Thursday, May 8

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 19

முந்தைய பதிவு (பாகம் 18) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கிறது..,
"...கொடுக்கிறவன்னு ஒருத்தன் இருந்தா..வாங்கறவன்னு ஒருத்தன் இருக்கணும்..,
 வாங்கறவன்னு ஒருத்தன் இல்லாட்டி..கொடுக்கறவன் கிடையவே கிடையாது..அப்படி கொடுப்பது என்பது பொருளல்ல..ஞானம்..,அப்படியே, திருப்பி ராமாயணத்துக்கு வருவோம்..,
 ஏன்னா, ராமாயணத்துக்கும், மஹாபாரதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..,

த்ரேதா யுகத்துக்கு அப்புறம், துவாபர யுகம்…,ரைட்..என்ன பண்றாரு..முடிஞ்சிருது போர்..,
சீதைய என்ன பண்றாரு..நாம எல்லாம் ராமன் மேல குற்றம் சொல்லுவோம்..,
ஆயிரம் இருந்தாலும் நெருப்புல அவரு இறக்கிவிட்டு இருக்கக்கூடாதுடா தம்பி..,
 அப்படின்னு சொல்லிட்டு..,இவன் பொண்டாட்டியா.. இழுத்துபோட்டு உதைப்பான்.. டெய்லி..,அதுக்குவந்து ஒரு கவிஞர் வந்து அழகா காரணம் சொல்லியிருப்பாரு..என்னன்னா..,

கருப்புக்குள் அழகனான காகுந்தன் சீதை தன்னை
நெருப்புக்குள் இறங்கச் சொன்னது நீதியா என்று கேட்பீர்,
 மாசில்லா தந்தை அன்று மரித்ததும் சுட்டதாலே
நெருப்புக்கு சூடுபோட நினைத்தது தப்பா என்ன,

ஆழ்ந்து புரிஞ்சிக்கணும்..,

ராமன் பாருங்க, என்ன மாதிரி விளையாடியிருக்கான்.என்னா பண்றாரு, ராமன் நினைக்கிறாரு,நெருப்ப பழிவாங்கணும்னு நினைக்கிறாராம்,
டேய்..நான் இல்லாதபோது எரிச்சிட்டியே..நீ எரிச்சிருக்ககூடாது..,
நான் எவ்ளோ உயிரா நினைச்சேன் எங்க அப்பாவ,எவ்வளவு கடவுளா நினைச்சேன்..,
எங்க அப்பாவோட உடம்ப நீ எரிச்சிட்டியே..உன்னை எப்படி பழிவாங்கறதுன்னு பாத்துட்டு இருக்காராம்..,அப்ப பாத்தீங்கன்னா,ஆஹா..அப்ப நெருப்ப தண்டிக்கணும்னா, ஒரே வழிஇதை விட பலமானவள் யார்னா, சீதையின் கற்பு..அந்த சீதைய இறக்கிவிடராறாம்..என்ன பண்றாரு..அந்த நெருப்ப சீதைய இறக்கிவிட்டு தண்டிக்கிறாராம்…,

தீ பதறுது..அய்யோ..ராமா..சீதைய ஏறச்சொல்லிடு.. வேண்டாம்ப்ளீஸ்..,அதுதான் இது..,

அத நாம விளங்கிக்கணும்..நிறையபேர் தப்பா நினைச்சிட்டு இருக்காங்க..,
 ராமனே பொண்டாட்டிய சந்தேகப்படலாமா..சந்தேகமெல்லாம் படல..நெருப்புக்கு சூடுபோடறது..,ரைட் முடிஞ்சது..,

எகெய்ன்..பட்டாபிஷேகம்..,

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அப்படியே உட்காருராரு..எல்லாருக்கும்  வாரி..வாரி வழங்குறாரு..,
இந்தாப்பா..தம்பி சுக்ரீவா..சூப்பர்..இந்தா உனக்கு…,ஏய்..இந்தா உனக்கு.., ஏய்.. விபீஷனா..வா இந்தா உனக்கு.., இந்தா இலங்கை ராஜாங்கம் உனக்கு..தலைல வக்கிறாரு.., இங்கதான் நாம ஒரு பெரிய பாயிண்டே புடிக்கணும்..,

இத நான் சொல்லல..வால்மீகி ராமாயணத்துல இருக்கு..

தப்பா எதுவும் நினைச்சிக்க போறீங்க..,

என்ன பண்றாரு..ராமர்..கடைசியா..விபீஷனா இங்க வா..இந்தா இலங்கையுடைய ராஜாங்கம் உனக்கு..,அப்ப என்னா பண்ணியிருக்கு..இந்தியா ஒருகாலத்துல..இலங்கையுடைய அரசியல் மாற்றத்துக்கு காரணமா இருந்திருக்கு..,நான் அரசியல் பேசறேன்னு யாரும் நினைக்க வேண்டாம்..,

ஆனா, இன்னைக்கு என்ன நடக்குது..,

ஒரு காலத்துல என்ன ஆயிருக்குத்ரேதா யுகத்துல..இங்க இருந்து போயி அவன உதைச்சு..அந்த ராஜாங்கத்த கைப்பற்றி..இன்னொருத்தனுக்கு மாத்தி கொடுத்திருக்கான்யாரு..இந்தியன்..,அவ்ளோபெரிய ராஜதந்திரம்..அவ்ளோபெரிய போர்ப்படை வலிமை இருந்தும்,நாம என்ன பண்றோம் வேடிக்கை பாத்துட்டு இருந்திருக்கோம்..,

என்னகூட நிறைய பேர் கேட்டாங்க..,
  
ஏன் சாமி ஸ்ரீலங்கால பெண்கள் கற்பழிக்கப்படும்போதெல்லாம்..முருகா..முருகான்னு கத்தனாங்களே…,ஆஞ்சநேய சாமின்னு கத்துனாங்களே..,
ஏன் முருகனுக்கு எல்லாம் அவங்கள காப்பத்தறது வேலையில்லையா.. ?

அவர்கையில் வேல், கீல் இல்லையா..,
அவரு வந்து தமிழ்நாட்டுல மட்டும்தான் ஒர்க் பண்ணுவாரா..?
ஸ்ரீலங்கால ஒர்க் பண்ணமாட்டாரா..?

என்னா கணக்கு..என்ன ஏமாத்தறீங்க..,

ஆஞ்சநேய சாமி சீதைக்கு மட்டும்தான் கடல்தாண்டி போவாரா..
இப்ப கத்தனாங்களே..60 பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்காங்களே..அப்ப கத்துனாங்களே..ஏன்..அப்ப போகல..?ஏன் போகலேன்னாபோக நமக்கு தெரியவில்லை..,போராட நமக்கு தெரியவில்லை.. எப்படி.. தீயை 
அணைத்துவிடவேண்டும் என்றால் எச்சி துப்பினாப்போதும்னு நாம நினைச்சிகிட்டு இருந்தோம்..,என்னா காரணம் நம்ம வீட்ல தீப்பத்திக்கல..,

இது எதுவும் அரசியல் எல்லாம் இல்ல..
நோ..நோ.....ஏன்னா இது ராமாயணத்துல இருக்கு..,

சத்பிசகார நித்யராவணாப்த விபீஷணா..,

இப்படி சொல்றாரு ராமர்.
இலங்கையின் ராஜாங்கத்தை விபீஷனுக்கு மாற்றி வழங்குகிறேன்..,
ரைட் அதில இருந்து வெளியில வந்துருவோம்..எதுக்கு வம்பு..,
 எல்லாம் முடிச்சிட்டு பாத்தா.. ,
ஒரே ஒருத்தர் மட்டும் அப்படியே செருமிகிட்டு இருக்காரு..
ராமர் எல்லாரையும் கவனிச்சிட்டாரு.

ராமன் என்ன பண்றாரு..மெதுவா படியில இருந்து இறங்கி வர்றாரு..,
ஆஞ்சநேயர் கிட்ட போறாரு..பட்டுனு கட்டிப்புடிச்சிடுறாரு ஆஞ்சநேயர…,
ஆஞ்சநேயா..எல்லோரும் செய்த சேவைக்கு தகுந்த விஷயத்த நான் செஞ்சிட்டேன்.
 இன்குளூடிங்..சீதை
 உன்னுடைய சேவைக்கு என்னையே தந்தாலும் ஈடாகாது.
 அப்படின்னு சொல்லிட்டு கட்டிப்புடிப்பாரு..,

நீங்க ஸ்ரீரங்கத்துல பாத்தீங்கன்னா
இந்தக் காட்சிய பார்க்கலாம்... ஒரு புடைப்பு சிற்பமா இருக்கும்.

சத்வேதகார்

அர்ஜூனனுக்கும் ஆஞ்சநேய சாமிக்கும் கூட ஒரு போட்டி வருமாம்..,
 ஏன்னா, ஆஞ்சநேய சாமி இப்பயும் வாழுறாராம்..
 ராமரப்பத்தி எங்க பேசிட்டு இருந்தாலும் ஆஞ்சநேயர் பக்கத்துல உக்காந்துட்டு இருப்பாரு..ரொம்ப கேர்புல்லா இருக்கணும்..நாம..,

அது எப்படி உக்காந்துட்டு இருப்பாராம்..,
அழுதுகிட்டு உக்காந்து கேட்டுகிட்டு இருப்பாராம்..,
 ஆஹா..அற்புதம்டா..,இன்னும் கொஞ்சநேரம் பேசமாட்டாங்களான்னு கேட்டு இருப்பாராம்..,

சோ..நான் சொன்ன அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்னா…, ஆஞ்சநேயா..
என்னைப்பொறுத்து அர்ஜூன்னிடம் தோற்பதற்குகூட நீ தயாராக இருந்தாய்…,

என்ன..இப்ப கிருஷ்ணனா வர்றவன் ராமன்..,
 அப்ப என்ன பண்றாரு..புஜபல பாராகிரமம் உனக்கு இருக்கு..,
 ஏன்னா, அர்ஜூன்னுக்கும்,,ஆஞ்சநேய சாமிக்கும் ஒரு இது வரும்..,
 ராமர் கட்டின பாலம் பெருசா..என்னா பெரிய பாலம்ன்னுட்டு நான் கட்டுறேன் பார்றான்னு, அம்பு அடிக்கிறானாம் அர்ஜூனன்.ஆஞ்சநேயர் அதை மிதிச்சி உடைச்சி விட்டுடுறாரு..,

அப்புறம் கிருஷ்ணர் கூட இருக்கறது பாக்கறாரு..,
ஆஞ்சநேய சுவாமி..அட்டடா.. ஏகாந்தமாச்சே..அப்படியே விட்டிருக்கலாமே..,

அத இவரு சொல்லுவாரு..,இப்படி எல்லாம் நடக்கப்போகுதுன்னு..அத இவரு சொல்லுவாரு..,
 ஆகையாலே..உனக்கு நான் என்ன தரமுடியும்.அப்புறம் இவரு என்ன தெரியுமா கேக்கறாரு..,
 ராமா நீ எனக்கு எதுவும் பிரத்யேகமா செய்யவேணாம்..,எனக்கு நீடித்த ஆயுள் கூட தேவையில்ல..,உன்னை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும்..,

உன்னப்பத்தி யாரு..எங்க என்னா பேசினாலும்..,
தப்பா பேசினாலும்..பரவாயில்ல..நான் பக்கத்தில உக்காந்து இருக்கணும்..,
 ராமரைப்பத்தி தப்பா பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க…,
ஆஞ்சநேய சாமி பக்கத்துல இருப்பாரு..பிரச்னையாகி ப்போயிடும்.

ஆகையால..ஆஞ்சநேயசாமிபத்தி பேசும்போது காத்து ஏன் வேகமாக அடிக்குதுன்னா, அவரு வாயு புத்திரன்.வாயுப்புத்திரனபத்தி ஒரு சின்னகுறிப்ப மட்டும் இங்க சொல்லிடறேன்.. , என்னன்னாபிராணாயாமம் அப்டின்றதே வாயு சார்ந்த விஷயம்..,
ஏன்னா , அது கண்டிப்பா சொல்லனும்..
  
காளஹஸ்தி..காளஹஸ்தினு ஒரு இடம் இருக்கு தெரியுமா உங்களுக்கு..,
 அங்க பாத்தீங்கன்னா, கோபுரம் இடிஞ்சி விழுந்துருச்சி..என்ன காரணம்னா, நம்மாலதான் எல்லாம்..?

                                                                                                            ..................நாளை தொடரும்,0 comments: