Friday, May 9

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 20

முந்தைய பதிவு (பாகம் 19) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கிறது..,


"..காளஹஸ்தி..காளஹஸ்தினு ஒரு இடம் இருக்கு தெரியுமா உங்களுக்கு..,
 அங்க பாத்தீங்கன்னா, கோபுரம் இடிஞ்சி விழுந்துருச்சி..என்ன காரணம்னா, நம்மாலதான் எல்லாம்..,காளஹஸ்திங்கறது எதுக்கான, பரிவர்த்தனை ஸ்தலம்னா, வாயு பரிவர்த்தனை ஸ்தலம்..,வாயு ஸ்தலம்..வாயு ஸ்தலம்னா, என்ன..பிரணவ யோக்கியம்..அங்க பாத்தீங்கன்னா, தியானம் சரியா கைகூடலசரியா பயிற்சி எடுத்துக்க முடியல..அப்டின்னா, நேரா அங்க போயிடனும்..அங்கபோய் கண்ணை மூடி உக்காந்தீங்கன்னா போதும்..சர்றுன்னு வந்துடுமாம்..அதனாலதான் பாத்தீங்கன்னா, இருக்குற நாயன்மார்கள்லயே..சீக்கிரம் கடவுள பாத்தது பாத்தீங்கன்னா, கண்ணப்ப நாயனார்.

என்னா காரணம் ..அவன் வாயு ஸ்தலத்துல இருந்தான்..எப்படி..நாயன்மார்லயே பார்த்தீங்கன்னா, படாதபாடு பட்டிருப்பாங்க நிறையபேரு..,இவரு மட்டும் சீக்கிரமே கடவுள பார்த்திருப்பாரு..அவருக்கு எந்த மந்திரமும் தெரியாது..அனுஷ்டானம் தெரியாது. ஆகமம் தெரியாது. விபூதிய பார்த்ததுகூட கிடையாதுஎதோன்னு அள்ளி பூசிட்டு இருக்கான்..அவன் பூசிட்டு இருக்கான்,நாமளும் பூசுவோம்..அப்போ என்ன அர்த்தம்..இறைவன் என்ன சொல்றாரு..நீ எனக்கு எதுவுமே தரத்தேவையில்ல..தரவேணாம்எம்மேல பாசமாக இரு..போதும்..,

சாமி உங்கள வழிபடுவதற்கு நான் என்னென்ன எடுத்துட்டு வரணும்..பூ எடுத்துட்டு வரலாம்..சாமி பூ வாங்க காசில்ல..பழங்கள் எடுத்துட்டு வரலாம்..பழம் வாங்க காசில்ல..,
என்னப்பா நீ..கையே மலராக வைத்து வழிபடேன்..எனக்கு கையே இல்ல..கண்ணீர் விட்டு அழத்தெரியுமா உனக்கு..தட்ஸ் ஆல்..இறைவனபார்த்து நின்னுட்டா போதும்..பாத்தா போதும்..அது தரிசனம்..

ஏன்னா, ஆஞ்சநேயசாமி அதான் பண்ணாராம்..ஆஞ்சநேய சாமி பண்ணிட்டு இருக்கறது என்ன ராமதரிசனம்ராமர பாத்துட்டே இருக்கணும்..,

இதையெல்லாம் பார்த்துட்டு நடராஜர் கிட்ட வரணும்..ஏன்னா, இவரு என்னா பண்றாரு..ராம யுகத்துலே ஆஞ்சநேய சுவாமியாக அவதரிக்கிறாரு…,அதே சைவத்துல பாத்தீங்கன்னா..தோற்றப்பொலிவு மட்டும்தான்..அவதாரம் கிடையாது..,
அதான் அங்க ஸ்பெஷலா ஆஞ்சநேயரா வர்றாரு..

இன்னையவரைக்கும் அவரு இறக்கவே இல்ல..சிரஞ்சீவியாவே இருக்காரு..
ஆனா, ராமாவதாரமெல்லாம் முடிஞ்சிடுச்சி..,

தரிசனம் என்றால்..ஏகத்தைப்பார்த்தல்.. கடவுளைப்பார்த்தல்..,நல்லதரிசனம் என்றால், நடராஜரைப்பார்த்தல்அப்படிம்பாங்க..என்னகாரணம்னா, இவரு  விரிச்சிபோட்டு வச்சிருப்பாரு..தலைமுடிய..என்ன காரணம்..உலர்த்தறாராஷாம்பு போட்டு..இல்ல…,
 நாம அவரு முன்னாடி இந்தமாதிரி உட்கார்ந்துட்டாலே என்ன பண்ணுவாராம்..அவரோட ஒரு முடியெடுத்து நம்மை கட்டி விட்டுடுவாராம் ..,

நாம எங்க வேணாலும் போவோம்..ஆனால், தனக்கு எப்போ தேவையோ அப்போ இழுத்துடுவாராம்..இன்னைக்கு பாத்தீங்கன்னாநான் அழைத்து வரவில்லை.
நடராஜர் சாமியிம், மஹாவிஷ்ணுவும் அழைத்து நீங்கள் வந்திருக்கிறீர்கள்..,

எங்கயுமே எந்த ஒரு ஆன்மீக சத்சங்கத்துக்கோ.. கோயிலுக்கோ..நீங்களா நினைச்சா போயிறமுடியாது..அங்க இருக்கக்கூடிய சொரூபம் உங்களை அழைக்கவேண்டும்..,
  
அப்படியே..ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் மிக்ஸ் பண்ணி கொண்டுவந்துவிட்டோம்..கர்ணனையும் லைட்டா டேமேஜ் பண்ணிட்டோம்.

என்ன காரணம்னா, ஒவ்வொருத்தருக்குள்ளேயும், கர்ணமனப்பான்மை உண்டு...நமக்கு எல்லாம் தெரியும்..ஏன்னா, அவன் அப்படி சொல்லுவான்.
அவன் பெரியவங்கள எல்லாம் மதிக்க மாட்டான்..,

துரோணர்..என்னய்யா..அவனுக்குத் தெரியும்..எனக்கும் தெரியும்..இவன் சாவற வரைக்கும் போருக்கே நான் போகமாட்டேங்கறாரு..எப்படி..இது எப்படி கர்வ மனப்பான்மை..,

கொடுத்தல் மட்டும் தர்மம் என்று நினைத்துக்கொண்டிருத்தல்..,
என்னடா..கர்ணன பழிக்கிறேன்னு நினைக்க வேண்டாம்..நீங்க ஆழ்ந்து படிச்சீங்கன்னா, உங்களுக்கே தெரியும்..இதுல இருந்தெல்லாம் விலகி வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த டைட்டிலே தேர்ந்தெடுத்தேன்..,

சரி சாமி..கிருஷ்ண அவதாரம் முடிச்சிட்டீங்க
என்னது கிருஷ்ண அவதாரம் முடிச்சிட்டீங்களா..,

                                                                                     ...............நாளை தொடரும்,

0 comments: