ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,
அடுத்தது என்ன..?
விலங்கும் மனிதனும் கலந்ததைப்போன்ற..நரசிம்மம்..,
இந்த நரசிம்ம அவதாரத்துல பார்த்தீங்கன்னா,
ஒரு பெரிய கான்செப்ட் சொல்லியிருப்பாரு…என்ன..?
நீ என்னை அழைக்கும் விதத்தைப் பொறுத்து,
நான் வரக்கூடிய வேகம் இருக்கு…எப்படி..?
எல்லா அவதாரங்களுமே பாத்தீங்கன்னா,
அவதானித்து நின்னு, , நிதானிச்சு எடுத்த அவதாரமா இருக்கும்..,
பிளான் பண்ணி,நீ முன்னாடி போ..நான் பின்னாடி வர்றேன்..,
இப்படியெல்லாம் பண்ணலாம்னு..,
ஆனா, நரசிம்ம அவதாரம் மட்டும் அப்படி நடக்கல..,
ஏன்னா, கூப்பிட்டது குழந்தை..,
யாரு....பிரகாலாதன்.
எதுக்காக கூப்பிடுறான்..?
அவனுக்காக கூப்பிடல..நமக்காக கூப்பிடுறான்..,
எப்பா..கண்டிப்பா..சாமி இருக்காருப்பா..,
ச்சு..அதெல்லாம் கெடயாது..,
இல்லப்பா, கண்டிப்பா சாமி இருக்காரு.
உன்னால காமிக்க முடியுமா..?
என்ன பண்றாரு..
குழந்தை பிரகலாதன..நிறைய டிஸ்டர்ப் பண்றாரு..,
சரி அரண்மனைக்கு தனியா கூட்டிட்டு போறாரு..,
கெஞ்சி கதறி பாக்கறாரு..இந்த இரணிய கசிபு..,
அப்படின்றவன் அரக்கனா இருக்கறதில்ல..
நம்ம மனசுக்குள்ள இருக்ககூடிய இரணியகசிபு..,
நம்ம லைட்டா ஒரு பத்து லட்ச ரூபா இருந்ததுன்னு வச்சிக்குங்களேன்…,
நாம பேசற விதமே வேற மாதிரி இருக்கும்..,
நாம யாருக்காவது கடன் கொடுத்துட்டோம்னு வச்சிக்கங்களேன்..,
அவன் நமக்கு எல்லா சேவகமும் பண்ணியாகனும்..,
போன் போட்டா அவரு எடுத்துடணும்..,
ஏன்னா, நாம அவருகிட்ட கடன் வாங்கிட்டமாம்…,
ஏன் சாமி நீங்க யார்கிட்டயாவது கடன் வாங்கிட்டீங்களான்னு கேக்க வேணாம்..
ஏன்னா, அது இயல்பு..நசுக்கும் மனப்பான்மை..,
அதுதான் இரண்யகசிபு..கசிபு அப்படிங்கற வேர்டுக்கு சமஸ்கிருதத்துல,
அர்த்தம் என்ன தெரியுமா.. அடுத்தவர்களை நசுக்குபவர்கள்னு அர்த்தம்..,
இவன் என்ன பண்றான்..,
இந்த சின்ன குழந்தை..கடவுள் இருக்கிறார்..,
விஸ்டம்னு ஒண்ணு இருக்குன்னு உறுதியா சொல்லிட்டே இருக்கான்..,
சரி ரைட்..தனியா வா பேசுவோம்னு..அரண்மனைக்கு கூப்பிடறான்..
ஒவ்வொரு பாகமா அடிச்சு உடைச்சிகிட்டே வருவான்..இரணிய கசிபு..,
இங்க இருக்காரா..?
தரைய அடிச்சு உடைப்பான்.. வரமாட்டாரு..,
எல்லாத்தயும் அடிச்சு உடைச்சிருவான்..,
இப்ப வருவாரா..இப்ப வருவாரா..?
வருவார் வருவார்..அது ஒரு வேள்வி..,
ஆழ்ந்து புரிஞ்சிக்கணும் இப்பதான் நீங்க..,
அவன் கடைசியா அடிச்சி உடைக்கறது ..தூண அடிச்சி உடைப்பான்..,
தூண்ல இருந்து வெளியே வருவாரு..,
அது ஏன் சாமி..எந்த ஆப்ஜெக்ட்ட ஒடைக்கும்போதும் வராத நரசிம்மர்..,
தூணை உடைக்கும்போது மட்டும் ஏன் வெளிப்படணும்..
ஒரு ஜன்னல ஒடைக்கும்போது வரலாம்..,
ஒரு லிண்டல் காங்கிரீட்ட ஒடைக்கும்போது வரலாம்…,
அப்ப கான்ட்ராக்டல உடாம கட்டியிருப்பாங்க போல..அந்த இத..,
எதுக்காக, தூணை ஒடைக்கும்போது மட்டும் அந்த அவதாரம் வரணும்னா,
தூணுடைய தன்மை தாங்குதல்…,
ஆழ்ந்து புரிஞ்சுக்கனும்…,
நம்மாளு சும்மா எல்லாம் போய் மேட்ச் பண்ணல…,
தூணுடைய தன்மை என்ன தாங்குதல்..,
அதற்காகத்தான் பெருமாள் என்ன பண்றாரு..,
தூண்ல இருந்து வெளியில் வர்றாரு..என்ன காரணம்…?
கூப்பிட்டது குழந்தை..அவனை தாங்கியே ஆகணும்..,
என்னப்பா என்னாச்சு..ஏன் அழுவற..?
ஏய்..நீ யார்றா..?
அதெல்லாம் கேக்கவேயில்ல..,
இவன்தான்..சிலபேர் மூஞ்சியில எழுதி ஒட்டியிருக்கும்..,
தூண்ல இருந்து வெளில வந்த ஒடனேயே…,
அவரு பிரகலாதன எல்லாம் முதல்ல பாக்கல..இரண்ய கசிபுவத்தான் பாக்கராரு..,
அலெக்கா எடுத்துட்டுபோயி அப்படியே நிலப்படியில வச்சிகிட்டாரு..,
ஜெனரலா..நாம சொல்லுவோம் தெரியுமா..,
நிலப்படியில ஒக்காரதப்பா..நிலப்படியில ஒக்காரதப்பா..,
அப்பதான்..நம்மாளு நிலப்படியிலதான் ஒக்காருவான்..,
அது ஏன்..நிலப்படியில ஒக்கார்றான் ..?
.......நாளை தொடரும்,
0 comments:
Post a Comment