கோரக்நாத் |
அடர்ந்த காடு, கரடுமுரடான பாதை,
எங்களோட குருநாதர் முன்னால நடந்து போயிட்டே இருந்தாரு ..,
அவர நாங்க எல்லாரும் பின்தொடர்ந்து போயிட்டே
இருந்தோம்.. எல்லாவகையிலயும், குருவோட
வழியத்தானே சீடர்கள் பின்பற்றனும்..நாங்களும்
அவர் பின்னாலயே போய்ட்டு இருந்தோம்..அப்பதான் வழியில நீர்தேக்கம் குறுக்கிட்டது. அது ரொம்பவே, அழுக்கா, பார்க்க சாக்கடையாட்டமா இருந்தது..கொஞ்சநேரம் அந்த நீர்த்தேக்கத்த நின்னு
கவனிச்சிட்டே இருந்தாரு குருநாதர்.
இத எதுக்கு இப்படி பார்க்கிறாருன்னு நாங்களும் அவரையே பார்த்துட்டு
இருந்தோம்..அப்பதான் அந்த
நீர்த்தேக்கத்துல நிறைய மீன்கள் இருக்கறத கவனிச்சோம்..குட்டி, குட்டி மீன்கள்..துள்ளி விளையாடிட்டு இருந்துச்சு..,
இதத்தான் எங்க குருநாதரும் ரசிக்கிறதா நினைச்சு நாங்களும் பார்த்துட்டே
இருக்கும்போதுதான், திடீர்னு, அப்படி ஒரு காரியத்த செஞ்சிட்டாரு…,
எங்களால நம்பவே முடியல..எங்க கண்ணுமுன்னாலயே,
ஒரு
குட்டி மீன புடிச்சு லபக்குனு, வாயில
போட்டு முழுங்கிட்டாரு…,
என்னடா இது அநியாயமா இருக்கு..ஒரு சாமியாரு..அதுவும்
எங்களுக்கெல்லாம் குருவா இருக்கிறவரு..எங்க முன்னாலயே, பச்சையா
ஒரு மீன பிடிச்சி திங்கறாரே ..அப்படின்னு
எல்லாரும் ஒருத்தர் முகத்த ஒருத்தர் ஆச்சரியத்தோட பார்த்துகிட்டோம்…அவரும் எங்களோட ரியாக்ஷன கவனிச்சிட்டு ஒண்ணுமே
சொல்லல..,
நாங்க எல்லாருமே, குருவ அச்சு அசலா, பின்பற்றி நடக்கறதா, உறுதிமொழி எடுத்துட்டுதான், அவருகூட வந்துட்டு இருக்கோம்..இந்த நிலையில, அவரு
திடுதிப்புனு, மீன புடிச்சி
முழுங்கிட்டாரு..ஆனா, எங்களமாதிரி, சாமியாருங்க அசைவ உணவு சாப்பிடக்கூடாது, அது எங்களோட ஆன்மீக பயிற்சிக்கு தடையா இருக்கும்னுதான் இதுவரைக்கும்
எங்களுக்கு சொல்லிகொடுக்கப்பட்டது. ஆனா, ஆன்மீகத்துல உச்சநிலைய அடைஞ்ச எங்க
குருநாதரே, இப்படி மீனபுடிச்சு
முழுங்கனதும், எங்களுக்கெல்லாம், கொஞ்சம் குழப்பமாயிடுச்சு..,
இப்ப நாங்க அவர பின்பற்றாம..சாஸ்திரப்படி, இருக்கலாம்னு
இருந்தா, குருவ பின்பற்றாத குற்றம்
வரும், அதுக்காக, அவரு சாப்பிட்டமாதிரியே, நாங்களும் சாப்பிட்டா,
எங்களோட ஆன்மீக முன்னேற்றம் தடைபடும்..இப்ப என்ன செய்யறது.. எல்லாரும் யோசிச்சோம்..,
குருக்கள்
எப்பவுமே, இதுமாதிரி எதாவது, சிக்கலான பரிட்சைகளை சிஷ்யர்களுக்கு
வச்சிகிட்டே தான் இருப்பாங்க..அதனால, குருவ பாலோப்பண்றதுதான் சிறந்த வழின்னு
எல்லாரும் முடிவு பண்ணிட்டோம்..,
உடனே, எல்லாரும், அந்த நீர்த்தேக்கத்துல இருந்து, ஆளுக்கொரு குட்டி மீன புடிச்சி, வாயில போட்டு முழுங்கிட்டோம்.., அவ்ளோதான்,
குருநாதர் இதையெல்லாம் அமைதியா பார்த்தாரு.., எதுவுமே சொல்லல..திரும்பவும்
காட்டுக்குள்ள நடக்கத்தொடங்கிட்டாரு..,
நாங்களும், வெற்றிக்களிப்போட
நடக்கத்தொடங்கிட்டோம்..,
கொஞ்சதூரம் கழிச்சி, திரும்பவும்
ஒரு நீர்த்தேக்கம் வந்தது..ஆனா, இது முன்ன வந்ததுமாதிரி இல்ல…ரொம்ப தெளிவான நீர்த்தேக்கமா இருந்தது..பார்க்கும்போதே அதுல இருக்குற தண்ணிய
குடிக்கணும்போல இருந்தது.
நாங்க நினைச்சமாதிரியே, எங்க
குருநாதரும் அந்த நீர்த்தேக்கத்துக்கு பக்கத்துல போய் நின்னாரு…
கொஞ்சநேரம், மூச்ச
இழுத்துபிடிச்சு, வயித்த உள்ளுக்கு
இழுத்து, ஏதோ விக்கல்
எடுக்குறமாதிரி என்னமோ பண்ணாரு…தடால்னு, அவரு வாயில இருந்து அந்த குட்டிமீனு உயிரோட
வெளிய வந்துச்சு..அத பிடிச்சு..இந்த புது நீர்த்தேக்கத்துல விட்டாரு…அதுவும் சுத்தமான அந்த தண்ணியில ஜம்முனு நீச்சல்
அடிச்சி, இப்படியும், அப்படியுமா, ஆனந்தமா எங்க எதிர்லயே குறுக்கும், நெடுக்குமா நீந்தி விளையாடியது..,
எங்களுக்கெல்லாம், ஒரு நிமிஷம் பக்குனு ஆயிடுச்சு...என்னடா, இந்த மனுசன் பாட்டுக்கு, வாய்க்குள்ள போன மீன உயிரோட வெளிய எடுத்துட்டாரு...இது தெரியாம, நாம ஆளுக்கொரு மீன முழுங்கி தொலைச்சிட்டமேன்னு, ஒருத்தர ஒருத்தர் பார்த்து திருதிருன்னு முழிக்க தொடங்கிட்டோம்...
இப்போதான் எங்க குரு எங்க எல்லாரையும் பார்த்து கேட்டாரு..
"..நான் செஞ்சத பார்த்து நீங்க எல்லாரும் மீன புடிச்சு முழுங்கினீங்களே..,இப்பவும், என்ன மாதிரியே, நீங்களும், முழுங்கன மீன உயிரோட வெளிய எடுத்து, இந்த தண்ணியில விடுங்க.."அப்படின்னாரு..,
அவரு மீன சாப்பிடராருன்னு நினைச்சுதான் நாங்களும் மீன சாப்பிட்டோம்...ஆனா, அவரு சாக்கடையாட்டம் இருக்குற தண்ணியல இருந்து, அந்த குட்டிமீன உயிரோட அவருடைய வயித்துல வச்சி காப்பாத்தி எடுத்துவந்து , இந்த நல்ல தண்ணியில விட்டிருக்காரு..,
ஒரு மீன உயிரோட தன்னோட வயித்துக்குள்ள வச்சி எடுத்துவந்து, திரும்பவும் அத பாதுகாப்பா வெளிய எடுக்கறதும், யோக்ககலையில இருக்குற ஒரு அம்சம்தான்,அதத்தான் இன்னைக்கு நமக்கெல்லாம் குரு செஞ்சி
காட்டியிருக்காரு..அது புரியாம.. மீன புடிச்சு உயிரோட முழுங்கி, நாங்க பட்டபாடு..,
கோரக்நாத் மகான்..இவருதான் தன்னோட சிஷ்யர்களுக்கு முன்னால மீன் முழுங்கி அத திரும்பவும், உயிரோட எடுத்த காட்டின யோகி. சாமியார்கள்ல நாத் பரம்பரைன்னு ஒன்னு இருக்கு, அந்தவகையில இந்து நாத் யோகப்பரம்பரைய சேர்ந்தவருதான் இவரு. இந்தியா முழுக்க சுற்றித்திரிஞ்சிருக்காரு.., நிறைய இடங்கள்ல இவரு தியானம் செஞ்ச குகைகள்
இன்னைக்கும் இருந்திட்டு இருக்கு...,இவங்களோட வாழ்க்கை முழுக்கவே நிறைய ஆச்சரியங்களும், அதிசயங்களும் ஏராளமா இருக்கு, அதையெல்லாம், நாம அடுத்து வரும் பதிவுகள்ல பார்ப்போம்..,
2 comments:
Vaalthukal.
அவருடைய வயிற்றில் தண்ணீர் அதிகம் சேர்த்து பின் மீனை முழுங்கி இருப்பார். வயிற்றில் உள்ள அமிலங்கள் மீனை கொன்றுவிடும்.சித்தர் செயல் திறன் கொண்ட வர்
Post a Comment