரயோஜனமில்ல..மலடிங்கற பட்டத்தோடதான் எல்லாருமே இருக்கப்போறமா அப்படின்றதுதான் ஜமீன்தாரோட நாலு மனைவிகளுக்குமே கவலை..,

இந்த சமயத்துலதான் அந்த ஜமீனுக்கு வந்திருந்தாரு ஒரு சாமியார்..,

“… உன்னோட மனைவிக்கு இருக்குற மலடின்ற குறைய நான் நீக்கறேன். உனக்கு ஒரு  குழந்தை பொறக்கும். ஆனா, 11 வயசுவரைக்கும்தான் அது உன்னோட குழந்தை. அதுக்கு பிறகு, அத நீ எங்கிட்ட ஒப்படைச்சிடனும்.., உனக்கு மட்டுமே அந்தக்குழந்தை சொந்தம்னு நினைச்சின்னா அதோட உயிருக்கு உத்தரவாதம் கிடையாது, அந்த குழந்தை இந்த உலகத்துக்கே வழிகாட்டப் போகுது….”

சாமியாரோட இந்த டீலுக்கு ஜமீன் ஒத்துக்கிட்டாங்க..,

அதே மாதிரி ஜமீனோட நாலாவது மனைவிக்கு இரட்டைக்குழந்தை பிறந்து, 

அதில் ஒன்னு மட்டும் உயிர் பிழைச்சிருக்கு..,

அந்த குழந்தையோட நடவடிக்கைகளோ பிறந்ததுல இருந்தே  ரொம்ப வித்யாசமானதா  இருந்திருக்கு..,

அவரு வளந்து 6 வயசு சிறுவனா இருந்தப்ப..விநாயகருக்கு கொழுக்கட்டை செஞ்சு படைச்சிருக்காங்க..,

பூஜையெல்லாம் முடிஞ்சதும், “…ஏன் விநாயகர் வந்து கொழுக்கட்டைய சாப்பிடல..” னு சிறுவன் கேள்வி கேட்க, என்ன பதில் சொல்றதுன்னு யாருக்குமே தெரியல.

சாதிவெறி தலைதூக்கி ஆடினகாலமது…,

ஊருக்கு வெளியே ஆத்தங்கரையோரமா  தாழ்ந்த சாதியினரா இந்த சமூகம் அடையாளப்படுத்தி வச்சிருந்த ஜனங்களோட குடிசைங்க இருக்கு.
இவரு தினமும் அங்கபோய் அந்த குழந்தைங்களோட விளையாடிட்டு, அவங்க வீட்டுலயே சாப்பிட்டுட்டு வந்திடுவாரு..யார் சொன்னாலும் கேக்கமாட்டாரு…,

ஒன்னே..ஒன்னு..கண்ணே..கண்ணுன்னு..தவமா தவமிருந்து பெத்த பிள்ள..இப்படி ஏறுக்குமாறா பண்ணுதேன்னு..எல்லாருக்கும் கவலை..ஆனா, எதுவும் செய்யமுடியல..,

அதனால..தினமும் வெளியிலபோய் விளையாடிட்டு வர்ற சின்னஜமீனுக்கு மஞ்சள் அபிஷேகம் செஞ்சு தீட்டு கழிச்சிட்டுதான் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு போவாங்க..,

தென்னிந்தியாவோட பழமையான சிவன்கோயில் திருக்களர்ல இருக்கு. இந்த கோயிலோட பரம்பரை அறங்காவலரா இந்த ஜமீன் குடும்பம்தான் இருந்தது.
இந்தக்கோயில்ல ஒரு அம்மன் சிலைய புதுப்பிச்சு அதுக்கான ஒரு பூஜை ஏற்பாடு செய்திருந்தாங்க.

இதுல சின்னஜமீனுக்கு பரிவட்டம் எல்லாம் கட்டி முதல் மரியாதை கொடுத்து அவர பூஜை செய்யச் சொன்னாங்க.

அதுக்கு கொஞ்சமுன்னதான், அவரு அந்த கோயிலுக்கு வெளியே உக்காந்துட்டு இருந்த அந்த சிலைய செஞ்ச ஸ்தபதி கிட்ட போய்,
“…நீங்க ஏன் உள்ளே வராம..வெளியவே உக்காந்திட்டு இருக்கீங்க..”  ன்னு கேட்டிருக்காரு.

அந்த ஸ்தபதியோ, “…நேத்து வரைக்கும் என்னோட காலுக்கு கீழே இருந்த கல்லு அது, என்னாலதான் அழகான வடிவம் கொடுக்கப்பட்டு இன்னைக்கு அது கர்ப்பகிரகத்துல சாமியா போய் உக்காந்திருக்கு…அப்படின்னா..யாரு கடவுள்..படைச்சவனா..? படைக்கப்பட்டதா…?..” ன்னு ஸ்தபதி கேட்க,

சிறுவனுக்குள்ளே எங்கயோ பொறி தட்டிருச்சு…,

அவ்வளவுதான், “..நான் இந்த பூஜைய செய்யமாட்டேன்..” ன்னு சொல்லிட்டு போயிட்டாரு சின்ன ஜமீன்.

இதனால..ஜமீனுக்குள்ளயே..புகைச்சல் ஆரம்பமாயிடுச்சு…எல்லாமே, ஏறுக்குமாறா பண்ணிட்டு இருக்குற சின்னஜமீன, இனியும் உயிரோடு விடக்கூடாதுன்னு சிலர் முடிவு பண்ணிட்டாங்க..,

11 வயசு சிறுவனோட உயிருக்கு அவரோட உறவினர்களாலயே ஆபத்து ஏற்பட்டுடுச்சு…

சிறுவனோட உயிரை எப்படி பாதுகாக்கறதுன்னு ஜமீன் தவிச்சிட்டு இருக்குற சமயத்துலதான்…

பலவருஷங்கள் கழிச்சு திரும்பவும் அங்க வந்தாரு அந்த சாமியாரு…அப்ப சரியா அந்த சிறுவனுக்கு வயசு 11.

தான் ஏற்கனவே சொன்னத நினைவுபடுத்தினாரு, “..உன்னோட மகன் உயிரோட இருக்கணும்னா..எனக்கு கொடுத்த வாக்குறுதிபடி என்னோட அனுப்பிடு..,

இனி அவன் இந்த உலகத்துக்குதான் சொந்தம்..இல்லன்னா…இப்பவே அவனோட உயிருக்கு சிலர் கெடு வச்சிட்டாங்க..உனக்குதான் அவன்னு சொந்தம் கொண்டாடினா, அவன உயிரோட பாக்கமுடியாது…”

எங்கயிருந்தாலும் மகன் உயிரோட இருந்தாபோதும்னு ஜமீன் அந்த சாமியாரோட, சிறுவன அனுப்பிவச்சிட்டாங்க…,

அப்போ..இந்த 11 வயசு சிறுவன சிஷ்யனா அழைச்சிட்டுப்போன குருவுக்கு வயசு 360.

சாகாக்கலைய பயின்ற அந்த குருவுக்கு இந்த சிறுவன்தான் கடைக்குட்டி சீடன்…,

அவருக்கு மொத்தம் அஞ்சு சீடர்கள்..அவங்களோட பேரக்கேட்டீங்கன்னா…நிஜமாவே…ஆச்சரியப்படுவீங்க..,

அவரோட முதல் சீடர்…வடலூரைச்சேர்ந்தவர்,

இரண்டாவது சீடர்….ஷீரடி சாய்பாபா,

ஷீரடி சாய்பாபா

மூன்றாவது சீடர்…(இவரது பெயரையும், படத்தையும் இங்கு சேர்ப்பதை இவரது வழிவந்தவர்கள் விரும்பவில்லை),


நான்காவது சீடர்…ஆந்திரா, கொலகமுடி வெங்கய்யா சாமி,

கொலகமுடி ஸ்ரீ வெங்கய்யா சாமி

கடைசி மற்றும் 5 வது சீடர்தான் இந்த 11 வயது சிறுவன்..,

இதுல ஒவ்வொருவருக்கும்  குருவா வந்து வழிகாட்டினவருக்கு ஒவ்வொரு இடத்துலயும் வெவ்வேற பேரு…,

அதுக்கு சில சூட்சுமமான காரணங்கள் சொல்லப்படுது.(அதையெல்லாம் விளக்கிச்சொல்ல குருபரம்பரை பின்னால் வழிகாட்டும்)

இந்த சிறுவனுக்கு ரெண்டுகட்டமா பலவருஷ குருகுல வாசம் நடந்திருக்கு.
அவருதாங்க, இன்னைக்கு நாம பாக்கப்போற  ஞானி லட்சுமணன்..!


ஞானி லட்சுமணன்

இவரு மஹாசமாதி ஆன நாள்..2011 ஆகஸ்ட் 23ம்தேதி....,

நாளைக்கு(ஆகஸ்ட்23ம் தேதி) இவரோட மஹாசமாதி நாளை முன்னிட்டு, இவர் சமாதியான தஞ்சாவூர் ஆசிரமவளாகத்துல குருபூஜை நடக்குதுங்க..அதுக்கான பதிவுதான் இது…!

தன்னத்தேடி வர்றவங்களுக்கு, ஞானமடைவதற்காக இவரு காட்டினவழிதான்….அருள் பேரொளி சபை..!

“…அருட்பெரும்ஜோதி..அருட்பெரும்ஜோதி…அருட்பெரும்ஜோதி…தனிப்பெரும்கருணை…”ன்னு வள்ளலார் ஒரு அணையாஜோதிய ஏற்றிவச்சு, ஞானத்துக்கு ஜோதிவழிபாட்டை அறிமுகப்படுத்தினாரு.

ஞானி லட்சுமணன் 11 அணையாஜோதிகள ஏற்றிவச்சு ஞானத்துக்கான புதியதொரு வழி இதுன்னு சொல்லியிருக்காரு.

நாளை  அவரோட மஹாசமாதி (ஆகஸ்ட் 23ம்தேதி) தினம்…

அருள் பேரொளி சபை, எண்;1, ரியாஸ் நகர், பைபாஸ் ரோடு,தஞ்சாவூர்(போன்;04362-257595, மொபைல்-94867 42791) 

இந்த முகவரியில இருக்குற அருள் பேரொளி சபை வளாகத்துல தான் இந்த குருபூஜை நடக்க இருக்கு.


அருள்பேரொளிசபை,தஞ்சாவூர்

இங்க தரப்படுகிற பிரசாதம்…திருநீறு. அது ஒரு சூட்சுமமான மருந்து

எல்லா நோய்களுக்குமான மாமருந்துன்னு பயனடைஞ்சவங்க  சொல்றாங்க..,

23ம்தேதி அதிகாலை…பிரம்ம மூகூர்த்தத்துல…நடக்குற குருபூஜையில..மிகத்தெளிவா சில அதிர்வலைகள உணரமுடியும்னு அனுபவிச்சவங்க சொல்றாங்க..இதெல்லாம், வார்த்தைகள்ல சொல்லமுடியாதவை..இவற்றை அனுபவிச்சுமட்டுமே பார்க்கணும்..,
அதுவும் குருவருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்..!

டெயல்பீஸ்;

இந்த 5 சீடர்கள்ல ஒருத்தரான கொலகமுடி வெங்கய்யா சாமி பத்தி டீடெய்ல்ஸ் தேடும்போதுதான் தெரிஞ்சது, அவரும் மஹாசமாதியானது இதே ஆகஸ்ட்டுலதான்…,


கொலகமுடி ஸ்ரீ வெங்கய்யா சாமி

அதனால ஒவ்வொரு வருஷமும், ஆந்திரா கொலகமுடியில ஆகஸ்ட் 18 ல இருந்து 24 வரைக்கும் வெங்கய்யா சாமிக்கு ஆராதனா உற்சவம் நடத்தறாங்க.
இந்த விழாவுக்கு மட்டும் ஒவ்வொரு வருஷமும் 5 லட்சத்துக்கும் மேல பக்தர்கள் வராங்களாம்..அதுக்காக பிரம்மாண்டமான  விழா ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு,

அப்படின்னா அந்த மஹாகுருவோட பர்சனாலிட்டி எந்தளவுக்கு பக்தர்கள்கிட்ட ரீச் ஆகி இருக்கும்னு ஆச்சரியத்த ஏற்படுத்தினது இந்தசெய்தி....!

திரும்பவும் நம்ம விஷயத்துக்கு வருவோம்..,

ஞானி லட்சுமணன்..தன்னோட குருகுல வாசத்துல.. ,

ஒரு 6 வருஷத்த இமயமலை குகைகள்ல கழிச்சிருக்காரு…,

அதுல இதுவரைக்கும் நாம கேள்வியே பட்டிராத…பல யோக ரகசியங்கள்…குருகுல வாழ்க்கை முறைகள்னு.. நம்மள ஆச்சரியப்படுத்துற ஏராளமான அதிசயங்கள் இருக்கு…அதெல்லாம் பிரிதொரு பதிவில், தொடரும்…விரைவில்…,

அதனால..,

மறக்காம..நாளைக்கு…(ஆகஸ்ட்23ம்தேதி)..ஞானி லட்சுமணன் மஹாசமாதி தின குருபூஜையில கலந்துக்கோங்க.., எல்லாருக்கும் குருவோட ஆசி  கிடைக்க எல்லாருமே பிரார்த்திப்போம்…குருவேசரணம்..!

பின்குறிப்பு; ஞானி லட்சுமணன் அவர்களுடன் வாழ்ந்து அவருடைய ஞான அனுபவங்களை நேரடியாக அவரிடமிருந்தே கேட்டறிந்த ஞானியின் பிரதான சீடர் வெங்கட் நரசிம்மன் சொல்லக்கேட்டு எழுதப்பட்டதே இந்தத் தகவல்கள்.(இவர்தான் தற்போது அருள் பேரொளி சபையினை கவனித்து வருகிறார்) 

Wednesday, August 21

விசிறிசாமியார் பிறந்த கிராமத்தில் ஒரு விழா...!

பகவான் யோகிராம் சுரத்குமார்

சுவாமிஜி பிறந்த ஊர் உபியில(உத்திரபிரதேசம்) இருக்குற நரதரா(Nardara) அப்படிங்கற ஒரு அழகான கிராமம்..,

பகவான் அவதரித்த திருத்தலம்

கங்கைக்கரையோரமா இந்த கிராமம் அமைஞ்சிருக்கு..,

நதிமூலம், ரிஷிமூலமெல்லாம் பாக்கத்தேவையில்லன்னு சொல்வாங்க.. ஆனா, அவரு இந்த உலகத்துல ஸ்தூல உடம்போட நடமாடின எல்லா இடங்களுமே, நமக்கு அவரோட இருப்பை உணர்த்துற இடங்கள்..அதனால, அவரு பிறந்த இடத்தையும் நாம விட்டுவைக்கத் தேவையில்ல..,

அதனாலயோ, என்னவோ..இப்போ சுவாமிஜியோட பிறந்த ஊருலயும் அவரோட நினைவா ஒரு அடையாளத்த பதிக்கப்போறாங்க..

இந்த மாசம் (ஆகஸ்ட்) 28ம்தேதி, அன்னைக்கு...உத்திரபிரதேசத்துல இருக்குற நரதரா கிராமத்துல பகவான் யோகிராம் சுரத்குமார் அவங்களோட ஜன்மஸ்தான் திறப்புவிழா நடக்க இருக்கு.

இத திறந்துவைக்கப்போறவர் நீதியரசர் திரு.அருணாச்சலம் அவர்கள்...,

பகவான் அவதார திருத்தலத்தில் ஒரு திருவிழா

ஆகஸ்ட் 28ம்தேதி அதிகாலை 5மணிக்கு ஹோமத்தோட நிகழ்ச்சிகள் ஆரம்பமாகுது..,

அன்னைக்கும் முழுதும் சாமிகளோட நாமசங்கீர்த்தனத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க..,

அவ்ளோதூரம் போகமுடிஞ்சவங்க போய் வரலாம்..,

குழந்தையா சாமிஜி ஓடியாடின, விளையாடின அந்த பால்ய கால அனுபவங்களையெல்லாம் நிரப்பி வைத்திருக்கும், அந்த புனிதமான இடங்களையெல்லாம், பாத்து தரிசனம் செஞ்சுட்டு வரலாம்..,

முடியாதவங்க..(என்னையும் சேர்த்துதாங்க..) இங்கயிருந்தே சாமியோட நாம சங்கீர்த்தனம் செஞ்சாலே போதும்ங்க..

அந்த கருணைக்கடலோட எல்லையற்ற அருளாற்றல் நம்மையெல்லாம் சுற்றிநிற்கும்..,

யோகிராம் சுரத்குமார,
யோகிராம் சுரத்குமார,
யோகிராம் சுரத்குமார,
ஜெயகுருராயா..!

Tuesday, August 20

முதல் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடாதீங்க..! இயற்கைச்சீற்றங்களைக் கணிக்கும் ஜோதிடரின் எச்சரிக்கை.!

"...Space ல இருக்குற விஷயங்கள நமக்கு ரிசீவ் பண்ணிக் கொடுக்கறவங்கதான்  ரிஷிகள்..

..அப்படித்தான் நமக்கு இந்த அற்புதமான ஜோதிட சாஸ்திரமும் கிடைச்சிருக்கு...

ஆனா, இது தெரியாம, ஜோதிட சாஸ்திரத்த வியாசர்தான் உருவாக்கினார்...

பராசரர்தான் எழுதினார்னு எல்லாம் நாம சொல்லிட்டு இருக்கோம்...அவங்க மூலமா இந்த உலகத்துக்கு கிடைத்த பொக்கிஷம்தான் ஜோதிடம்..."

இப்படி பொட்டுல அடிச்சமாதிரி பேசும் இவருதாங்க ராமச்சந்திரன்..,

ராமச்சந்திரன்


வராஹிமிகிரரின் 'பிரஹத் சம்ஹிதா' மற்றும் வேத நூல்களோட அடிப்படையில கோள்களோட நிலைப்பாட்டை கண்டுபிடிச்சு, அதன்மூலமா ஒவ்வொரு வருஷமும், உலகம் முழுக்க,  எங்கெங்க, என்ன மாதிரியான இயற்கை சீற்றம் வரும், மழை, வெயில் எப்படி இருக்கும்..,நிலநடுக்கம், புயல் இப்படி எல்லாத்தையும் பட்டியல் போட்டு முன்னாடியே பத்திரிகைகள்லயும், வானியல் ஆய்வாளர்களுக்கும் அனுப்பிவைக்கறத பல வருஷங்களா தொடர்ந்து செய்துவர்றாரு..,

ஜோதிடத்துல இருக்குற சூட்சுமமான விஷயங்கள புரிஞ்சு வச்சிருக்கிற இவருக்கு, ஜோதிடம் முழுநேர தொழில் அல்ல....கன்ஸ்ட்ரக்ஷன்தான் இவரோட தொழில்.

தனிநபர்களுக்கும் ஜோதிடத்து மூலமா நுட்பமா சில தீர்வுகள சொல்றாரு ராமச்சந்திரன்..,

அதுபத்தின விவரங்களையும், இயற்கைசீற்றங்களுக்கு அவர் கணிப்பதுபத்தியும், சின்னதா (இல்லைங்க..கொஞ்சம் பெருசுதான்..) ஓர் உரையாடல்..,

இனி...தொடர்வது ராமச்சந்திரன்,

"....1995ல தான் இயற்கை சீற்றங்கள் பத்தி முதன்முதலா ஒரு கணிப்பு வெளியிட்டிருந்தேன்.

அது அப்படியே தொடர, 2002ல ஆனந்த விகடன் எனக்கு ஒரு பெரிய அறிமுகத்த கொடுத்தது.

அதுல தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போகும்...இந்திய ரூபாயின் மதிப்பு 40 க்கும் கீழே போகும்னு நான் கொடுத்திருந்த கணிப்புகள் உண்மையானது.

அதேமாதிரி 2004 நடந்த சுனாமிபத்தியும் முன்கூட்டியே கணிச்சிருந்தேன்..ஆனா,  சுனாமின்னு நான் பேர்கொடுக்கல..ஒரு பூகம்பத்தால பேரழிவு வரும்னு மட்டும் சொல்லியிருந்தேன்.

இதோ..இந்த 2013 வரைக்கும் நான் கணிச்சி சொல்லிட்டு இருக்குற தகவல்கள் 70 % அப்படியே நிகழ்கிறது.

இப்ப பெய்யுற மழை உள்பட முன்னாடியே நான் கணித்து சொன்ன தகவல்கள் பத்திரிகைகள்ல செய்தியா வந்திருக்கு.

சமீபத்தில் வெளியான செய்தி

எல்லாத்துக்குமே நம்ம மூதாதையர் வழி செஞ்சு வச்சிருக்காங்க.அத நாம முறைய பயன்படுத்திக்கிறது மட்டும்தான் நம்மோட புத்திசாலித்தனம்.

எனக்கு முழுநேரமும் இந்த ஆய்வுகள செய்யறதுக்கான நேரமும் இல்ல..அதுக்கான வசதியும் இல்ல. நான் என்னோட தொழில்,குடும்பம் இதையும் கவனிச்சாகனும்.

அதனாலதான், அரசு இந்த ஆய்வுகள செய்ய ஆட்களையும்,வசதிகளையும் செய்துகொடுத்தால் இந்த வழிமுறைகளை அவங்களுக்கு கொடுத்து உதவ தயாராக இருக்கேன்.

நம்முடைய  வேதங்கள்ல்ல இருக்குற வழிமுறைகளைத்தான் நான் எடுத்து பயன்படுத்தி கணக்கிடுறேன்.

இத முறையா பயன்படுத்தினா, வரப்போகிற இயற்கைச் சீற்றங்களையும்,   பெரும்சேதங்களையும் முன்கூட்டியே கணிக்க முடியும்,

பெரும்அழிவினால் ஏற்படும் உயிர்ச்சேதங்களை காப்பாத்தலாம்...

எவ்வளவுதான் விஞ்ஞானம் பேசினாலும், நம்ம எல்லாரையும் இயக்குற சக்தி ஒன்னு இருக்குங்கறத நாம நம்பித்தான் ஆகணும்.

ஆனானப்பட்ட ஐன்ஸ்டினே அதுபத்தி இப்படி சொல்லியிருக்காரு.

"....Everything is determined...by forces over which we have no control.
It is determined for the insect as well as for the star.
Human beings, vegetables, or cosmic dust.
-We all dance to a mysterious tune, intoned in the distance by an invisible piper."
-Albert Einstein

(எல்லாமே தீர்மானிக்கப்பட்டவைதான்..,
அந்த இயக்கும் சக்தியை நம் யாராலும் கட்டுப்படுத்த இயலாது.
ஒரு சாதாரண பூச்சியிலிருந்து நட்சத்திரம் வரை எல்லாமே தீர்மானிக்கப்பட்டவைதான்..
மனிதர்கள்,காய்கறிகள்,இந்த பிரபஞ்ச தூசு வரை,
-எங்கோ தொலைவில் இருந்து இசைக்கப்படும்,
ஒரு கண்ணுக்குத் தெரியாத மர்மஇசை நம்மையெல்லாம் ஆட்டுவிக்கிறது..
–ஆல்பரட் ஐன்ஸ்டின்)

அந்த கண்ணுக்குத் தெரியாத சக்திகிட்ட நாம நம்பள ஒப்படைச்சிடணும்.அதக்கப்புறமா, ஒரு புல்லாங்குழல் வழியா காத்து நுழைஞ்சி இனிமையான நாதமா வர்றமாதிரி நம்ம வழியா பல விஷயங்கள் நடக்கத்தொடங்கிடும்.

அப்படித்தான்  இந்த ஜோதிட அற்புதங்கள் என் மூலமா, பலவிஷயங்கள வெளியுலகத்துக்கு தெரிவிப்பதா நான் நம்புறேன்.

ஜோதிடத்த நான் கத்துக்க தொடங்கினதுகூட அப்படி ஒரு நிகழ்வுதான்...,

'....அப்ப எனக்கு 18 வயசு. என்னோட அப்பா வாத்தியார்.
என்ஜினியரிங்  படிக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா எங்கப்பாவோ கிராஜூவேஷன்தான்னு ஒரே பிடிவாதமா நின்னாரு.

அப்பதான் என்னோட சொந்தத்துல ஒருத்தர் "...தம்பி, உனக்கு இப்போ ஏழரை நாட்டு சனி நடக்குதுப்பா, அதனாலதான், இப்படியெல்லாம் நடக்குது.." ன்னு ஆறுதல் சொன்னாரு.

அதேமாதிரி,நான் ஆசைப்பட்ட என்ஜினியரிங் படிக்கமுடியல..
பிஎஸ்சி(பிசிக்ஸ்) தான் படிச்சேன்.

அப்பதான் எனக்கு முதமுதலா ஜோசியத்து  மேல ஒரு ஆர்வம் வந்தது.

அது என்ன ஏழரை நாட்டு சனி..அது எப்படி என்னோட விருப்பத்துக்கு எதிரா செயல்படுதுன்னு தெரிஞ்சிக்க ஜோசியத்த படிக்க ஆரம்பிச்சேன்.

என்னோட சுயஜாதக ஆராய்ச்சியில ஈடுபட்டேன். அப்போதான் என்னால பல உண்மைகள புரிஞ்சிக்க முடிஞ்சது.

முதமுதலா என்னோட 23 வயசுல என் உறவுக்காரர் ஒருத்தர் தன்னோட மகனுக்கு திருமணம் ஆகுமான்னு கேட்டாரு.

அவரோட ஜாதகத்த பார்த்த நான் உங்க மகன் ஒரு விதவையவோ, இல்லன்னா ஒரு டைவர்சியையோதான் கல்யாணம் செய்வாங்கன்னு சொன்னேன்.

அவங்களுக்கு பயங்கர ஷாக்..ஆனா, கொஞ்சநாள்லயே நான் சொன்னமாதிரி

அவரோட மகன் ஒரு டைவர்சியதான் கல்யாணம் செஞ்சாரு.

அதேமாதிரி எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு  தன்னோட பொண்ணுக்கு 45 வயசாயிடுச்சு....இனிமே, கல்யாணமாகுமான்னு கேட்டாரு.

அவங்க ஜாதகத்த பாத்துட்டு இவங்களுக்கு ஏற்கனவே, கல்யாணமான ஒருத்தரோடதான் கல்யாணமாகும்னு சொன்னேன்.

அந்த பெண் அப்போ எம்பில் படிச்சிட்டு இருந்தாங்க.அவங்களோட மாஸ்டரா இருந்தவருக்கும் அவங்களுக்கும் பழக்கமாயிருக்கு. அவருக்கு கல்யாணமாகி ரெண்டு பெண்பிள்ளைகளும் இருந்தது. இருந்தும் அவரைதான் இந்தப்பெண் கல்யாணம் செஞ்சிகிட்டாங்க.

கடையில ஒரு பொருள் வாங்கினா அதோட யூசர்ஸ் மேனுவல் தருவாங்களே, அதேமாதிரிதான் ஜோதிடமும்..
ஒரு மனுஷனோட யூசர்ஸ் மேனுவல்தான் அவனோட ஜாதகம்...,

ஆனா, இப்போ பெரும்பாலானவங்க ஜோதிடத்த  பணம் பண்றதுக்கான ஒரு கலையா மாத்திகிட்டாங்க.

ஆனா, ஜோதிடம் நிராதரவானவங்களுக்கு உதவறதுக்கான ஒரு கலை.

பொதுவா ஜோதிட ஆய்வுக்கு இருவகையான பஞ்சாங்கங்களை பயன்படுத்துவோம். ஒன்னு வாக்கியப் பஞ்சாங்கம். மற்றொன்று திருக்கணித பஞ்சாங்கம்.ரெண்டுக்குமே 8 நிமிட வித்யாசம் இருக்கு.

என்னோட ஆய்வுபடி திருக்கணித பஞ்சாங்கமே கணிப்புகளுக்கு துல்லியமா இருக்கு.

திருமணத்திற்காக ஜாதகப்பொருத்தம் பார்க்கிறவங்க சில விஷயங்கள்ல்ல கவனமா இருக்கணும்..

திருமணத்துக்குன்னு பாக்குற பத்து பொருத்தத்துலயே நாடி பொருத்தம்னு ஒன்னு இருக்கு.

அதுல பிளட் குரூப் பத்தி தெளிவா இருக்கு. கணவன், மனைவி ரெண்டுபேருக்கும் பொருந்தாத பிளட் குரூப் இருந்தா குழந்தை பிறப்புல பிரச்னை இருக்கும்.(இதுபத்தி விரிவான பதிவு..பின்னர் எழுத உத்தேசம்)

அதுவும் இப்பவெல்லாம், முதல் குழந்தை பிறக்கறத வேண்டாம்னு தள்ளி போடறாங்க.அப்படி செய்யக்கூடாது.

முதல் குழந்தைய வேண்டாம்னு கலைச்சிட்டா, அதுக்குப்பிறகு அந்த பெண்ணோட உடம்புல ஒரு ஆண்டிபயாடிக் உருவாகி, அடுத்தகரு தங்காம, அதுவே கலைச்சிடும்.

இதனாலதான் முதல் கருவ தடுக்கவே கூடாது. அப்படியே  பிரச்னை இருந்தாகூட இரண்டாவது குழந்தைக்குதான் அது வெளியே தெரியும்.

ஆனா, பெரும்பாலானவங்க..இப்ப பணத்துக்கு ஆசப்பட்டு சரியா பொருத்தம் பாக்காம, ஜோசியத்த ஒரு தொழிலா செய்யறாங்க..அதனாலதான் இப்படியெல்லாம் தப்பு வருது.

தனிமனித வாழ்க்கைய பத்தின எல்லா விவரங்களையும் ஜாதகத்து மூலமா துல்லியமா கண்டுபிடிக்கமுடியும்.

எந்த நோய் வரும்..வந்திருக்கிற நோய்க்கு செலவு செஞ்சு பாத்தா அது தீருமா..இப்படி பல விஷயங்கள ஜோசியம் மூலமா தெரிஞ்சிக்க முடியும்.(இதுவும் விரிவா..பலருக்கு பயன்படும் விதமா இன்னொரு பதிவு ..விரைவில்)

இப்படி தனிமனித வாழ்க்கை பத்தின ஜோதிட கணிப்புகள் செஞ்சிட்டு இருந்த நான் ஒரு கட்டத்துல இயற்கைச்சீற்றங்கள், வானிலை மாற்றங்கள் பத்தியும் ஜோதிடத்தின்மூலமா துல்லியமா கணிக்கமுடியம்ங்கறத என்னோட தொடர் ஆராய்ச்சி மூலமா தெரிஞ்சிகிட்டேன்.

தினமும் குறிப்பிட்ட நேரம் இந்த இயற்கைச்சீற்றங்கள் பத்தின என்னுடைய ஜோதிட ஆராய்ச்சிய செய்துகிட்டு இருக்கேன்.

சிலர் தங்களோட தனிப்பட தேவைகளுக்காகவும் ஜாதகத்தோட என்ன வந்து பாக்கறதுண்டு.

இதுல வெளிய சொல்லமுடியாத சில விவிஐபிக்களும் உண்டு.
பிரச்னைன்னு வர்றவங்களுக்காக, இறையருள் ஜோதிடத்தின் வழியா சில தீர்வுகள என்மூலமா நடத்திட்டு இருக்குன்னுதான் சொல்லணும்..!

....இப்படியாக ராமச்சந்திரனுடனான பேச்சு நீண்டபடியே போனது....,

தன்னை ஒரு Astro Meteorologist ன்னுதான்  இவரு குறிப்பிடராரு...

ஜோதிடம் அப்படிங்கறதயும் தாண்டி..நம்மோட  வேத முறையிலான ஜோதிட கணிப்புகளால ஒருத்தரு முன்கூட்டியே இயற்கை சீற்றங்களப் பத்தி கணிச்சு சொல்றாருங்கறது மட்டுமில்லீங்க....

இதன்மூலமா இயற்கைச் சீற்றங்களால ஏற்படும் உயிரிழப்புகள தடுக்கமுடியும் அப்படிங்கறதுதான்..இவர நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த நினச்சதோட நோக்கம்..!

உலகம் முழுவதிலுமான உயிர்களின் மீது அக்கறைகொண்ட எல்லாருமே...என்னைப்பொறுத்தவரைக்கும் ஞானிகள்தான்...அவர்கள் ஞானமடையாவிட்டாலும்கூட...,