Monday, April 14

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 02

                               தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 01

இனி அடுத்த பாகம் இதோ தொடர்கிறது..,

மச்ச அவதாரம்

சரி மச்சம்னா என்ன..?


முத அவதாரம்..தண்ணியில தோன்றியது என்பதற்கு குறிப்பால் 

உணர்த்துவதற்காக அந்த அவதாரத்துக்கு பேரு மச்ச அவதாரம்

என்ன..நீ பிறந்தொட்டியே நீந்த கத்துக்கணும்..!

லோகத்துல இருக்குற உயிர்கள்ல

பேரன் பேத்தி எடுத்தவரைக்கும்கூட கடவுள்கிட்ட பேங்பேலன்ஸ வேணும்னு 

மட்டுமே,கேட்டுட்டு இருக்கற ஒரே இனம்னு பாத்தீங்கன்னா,  

அது மனித இனம் மட்டுமதான்

ஆசிரமத்துலன்னு பாத்தீங்கன்னா

இதுவரைக்கும் ஞானத்த தேடி யாரும் வந்ததே கிடையாது.

ஸ்டில் நவ்..,

எப்படி..

மொதல்ல வருவாங்க..

பர்ஸ்ட் வந்து உக்காருவாங்க..

நமக்கு ரொம்ப ஆர்வமா இருக்கும்..

என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்.. ?

இல்ல சாமி கேள்விப்பட்டோம்..

ஓகே ரைட்..என்ன விஷயங்க..?

கடவுளைக் கண்டடைவது எப்படின்னு..

எடுத்த ஒடனேயே ஒப்பன் பண்ணிடுவாங்க...

நமக்கு ரொம்ப பெருமையா இருக்கும்..

ஆஹா..எப்பா மாட்டினாண்டா..

இவனுக்கு எப்படியாவது ஒரு ரெண்டு மணிநேரமாவது பேசி புரிய வச்சிடணும்..

ரொம்ப ஹெவியான விஷயம் பேசப்போறேம், 

அதனால, அதுக்கு முன்னால அப்படியே கொஞ்சம் லைட்டான விஷயங்கள 

கேட்டுட்டு அதுக்கப்புறமா, சப்ஜெக்ட்டு வருவமேன்னு, லைட்டா அவங்க 

குடும்பத்த பத்தி கேட்டு மேட்டர, திசை திருப்புவேன்,

வீட்ல குடும்பத்துல எல்லாரும் நல்லாயிருக்காங்களா..அப்படின்னு 

ஆரம்பிப்பேன்..

..எல்லாரும் நல்லா இருக்காங்க சாமி..ஆனா, எங்க..என்னோட 

பேரன்தான்....படிக்கவே மாட்டேங்கிறான்..

அதான் என்ன பண்றதுன்னே புரியல...

அதுக்குதான் நீங்க எதாவது ஒரு வழி சொல்லணும்னு

ஆரம்பிச்சு, அப்படியே போய்.. பாத்தீங்கன்னா.. கடைசியில 

பார்த்தீங்கன்னா..கடவுளைக்கண்ட டைவது எப்படின்னு கேட்டதையே  

மறந்துடவாரு..

மறக்ககூடிய விஷயமா இது..

இன்னும் சிலபேரு இருக்காங்க..சாமி உங்களோட பிளக்ச பாத்தேன்..

விஜயகுமார சாமிகள் ஆசிரமம்ன்னு போட்டிருந்தது..

அங்க என்ன பண்றீங்கன்னு கேப்பாங்க..வயித்தெரிச்சலா இருக்கும் நமக்கு.

என்னன்னா..இன்னும் தெளிவாக, அந்த ஆசிரமம் அப்படின்ற வேர்டுக்கு , என்ன 

அர்த்தம்னு நமக்கு தெரியவே தெரியல.

ஆசிரமம்னா ஒரு சாமியார் சம்மந்தப்பட்ட விஷயம்.


குழந்தை இல்லன்னா அவருகிட்ட போலாம்..

கல்யாணம் நடக்கலன்னா அவருகிட்ட போலாம்..

நிறைய கடன் வாங்கிட்டா, அத எப்படி சால்வ்பண்ணலாம்னு அவருகிட்ட போலாம்

ஜாதகம் பாப்பாரா..

குறி சொல்லுவாரா..

அருள்வாக்கு..கிருள்வாக்கு எதாவது சொல்லுவாரா..

இதெல்லா நடக்குமா..நடக்காதா..,

இதல இன்னொரு விஷயமும் இருக்கு.

அது ஆசிரமமா இருந்தாலும் சரி..

எந்தவிதமான ஆன்மீக அமைப்பாக இருந்தாலும் சரி..

யாரையும் நான் குறிப்பிட்டு காயப்படுத்தறதா, தயவுசெய்து நினைக்க வேண்டாம்

நடக்குமா..நடக்காதா..அதான் ஆப்ஜக்டே நம்மாளுக்கு..

ஞானமாவது..லொட்டாவது..நோ..

ஆசிரமத்துக்கில்ல கோயிலுக்கு அதான் கதி

நடக்குமா..நடக்காதா..அப்படின்னா..நடக்கவே நடக்காது.

பஷச்சாரதா சொர்க்கபேவதே…... நரகமவிது (சமஸ்கிருத மந்திரம்)

ஆதிகாலத்து சான்ஸ்கிரிட்(Sanskrit)

அப்படி என்ன மகாவிஷ்ணு சொல்றதா சொல்லுவாங்கன்னா..

நீ எங்கிட்ட வந்து எங்க நீ இருக்கறதா சொல்றயோ..அங்கதான் இருக்கப்போற..

நீங்க..எல்லா கடவுள் சொரூபத்தயும் பார்த்தீர்களென்றால்

சின்முத்திரை


இப்படி ஒரு சின்முத்திரைய புடிச்சிருக்கும்.

அது பெண்கடவுளாக இருந்தாலும் சரி..ஆண்கடவுளாக இருந்தாலும் சரி..


இப்படி வச்சிருக்கும்..இதுக்கு என்ன சொல்லியிருக்குன்னா..,

சின்முத்திரை..!

 சின்முத்திரைன்னா என்ன சாமி..?

சிறப்பான முத்திரை..!

ஸான்ஸ்கிரட்ல சின் அப்படின்னா சிறப்பான..,

இருக்குற முத்திரைகள்லயே..சிறப்பான முத்திரை எதுடான்னா,  சின்முத்திரை.

இப்படி இருந்தா என்ன அர்த்தம்..

எதாவது ஒரு சாப்பாடோ எதோ ஒன்னு கொடுத்து..

ஒரு நகைய கொடுத்தோ..

ஒரு புடவைய கொடுத்தோ.. 

எப்படி இருக்குன்னா ..

டக்கரா இருக்குன்னு சொல்வோமில்ல..அதான் சின் முத்திரை..!

நல்லா இருக்கு

அதத்தான் நல்லா இருக்குன்னு..சிலபேரு வாயால சொல்லமாட்டான்..

 ஏன்னா, அந்த பழக்கத்தை நாம் மறந்துவிட்டோம்.

முன்னாடியெல்லாம் பாத்தீங்கன்னா

எப்படி இருக்கீங்க..அப்படின்னும்போது..

நல்லா இருக்கேங்க..நீங்க எப்படி இருக்கீங்க.

அப்படின்றது இருந்தது.

இப்ப அந்த டிரெண்ட் மாறிப்போச்சு.

இப்ப யாராவது,யாரையாவது ரோடுல பாத்து நல்லா இருக்கீங்களான்னு கேட்டா

நாம நல்லா இருக்கோம்னு, சொன்னா அவன் நல்லா இல்லாம போயிடுவான்

நம்ம கிட்ட கஷ்டத்த எதிர்பார்ப்பான்..அவன்..

எங்க சார் ரொம்ப கஷ்டமா இருக்கு..

முந்தநேத்துதான் ஆஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் பண்ணாங்க..

அப்ப..ஒரு பெரிய சிறப்பு..

வாங்க..காபி சாப்ட்டுட்டு போலாம்  அப்படிம்பான்..

இன்னும் சிலபேர் இருக்கான்..

ஹாஸ்பிடல்க்கு போறதே எப்படிதெரியுமா  போவான்..

பேஷண்ட் பைபாஸ் சர்ஜரி பண்ணி படுத்துகிடப்பான் ஐசியூனிட்ல..

அவருக்கே ஸலைன் மூலமாத்தான் ஏறிகிட்டு இருக்கும்..

சாத்துக்குடி வாங்கிட்டுப்போவான்..

நான் வந்து அறிவுறுத்தறது உண்டு.

சாமி உங்க ஆசிரமத்தின் மூலமாக நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..

இதுக்கு முன்னாடி இருந்த  சப்ஜக்ட்ட விட்டு நாம எங்கயோ போயிட்டு இருக்கோம்.

முதல்ல ஆசிரமம்னா என்ன..?

ஒவ்வொரு ஆசரமத்திற்கும் ஒரு பணி உண்டு.

+ ஷிரமம் னு பிரிங்க..

ஷிரமம் னா கஷ்டப்படறது இல்ல

ஷிரமம்னா சுயமாக கஷ்டப்படுவது அல்ல.

பிற ஜீவனை நினைத்து ஷிரமத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல்

'ஆ' ன்னா என்ன ஆன்மா..பிற ஆன்மாவுக்காக சிரத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல்

அதுதான் ஆசிரமம்..அது எந்த வகையாக இருந்தாலும் சரி.

உங்க ஆசிரமம் எதை வலியுறுத்துகிறது...?

முதல்ல தன்னிலை விளக்கம் கொடுக்கனுமில்ல.


விஜயகுமார சுவாமிகள் ஆசிரமம் என்ன சொல்ல விரும்புகிறது..

ஒன்றுமே சொல்ல விரும்பவில்லை.

ஞானமடைதலுக்கான எளிதான வழியை, 

விஜயகுமார சுவாமிகள் ஆசிரமம் கற்பிக்கிறது.

எப்படி..இத ஆசிரமம்னு சொல்றத விட,

ஆழ்ந்து புரிஞ்சிக்கணும..நான் எப்படி சொல்ல விரும்பறேன்னா..

விஜயகுமார சுவாமிகள் ஆசிரமம் அத்தனை பெண்களுக்குமான ஒரு அம்மா வீடு.

அத்தனை ஆண்களுக்குமான மனோரீதியான ஒரு ஒர்க்ஷாப்..,

அனைத்து பெண்களுக்குமான..அது அம்மாவா இருக்கலாம்..,

சகோதரியா இருக்கலாம்..பேத்தியா இருக்கலாம்..,

அத்தனைபெண்களுக்குமான ஒரு அம்மாவீடாக 

இருக்கும்ங்கறதுக்கு உறுதி கூறுகிறேன்.

இரண்டாவது

அத்தனை ஆண்களுக்குமான மனோரீதியிலான ஒரு ஒர்க் ஷாப்

இதைத்தான் மச்ச அவதாரத்தில மகாவிஷ்ணு சொன்னாரு.

அப்படியே திரும்புவோம்..


அதுக்கப்புறம் என்ன சொல்றாருன்னா..சின்முத்திரைன்னு சொன்னேன்..

என்ன அர்த்தம்..? நாளை தொடரும்,