Thursday, May 1

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 16

முந்தைய பதிவு (பாகம் 15) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கறது..,


"...கண்ணாடிய பாக்கும்போது நாம கரெக்டான்னு தெரியனும்..,

நம்மள நாமளே..உற்றுநோக்குதல்…,

ராமன் என்றது கபாபிரசத் அப்படின்னு சொல்லுவாங்க.. ,

எங்கே எல்லாம் நாம போகக்கூடாதோ..,

அதெல்லாம் நாம உள்ளேயே வச்சிக்குவோம்..,

போலீஸ் ஸ்டேஷன் போகக்கூடாது..கோர்ட்டுக்கு போகக்கூடாது..,

ஹாஸ்பிடல் போகக்கூடாது..,

ஆனால்,இது நம்ம மனசுக்குள்ள வச்சிருந்தா..நாம அங்க போமாட்டோம்..,

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏன் போகக்கூடாது..?

அங்க போனா..விசாரணை நடக்கும்…,

அத நமக்குள்ளேயே பண்ணிக்கக்கூடிய விசாரணைதான் ஆத்ம விசாரணை..,

ஆழ்ந்து புரிஞ்சுக்கணும்..,

அங்க போன என்ன நடக்கும்..விசாரணை நடக்கும்..,

அத நமக்குள்ளேயே நாமளே பண்ணிக்கிட்டோம்னா,

அதுக்கு பேருதான் ஆத்ம விசாரணை..,

அது என்ன சாமி கோர்ட்டு..?

டிக்ளர்..நீ நல்லவனா..கெட்டவனா..?

ரெண்டே ஆப்ஜக்ட்டுதான்..,

ஆனா, இப்ப என்னான்னு தெரியல..வக்கீல் யாராவது இருந்தா கோச்சுக்காதீங்க..,

கோர்ட்டுக்கெல்லாம் நீங்க போய் பாத்தீங்கன்னா,

இவன் குற்றம் சாட்டப்பட்டிருக்கானா

குற்றம் செஞ்சானான்னு எல்லாம் கிடையாது..,

பரிதாபமா இருக்கும்..முன்னாடி எல்லாம் அடிக்கடி போய் பார்த்து இருக்கேன்.

எல்லா இடத்துக்கும் போய் பார்த்துடறது..,

பரிதாபமா நிற்பான் வெளியில..,

அங்க அவன் கூப்பிடறது வந்து இவன் காதிலயே விழுவாது..,

நல்ல மனிதர்கள்லாம் நின்னுட்டு இருப்பான்..அங்க..,

நிறைய சுகர் பேஷன்ட் எல்லாம் இப்ப இருக்காங்க..,

அவங்க எமர்ஜன்சிக்கு யூரின் போகனும்னா கூட அங்க பாத்ரூம் இருக்காது..

ஒரு டேபிள் எல்லாம் இருக்காது..

தயவுசெய்து எழுதி போடுங்க..ஏன் சாமி..,

நீங்க எதாவது பர்சனலா மாட்டி இருக்கீங்களான்னு எல்லாம் கேட்டுறவேணா..,

என்ன அர்த்தம்..கோர்ட் அப்படிங்கறது டூ ஆப்ஜக்ட்..

நீ குற்றவாளியா..இல்லையா..

அந்த தண்டனைய நம்மளே கொடுத்துக்குவோமே..

அதுதான் கண்ணாடிய பாக்கும்போது..நாம கரெக்டா இருக்கோமா..இல்லையா..

ரைட்

மூணாவது என்ன..ஹாஸ்பிடல்..

வேற ஒண்ணும் இல்ல..நம்மை நாமே..உட்புறமாக சுகாதாரமாக வைத்திருத்தல்..

வெளியில் குளிச்சி..கிளிச்சிட்டு அப்படியெல்லாம் கிடையாது..

பட்டைகிட்டையெல்லாம் போட்டுகிட்டு..அது கிடையாது..

உள்ளுக்குள்ளே..நம்மளை நாம்..மனோ ரீதியாக சுகாதாரமும்

சுபிட்சமுமாக வைத்திருத்தல்..அப்படியிருந்தா நாலாவது ஆள் நீங்க..,

கிரமம்

பிராப்தம்..பிரேபததா..,அப்படின்னா என்ன அர்த்தம்..?

விசாரணையும், முடிவும், ஞானமும் உன்னுள்ளே இருக்ககிறது..,

அப்படியிருந்தால்..தத்துவமசி நீ நானாகிறாய்..… அதுதான் ஐயப்ப தத்துவம்..,

சப்போஸ் நீ கண்ணாடி முன்நிற்கும்போதாவது,

மாலை கீலையெல்லாம் பாக்கும்போது,

அந்த ஐயப்பனா தோணுது பார்றாப்பா ராஜா..,

அப்ப நீ சாமியாயிடற பாரு..,

நீ மாலை போட்டா..உன்னை சாமின்னு கூப்பிடுவான்..,

நாம என்ன வேணா பண்ணுவோம்..,

தனி கிளாஸ் எல்லாம் வச்சிருக்கான்.. பாண்டிச்சேரியில..,

எனக்கு சில சமயங்கள்ல ஒரு உணர்வு..,

ரொம்ப வேதனையோடு சொல்றேன்..தவறா நினைச்சிக்க வேண்டாம்..,

என்னடா சாமி இப்பபடியெல்லாம் பேசறாரேன்னு..,

பேக்ட்..,

நானும் கல்லூரியில பயின்று இதெல்லாம் கடந்துதான் வந்திருக்கேன்..,

டக்குன்னு, காவியெல்லாம் போட்டு,

நீ சாமியாரா போ..அப்படியெல்லாமா அனுப்பினாங்க..,

நாமளும் படிச்சுதானே வந்திருக்கோம்..பாத்துட்டுதானே வந்திருக்கோம்..,

இன்னொன்னு பாத்தீங்கன்னா

ஒரு பெரிய விஷயம்..கடலூர்ல 

தலைமைபீடமான எங்க ஆசிரமத்துக்கு எதிர்த்த மாதிரியே டாஸ்மாக் இருக்கும்.

இன்னும் நிறையபேர் எப்படி தெரியுமா குறிப்பிடுவாங்க..,

விஜயகுமார சுவாமிகள்..ஆசிரமம்..தம்பிப்பேட்டை..,

குறிஞ்சிப்பாடி தாலுகா,பிராக்கட்டுல டாஸ்மாக் எதிரில்..அப்படின்னு இருக்கும்..,

லேண்ட்மார்க் இதாலேண்ட்மார்க் அதான்னு தெரியல..,

என்ன கேப்பாங்க..சாமி..தம்பிப்பேட்டையில் ஒரு லேண்ட்மார்க்..,

நானே சொல்றேன்..ஏன்னா, அதான் ஈசி..ஐடன்டிபிகேஷன்.

நீங்க எங்கயாவது ஊருக்குப்போயி லைப்ரரி

எங்கயிருக்குன்னு கேட்டுப்பாருங்களேன்..,

எங்கயாவது நீங்க போங்க..மெட்ராஸ்ல போங்க..டிநகர் போங்க..,

யாரையாவது படித்த..நீட்டா இருப்பான்..,

சார் இங்க..லைப்ரரி எங்கே இருக்கு..?

லைப்ரரியா..நிறைய யோசிப்பான்..

இப்டி கேட்டுப்பாருங்க..சார்..கடை எங்க இருக்கு...,

கூட்டுபோவான்..நானும் அங்கதான் போறேன் வாங்க…,

எப்படி..லைப்ரரி எங்க இருக்குன்னு கேட்டுப்பாருங்க....நோ..நோ..,

இப்படி கேட்டுப்பாத்தீங்கன்னு வச்சுக்கங்களேன்..சூப்பர் பிரண்டாயிடுவான்..,

சரி..அப்படியே வெளிய வந்துடுவோம்..

சொல்லி அனுப்பினாங்க..டாஸ்மாக் பத்தியெல்லாம் பேசக்கூடாதுன்னாங்க..,

நமக்கு என்னவோ தெரியல..எதிர்ல அத பாத்துட்டே இருக்கமா..,

அங்க சேல்ஸ் நாம கம்மி பண்ணியிருக்கோம்..ரெகார்ட்,

இன்னொரு ஒரு பெரிய ரெகார்டான ஒரு விஷயத்த சொல்றேன்..,

ஆசிரமத்துக்கு நாங்க இடம் பாக்கும்போது..நான் வாண்டனா வாங்கினேன்..,

ரைட்..இந்த இடத்துக்கு எதுத்த மாதிரி வாங்குடா..,

இன்னைய வரைக்கும் ஒரு பிரச்னையும் கிடையாது..,

அவங்களுக்குதான் பிரச்னை..நான் இருக்கறதால.

என்ன காரணம்..,

எங்கயாவது நீங்க நோண்டி பாருங்க..,

இந்த லோகத்திலே ஒரு மதுபானக்கடைக்கு எதுர்த்த மாதிரி

ஒரு சின்ன பிள்ளையார் கோயில் கூட இருக்காது..,

ஆனா, விஜயகுமார சுவாமிகள் ஆசிரமம் இருக்கு..,

அந்த நம்பிக்கையிலதான் சென்னைக்கு வந்தேன்..,

இங்க வந்து பாத்தாஅதோ..ஆசிரமத்தோட அமைப்பும்..எதிர்ல பார்த்தா ..,

இவ்ளோ பெரிய இடத்த நமக்கு நல்கி இருக்காரு..,

என்ன காரணம்..கான்பிடன்ட்..நாம எப்படியாவது அடைஞ்சிரலாம்..,

எவ்ளோ நசுக்குதல் ஏற்படுத்தப்பட்டாலும்,

எப்படியாவது அடைஞ்சிரலாம்கிற கான்பிடன்ட்..,

அதுதான் ராமன்கிட்ட இருந்தது.

அதுதான் நம்மகிட்டயும் இருக்கணும்..,

ஆகவே பாத்தீங்கன்னா,கும்பகர்ணன் அறிவுறுத்தி,

கும்பகர்ணன் செத்துபோய், அதுக்கப்புறமும் ராவணன் சண்டைக்கு போவான்..,

அதாவது இதுவும் உண்டு..,

ராமனை ஏன் சாமி உயர்த்தி சொல்றீங்க…?

ராமன உயர்த்தி சொல்லக்கூடிய காரணம் என்ன..?

.......................நாளை தொடரும்,


0 comments: