Friday, April 18

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 06

பிரம்மா பெருமை..,எப்பொழுதுமே வரத்தை கொடுப்பது மட்டும்தான்,

மத்ததெல்லாம் கண்டுக்கவே மாட்டாரு.. ,

மஹாவிஷ்ணு கீழே இருக்காரு..இன்னொருத்தர் யார்றான்னா..நடராஜ மூர்த்தி..,

அவரு என்ன பண்றாரு, அந்த ஆலகாலத்தை அப்படியே சாப்பிடறாரு,

தொண்டைக்குழி வரை இறங்குது.

பார்வதி தேவி வந்து கழுத்த பிடிச்சிடுச்சு..,

ஜெனரலாவே, அந்த அம்மா வந்து, அவரு கழுத்த தான் பிடிக்கும் போல இருக்கு…,

எதேச்சயா பிடிக்கும்போது, தொண்டக்குழியில சிக்கிக்கிச்சு..அதுதான் கண்டம்..,

அது பிடிச்ச உடனே, நடனமாட ஆரம்பிச்சிடறாரு..நடராஜர்.

அதுக்குப்பேருதான் ஆனந்த தாண்டவம்..

நிறைய தாண்டவங்கள் உண்டு..,

ஆனா,இந்த உருவத்துக்குப்பேருதான் ஆனந்த தாண்டவம்..,


அப்பதான் என்ன பண்றாருன்னா,சிவகாம சுந்தரியாகிய பார்வதி தேவிக்கு,

எல்லா விதமான மெடிடேஷன் டெக்னிக்கும் சொல்லிக்கொடுக்கிறாரு..,


எல்லாவிதமான சிவசூத்திரத்தயும் சொல்லி கொடுக்கிறாரு..,

என்ன காரணம்னா, எல்லா நெகடிவ் எனர்ஜியையும் நான் வாங்கிட்டேன்

இனி ஒன்லி பாசிட்டிவ் கோயிங்தான்..

அப்படின்னு சொல்லி,எதோட கனெக்ட் பண்ணி வைக்கிறாருன்னு 

பார்த்தீங்கன்னா,மூச்சோட கனெக்ட் பண்றாரு..

எல்லா சிவ சூத்திரங்களயும் பாத்தீங்கன்னா

முதமுத ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாம சுந்தரிக்கு,  சொல்லித்தராரு..,

ஏன் அவரு எல்லா, டெக்னிக்கையும் மூச்சோட போய் கனெக்ட் பண்றாரு..,

வேற எதாவதோடயாவது  கனெக்ட் பண்ணலாமே..,

ஏன்னா,அதுக்கு மட்டும்தான் நாம சாக்கு சொல்ல மாட்டோம்.

எல்லாத்துக்கும் நாம வந்து  எதாவது ஒரு சாக்கு சொல்லுவோம்,

நேரம் இல்ல.புடிக்கல..ஆனா, மூச்சுக்கு சொல்லமுடியுமா.. ?

எனக்கு மூச்சு விட டைம் இல்லன்னு..எனக்கு மூச்சு விட புடிக்கல..,

மூச்சு விடறது எல்லாம்  ஒரு வேலையான்னு சொல்லமுடியுமா..?

வான்டனா, நீங்க தெரிஞ்சோதெரியமயோ..,

பரமபதமடையும் வரை நாம பண்ணிட்டே இருக்கனும்..,

அதான் எம்பெருமான் பார்த்தாரு.. ஏய் எப்பா..இவன் எது சொன்னாலும்,

கேக்க மாட்டான்..அதனால, மூச்சோட போய் கனெக்ட் பண்ணுவோம்.. 

அப்படின்னுட்டு ஆனந்த நடராஜ மூர்த்தியும்

கூர்ம அவதாரம் எடுக்கும் மஹாவிஷ்ணுவும்,

இணைந்து அமிர்தத்தை கடைந்து எடுத்தார்கள்..,

நமக்கு வழங்கினார்கள்

நல்லா பாருங்க..,

முதல் அவதாரத்துல நீந்த கத்துக்கொடுக்கிறாரு..ஸர்வைவல்..,

ரெண்டாவது அவதாரத்துலயே ஞானமடைதல சொல்லிட்டாரு அவரு ..,

ஆனா, நாம கேக்கமாட்டோம்..நோ..,



பொதுவா பாத்தீங்கன்னா

தியானம் கற்றுக்கொடுப்பதற்குரிய இன்ப்ராஸ்டெக்சர் என்னன்னா.., 

பொதுவா,தியான பயிற்சி மையங்கள்ல,

மனிதனுடைய குறுக்கு வெட்டு தோற்றத்த வரைஞ்சு,

மூலாதாரம்,விசுத்தி,  மணிப்பூரகம்னு,

என்னென்னமோ வரிசையா எழுதியிருப்பான்..,


நாம என்னவோ அதை நோட்பண்ணுவோம்…,

கடகடகடன்னு..அத மெமரி பண்ணி வச்சுக்குவோம..,

ஆஸ் புக் நாலட்ஜ் மட்டும் வச்சிகிட்டு பேசிட்டு போயிரலாம்..,

சத்சங்கம் எடுத்துட்டு போயிரலாம்..,

மூலாதாரம்னா என்னன்னா தெரியுமா உனக்கு..?

ஏன்னா அவரு தியான கிளாஸ் போயிருப்பாரு நேத்திக்கு..நமக்கு அது தெரியாது.

பெரும்பாலும் , கிளாஸ்ல நான் என்ன பண்ணுவேன்..,


ஒரு நூறு இருநூறு பேர் உக்காந்து இருப்பாங்க..,

மெடிடேஷன் பத்தி சொல்லிட்டு இருப்பேன்..,

'......எல்லாரும் ஆழ்ந்து அப்படியே கண்ண முடிக்கங்க.. ,'

சரி, செக் பண்ணி பாப்போமேன்னுட்டு

'.........நீங்க கண்ண மூடும்போது அப்படியே  சுருள், சுருளா தெரியுமே..,'

அப்படி தெரியறவங்க எல்லாம் கை தூக்குங்க..

எல்லாருமே தூக்குவாங்க..'ஏய்..'

யாரும் கை தூக்கலன்னா..,

அவங்கள பக்கத்துல உள்ளவன் அசிங்கமா நினச்சுக்குவான்

இவருக்கு தெரியல போல டேய்ன்னு..,

வேக, வேகமா, கைதூக்கி...உம்..சுருள்..சுருளா தெரியுது சாமி..

......என்ன கலர் தெரியுது..சிவப்புதானே..?

ஆமாமா..சிவப்புதான்..சாமி..

ஒகே..!

இப்படித்தான் தியான கிளாஸ்ல நிறைய நடக்கும்..,

அடுத்ததா நாம பார்க்க போற அவதாரம் என்ன...?

வராகம்....!

...............நாளை தொடரும்,


0 comments: