Sunday, April 13

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 01

ஸ்ரீ விஜயகுமார் சாமிகள்..இவரபத்தி ஏற்கனவே, நம்ம பிளாக்ல  உங்களுக்கு அறிமுகம் செஞ்சுவைச்சிருக்கேன். ஞாபகம் வரலேன்னா, அந்த பழைய பதிவுகள ஒரு முறை படிச்சி நினைவு படுத்திக்கங்க.



'கடைவிரித்தேன் கொள்வாரில்லை'ன்னு தன்னோட ஞானத்த பகிர்ந்துக்க ஆளில்லையேன்னு ஏங்கித்தவிச்ச அதே வள்ளலார் வாழ்ந்த பகுதிகள்லதான் இவரும் இப்ப வாழ்ந்துட்டு இருக்காரு. 

இவருக்கும் அந்த ஏக்கம் உண்டு. அளவற்ற ஞானத்த இலவசமா கொடுத்தாக்கூட, யாரும் கேக்கமாட்டேங்கறாங்களேன்னு, அடிக்கடி வருத்தப்படுவாரு..,

அதுக்காக, யோசிச்சப்ப உருவானதுதான், இப்ப நீங்க படிச்சிட்டு இருக்குற இந்தப்பதிவு, சென்னையில தன்னோட ஆசிரம கிளைய தொடங்கிவச்சு தசாவதாரம் அப்படிங்கற தலைப்புல அவரு பேசின பேச்சுதான், இப்ப நீங்க எழுத்து வடிவுல படிக்கப்போறீங்க...,

ஏற்கனவே, அந்த பேச்சின் ஒரு சுருக்கத்த தான், 'திருமாலின் அடுத்த அவதாரம்..சென்னயில்.,' அப்படிங்கற பதிவுல எழுதியிருந்தேன்.  

அத படிச்சிட்டு கிடைச்ச வரவேற்ப பார்த்துட்டு, அந்த தசாவதாரம் மொத்த பேச்சையும், அதே நடையில, எழுதி ஒரு புத்தகமா போட்டுடலாம்னு திட்டமிட்டோம்..அந்த பிளான்ல இப்ப ஒரு சின்ன மாற்றம்..இன்னையில இருந்து தினம் ஒரு பதிவு வீதம் தொடரா, இங்க வெளியிட்டுவிட்டு அதன்பிறகு,  அத புத்தகமா வெளியிடலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்..,

இப்ப நீங்க அவரோட பதிவ படிக்கத்தொடங்கலாம், அதுக்கு முன்னால,ஒரு சின்ன Disclaimer போட்டுடலாம்னு நினைக்கிறேன்..,

புத்தரோட வாழ்க்கையில நடந்த, அவர் பேசின, பல விஷயங்கள் இன்னைக்கு நமக்கு படிக்க கிடைச்சிருக்குன்னா, அதுக்கு மிகமுக்கியமான காரணம் புத்தரோடவே இருந்த அவரோட சீடர் ஆனந்தர்தான். அவர் தன்னோட குருவோட நினைவுகள, பகிர்ந்துகிறதுக்கு முன்னால, ஒரு அறிவிப்ப வெளியிட்டார்.

"..........இப்போது நான் பகிர்ந்துகொள்வது எல்லாமே, எனது கேட்கும்திறன் மூலம்,நான் புரிந்தகொண்டவற்றையும், எனது பார்க்கும் திறனின் தகுதிக்கேற்பவும், எனது புரிந்துகொள்ளும் அறிவின் தகுதிக்கேற்பவும் தான், புத்தர் இப்படி சொன்னதாக, இப்படிச் செய்ததாக நான் புரிந்தகொண்டவகையில் உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். 

குருவின் செயல் மிகப்பெரியது, அதை நான் எனது சிற்றறிவுக்கு ஏற்ற அளவிற்கே புரிந்துகொண்டதாகவும் ஆனந்தர் சொல்லுவார்.

அதனால், இங்கும் அதையே நானும் முன்மொழிய நினைக்கிறேன். இந்த தொடர் பதிவில், ஏதேனும் தவறுகள் தென்பட்டால், அது என்னுடைய குறைபாடாகவே இருக்கும் என்பதை இங்கு நான் முன்கூட்டியே அறிவித்துவிடுகிறேன்..,

சாமிகள் அதர்வண வேதத்தில் விற்பன்னர், அதனால், சமஸ்கிருத மந்திரங்கள் அவரது உச்சரிப்பில் மிகவலிமையாக வந்து விழுகின்றன.  ஆனால், எனக்கோ தமிழைத்தவிர(அதுவும்கூட சுமார்தான்) எதுவும் தெரியாது.

அதனால், இந்தப்பதிவில் வரும் சம்ஸ்கிருதம் தொடர்பான வார்த்தைகளிலோ,அல்லது வேறு ஏதேனும்  பிழைகள் தென்பட்டால், சுட்டிக்காட்டுங்கள்..திருத்திவிடலாம்..,

இனி, இங்கிருந்து நான் விலகிவிடுகிறேன்.., அவரது ஞானப்பேருரையில் நீங்கள் திளைத்திருக்கலாம்..., 


இனி,ஸ்ரீ விஜயகுமார் சாமிகள்.., 

வரவேற்கிறேன்..!

“...வாங்க..இந்த பதிவின் மூலமா உங்கள எல்லாம் சந்திப்பதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.

உங்களோட உங்க ஆன்மாவோட கொஞ்சநேரம் பேசப்போறேங்க.

உங்களுக்குள்ள என்னை நீங்க அனுமதிச்சா மட்டும் போதுங்க..மீதி மாற்றங்கள் எல்லாம் உங்களுக்குள்ள தானாவே நடக்கத்தொடங்கிடும்.

வழக்கமா நான் என்னோட கூட்டங்கள்ல எல்லாம் ஒரு குறிப்பிட்ட வாசகத்த குறிப்பிடுவதுண்டு..

உங்கள் வாழ்க்கையை நான் புரட்டிப்போடுவேன் என்பது வார்த்தையல்ல..எனது வாக்குறுதி.

இது எப்படின்னு என்னைச் சந்திக்கிற நிறையபேர் கேக்கறதுண்டு.

வெறும் வார்த்தையா நான் அதை சொல்லல..வாக்குறுதியா கொடுத்திருக்கேன்.

தொடர்ந்து என்னுடன் வாருங்கள்..உங்கள் வாழ்க்கையை நான் புரட்டிப்போடுவேன் என்பது நிச்சயம்..

சரி..நாம இப்ப சப்ஜெக்ட்டுக்குள்ள போகலாம்..

நாம  இப்ப பாக்கப்போற தலைப்பு ...தசாவதாரம்.



".........கடவுளின் கரம் பிடித்து, ஆன்மீகம் எனும்  ஞானத்தின் கடற்கரையில சிறிதுநேரம் உலாவப்போகிறோம்.

குறைந்தபட்சம் நம்மால உலாவத்தான் முடியும்.

நீந்தி மூழ்கிவிடவெல்லாம் முடியாது.

ஏன்னா, பெருமாளே தண்ணியில் மிதந்துட்டுதானே இருக்காரு.

அது சரி, தண்ணியில் மிதந்துட்டு இருக்காருன்னா, உடனே,வேறமாதிரி நினைச்சுக்க வேண்டாம்.

சரியா..,

எதனால, பெருமாள, தண்ணியில மிதந்துகிட்டு இருக்கறதுமாதிரி  வடிவமைச்சு நாம கும்பிட்டுட்டு இருக்கிக்கிறோம்னு தெரியுமா..உங்களுக்க...?

தண்ணியலதாங்க முதன்முதலா ஜீவன் உருவானது.

இங்க,நாம ஆழமா புரிஞ்சிக்கணும்,

ஜலத்துலதான் முதன்முதலா உயிர் தோன்றினது.

'தசாவதாரம்' - சாமி what is mean by Dasavatharam ?

இந்த தலைப்ப பார்த்ததும், பலருக்கும் பலவிதமான சந்தேகம்.

அது ஏன் பெருமாள் பத்து அவதாரம் எடுத்தாரு..  ஏன் ஒரு பதினொன்னு எடுக்க வேண்டியதுதானே..ஒரு பன்னிரெண்டு..இல்ல ஒரு பதிமூணு எடுக்கலாம்..இல்லன்னா ஒரு ரெண்டோட நிறுத்தியிருக்கலாம்..ஏன் அவரு பத்து அவதாரம்தான் எடுக்கணுமா..அதுக்கு என்ன காரணம்..?

அவரு எதற்காக இந்த பத்தும் எடுத்தார்னா..நம்முடைய பற்றும் பறந்துபோகவேண்டும் என்பதற்காகத்தான் பத்து அவதாரமா  எடுக்கறாரு.

ஆழ்ந்து புரிஞ்சிக்கணும்.

நீங்க பாத்தீங்கன்னா, இங்க ஒரு சொலவடை உண்டு.


பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் அப்படின்னு.

ஆக்சுவலா, அது பத்து இல்ல..பற்று

எந்த பற்றும் பறந்துவிடும்..?

அப்படின்னா..Sanskrit(சமஸ்கிருதம்)-ல சொல்லுவாங்க..,

பச்சம்,
காமோபம்,
மூஷிதம்,
பூர்வம்,
புலவம்,
புட்ரம்,
ஷோகம்,
ஷப்பிதம்,
ஷென்மகம்,
ஷதுர்குணம்,

எதெதெல்லாம் ஒரு மனிதனுக்கு தேவையோ, அதெல்லாம் பசி வந்தா பறந்துபோயிடும்.

அப்படி அந்த பசியும் வந்தால் பறந்துபோகாமல் இருக்கக்கூடிய  குணநலம்னா,  ஒண்ணே ஒன்னு, ஞானம் மட்டும்தான்

ஏன்னா, தாழ்ந்தாலும் ஞானி தன்மானம் இழந்து தன் தலைய மட்டும் தாழ்த்த மாட்டான்.

ஆழ்ந்து புரிஞ்சுக்கணும்..,

இத தான் பெருமாள் சொல்றாரு..கல்கி அவதாரத்துல,

என்னன்னா

தாழ்ந்தாலும் ஞானி தன்மானம் இழந்து தன் தலைய மட்டும் தாழ்த்த மாட்டான்.

சரி..சப்ஜக்ட்டுக்குள்ள வருவோம்..,

அந்த பத்து அவதாரம் எடுக்கறதுக்கு சயின்டிபிக்கா, வேற எதாவது காரணம் இருக்கா..சாமி..?

இருக்கு..ஏன்னா, நம்ம மதத்தின் பெயரே சனாதன தர்மம் அப்படின்னு வரும்..,

லோகத்தில் பலவிதமான மார்க்கங்கள் உண்டு,

பலவிதமான மதங்கள் உண்டு, மாச்சரியங்கள் உண்டு.
ஆனால், தர்மம் அப்படின்றதே  ஒரு மதத்தோட அட்ஜாயினா இருக்கறதுன்னா, அது இந்து மதம் மட்டும்தான்..!

எப்படி, அதுக்குப்பேரு..சனாதன தர்மம்.. ஒருவிதமான கலாச்சார பண்பாடு.
ஒரு மொழியேற்றம்

ஒரு தர்மத்தோடு இணைந்திருக்கக்கூடிய ஒரு மனித வாழ்வு.

அதை அறிவுறுத்துவதற்காக,பரிணாம வளர்ச்சியோடு எடுக்கப்பட்டதுதான் பெருமாளோட பத்து அவதாரம்.

இங்க நிறையபேர் சயின்ஸ் ஸ்டூடன்ட்ஸ் இருப்பீங்க..

உங்கள்ல நிறையபேருக்கு ஜூவாலஜிக்கல் ஈவன்ட் தெரிஞ்சிருக்கும்.

அதனால, ஆழ்ந்து கேட்டீங்கன்னா, ஈசியா
எக்ஸ்பிளைன் செஞ்சுடுவேன்.

நம்ம பத்தாவது, பிளஸ்-டூவுல எல்லாம் இது வரும்..

என்ன..?

பத்து விதமா, பரிணாம வளர்ச்சிய நாம பிரிச்சு வச்சிருக்கோம்.

பர்ஸ்ட் ..என்ன..?

புரோட்டோசோவா..போரிபெரா..சிகிலரிரெட்டா..பிளாட்டேஹெல்மந்தஸ்..,

ஹேஸ்ஹெல்மந்தஸ்..அனலிகா..ஆர்த்ரோபோடா..மொலாஸ்கா..,

ஹெகினோடர்மேடா..கார்னேடா..

இது Sanskrit(சமஸ்கிருதம்)இல்ல..இது சயின்ஸ்..,

ஜூவாலஜிகல் நேம்.

புரோட்டோசோவால இருந்து கார்னேடா வரைக்கும் இத சொன்னாவே..நீங்க விஷ்ணுவோட நாமகீர்த்தனம் சொன்னமாதிரி அர்த்தம்..!

அவ கடவுள விரும்பினாலும் சரி..விரும்பாவிட்டாலும் சரி.அப்படி சொல்லிட்டாலே நேரா பெருமாள் கிட்டதான் போயிடும்.

இந்த புரோட்டோசோவா..அப்படின்னா ஒருசெல் உயிரி.

அது முதமுத எங்கேயிருந்து தோணுச்சின்னா, தண்ணியில இருந்து தோணுச்சாம்.

அத குறிப்பால உணர்த்துவதற்காகத்தான் , பெருமாளோட முத அவதாரம் பாத்தீங்கன்னா மச்ச அவதாரம்னு இருக்கும்.


சரி மச்சம்னா என்ன..?                                                                                             ..............தொடரும் நாளை, 

1 comments:

vv9994013539@gmail.com said...

ungal eluthu padika padika aruvei pola suvai. vaalthukal.