Friday, May 2

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 17

முந்தைய பாகம் (பாகம் 16) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,


"...ராமனை ஏன் சாமி உயர்த்தி சொல்றீங்க…,

ராமன உயர்த்தி சொல்லக்கூடிய காரணம் என்ன..?

லோகத்திலே மன்னித்தல் என்றது அவ்ளோ சாதாரண விஷயம் கிடையாது.

மனிதன் என்பவன் மன்னிப்பு கேட்பான்…,

தெய்வம் என்பவன் மன்னிப்பான்..,

மனிதனுக்கும், தெய்வத்துக்கும் என்னடா ஒரு எக்ஸ்பிளனேஷன்னா,

மனிதன் என்பவன் மன்னிப்பு கேப்பான்..ஏன்னா, அடிக்கடி தப்பு பண்ணுவான்..

தெய்வம்னா என்ன..?

மன்னிக்கும்..,

நீங்க மன்னிக்க கற்றுக்கொண்டீர்களானால்...

நீங்க தெய்வமாய்ட்டீங்க..அதுதான்இந்த ராமன் பண்ணுவான்.

அதாவது, எந்த தப்பு இருந்தாலும் மன்னிச்சிடலாம்..,

அதாவது, கிறிஸ்துவ நண்பர்கள் எல்லாம் சொல்லுவாங்க..,

ஜீசஸ் சொன்னாராம்..சகோதரர்கள் எல்லாம் சொல்லுவாங்க..,

மன்னித்தல் வந்து ஜீசஸ் மாதிரி எல்லாம் மன்னிக்க முடியாது..,

கர்த்தரே..இவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள்.., 

மன்னித்து அருளும்…,

அத தாண்டி ராமன் பண்றான். ..,

என்ன..தன்னோட பொண்டாட்டிய கைய பிடிச்சு இழுத்துட்டு போயிருக்கான்..,

இருந்தும்..இன்னைக்கு போயிட்டு நாளைக்கு வா..,

 ஒருவேள அவன் திருந்திட்டா…,

எபிலிட்டி இருக்கு..,

ஒரு வேள திருந்திட்டா...ஒருவேளை..இஃப்..,

அவன் எப்படியாபட்டவன்..,

வாரனம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்,

தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்..

இவ்வளவு பலம் பெற்றவன் ராவணன்..,

இப்படியாப்பட்டவனைப்போய் நாம கொல்லுனுமாடா..,

அதென்ன வாரணம் பொருத மார்பும்…?

தமிழாசிரியர் நிறைய இருப்பீங்க..பட்..நான் புரிஞ்சிகிட்ட எக்ஸ்பிளனேஷன்..,

ராவணன் எப்படி தன்னுடைய களிர்களுக்கு எல்லாம் பிராக்டிஸ் கொடுப்பான்னா.., 

களிர்னா ஆண்யாணை.

அதுங்க எதிர்ல நெஞ்ச நிமிர்த்திகிட்டு நிப்பானாம்…,

யானைய மோத விடுவாங்களாம்..,

யானை மோதிட்டு..அதால இழுக்க முடியாதாம்…,

அவனோட மார்ல தந்தம் மாட்டிக்குமாம்..இழுக்கும்போது..ஒடைஞ்சிக்குமாம்..,

பாத்தீங்கன்னா,அப்படியே முத்து முத்தா இருக்காம்..வெள்ளை..வெள்ளையா..,

பாதி தந்தம்..அதான் வாரணம் பொருத மார்பும்..,

ராமன் அப்படி பாக்கறான்..,

ப்ச்..என்னடா இவ்ளோ பெரிய ஆள் இப்படி வீணா போயிட்டான்..,

வரையினை எடுத்த தோளும்..,

என்ன கைலாசத்த அப்படி தூக்கறாரு..,

அது ஒரு மேட்டரு இருக்கு நம்மாளு(நடராஜர்) பண்ணது…,

நீங்க பாத்தீங்கன்னா.. அவரோட நுனிவிரல் மட்டும்தான் தரையில 

அழுந்தியிருக்கும்.. ,அதுவும்  கட்டவிரல் மட்டும்தான்...,

நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிட்டு இருக்காரு..,

அப்ப ராவணன் திடீர்னு உள்ள புகுந்து கைலாயமலைய தூக்கிடுறாரு.., 

எப்படி இருக்கும்..,

அதுவும் பக்கத்துல பொண்டாட்டி வேற இருக்காங்க..,அசிங்கமா நினைச்சிறாது.., 

உடனே, நடராஜர் என்ன பண்றாரு,

லைட்டா அமுக்கிட்ட..ராவணனோட கை கைலாய மலைக்கடியில மாட்டிக்கிச்சு..,

உடனே,என்ன பண்றான் ராவணன்..?

தன்னோட நரம்பெல்லாம் எடுத்து அந்த கையில சுத்தி..அப்படியே..அத மீட்றான்..,

அதாவது, ராவணனை அரக்கன் என்று குறிப்பிட்டாலும்..,

கொடி பாத்தீங்கன்னா, வீணை…,

வீணை என்பது ரொம்ப சாப்ட்டா இருக்கும்..,

ஆண்களுக்கு உபயோக்க தெரியறதில்ல..பெண்கள்தான் யூஸ்  பண்றாங்க..,

அப்படியாப்பட்ட விஷயத்த கொடியில் வச்சிருப்பான்..,

அதனாலதான்..வீணை கொடியுடைய வேந்தனேன்னு சொல்வாங்க..,

அப்படின்னா, என்ன..?

இசை சம்மந்தப்பட்டதாவே இருக்கறது..,

நல்ல விஷயங்களை இசையுடன் ஏற்றுக்கொள்ளுதல்.. ,

அப்படியாப்பட்டவனா இருந்தவன் அவன்..,

தன்னோட நரம்பால ராவணன் இசைய கேட்ட உடனே,  

சிவபெருமான் என்ன பண்ணாரு..,

எப்பாப்பா..அற்புதம்டா அப்பா..?

எப்பா..தெரியாம..அமுக்கிட்டேன்..,

உனக்கு என்னா வேணும்..,

அப்பால்லாம் அடிச்சிட்டார்னாசுவீட்..கிவீட் வாங்கி கொடுப்பாருல்ல..அந்த மாதிரி,

இல்ல, இல்ல எனக்கு ஒண்ணும் வேணாங்க..,

நோ..நோ..இந்தா கத்தி வச்சிக்கோ..அதான் சங்கரன் கொடுத்த வாளும்..,

ஆனா, அந்த சங்கரன் கொடுத்த வாள்..,

ராமனோட சண்டபோடும்போது பயன்படாம போயிடும்..,

என்ன காரணம்..ராமன் வாள் சண்டை போடுபவனல்ல..,

அவன் வில்லாளி..ஆக வில்லெடுக்க வேண்டிய கட்டாயம்..,

எப்படின்னா, நாம என்னாதான் வரம் வாங்கியிருந்தாலும்..,

சேர்மானம் சரியில்லன்னா,அது உபயோகமே படாது..,

இதுக்கு கர்ணனும் ஒரு உதாரணம்..,

ஏன்னா, கர்ணனும் அப்படித்தான்..

எல்லாரும் கர்ணன் நல்லவன்னு நினைச்சிட்டு இருப்போம்..,

கர்ணன் மிகவும் தர்மவான்..

ஆனா, எம்முடைய சத்சங்கத்திலே..,

கர்ணனை ஒரு வில்லனாதான் நான் பாத்துட்டு இருக்கேன்.

என்ன சாமி புதுசா சொல்றீங்க..,

சிவாஜிகணேசன் நடிச்ச படத்துல அப்படி இல்லயே..,

சிவாஜிகணேசனுக்காக வேண்டி கர்ணனை பெரிசா காமிச்சுட்டாங்க..,

வியாசர் எழுதின, மஹாபாரதத்தை பாத்தீங்கன்னா

கர்ணன் வில்லனாதான் சித்தரிக்கப்பட்டிருப்பான்..,

அப்படின்னா, இதுவரைக்கும் நாம நினைச்சிட்டு இருந்தமாதிரி

உண்மையிலயே, கர்ணன் ஹீரோ கிடையாதா..?

ஆமா, கர்ணன் ஹீரோ இல்ல..நிச்சமா அவன் ஒரு வில்லன் தான் ..எப்படி?

 
................நாளை தொடரும்,



1 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.
http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-7.html?showComment=1409445973167#c7251801609786561377

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-