Saturday, May 10

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் -21

முந்தைய பதிவு (பாகம் 20) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகளின் பேச்சு தொடர்கிறது..,


"...சரி சாமி..கிருஷ்ண அவதாரம் முடிச்சிட்டீங்க
என்னது கிருஷ்ண அவதாரம் முடிச்சிட்டீங்களா..

கிருஷ்ணர்னாவே நீங்க வேற எங்கயும் போகவேண்டாம்…,
நாம கிருஷ்ணர்னாவே என்ன பண்றோம்..சாரட் வண்டியில் அவரு இருப்பாரு..பின்னாடி அர்ஜூனன் வில் வச்சிருப்பான்..பகவத் கீதையில் அட்டை போட்டிருப்பான்.

பெரியவிஷயம் பாருங்க..பகவத்கீதைங்கறது பெரிய ஞானம்..,
அத எங்க பயிற்றுவிக்கறதா சொல்றாருன்னா.. போர்க்களத்துல..

நிறையபேரு சொல்லுவாங்க..பகவத்கீதை ஒரு கொலைநூல்..,
அர்ஜூனனை கொலை பண்றதுக்காக இவரு தூண்டுறாருன்னு..கிடையவே கிடையாது..,
நீங்க பாத்தீங்கன்னாகிருஷ்ணர் அர்ஜூன னுக்கு சொல்றத..,
ஒருத்தன் ஞானக்கண்ணோட பாத்துட்டு இருப்பான்..,

யாரு..திருதராஷ்டிரனுடைய வேலைக்காரன்..அவன்.. சஞ்செயன்னு பேரு..,
அவரு எப்படின்னா, தேர்டு விஷன் உண்டு..,சஞ்செயன் யாருன்னா, திருதிராஷ்டிரனுக்கு ஒரு மெய்க்காவலன் மாதிரி இருந்து எல்லாம் பண்ற ஒரு ஆளு..,திருதராஷ்டிரனுக்கு கண்ணு தெரியாது..ஆனா, ஆசை..போர பாக்கணும்..போர்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும்னு..என்னா தெரிஞ்சிக்கணும் துரியோதணன் ஜெயிக்கணும்னு தெரிஞ்சிக்கணும்..அப்ப என்ன பண்ணுவான் சஞ்செயன் சொல்லுவான்..
ராஜா..நான் இங்க இருந்து அங்க பாப்பேன்..அங்க நடக்கறத ஒன்னு ஒன்னா நான் உங்களுக்கு சொல்லிடுறேன்..அப்படிங்கறது கிருஷ்ணனுக்குத் தெரியும்.

அவரு என்ன பண்றாரு..தன்னை கடவுளாக அர்ஜூனனுக்கு காட்டுவது போல காட்டி சஞ்செயனுக்கு காட்டுவாரு..ஏய்..நான் விஷ்ணு..

அபேக்தா ஏகபர்தி….யதாயதாகி தர்ம….சம்பவாமி யுகே..யுகே..

ஒழிச்சேபுடுவேன் ..,

அப்படிங்கறத..அர்ஜூனனுக்கு சொல்லுவதைப்போல..அங்க அவனுக்கு சஞ்சயனுக்கு காட்றாரு..அவரு..இப்பயாவது சொல்றா..அவனுக்கு..,போர நிறுத்தச்சொல்லி..
ஆழ்ந்து சென்சிட்டிவ்வா, இன்டலக்சுவலா புரிஞ்சிக்கிட்டா, பகவத் கீதை கொலை நூல் அல்ல..போரை தடுத்து நிறுத்துவதற்காக கிருஷ்ணர் பொழிந்த ஞான த த்துவம்..,

என்ன சொல்றாரு..எப்பா..நான் கடவுள்..நானே இங்க இருக்கேன்அவர கொஞ்சம் குறிப்ப உணர்ந்துக்க சொல்லு..நிறுத்தச்சொல்லு சண்டைய..,

ஏன்னா, மஹாராஜா.. அவருதான். திருதராஷ்டிரான்தான்துரியோதணன் கிடையவே கிடையாது..கடைசி வரைக்கும் ராஜாவே ஆக முடியாம செத்து போயிட்டான்..,

அவங்க நினைச்சிருந்தா நிப்பாட்டி இருக்கலாம்..கடைசி வரைக்கும் நினைக்கல..போயிடுச்சு..,

ஆகையால..மஹாபாரதத்தயெல்லாம் முடிச்சுட்டோம்..நாம அப்படியே..,யுத்த காலத்துல இருந்து இறங்கி வர்றோம்..அதுக்கு முன்னாடி கிருஷ்ணர் முக்கியமான ஒன்ன சொல்லுவாரு..என்னை எங்கு நீங்கள் பேசினாலும், குசேலனை தயவுசெய்து பேசிடுங்க..,
அதயும் நம்மகிட்ட சொல்லுவாரு..டெடிகேஷன்ன்னா என்னனான்னு தெரியுமாப்பா..என்ன..உனக்கு நான் பகவத் கீதை சொல்லிட்டு இருக்கேன் பாரு..இப்படி கர்ணன் வாழ்ந்துட்டு இருக்கான்.

பகவத் கீதையில பலவிதமான கர்மங்கள் சொல்லியிருக்கேன்..யோக்கியம் சொல்லியிருக்கேன்.. பக்தி சொல்லியிருக்கேன்.. எல்லாம் சொல்லியிருக்கேன்.ஆனா, இதேபோல் ஒருத்தன் வாழ்ந்துட்டே இருக்கான்..அவந்தான் கர்ணன்..அவன நான் உதைக்கதான் போறேன்அப்படின்னு மனசுல இவரு நினைச்சுக்கிறார்..என்ன காரணம்..தேர சுத்தினது.. பின்னாடி வந்து அறுத்தது..,

அப்படின்னு சொல்லிட்டு..அப்படியில்லாம இன்னோர் பார்ட் இருக்கு அர்ஜூனாகுசேலபர்வம்..,

குசேலருக்கு பாத்தீங்கன்னா, 27 குழந்தைகள்..27ம் 27 நட்சத்திரங்கள்..,

பொதுவா, மனிதன் பாத்தீங்கன்னா,ஒரு மகான்கிட்டயோயார்கிட்டயாவது போகும்போது..
பர்ஸ்ட் போறது..போய் கொஞ்சம்  பிரச்னை சரியாச்சுன்னு வச்சிக்கங்களேன்..அதான் நல்லாதான இருக்கோமே..அப்புறமென்னஅப்புறம் போய்க்குவோம்....பிரச்னை வரும்போது....

குசேலர் அதுல அடிபட்டாரு. குழந்தைகள்..உறவுமுறைகள் பாத்தீங்கன்னா, கைண்ட் ஆஃப் கண்டிஷன்ஸ்..,அத அறுத்தொழிக்கவே முடியாது..எப்படி..தட் இஸ் கால்ட் பை பேரண்டல் கண்டிஷன்னு சொல்லுவாங்க அத..,கடைசிவரைக்கும்..மனிதன் என்ன பண்ணுவான்..பேரன்,பேத்தி கொள்ளுப்பேரன் வரைக்கும் யோசிச்சிட்டு இருப்பான்..,

எந்த ஒரு மனிதனும் அவனுக்காக கடைசிவரை வாழவதே கிடையாது..,

என்ன காரணம்னா,,குழந்தைய பொறக்கும்போது..விவரம் தெரியறவரைக்கும் ..நமக்கு நம்மையே தெரியாது..,

விவரம் தெரிஞ்சபிறகு, அண்டர் கண்ட்ரோல்..அப்பா,அம்மா கண்ட்ரோல்.. படிச்சாவணும்.. அது பண்ணியாவனும்இது பண்ணியாவனும்..டென்த்ல நானூறுக்குமேல வாங்கனும்..டுவல்த்துல ஆயிரத்துக்கு மேல வாங்கணும்..அதுக்கப்புறம் என்ஜினியரிங்..மெடிசன்..அது இது..அதுக்கப்புறம்.. வேலைக்குப்போகனும்..அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணனும்பா..அதுக்கப்புறம் நமக்கு குழந்தை பொறந்துடும்..அத மெயின்டெயின் பண்ணனும்..,

நாம நமக்காகவே வாழ்றது இல்ல..நம்ம எப்ப நமக்காக வாழ்வோம்னா..ஞானத்தைத் தேடும்போது மட்டும்தான்..அதுதான் சொல்றது..,

ஞானம் தேடி விளைந்து..உனக்கு ஆப்பர்சூனட்டி கெடச்சி மிஸ் பண்ணா முடிஞ்சது கதை..,

அதை மீண்டும்..மீண்டும் எடுத்துரைப்பது..இதைத்தான் நம்ம ஆசிரமம் அறிவுறுத்தப்போகிறது..,

சோ..என்ன குசேலம்னா, இவரு பகவான மறந்துட்டாரு..பகவான மறந்ததால 27 குழந்தைங்களாயிடுச்சு..பசி..முடியல..,கண்டிஷன்ஸ் அதிகமாகஅதிகமாக,அதிகமாகபாத்தீங்கன்னாபுத்தியும், வயிறும் வேகன்ட்டா போயிடும்..அதுமாதிரிதான் இப்போ குசேலருக்கு..,

இங்க குசேலன் என்பவன் ஜீவாத்மா..கிருஷ்ணர் என்பவர் பரமாத்மா..,
குசேலருடைய மனைவி புத்தி..அது என்னா பண்ணுது..எப்பாடி..இப்படியே இருந்தா கதை கந்தால போயிடும்..,நீ மொதல்ல போயி பரமாத்மாவ பாரு..என்ன. உன் பிரண்ட போயி பாரு..அவர அடை..அவருடன் பிணை..,

எப்படி வெறுங்கையோட போறது..அவனோட ஓடியாடி விளையாடி இருக்கேன்..அவன் எவ்வளவோ கொடுத்திருக்கான்..வாங்கி சாப்பிட்டு இருக்கேன்..அப்போ குசேலரும் வசதியாத்தான் இருந்திருக்காரு..,வாழ்ந்து நொடிச்சி போயிருப்பாரு போல இருக்கு..

எனக்கு ரொம்ப இதா இருக்கே..நோ..நோ.. அப்படின்னுட்டு என்ன பண்றான்..கொஞ்சம் அவல் எடுத்து ஒரு அழுக்குத்துணியில முடியறான்..,

ஏன் சாமி..எதாவது ஒரு நல்லா அழகா..பளபளன்னு..நல்ல ..சீட்டு..இல்ல சால்வை..அதுமாதிரி எதுலயாவது வச்சி மடிச்சிகிடிச்சி கொண்டுபோய் கொடுக்கலாமில்லயா..ஏன் அழுக்குத்துணியில முடியறான்னா, எளிமை..,

ஏன்னா, கிருஷ்ணருடைய டாம்பீகம் பாத்தீங்கன்னா, மஹாராஜ்..எல்லாம் கோல்ட்..வெள்ளிக்கே இடமில்லையாம்.., கிருஷ்ணருடைய சபையில..வெள்ளி டம்ளர் எல்லாம் டாய்லெட்லதான் யூஸ் பண்ணியிருக்கான் கிருஷ்ணன்..எல்லாமே கோல்ட்.. பட்டுப்பீதாம்பரங்கள்..எல்லாமே காஸ்ட்லியஸ்ட் விஷயம்..,

அப்ப பாத்தீங்கன்னா, எகைன்ஸ்டான ஒரு விஷயத்த எடுத்துட்டு போனாதான் பார்ப்பான் அவன்..ஜடன்டிபை ஆவான்..ஹே என்னடா அது..அப்படிம்பான்..அதுக்காக புத்திசாலிதனமா கொடுக்கறாரு..,

இவரு காடுமேடெல்லாம் கடந்து போறாருஅது என்னா அர்த்தம்...ஜீவாத்மாவான குசேலர்தான் நாம..பலவிதமான கஷ்டங்கள் வரும்எல்லாத்தையும் மீறி கீறி..போயிட்டாரு..கிருஷ்ணர் அரண்மனைக்கு..,அங்க ரெண்டு வாயிற்காப்பாளன் நிக்கறான்..,

தம்பி உள்ள போக க்கூடாது நீ..,

யோவ் நான் நல்ல பிரண்ட்டுயா..,

ப்ச்..அதெல்லாம் இல்ல..,

விசிண்டிங் கார்டெல்லாம் கொடுத்திருக்காருய்யா..அவரு..

ப்ச்உள்ள அலவ் பண்ணமாட்டேன்..,

அந்த துவாரபாலகர் வேற யாருமில்ல..நம்ம கூடவே இருப்பான்..,
வா..இப்ப நாம ப்ரீயாதான இருக்கோம்..அங்க இந்த ஐஏஎஸ் அகடமியில..இவரு நடத்தராரே..அங்க போய் இன்னைக்கு எக்ஸாம்..எழுதலாமே..,

ஏய் போடா..ஐஏஎஸ் எழுதி கிழிக்கப்போறாரு..இவரு..,

பாத்துக்கலாம் விடு..வா இன்னைக்கு பாண்டிச்சேரி போலாம் அப்படிம்பான்..,

அதுதான் துவாரபாலகர்..எப்படி..நீங்க ஒரு  நோட்டு எடுத்துக்கங்க..நாம என்ன நல்ல விஷயம் செஞ்சோம்னா..ஒரு பக்கத்த தாண்டமாட்டோம்.. எப்படி..,
நாம என்னனால்லாம் நெகடிவ்வா செஞ்சோம்னா..நோட்டு பத்தாது..இன்னோரு நோட்டுவாங்கற மாதிரி ஆயிடும்..,

சிம்ப்ளா ஒரு விஷயம்..எனக்கே நடந்த ஒரு விஷயம் பாருங்களேன்..,

                                                                                                 ................நாளை தொடரும்,

0 comments: