Thursday, May 8

16 ஆண்டுகள் காட்டுக்குள் வாழ்ந்த பெண் சாமியார்..! சாப்பிடாமல் வாழும் அதிசயம்..!

'...நான் இந்த தேர்தல்ல போட்டியிடலாம்னு நினைக்கிறேன்..
நீங்க என்னம்மா சொல்றீங்க..?

செய் மகா(மகனே)..?.."

இந்த ஒரு பேச்ச நம்பி, நானும் உள்ளூர் தேர்தல்ல, போட்டியிட்டேன்.

ஆனா, படுதோல்வி..,

உடனே, எனக்கு ஒன்னுமே புரியல..,நேரா, அந்தம்மாகிட்ட போய், என்னம்மா, உங்கள கேட்டுட்டுதானே தேர்தல்ல போட்டியிட்டேன். இப்ப நான் தோத்துட்டேனே...?

மகா, நீ தேர்தல்ல போட்டிபோடனும்னு முடிவு பண்ணிட்டு வந்து கேட்ட, அதனால,நான் அத மறுக்கல, அது உன்னோட விதி, போட்டியிடலாமா, வேண்டாமான்னு என்கிட்ட கேட்டிருந்தா மட்டும்தான் நான் உனக்கு ஆலோசனை சொல்லமுடியும்..உனக்கு இந்த ஊருக்கு தலைவனாகுற தலையெழுத்து இருக்கு மக்கா, ஆனா, அது இந்த தேர்தல் கிடையாது, அடுத்த தேர்தல். அப்ப நீ ஒன்னுமே பண்ணவேணாம், தானாவே, நீ அன்அப்போஸ்டா ஜெயிச்சிடுவே..போ..போய் வேலையப்பாரு..,

அவங்க சொன்னமாதிரியே, அடுத்த எலக்சனும் வந்தது..,

அம்மா, சொன்னமாதிரியே, ஊர்ல என்னை அன்அப்போஸ்டா தலைவரா தேர்ந்தெடுக்க முடிவுபண்ணிட்டாங்க,

நானும் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்...அப்போதான், ஊர்ல இளவட்ட பசங்க திடீர்னு, எனக்கு எதிரா போட்டி நாமினேஷன் போடப்போறதா அறிவிச்சிட்டானுங்க..,

நேரா, அம்மாகிட்ட போனேன்..,

வா..மகா..

இந்தமுறையும்,நீ சொன்னமாதிரி நடக்காதுமா, எனக்கு எதிரா இன்னும் ரெண்டுபேரு போட்டியிடப்போறாங்க..,

இல்ல மகா, நான் சொன்னதுதான் நடக்கும், நீ அன்அப்போஸ்டா, தலைவராகப்போற..

எப்படிம்மா..? நாளைக்குதான் வாபஸ் வாங்கறதுக்கு லாஸ்ட் டேட், ஆனா, இவனுங்க கடைசிநேரத்துல மனு போட்டுட்டு, நாங்க போட்டியிடத்தான் போறோம்னு குதிச்சிட்டு இருக்கானுக...

அதெல்லாம் எனக்குத்தெரியாது..மகா.., நீ போய் அமைதியா உன்னோட வேலைகளப்பாரு..நீ தான் இந்த ஊரோட தலைவரு..

சந்தேகம் மனசு முழுக்க இருந்தாலும், என்னவோ அந்த அம்மா, சொல்லுதுன்னு விதி விட்ட வழின்னு வீடு திரும்பிட்டேன்..,

இந்த அம்மா, 7 வயசு சிறுமியா இருந்தப்ப, பக்கத்துல இருக்குற காட்டுக்குள்ள தனியா போயிருக்காங்க..அங்க இவங்களுக்கு, இறை தரிசனம் கிடைச்சிருக்கு, அத தன்னோட வீட்ல வந்து சொன்னாங்க..ஆனா, யாரும் நம்பல, அதுக்கப்புறமா, தனக்கு கொடுக்குற சாப்பாட, எதிர்ல யாரோ நிக்கற ஒருத்தருக்கு ஊட்டி விடுற மாதிரியெல்லாம்  செஞ்சிருக்கு, பார்க்கிறவங்கள சிறுமி சுவற்றுக்கு சாப்பாடு ஊட்டிவிடற மாதிரி இருக்குமாம், கேட்டா, சாமிதான் எதிர்ல இருக்குன்னு சொல்லுவாங்களாம், பொண்ணுக்கு ஏதோ ஆயிடுச்சின்னுதான் எல்லாரும் நினைச்சாங்க, அதுக்காக சாட்டையால எல்லாம் கூட சிறுமிய அடிச்சிருக்காங்க..,

அடிக்கடி காட்டுக்குள்ள போயிடுவாங்க..எதுக்கு போனேன்னு கேட்டா, சாமிய பார்க்கன்னு சிறுமி பதில் சொல்லுமாம்..இப்படியே, போயிட்டிருந்த நிலமை, சிறுமி வளர்ந்து பெரியவளாயிடுச்சு, 16 வயசு, உடனே, பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க...அவங்களோ எனக்கு கல்யாணம் எல்லாம் வேணாம்னு எவ்வளவோ சொல்லியும் யாரும் கேக்கல..கல்யாணம் நடந்துருச்சு, அன்னைக்கே, தாலியையும், தான் கட்டியிருந்த துணிமணிகளையும் கழட்டி வீசிட்டு , என்னை இனிமே யாரும் தேடி வராதீங்கன்னு சொல்லிட்டு, காட்டுக்குள்ள போயிட்டாங்க அந்த அம்மா,

16 வருடம்.., அந்த காட்டுக்குள்ளயே தவத்துல இருந்திருக்காங்க..சாப்பாடு இல்ல, உடம்புல துணி இல்ல.., இப்படியே காலம் கடந்துச்சு,

காட்டுக்குள்ள இருக்குற குகைகள்ல தவத்துல உட்கார்ந்திருப்பாங்க..

இதுக்குமேலயும், இவங்கள அப்படியே விட்டுவைக்க, அந்த ஊர் ஜனங்களுக்கு முடியல, சிறுமியா இருந்தப்போதான் அவங்கள பைத்தியம்னு சொல்லி ஊர் ஒதுக்கிடுச்சு, ஆனா, 16 வருஷமா, காட்டுக்குள்ளயே ,அதுவும் ஒரு பெண் வாழறாங்கன்னா, அவங்க நிச்சயமா  ஒரு சக்திவாய்ந்த சாமியார்தான்னு ஊர் புரிஞ்சிக்கிட்டது,

அதனால,இனிமேலும், அவங்கள அப்படியே மலையில விட்டுடமுடியுமா.., நம்ம நல்லது கெட்டதுக்கெல்லாம் வழிகாட்ட ஒரு சாமி வேணுமில்ல,அதனால, அவங்கள கட்டாயப்படுத்தி ஊருக்குள்ள அழைச்சிட்டு வந்தோம்..,

மலைய ஒட்டி அவங்களுக்கு ஒரு இடம் கொடுத்து தங்கவச்சிருக்கோம்..,

அவங்கள காட்டுக்குள்ள இருந்த எங்க சுயநலத்துக்காகத்தான் அழைச்சிட்டு வந்தோம், அதுல என்னோட பங்கும் அதிகம்..,எல்லா நல்லது கெட்டதுக்கும் அம்மாகிட்ட அருள்வாக்குமாதிரி கேட்போம்..அது அப்படியே பலிக்கும், அதனாலதான், நான் இந்த தேர்தல் விஷயத்துலயும் அம்மா கிட்ட கேட்டேன்.ஆனா, எனக்கு மட்டும் என்னவோ எல்லாமே, குளறுபடியா நடக்குது.

மலையிலிருந்தவங்கள கட்டாயப்படுத்தி, ஊருக்குள்ள கொண்டுவந்து வச்சது தப்போ,அதனாலதான் எனக்குமட்டும் இப்படியெல்லாம் நடக்குதோன்னு யோசிச்சிகிட்டே வீடு திரும்பிட்டேன்..,

ஆனா, கடைசியா, அந்த அம்மா அழுத்தம் திருத்தமா  சொன்ன வார்த்தைகள் மட்டும் என்னோட காதுக்குள்ள ஒலிச்சிகிட்டே இருந்தது.

"....அதெல்லாம் எனக்குத்தெரியாது..மகா.., நீ போய் அமைதியா உன்னோட வேலைகளப்பாரு..நீ தான் இந்த ஊரோட தலைவரு.."

வீடுவந்து சேர்ந்த கொஞ்சநேரத்துக்கெல்லாம், அந்த அம்மா, இருந்த இடத்த சுத்தியிருந்த நம்மாளுங்க எல்லாம், ஓடிவந்தாங்க..,

'அண்ணே..அண்ணே..,'

'என்னடா..?'

'அந்த அம்மா, அங்க இருக்குற எல்லாரையும், ஊருக்குள்ள போய் இருங்கடா..நான் திரும்ப வரச்சொல்ற வரைக்கும் யாரும் வரக்கூடாதுன்னு, அங்கயிருந்து எல்லாரையும் போகச்சொல்லிட்டாங்க..,'

'ஏன்..?'

'அதான் தெரியலன்னே,அதுமட்டுமில்ல,  காட்டுக்குள்ள இருந்த மாதிரியே, துணியெல்லாம் அவுத்துபோட்டுட்டு,    அவங்க வீட்டு முன்னால வச்சிருக்கிற சிவலிங்கத்து முன்னால, ஆக்ரோஷமா எதோ பூஜை பண்ணிட்டு இருக்காங்கன்னே..பார்க்கவே, பயங்கரமா இருக்கு..,'


'என்னடா..சொல்ற..,'

'ஆமாண்ணே..,'

'சரி..வாங்கடா..போய் பார்க்கலாம்..'

'இல்லண்ணே..இங்க யாரும் வராதீங்கன்னு சொல்லியிருக்காங்கண்ணே..,'

'சரி..நீங்க எல்லாம் இங்கயே இருங்க...நான் மட்டும் போய் ..தூரமா இருந்தாவது, என்ன..ஏதுன்னு பார்த்துட்டு வந்துடறேன்..என்னால, இங்க இருக்க முடியல..,'

பரபரவென, அந்த அம்மா, குடியிருந்த மலையடிவார வீட்டை நோக்கிய சாலையில் நடந்துகொண்டிருந்தேன்...

தொலைவிலேயே...அந்த உக்கிரம் எனக்கும் புரிந்துவிட்டது..,

இதுவரை அந்த அம்மாவை இப்படி ஒரு ஆக்ரோஷ நிலையில நான் பார்த்ததே கிடையாது..,

சிவனின் ருத்ரதாண்டவத்தை ஒரு பெண் ஆடுவதுபோல் இருந்தது..எனக்கு உடம்பெல்லாம் வேர்த்து போச்சு..,

வந்தவழியே திரும்பிட்டேன்..

இன்னைக்கு சாயந்திரத்தோட வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள்..,

என்னவாகப்போகுதோன்னு..டென்ஷனோட காத்திட்டு இருந்தேன்..

வாபஸ் வாங்கற டைம் முடிய கொஞ்சநேரம் இருக்கும்போது, எனக்கு போட்டியா மனு போட்டிருந்த ரெண்டுபேரும், தானாவே, வந்து மனுவ வாபஸ் வாங்கிட்டாங்க..,

அவ்ளோதான், இனி நான் தான் இந்த ஊரோட போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்,

எனக்கு இப்போ கொஞ்சம் உறுத்தலா இருந்தது.என்னோட சுயநலத்துக்காக, காட்டுக்குள்ள இருந்த அந்த அம்மாவ ஊருக்குள்ள கொண்டுவந்து , தேவையில்லாத, தொந்தரவுகள கொடுத்திட்டேனோன்னு,

முடிவு தெரிஞ்ச உடனே, அந்த அம்மாவ பார்க்க புறப்பட்டுக்கிட்டிருந்தேன்,

அதுக்குள்ள அந்த அம்மாவே, எல்லாரையும் திரும்ப வரும்படி ஆள் சொல்லி விட்டிருந்தாங்க,

எல்லாரும் போனோம்..இப்போ அங்க இருந்தது வழக்கமா, நாங்க பார்க்கிற சாந்தமான, அன்பான அம்மா மட்டுமே,

'என்ன மகா, சந்தோஷமா..?'

அந்த அம்மா கேட்க, என்னிடம் சொல்வதற்கு பதிலே இல்லை...கண்ணில் இருந்து  தாரை, தாரையாக கண்ணீர் மட்டும்தான் அம்மாவின் கேள்விகளுக்கு பதிலாக வழிந்து கொண்டிருந்தது..,

இனி இந்த ஊருக்கு என்னால் முடிந்த நல்லதுகளை செய்து கொடுக்கவேண்டும் என மனதுக்குள் உறுதி எடுத்துக்கொண்டேன்..,

எல்லோராலும் கடவுளாக வழிபடப்படும் எளிமையான அந்த பெண்துறவி முருகம்மா இவர்தான்,


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுக்கு அருகில் இருக்கும் எருக்கம்பட்டு ஊராட்சிமன்றத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் நாராயணசாமி, இவர்தான் 16 ஆண்டுகளாக காட்டுக்குள் இருந்த முருகம்மாவை கட்டாயப்படுத்தி, ஊருக்குள் அழைத்துவந்து, இடம் கொடுத்து தங்கவைத்திருக்கிறார்.அங்கேயே, ஒரு சிவலிங்கம் அமைத்து கோயில் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

யாரையும் பார்த்த மாத்திரத்தில், அவர்களைப்பற்றி சொல்லிவிடும் முருகம்மா, இப்போதும் காட்டுக்குள் இருப்பதையே விரும்புகிறார்.இன்னொரு முக்கியமான அதிசயம், முருகம்மா சாப்பிடுவதே இல்லை.வெறும் புகையிலையை மட்டுமே சிலசமயங்களில் உட்கொள்கிறார்,

"..நான் செஞ்ச பாவம் தான் என்னை திரும்பவும் ஊருக்குள் வந்து தங்க வைத்து விட்டது, மக்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை எல்லாம் கேட்க வைத்து விட்டது.." என்றெல்லாம் கவலைப்படுகிறார் முருகம்மா,

வருகிற சித்ரா பௌர்ணமி அன்று, தனக்கு மலைமேல் இறைதரிசனம் கிடைத்த இடத்திற்கு சென்று வழிபாடு நடத்த திட்டமிட்டிருக்கிறார் முருகம்மா..,

சித்ரா பௌர்ணமி அன்று மலைமேல் முருகம்மாவிற்கு இறைதரிசனம் கிடைத்த இடத்தில் நடக்கும் பூஜைகளில் கலந்துகொள்ளுங்கள்.., உங்களுக்கும் ஒரு புதிய தரிசனம் கிடைக்கலாம்..!

0 comments: