Saturday, May 3

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 18

முந்தைய பதிவு (பாகம்17) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கிறது..,
"...கர்ணன் மிகவும் தர்மவான் அதனால, அவன எல்லாரும் நல்லவன்னு, நினைச்சிட்டு இருப்போம்ஆனா, எம்முடைய சத்சங்கத்திலே கர்ணனை ஒரு வில்லனாத்தான் நான் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

என்ன சாமி புதுசா சொல்றீங்க..சிவாஜிகணேசன் நடிச்ச படத்துல அப்படி இல்லயே..,

சிவாஜிகணேசனுக்காக வேண்டி கர்ணனை பெரிசா காமிச்சுட்டாங்க..,
வியாசர் எழுதின, மஹாபாரதத்தை பார்த்தீங்கன்னா, கர்ணன் வில்லனாதான் சித்தரிக்கப்பட்டிருப்பான்..,என்னன்னா, கர்ணன் என்ன சொன்னாலும் துரியோதணன் கேப்பான்..அப்படியாப்பட்டவன்..கர்ணன்

என்னன்னா, ஒரு வாட்டி சொக்கட்டான் ஆடிட்டு இருக்காங்க..கர்ணனும், துரியோதனுடைய மனைவியும், காலிங்பெல்ல துரியோதனன் அடிக்கவே, இவ எழுந்திரிக்கிறாதோற்கறதுக்கு பயந்துதான் அவ எழுந்திரிக்கிறான்னு நினைச்சு,அவளோட துணியபிடிச்சு கர்ணன் இழுக்கும்போது, கச்சில்ல இருக்குற முத்தெல்லாம் விழுந்துடுது. அப்ப துரியோதனன் வந்து நம்ம நண்பன் தப்பா நினைச்சிக்கப்போறானோன்னுட்டு ஏப்பா எடுக்கவோ..கோர்க்கவோனு கேட்டானாம்..அந்தளவுக்கு நம்பிக்கை உடையவன் கர்ணன்மேல..,

அப்படி உள்ளவன் சபையில இருக்கும்போதுதான் துரியோதணன் என்ன பண்றான்..திரௌபதிய மடியில கொண்டுவந்து உக்கார வைடாங்கறான்..,
 கர்ணன நாம எப்படி நினைச்சிட்டு இருக்கோம்..சூப்பர் ஸ்டார்..,
இங்க என்ன தர்மம் என்பது கொடுத்தல் மட்டுமல்ல..செயலும்…,

இந்த இடத்துலதான் கர்ணன் வீக்காகிறான்..,

வேற எவன் சொன்னாலும் கேக்கமாட்டான்..துரியோதணன்..நோ சான்ஸ் என்பான்..கர்ணன் சொல்லியிருந்தா கேட்பான்..நம்பாளு தப்புப்பா அப்படின்னு சொல்லியிருந்தா.. சரி ரைட்..வேற எதாவது பண்ணு..அவள உட்ரு அப்படின்னுருப்பான்..நோ..நோ..அத மொத மொத சபாஷ்னு கை தட்னவனே..கர்ணன்தான்..ஊக்குவிக்கிறாரு..அதான் அங்க உதை படுறாரு..,

இன்னொரு வேலை ஒண்ணு பண்ணுவான்..என்ன..புறமுதுகு காட்டிட்டே இருப்பான் சிலபேர்..அடுத்தவன் மட்டும் கிண்டி விடுறது..நீ போ..மாப்ள நீ கேளு..நிறையபேரு இருப்பான்..அந்த மாதிரி எல்லாம்அந்த வேலையையும் கர்ணன் பார்ப்பான்..,

என்னன்னா..வெற்றிபெற வனதுர்கா யாகம் பண்ணணும்னு ' ஓம் ரீம் தும் ஜலஜல தும் லோசனி சண்ட சம்ஹாரி..ஐம்புரீம் கீம்..நமோ பகவதி வனதுர்காய ஒம்பட் ஸ்வாஹா..ன்னு ஒருகோடி 8வாட்டி ஒருத்தர் சொன்னாதான்..இந்த மஹாபாரத யுத்தத்துல வெல்லமுடியும்னு கிருஷ்ணர் அப்படி போட்டு உடைப்பாரு..,

இத நம்ம கூட சொல்லலாம்..,சோ..கூட்டிப்பாருங்க..ஒன்பது ..,

நாலு யுகம் இருக்குக்ரதா யுகம்..திரேதா யுகம்..துவாபர யுகம்..கலியுகம்.. , ஒவ்வொரு யுகத்துக்கும் உரித்தான வருடங்களைக்கூட்டினால் ஒன்பதுதான் வரும்.. என்ன அப்படின்னா, எல்லாத்தையுமே நவக்கிரகங்கள்தான் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.

ஒகே..வேற எங்கேயோ போறோம்..,

என்னாகுது..இவன் இந்த வனதுர்கா யாகம் பண்றதுக்காக, கிருஷ்ணனோட போயிடறான் அர்ஜீனன்..இந்த மேட்டர் அங்க தெரியுது..கௌரவர்களுக்கு…, ஆஹா..செத்தான்டா..எல்லா பயலும்..தர்மர புடிச்சிடலாம்..தர்மர்தானே கேப்டன்...,

அப்ப என்ன வியூகம் வைக்கறாங்கன்னா…,
சக்கர வியூகம் வைக்கறாங்க.. , கௌரவர்கள் என்ன பண்றாங்க..,
சக்கர வியூகம்சக்கர வியூகம் பாத்தீங்கன்னா, ஆர, ஆரமா இருக்கும்..நம்ம தேசிய கொடி நடுவுல சக்கரம் இருக்கு பாருங்க..ரவுண்டாஇருக்கும்..ஆர,ஆரமா இருக்கும்ஒண்ணு உடைஞ்சாகூட அப்படியே குளோஸ் ஆயிடும்..,

அதை உடைக்கறதுக்கு மஹா வல்லமை வேண்டும்..அது மூணே பேருக்குதான் தெரியும்..ஒண்ணு கர்ணனுக்கு தெரியும்..ரெண்டாவது அர்ஜூன்னுக்கு தெரியும்மூணாவது அபிமன்யுவுக்கு மட்டும் தெரியும்..,

என்ன சாமி சொல்லிகொடுத்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு தெரியாதா..? அவருக்கு எல்லாமே தெரியும்..,ஆனா, அபிமன்யுவுக்கு உடைச்சிட்டு எப்படி வெளியில வர்றதுன்னு தெரியாது..
 ஏன்னா, எப்படி உள்ள போறதுன்றது வரைக்கும் வயித்துல இருக்கும்போது சொல்றாரு..,

ஆகையால இது எதை குறிக்குதுன்னாபெண்கள் கர்ப்பமா இருக்கும்போது நல்ல விஷயத்தையே..சொல்லணுமா..அது அந்த காதுக்கு போவுமாம்..குழந்தை காதுக்கு..அதை உணர்த்துவதற்காகத்தான் சொல்லப்பட்டது..,

ஏன் வந்து இவரு சொல்லிகொடுக்க மறந்துட்டாரா..அப்படின்னா, இந்த பொண்ணு கேக்க தயாரா இல்ல..அப்ப..,கிருஷ்ணருடைய தங்கச்சியினுடைய பிள்ளைதான் அபிமன்யு..
 இவரு டெய்லி போவாராம்..இல்லண்ணா, எனக்கு உடம்பு வலிக்குதுண்ணே..ஒரு சாக்கு சொல்றது..,இது மட்டும் ஒரு ரெண்டு மூணு வாரம் லீவு போட்டு கேட்டிருந்ததுனா..இவரு எப்படி உடைச்சிட்டு வெளியில் வர்றதுன்னு சொல்லிக்கொடுத்திருப்பாரு.. அந்த பய வெளில வந்துருப்பான்.. கேக்கல..மாட்டினான்..,

அதுக்குதான் பெரியவங்க எதாவது சொல்ல வந்தாங்கன்னா, கொஞ்சமாவது காது கொடுத்து கேட்டுறனும்..,பெண்கள் வயித்துல குழந்தைய சுமக்கும்போது நல்ல விஷயமா கேக்கணும்.

கிருஷ்ணர் சொல்லிகொடுத்திருக்காரு..அபிமன்யு வயித்துக்குள்ள இருக்கும்போது..,

அத சொல்றான்..பெரியப்பா. எனக்கு எப்படி உடைச்சிட்டு  போகனும்ன்னு எனக்கு தெரியும் பெரியப்பா..ஆனா, எப்படி வெளியில் வர்றதுன்னு எனக்கு தெரியாது. அத நான் பாத்துக்கறேன்..பீமனும், சகாதேவனும் இருப்பாங்க..நான் எல்லாம் இருக்கேன்..பாத்துக்கலாம் ..விடு.. போ..,ரைட்..அப்படின்னுட்டு ..என்னா பண்ணுவான்..தேர்ப்பாகன தட்றா குதிரைய.. அப்படிம்பான்..,

இந்த சக்ர வியூகத்த..ஆழ்ந்து கவனிக்கணும்...இந்த சக்ரவியூகத்த வகுத்தது பாத்தீங்கன்னா, துரோணாச்சாரியார்..என்னதான் குருவாக இருந்தாலும்..துரோணாச்சாரியார் சத்குருநாதர் கிடையாது..குரு

குருவுக்கும்..சத்குருநாதருக்கும் நிறைய வித்யாசம் உண்டு..,

ஏன்னா, பிக்பாக்கெட் அடிக்கணும்னா, கூட ஒரு குருநாதர் தேவை..ஆனா, சத்குருநாதர் தன்மை வேற..அது ஞானம்.ஏன்னா, இங்க துரோணாச்சாரியார் பண்ணது குருவோட வேலை மட்டும்தான்..,என்ன பண்ணாரு..ஆஹா..வர்றவன்.. அபிமன்யு..சின்னபையன்..16 வயசு சக்கரவியூகத்த..இவன் வாண்டனா, அடிச்சி உடைச்சா..நமக்கு அவமானம்..அப்படிதானே..,

இவன் சின்னபையன்..அடிச்சி உடைச்சிட்டு உள்ள வந்துட்டான்னா..அவமானம்னுட்டு இவரு என்னபண்ணறாருஅபிமன்யு சக்கரவியூகத்தை உடைக்கவேயில்ல..ஒபன் பண்றான்னுட்டான் துரோணாச்சாரியார்..

இவன் பாஸ்ட்டா வர்றான்..குதிரையிலசரக்குன்னு நடுவுல போய் நின்னுடுறான்..சுத்தி பாத்தா பெரிய..பெரிய ஆளெல்லாம நிக்கறான்..யார்.. யாரு.. அஸ்வத்தாமா.. துரோணாச்சாரியார்..கிருபாச்சாரியார்கர்ணன்..எல்லாம் சுத்தி இருக்கான்..,

அவன் என்ன நினைக்கிறான்..அவ்ளோதான் எல்லாம் முடிஞ்சிருச்சு..இன்னையோட போர் முடிஞ்சிருச்சு..ரைட் அப்படின்னு அவன் நினைக்கிறான்..,

சண்டை நடந்திட்டு இருக்கு..யாரும் எதுவுமே அவன பண்ணமுடியல..அப்ப துரோணர் சொல்றாரு..தம்பி இது கர்ணனால முடியும்இந்த யுத்தத்த இன்னைக்கு முடிக்கலாம்னா, கர்ணன்தான் முடிக்கலாம்..எப்படி முடிக்கலாம்..அபிமன்யுவ கொண்ணெல்லாம் இல்ல..,

அந்த நாண் இருக்கு பாருங்கவில்லுல நாண் இருக்கும்..ஒயர்..அத பாயிண்ட் பண்ணி அறுக்கணும்னா, கர்ணனாலயும், அர்ஜீன்னாலயும் மட்டும்தான் முடியும்…,

துரோணாச்சாரியார் சொன்னா, கர்ணன் கேக்கமாட்டான்..ஏன்னா, அவன் கர்வி…, அவருக்கு என்னான்னா, நம்மதான் கொடுக்குறோமே..நாமதான் கொடுக்கிறோமே..ரைட்..,

 துரோணாச்சாரியார் ஒரு சின்ன சிலிப்ல..எழுதி கொடுத்தாரு..,
என்ன..பின்னாலிருந்து நாணை அறுத்து விடவும்..,

நாம என்ன நினைக்கிறோம்..கர்ணன பெரிய ஆளாநினைச்சிகிட்டு இருக்கோம்..,

துரோணாச்சாரியார் என்ன எழுதி கொடுக்கிறாரு..துரியோதணன் மூலமா..தம்பி கர்ணன பின்னாடி நின்னு,அந்த நாண அறுத்துவிடச சொல்லு..,அப்பதான் அவன் வில்லு விடமாட்டான்..,அப்படியே, கர்ணன் பின்னாடி போறான்..,
அபிமன்யு என்ன நினைச்சிகிட்டிருக்கான், சரி எங்கெயே சாப்பிடகீப்பட போயிருப்பான் போல இருக்கு.டீ கீ சாப்பிட போயிட்டான் போல இருக்கு..ரைட் ஓகே..,
 அப்படின்னுட்டு இருக்கும்போதுதான் பார்த்தா..டக்குன்னு..வில்லோட நூலு அறுவுது..நூல் அறுந்த உடனே, இவன்  கொஞ்சம் சிக்கறான்..என்னடா..பின்னாடி இருந்து யார்றா.. அறுத்துவிடறான்னு..பின்னாடி பாத்தா..கர்ணன்..,

இவன் என்ன நினைச்சிட்டு இருக்கான்..அப்பா மிகப்பெரிய வில்லாளி..அதைப்போல கர்ணன்  வில்லாளி மட்டுமல்ல..மாபெரும் தர்மவான்..கடவுள்..அப்படின்னு அவன் மனசுல..அதுலயே செத்துட்டான் அவன்..,எப்படி சிலபேர் என்னான்னா, யாரால அடிபடறமோ..அதுலயே செத்துபோயிடுவான்..,அய்யோ..உன்ன என்னான்னு நினைச்சேன்..நீயாடா..,

நீங்க பாத்தீங்கன்னா, ஜீலியஸ் சீசருடைய ஹிஸ்டரி பாத்தீங்கன்னா, ரொம்ப அற்புதமா இருக்கும்..,அந்த கேபினட் அறையில் வந்து ஒவ்வொருத்தரா வந்து குத்துவாங்க..ஜீலியஸ் சீசர..,அதெல்லாம் அவரு புடுங்கி எறிவாருஅப்படியே வருவாரு..கடைசியா ஒரு கத்தி உள்ளே பாயும்..அந்த கத்தியோட முனை மட்டும் மறுபக்கம் வெளியில வருமாம்..இதுவரைக்கும் குத்தினது எல்லாம் உள்ளதான்..ஏய்..இதுமட்டும் வெளியில வருது..நம்மமேல இவ்ளோ அன்பா..எவன்டா இருக்கான்னு பாத்தா..புரூட்டஸ்..,
 இவரு என்ன நினச்சிகிட்டு இருக்காரு..புரூடஸ்தான் இருக்கறதுலயே நல்லவன்..எப்படி..புரூட்டஸ் இருக்கறவரைக்கும் நமக்கு பிரச்னை இல்லன்னு பாத்தா..குத்துனதே..புரூட்டஸ்தான்..கத்தி வெளியில வர்ற அளவுக்கு…,

இவரு வலியில எல்லாம் செத்துப்போல...ஜீலியஸ் சீசரு..குத்துனது புரூட்டஸ்..அந்த மனவலி..,அனேக மரணங்கள் எப்படி ஏற்படும்னா.. உடல்வலியால் அல்ல..மனவலியால்…, இதைக்குறிப்பதுதான் அபிமன்யு வதம்..ஞாபகம் வச்சுக்கணும்…,
 எப்படி...அனேக மரணங்கள் நிகழ்ந்தது உடல் வலியால் அல்ல..மனவலியாலதான்...அந்த மனவலிய ஏற்படுத்தினவன் பாத்தீங்கன்னா, பின்னாடிதான் நிப்பான்...,
 பின்னாடி நின்னு பேசறது பத்தி நாம பயப்படக்கூடாது..ஜஸ்ட் திரும்பி பாத்தா போதும்..,

அவன் என்ன நினைக்கிறான்..அய்யோ..எவ்ளோ பெரிய கொடையாளி..தர்மவான் நினைச்சேன் நான்..இவன் இந்த மாதிரி வேலைய பண்ணிட்டானே..,

அதுலயே..இவன் பாதி உடைஞ்சிட்டான்ரைட்..இருந்தாலும் பார்ப்போம்னு சொல்லிட்டுகீழே இறங்கி..எந்த ஆயுதமும் இல்ல..இவன் தான் அனுப்பிவச்சிட்டானே..எல்லா ஆயுதத்தையும்..முடிச்சிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு..,

சக்கரத்த கழட்டி சுத்தறான்தேர்ச்சக்கரத்த எடுத்து அப்படி சுத்தறானாம்..நீங்க பாத்தீங்கன்னா, அதே மாதிரி தேர்ச்சக்கரம்தான்..கர்ணனுக்கு மாட்டும் சகதியில..,

ஆழ்ந்து பாருங்க..நாம என்னல்ல எல்லாம் பண்ணக்கூடாதுன்னு
மஹாபாரதத்துலயும், ராமாயணத்துலயும் சொல்லிட்டே இருப்பான்.

என்ன பண்றான் அபிமன்யு,,தேர்சக்கரத்த எடுத்து சுத்தறான்..
 அப்ப நடராஜ மூர்த்தி என்ன பண்றாராம்..கிருஷ்ணர பாத்து பழிக்கிறாராம்..,
 டேய்..உன் கையில இருக்குற சக்கரத்த விட அது வேகமா சுத்துதுடா..,
 எப்படி..யார்..யார அடிக்கிறான்..டான் எல்லாம் இருக்கான்..அவன் அடிக்கிற வில்லம்பெல்லாம் அவன் மேல படவேயில்ல..அந்த தேர்சக்கரம் சுத்தறான் அப்படி..

அப்ப பகவான் என்ன பண்றாராம்.. சிவபெருமான்..கிருஷ்ணர் கிட்ட சொல்றாராம்..,
கிருஷ்ணா..உன் கையில இருக்குற சக்கரம் சுத்தறதவிட..அபிமன்யு கையில இருக்குற சக்கரம் வேகமா சுத்துதுடா..உனக்கு இடர் வந்துவிடப்போகிறது..,

எப்படி..எல்லாருமே அவனுக்கு எகெயின்ஸ்ட்டா இருக்காங்க..தெய்வமே எகெய்ன்ஸ்ட்டா இருக்கு..,அப்ப ஒரு அம்பு வேகமா விழுது..முதுகுல..அது பாத்தா..கர்ணன்..ரைட்..நோட் பண்ணது கிருஷ்ணன்.
 அதே மாதிரி பாருங்க..எந்த தேர்சக்கரத்த சுத்தி இவன் திணறினானோ..அதே மாதிரி தேர்சக்கரம்தான் கர்ணனுக்கு மாட்டும்..

இங்க எதுக்கு சொல்லவர்றேன் அப்படின்னா..கொடுத்தல் மட்டுமே தர்மம் அல்ல..யாசித்தலும் ஒரு வகையான தர்மம்..,

யாசிப்பதற்கென்று  ஒருத்தர் இருந்தாதான் நீ கொடுக்க முடியும்..

யாசித்தல்னா, பொருளை யாசித்தல் அல்ல..ஞானத்தையாசித்தல்..,

ஆழ்ந்து புரிஞ்சிக்கணும்..,

...............நாளை தொடரும்,


0 comments: