ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,
"....இரண்ய கசிபுவத்தான் பாக்கராரு..
அலெக்கா எடுத்துட்டுபோயி அப்படியே நிலப்படியில வச்சிகிட்டாரு..,
ஜெனரலா..நாம சொல்லுவோம் தெரியுமா..,
நிலப்படியில ஒக்காரதப்பா..நிலப்படியில ஒக்காரதப்பா..,
ஆனா..நம்மாளு நிலப்படியிலதான் ஒக்காருவான்..
அது ஏன்..நிலப்படியில ஒக்கார்றான் ஒண்ணும் புரியல..,
ஏன்னா, நிலப்படியில வச்சுதான் அவரு கிழிப்பாரு..,
அது ஏன் நிலப்படியில வச்சு கிழிக்கிறாரு..?
வேற எங்காவது உள்ளே, கிள்ளே வச்சி கிழிக்கலாம் இல்லயா...?
இல்ல சாமி அவன் அப்படி வரம் வாங்கிட்டான்..,
அப்படியெல்லாம் கிடையாது..,
ஒண்ணு..உள்ளே இரு..இல்ல வெளியில போ..,
நடுவுல இருந்தா உதைதான்..,
ஏன்னா, மனித எண்ணம் என்னா பண்ணும்..,
இப்படியே இருந்துக்கலாம்..அப்படியே இருந்துக்கலாம்..,
சொல்லுவான்..என்னப்பா..ரெகுலரா..போயிட்டு இருந்தயே..,
இப்ப எப்படி இருக்கு..?
போயிட்டு இருந்தங்க..பட்..இந்த இடத்துல நல்ல இருக்கு...
நீங்க வேணா டிரை பண்ணி பாருங்க..,
எப்படின்னா, ஒரு அப்ஜக்டிவ் டைப்பாவே ஆன்மீகத்த வைத்திருத்தல்…,
புடிச்சா உடும்பு புடியா புடிச்சிரணும்..,
ஏன்னா, பகவான அப்படித்தான் புடிக்கணும்...,
உள்ளேயும், வெளியேயும் விளையாடிட்டு இருந்தா,
இரணியகசிபு உடைய நிலைதான் ஏற்படும்.
இரண்டாவது,
நான் உடனடியா வருவேன்..அவசரகோலம்னு பேரு அதுக்கு..,
எப்படி..நரசிம்ம அவதாரத்துக்கு…,
தமிழ்ல அழகா சொல்லுவாங்க..என்னன்னா...அவசரகோலம்.
நிதானிச்செல்லாம் எடுக்கலே…பிளான் பண்ணலே..,
"ஐயோ"னு..கூப்டுட்டாங்க…,
அது ஏன் பிரகலாதன் கூப்பிடும்போது, உடனே, வந்துட்டாரு அவரு.. ,
நாம வந்து பிரகலாதன்னு அப்படின்னு ஒருத்தருனு
தனியா நினைச்சிட்டு இருக்ககூடாது..,
குழந்தை...அப்படின்னா என்ன அர்த்தம்..,
குழந்தை உள்ளத்துடன் கடவுளை அழைத்தல்..,
அவ்ளோதான் வேற ஒண்ணும் கிடையாது..,
நரசிம்ம அவதாரத்தினுடைய தத்துவமே என்னன்னா,
நான் தாங்கும் திறனுடையவன்..உடனடியாக வருவேன்.. ,
எப்படி நின்னு கூப்பிடனும்..,
உன்னுடைய மனதை கள்ளம் கபடம் இல்லாத,
குழந்தையாக வைத்துக்கொண்டிருந்தால்,
இதோ.. இப்போ..வந்துருவான்.. ,
தட்ஸ்..ஆல்..இதுதான் நரசிம்ம அவதாரம்..,
அடுத்தது என்ன…?
மச்ச அவதாரம்..,
கூர்ம அவதாரம்…,
வராக அவதாரம்..,
நரசிம்ம அவதாரம்..,
வாமனம்..!
அதென்ன சாமி வாமனம்..?
...........................நாளை தொடரும்,
0 comments:
Post a Comment