Thursday, April 17

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 05

ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,


".....கர்ணனும்..சனீஸ்வரனுடைய பிரதர்தான்..!...,

உங்களுக்கெல்லாம்..இப்போ..ஒரே குழப்பமா இருக்குல்ல..,

கர்ணனுடைய ஓன் பிரதர்தான் சனீஸ்வரன்..,

ஏன்னா, கர்ணனும் சூரியபுத்திரன்..சனீஸ்வரனும் சூர்யபுத்திரன்.

ஜென்ரலா, ஆசிரமத்துக்கு வர்றவங்களுக்கெல்லாம், சொல்றது உண்டு.. 

ஜாதகமெல்லாம் சில சமயம் எடுத்துட்டு வருவாங்க..

எப்பா..உனக்கு அஷ்டமத்துல சனி இருக்கு.. ஏழரை சனி இருக்கு..ரைட் ஓகே..,

நீ இந்த பரிகாரம்னு, அந்த பரிகாரம்னு எல்லாம் ரொம்ப மெனகெடா..

சிம்பிளானது ஒன்னு இருக்கு..

ஏன்னா, சனீஸ்வரனே, சொல்லியிருக்காரு..,

பிரதக்ஷா மாதா(சமஸ்கிருத மந்திரம்)…,

அப்படின்னல்லாம் சொல்லியிருக்காரு..என்ன அர்த்தம்..?

யார்..யாரெல்லாம் தன் அன்னையை

தெய்வமாக வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்களோ,

அவர்களை நான் அணுகமாட்டேன்டிக்ளேர் பண்றாரு..

ஆகையால நீ என்ன பண்றே,

உங்க அம்மா படத்த லேமினேட் பண்ணி உன்னோட பாக்கெட்ல வச்சுக்க.

பரிகாரம் அவரே சொல்லியிருக்காரு..

பாக்கெட்ல இல்ல..உங்க அம்மாவ நெஞ்சுல வச்சுக்கன்னு அர்த்தம்.

எப்படி..என்ன சொல்றார்..?

ஒரு கடவுளை வழிபடுவதைப்போல, உங்க தாயாரை,

மார்பில் நீ வச்சுக்கிட்டாயானால் உன்னை நான் நெருங்க மாட்டேன்..,

உங்க அம்மாவோட படத்த லேமினேட் பண்ணி பாக்கெட்ல வச்சிகிட்டீங்கன்னா.. ,

அடுத்த செகண்ட் உங்கள விட்டு சனிபகவான் எட்ட போயிடுவாரு..,

சரி..எங்கெங்கேயே போயிட்டு வந்திட்டு இருக்கோம்..அதுக்கும் காரணம் உண்டு..,


இந்த கூர்ம அவதாரம்..,

ஏன் நீண்ட நாள் உயிரோடு அந்த ஆமை இருக்குன்னா

தி பிராப்பர் ரெஸ்பிரேசன் கண்ட்ரோல்..,

கண்ணை மூடும்போதெல்லாம் சுவாசத்த உத்து பாக்குது.

கண்ண மூடுன்னு சொல்றது பெருமாள்..,

சுவாசத்த உத்து பாக்கனும்னு சொல்றது நடராஜர்..

இதுதான் சிவ வைணவ ஐக்கியம்.

இந்த சிவ வைணவ ஐக்கியம் இருக்கும்போதுதான் அமிர்தம் வெளிப்படும்.

அப்படியே , பிரதோஷத்துக்கு போகவேண்டியதுதான்.

என்னாச்சு, தேவர்களும், அசுரர்களும் கூடிப்பேசி

அப்பா, ரொம்ப சண்ட போட்டிருக்கோம்..,

ரெண்டுபேருமே இறங்குவோம்...,

சாப்ட்டு திருப்தியா இருக்கறமாதிரி எதாவது ஒன்னு பண்ணுவோம்..,

அமிர்தம் கடைவோம்,

அந்த அமிர்தம் என்பது நீங்க பிரத்யேகமா நினைச்சிக்கறது

குடத்துல எதோ ஒன்னு கொழகொழன்னு இருக்கும்னு, 

அப்படியெல்லாம் கிடையாது..அதுதான் ஞானம்..!

நாம ஒட்டுமொத்தமா ஞானம்னு ஒரு விஷயத்த அடைஞ்சிட்டோம்னா

விஸ்டம் அப்படின்றத அடைஞ்சிட்டோம்னா,

வேற எதுவுமே தேவைப்படாதில்ல

ஏன் நாம இப்ப தேவையில்லாம அடிச்சிட்டு இருக்கோம்..

நேரா, அமிர்தத்தை அடைந்துவிடுவோம்..

சரி..ஞானம் என்கிற அமிர்தத்தை எப்படி அடையமுடியும்..?

குண்டலினிங்கிற பாம்பு முழிச்சாத்தான் அடையமுடியும்...

அந்த பாம்புதான் வாசுகி..

நிறைய யோகா சென்டர் எல்லாம் போனீங்கன்னா

அந்த குண்டலினிங்கறத பாம்பு ரீதியாக குறிப்பிடுவார்கள்..

லோகத்தில் எல்லா மதங்களும்

எல்லா மாச்சரியங்களும்,

பாம்பை சாத்தானாகத்தான் குறிப்பிட்டிருக்கும்..,

அது உங்க எல்லாருக்குமே தெரியும்..

ஆனால், நம்ம மட்டும்தான் வழிபடத்தக்க உருவமா வச்சிருக்கோம்..,

ஏன்னா, அதுதான் குண்டலினி.

பாம்பு மாதிரி நம்ம கீழே இருந்து வளைஞ்சு, நெளிஞ்சு,

மேல வந்து நெற்றிப்பொட்டுல தொடும்..

நாம் கடவுளை வணங்கினாலும் சரி..வணங்காவிட்டாலும் சரி..,

மெடிடேஷன் கிளாசுக்கு போனாலும் சரி..போகாவிட்டாலும் சரி..,

வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்க நெற்றிப்பொட்டில் துடித்திருக்கும்.

நம்மை அறியாமயே..நாம ஞானிதான்..,

எல்லோருமே ஞானிதான்..உணராம இருக்கோம்..தட்ஸ் ஆல்..,

வாசுகி அப்படிங்கற மூலாதாரத்தை

வால்பகுதியில் தேவர்கள்..தலைப்பகுதிய அசுரர்கள்..,

நடுவுல வந்து பாத்தீங்கன்னா, மஹாமேரு..,

அந்த மஹாமேருன்றது வேற ஒன்னுமில்ல..நம்ம உடம்பு.

சரி, எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க

இவ்வளோ பெரிய விஷயத்த தாங்ககூடிய ஒண்ணு இருக்கனுமில்லயா..

அது என்னா பண்ணனும்னா, வேற எதயுமே பார்க்கக்கூடாது..

கண்ணை இறுக மூடிக்கறது இல்ல..

எதையுமே பெரிய விஷயமா நினைச்சு பாக்கக்கூடாது..

நாம அதுல போய் இன்வால்வ் ஆகக்கூடாது

ஒரு சாட்சியாக இருந்து மட்டுமே பார்த்தல்..., 

அதத்தான் கண்ண மூடி இருத்தல்..அதத்தான் பெருமாள் சொல்றது..,

அப்படியாப்பட்ட ஒரே ஆள் யார்றான்னா..பெருமாள்..,

அப்படியா..அப்ப நீ தாங்குறியா..,

நான் தாங்குறேன்..குண்டலினியை நான் தாங்குகிறேன்..

அந்த பாடிய என்ன பண்றாரு..மஹாமேருவ..அடியில இருந்து 

கூர்ம அவதாரம் தாங்கிட்டு இருக்கு..

இந்த பாற்கடலை கடைந்தார்கள்னு சொல்வாங்க..

இந்த பாற்கடல்னு  வேற ஒன்னுல்லஉங்களோட மனசு..

ஆழ்ந்து புரிஞ்சுக்கணும்..,

பாற்கடல் என்பது மனசு..அந்த மனசை கடையவேண்டும்..

அந்த தேவர்களும், அசுரர்களும் வேற யாரும் இல்ல..,

நமக்குள்ளயே இருக்கக்கூடிய நெகடிவ்..அண்டு பாசிடிவ் எனர்ஜி..,

கரெக்டா பாருங்க..அசுரர்கள் தலையதான் புடிப்பான்..என்ன காரணம்..,

தலைக்கணத்தை பிரஸ் பண்றது..கர்வத்த பிரஸ் பண்றது…,

அதான் தலைய புடிச்சு அமுத்தறது..,

பர்ஸ்ட் அந்த ஆலகாலம்னு ஒண்ணு வரும்..,

அந்த ஆலகாலம்வரும்போது, வெற ஒண்ணுமில்ல..அதுதான்,

நமக்கு ஏற்படக்கூடிய சோர்வு..நெக்லிஜன்ஸ்..

தம்பி.. காலையில நாலரை மணிக்கெல்லாம் எழுந்திரிச்சி

தியானம் பண்ணனும் அப்படிங்கும்போது… 

எங்கத்த நாலரை மணிக்கு..விடிகாத்தால நாலரை மணியெல்லாம்

நிறைய பேர் பாத்ததே கிடையாது..சாயங்காலம் நாலரை மணியோட சரி..

அதுலயே பாதிபேர் அவுட்..

எப்படி..இனிஷியலா..எந்த இது ஆரம்பிக்கச் சொன்னாலும்..,

ஒரு அலட்சிய மனப்பான்மை..லெதார்ஜி.. ,

ஆமா..அதுதான் ஆலகாலம்..வேற ஒண்ணும் கிடையாது.

அதை விழுங்க வேண்டும்..

                                                                                                  ...........................நாளை தொடரும்,

0 comments: