"...Space ல இருக்குற விஷயங்கள நமக்கு ரிசீவ் பண்ணிக் கொடுக்கறவங்கதான் ரிஷிகள்..
..அப்படித்தான் நமக்கு இந்த அற்புதமான ஜோதிட சாஸ்திரமும் கிடைச்சிருக்கு...
ஆனா, இது தெரியாம, ஜோதிட சாஸ்திரத்த வியாசர்தான் உருவாக்கினார்...
பராசரர்தான் எழுதினார்னு எல்லாம் நாம சொல்லிட்டு இருக்கோம்...அவங்க மூலமா இந்த உலகத்துக்கு கிடைத்த பொக்கிஷம்தான் ஜோதிடம்..."
இப்படி பொட்டுல அடிச்சமாதிரி பேசும் இவருதாங்க ராமச்சந்திரன்..,
வராஹிமிகிரரின் 'பிரஹத் சம்ஹிதா' மற்றும் வேத நூல்களோட அடிப்படையில கோள்களோட நிலைப்பாட்டை கண்டுபிடிச்சு, அதன்மூலமா ஒவ்வொரு வருஷமும், உலகம் முழுக்க, எங்கெங்க, என்ன மாதிரியான இயற்கை சீற்றம் வரும், மழை, வெயில் எப்படி இருக்கும்..,நிலநடுக்கம், புயல் இப்படி எல்லாத்தையும் பட்டியல் போட்டு முன்னாடியே பத்திரிகைகள்லயும், வானியல் ஆய்வாளர்களுக்கும் அனுப்பிவைக்கறத பல வருஷங்களா தொடர்ந்து செய்துவர்றாரு..,
ஜோதிடத்துல இருக்குற சூட்சுமமான விஷயங்கள புரிஞ்சு வச்சிருக்கிற இவருக்கு, ஜோதிடம் முழுநேர தொழில் அல்ல....கன்ஸ்ட்ரக்ஷன்தான் இவரோட தொழில்.
தனிநபர்களுக்கும் ஜோதிடத்து மூலமா நுட்பமா சில தீர்வுகள சொல்றாரு ராமச்சந்திரன்..,
அதுபத்தின விவரங்களையும், இயற்கைசீற்றங்களுக்கு அவர் கணிப்பதுபத்தியும், சின்னதா (இல்லைங்க..கொஞ்சம் பெருசுதான்..) ஓர் உரையாடல்..,
இனி...தொடர்வது ராமச்சந்திரன்,
"....1995ல தான் இயற்கை சீற்றங்கள் பத்தி முதன்முதலா ஒரு கணிப்பு வெளியிட்டிருந்தேன்.
அது அப்படியே தொடர, 2002ல ஆனந்த விகடன் எனக்கு ஒரு பெரிய அறிமுகத்த கொடுத்தது.
அதுல தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போகும்...இந்திய ரூபாயின் மதிப்பு 40 க்கும் கீழே போகும்னு நான் கொடுத்திருந்த கணிப்புகள் உண்மையானது.
அதேமாதிரி 2004 நடந்த சுனாமிபத்தியும் முன்கூட்டியே கணிச்சிருந்தேன்..ஆனா, சுனாமின்னு நான் பேர்கொடுக்கல..ஒரு பூகம்பத்தால பேரழிவு வரும்னு மட்டும் சொல்லியிருந்தேன்.
இதோ..இந்த 2013 வரைக்கும் நான் கணிச்சி சொல்லிட்டு இருக்குற தகவல்கள் 70 % அப்படியே நிகழ்கிறது.
இப்ப பெய்யுற மழை உள்பட முன்னாடியே நான் கணித்து சொன்ன தகவல்கள் பத்திரிகைகள்ல செய்தியா வந்திருக்கு.
எல்லாத்துக்குமே நம்ம மூதாதையர் வழி செஞ்சு வச்சிருக்காங்க.அத நாம முறைய பயன்படுத்திக்கிறது மட்டும்தான் நம்மோட புத்திசாலித்தனம்.
எனக்கு முழுநேரமும் இந்த ஆய்வுகள செய்யறதுக்கான நேரமும் இல்ல..அதுக்கான வசதியும் இல்ல. நான் என்னோட தொழில்,குடும்பம் இதையும் கவனிச்சாகனும்.
அதனாலதான், அரசு இந்த ஆய்வுகள செய்ய ஆட்களையும்,வசதிகளையும் செய்துகொடுத்தால் இந்த வழிமுறைகளை அவங்களுக்கு கொடுத்து உதவ தயாராக இருக்கேன்.
நம்முடைய வேதங்கள்ல்ல இருக்குற வழிமுறைகளைத்தான் நான் எடுத்து பயன்படுத்தி கணக்கிடுறேன்.
இத முறையா பயன்படுத்தினா, வரப்போகிற இயற்கைச் சீற்றங்களையும், பெரும்சேதங்களையும் முன்கூட்டியே கணிக்க முடியும்,
பெரும்அழிவினால் ஏற்படும் உயிர்ச்சேதங்களை காப்பாத்தலாம்...
எவ்வளவுதான் விஞ்ஞானம் பேசினாலும், நம்ம எல்லாரையும் இயக்குற சக்தி ஒன்னு இருக்குங்கறத நாம நம்பித்தான் ஆகணும்.
ஆனானப்பட்ட ஐன்ஸ்டினே அதுபத்தி இப்படி சொல்லியிருக்காரு.
"....Everything is determined...by forces over which we have no control.
It is determined for the insect as well as for the star.
Human beings, vegetables, or cosmic dust.
-We all dance to a mysterious tune, intoned in the distance by an invisible piper."
-Albert Einstein
(எல்லாமே தீர்மானிக்கப்பட்டவைதான்..,
அந்த இயக்கும் சக்தியை நம் யாராலும் கட்டுப்படுத்த இயலாது.
ஒரு சாதாரண பூச்சியிலிருந்து நட்சத்திரம் வரை எல்லாமே தீர்மானிக்கப்பட்டவைதான்..
மனிதர்கள்,காய்கறிகள்,இந்த பிரபஞ்ச தூசு வரை,
-எங்கோ தொலைவில் இருந்து இசைக்கப்படும்,
ஒரு கண்ணுக்குத் தெரியாத மர்மஇசை நம்மையெல்லாம் ஆட்டுவிக்கிறது..
–ஆல்பரட் ஐன்ஸ்டின்)
அந்த கண்ணுக்குத் தெரியாத சக்திகிட்ட நாம நம்பள ஒப்படைச்சிடணும்.அதக்கப்புறமா, ஒரு புல்லாங்குழல் வழியா காத்து நுழைஞ்சி இனிமையான நாதமா வர்றமாதிரி நம்ம வழியா பல விஷயங்கள் நடக்கத்தொடங்கிடும்.
அப்படித்தான் இந்த ஜோதிட அற்புதங்கள் என் மூலமா, பலவிஷயங்கள வெளியுலகத்துக்கு தெரிவிப்பதா நான் நம்புறேன்.
ஜோதிடத்த நான் கத்துக்க தொடங்கினதுகூட அப்படி ஒரு நிகழ்வுதான்...,
'....அப்ப எனக்கு 18 வயசு. என்னோட அப்பா வாத்தியார்.
என்ஜினியரிங் படிக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா எங்கப்பாவோ கிராஜூவேஷன்தான்னு ஒரே பிடிவாதமா நின்னாரு.
அப்பதான் என்னோட சொந்தத்துல ஒருத்தர் "...தம்பி, உனக்கு இப்போ ஏழரை நாட்டு சனி நடக்குதுப்பா, அதனாலதான், இப்படியெல்லாம் நடக்குது.." ன்னு ஆறுதல் சொன்னாரு.
அதேமாதிரி,நான் ஆசைப்பட்ட என்ஜினியரிங் படிக்கமுடியல..
பிஎஸ்சி(பிசிக்ஸ்) தான் படிச்சேன்.
அப்பதான் எனக்கு முதமுதலா ஜோசியத்து மேல ஒரு ஆர்வம் வந்தது.
அது என்ன ஏழரை நாட்டு சனி..அது எப்படி என்னோட விருப்பத்துக்கு எதிரா செயல்படுதுன்னு தெரிஞ்சிக்க ஜோசியத்த படிக்க ஆரம்பிச்சேன்.
என்னோட சுயஜாதக ஆராய்ச்சியில ஈடுபட்டேன். அப்போதான் என்னால பல உண்மைகள புரிஞ்சிக்க முடிஞ்சது.
முதமுதலா என்னோட 23 வயசுல என் உறவுக்காரர் ஒருத்தர் தன்னோட மகனுக்கு திருமணம் ஆகுமான்னு கேட்டாரு.
அவரோட ஜாதகத்த பார்த்த நான் உங்க மகன் ஒரு விதவையவோ, இல்லன்னா ஒரு டைவர்சியையோதான் கல்யாணம் செய்வாங்கன்னு சொன்னேன்.
அவங்களுக்கு பயங்கர ஷாக்..ஆனா, கொஞ்சநாள்லயே நான் சொன்னமாதிரி
அவரோட மகன் ஒரு டைவர்சியதான் கல்யாணம் செஞ்சாரு.
அதேமாதிரி எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு தன்னோட பொண்ணுக்கு 45 வயசாயிடுச்சு....இனிமே, கல்யாணமாகுமான்னு கேட்டாரு.
அவங்க ஜாதகத்த பாத்துட்டு இவங்களுக்கு ஏற்கனவே, கல்யாணமான ஒருத்தரோடதான் கல்யாணமாகும்னு சொன்னேன்.
அந்த பெண் அப்போ எம்பில் படிச்சிட்டு இருந்தாங்க.அவங்களோட மாஸ்டரா இருந்தவருக்கும் அவங்களுக்கும் பழக்கமாயிருக்கு. அவருக்கு கல்யாணமாகி ரெண்டு பெண்பிள்ளைகளும் இருந்தது. இருந்தும் அவரைதான் இந்தப்பெண் கல்யாணம் செஞ்சிகிட்டாங்க.
கடையில ஒரு பொருள் வாங்கினா அதோட யூசர்ஸ் மேனுவல் தருவாங்களே, அதேமாதிரிதான் ஜோதிடமும்..
ஒரு மனுஷனோட யூசர்ஸ் மேனுவல்தான் அவனோட ஜாதகம்...,
ஆனா, இப்போ பெரும்பாலானவங்க ஜோதிடத்த பணம் பண்றதுக்கான ஒரு கலையா மாத்திகிட்டாங்க.
ஆனா, ஜோதிடம் நிராதரவானவங்களுக்கு உதவறதுக்கான ஒரு கலை.
பொதுவா ஜோதிட ஆய்வுக்கு இருவகையான பஞ்சாங்கங்களை பயன்படுத்துவோம். ஒன்னு வாக்கியப் பஞ்சாங்கம். மற்றொன்று திருக்கணித பஞ்சாங்கம்.ரெண்டுக்குமே 8 நிமிட வித்யாசம் இருக்கு.
என்னோட ஆய்வுபடி திருக்கணித பஞ்சாங்கமே கணிப்புகளுக்கு துல்லியமா இருக்கு.
திருமணத்திற்காக ஜாதகப்பொருத்தம் பார்க்கிறவங்க சில விஷயங்கள்ல்ல கவனமா இருக்கணும்..
திருமணத்துக்குன்னு பாக்குற பத்து பொருத்தத்துலயே நாடி பொருத்தம்னு ஒன்னு இருக்கு.
அதுல பிளட் குரூப் பத்தி தெளிவா இருக்கு. கணவன், மனைவி ரெண்டுபேருக்கும் பொருந்தாத பிளட் குரூப் இருந்தா குழந்தை பிறப்புல பிரச்னை இருக்கும்.(இதுபத்தி விரிவான பதிவு..பின்னர் எழுத உத்தேசம்)
அதுவும் இப்பவெல்லாம், முதல் குழந்தை பிறக்கறத வேண்டாம்னு தள்ளி போடறாங்க.அப்படி செய்யக்கூடாது.
முதல் குழந்தைய வேண்டாம்னு கலைச்சிட்டா, அதுக்குப்பிறகு அந்த பெண்ணோட உடம்புல ஒரு ஆண்டிபயாடிக் உருவாகி, அடுத்தகரு தங்காம, அதுவே கலைச்சிடும்.
இதனாலதான் முதல் கருவ தடுக்கவே கூடாது. அப்படியே பிரச்னை இருந்தாகூட இரண்டாவது குழந்தைக்குதான் அது வெளியே தெரியும்.
ஆனா, பெரும்பாலானவங்க..இப்ப பணத்துக்கு ஆசப்பட்டு சரியா பொருத்தம் பாக்காம, ஜோசியத்த ஒரு தொழிலா செய்யறாங்க..அதனாலதான் இப்படியெல்லாம் தப்பு வருது.
தனிமனித வாழ்க்கைய பத்தின எல்லா விவரங்களையும் ஜாதகத்து மூலமா துல்லியமா கண்டுபிடிக்கமுடியும்.
எந்த நோய் வரும்..வந்திருக்கிற நோய்க்கு செலவு செஞ்சு பாத்தா அது தீருமா..இப்படி பல விஷயங்கள ஜோசியம் மூலமா தெரிஞ்சிக்க முடியும்.(இதுவும் விரிவா..பலருக்கு பயன்படும் விதமா இன்னொரு பதிவு ..விரைவில்)
இப்படி தனிமனித வாழ்க்கை பத்தின ஜோதிட கணிப்புகள் செஞ்சிட்டு இருந்த நான் ஒரு கட்டத்துல இயற்கைச்சீற்றங்கள், வானிலை மாற்றங்கள் பத்தியும் ஜோதிடத்தின்மூலமா துல்லியமா கணிக்கமுடியம்ங்கறத என்னோட தொடர் ஆராய்ச்சி மூலமா தெரிஞ்சிகிட்டேன்.
தினமும் குறிப்பிட்ட நேரம் இந்த இயற்கைச்சீற்றங்கள் பத்தின என்னுடைய ஜோதிட ஆராய்ச்சிய செய்துகிட்டு இருக்கேன்.
சிலர் தங்களோட தனிப்பட தேவைகளுக்காகவும் ஜாதகத்தோட என்ன வந்து பாக்கறதுண்டு.
இதுல வெளிய சொல்லமுடியாத சில விவிஐபிக்களும் உண்டு.
பிரச்னைன்னு வர்றவங்களுக்காக, இறையருள் ஜோதிடத்தின் வழியா சில தீர்வுகள என்மூலமா நடத்திட்டு இருக்குன்னுதான் சொல்லணும்..!
....இப்படியாக ராமச்சந்திரனுடனான பேச்சு நீண்டபடியே போனது....,
தன்னை ஒரு Astro Meteorologist ன்னுதான் இவரு குறிப்பிடராரு...
ஜோதிடம் அப்படிங்கறதயும் தாண்டி..நம்மோட வேத முறையிலான ஜோதிட கணிப்புகளால ஒருத்தரு முன்கூட்டியே இயற்கை சீற்றங்களப் பத்தி கணிச்சு சொல்றாருங்கறது மட்டுமில்லீங்க....
இதன்மூலமா இயற்கைச் சீற்றங்களால ஏற்படும் உயிரிழப்புகள தடுக்கமுடியும் அப்படிங்கறதுதான்..இவர நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த நினச்சதோட நோக்கம்..!
உலகம் முழுவதிலுமான உயிர்களின் மீது அக்கறைகொண்ட எல்லாருமே...என்னைப்பொறுத்தவரைக்கும் ஞானிகள்தான்...அவர்கள் ஞானமடையாவிட்டாலும்கூட...,
..அப்படித்தான் நமக்கு இந்த அற்புதமான ஜோதிட சாஸ்திரமும் கிடைச்சிருக்கு...
ஆனா, இது தெரியாம, ஜோதிட சாஸ்திரத்த வியாசர்தான் உருவாக்கினார்...
பராசரர்தான் எழுதினார்னு எல்லாம் நாம சொல்லிட்டு இருக்கோம்...அவங்க மூலமா இந்த உலகத்துக்கு கிடைத்த பொக்கிஷம்தான் ஜோதிடம்..."
இப்படி பொட்டுல அடிச்சமாதிரி பேசும் இவருதாங்க ராமச்சந்திரன்..,
ராமச்சந்திரன் |
தனிநபர்களுக்கும் ஜோதிடத்து மூலமா நுட்பமா சில தீர்வுகள சொல்றாரு ராமச்சந்திரன்..,
அதுபத்தின விவரங்களையும், இயற்கைசீற்றங்களுக்கு அவர் கணிப்பதுபத்தியும், சின்னதா (இல்லைங்க..கொஞ்சம் பெருசுதான்..) ஓர் உரையாடல்..,
இனி...தொடர்வது ராமச்சந்திரன்,
"....1995ல தான் இயற்கை சீற்றங்கள் பத்தி முதன்முதலா ஒரு கணிப்பு வெளியிட்டிருந்தேன்.
அது அப்படியே தொடர, 2002ல ஆனந்த விகடன் எனக்கு ஒரு பெரிய அறிமுகத்த கொடுத்தது.
அதுல தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போகும்...இந்திய ரூபாயின் மதிப்பு 40 க்கும் கீழே போகும்னு நான் கொடுத்திருந்த கணிப்புகள் உண்மையானது.
அதேமாதிரி 2004 நடந்த சுனாமிபத்தியும் முன்கூட்டியே கணிச்சிருந்தேன்..ஆனா, சுனாமின்னு நான் பேர்கொடுக்கல..ஒரு பூகம்பத்தால பேரழிவு வரும்னு மட்டும் சொல்லியிருந்தேன்.
இதோ..இந்த 2013 வரைக்கும் நான் கணிச்சி சொல்லிட்டு இருக்குற தகவல்கள் 70 % அப்படியே நிகழ்கிறது.
இப்ப பெய்யுற மழை உள்பட முன்னாடியே நான் கணித்து சொன்ன தகவல்கள் பத்திரிகைகள்ல செய்தியா வந்திருக்கு.
சமீபத்தில் வெளியான செய்தி |
எல்லாத்துக்குமே நம்ம மூதாதையர் வழி செஞ்சு வச்சிருக்காங்க.அத நாம முறைய பயன்படுத்திக்கிறது மட்டும்தான் நம்மோட புத்திசாலித்தனம்.
எனக்கு முழுநேரமும் இந்த ஆய்வுகள செய்யறதுக்கான நேரமும் இல்ல..அதுக்கான வசதியும் இல்ல. நான் என்னோட தொழில்,குடும்பம் இதையும் கவனிச்சாகனும்.
அதனாலதான், அரசு இந்த ஆய்வுகள செய்ய ஆட்களையும்,வசதிகளையும் செய்துகொடுத்தால் இந்த வழிமுறைகளை அவங்களுக்கு கொடுத்து உதவ தயாராக இருக்கேன்.
நம்முடைய வேதங்கள்ல்ல இருக்குற வழிமுறைகளைத்தான் நான் எடுத்து பயன்படுத்தி கணக்கிடுறேன்.
இத முறையா பயன்படுத்தினா, வரப்போகிற இயற்கைச் சீற்றங்களையும், பெரும்சேதங்களையும் முன்கூட்டியே கணிக்க முடியும்,
பெரும்அழிவினால் ஏற்படும் உயிர்ச்சேதங்களை காப்பாத்தலாம்...
எவ்வளவுதான் விஞ்ஞானம் பேசினாலும், நம்ம எல்லாரையும் இயக்குற சக்தி ஒன்னு இருக்குங்கறத நாம நம்பித்தான் ஆகணும்.
ஆனானப்பட்ட ஐன்ஸ்டினே அதுபத்தி இப்படி சொல்லியிருக்காரு.
"....Everything is determined...by forces over which we have no control.
It is determined for the insect as well as for the star.
Human beings, vegetables, or cosmic dust.
-We all dance to a mysterious tune, intoned in the distance by an invisible piper."
-Albert Einstein
(எல்லாமே தீர்மானிக்கப்பட்டவைதான்..,
அந்த இயக்கும் சக்தியை நம் யாராலும் கட்டுப்படுத்த இயலாது.
ஒரு சாதாரண பூச்சியிலிருந்து நட்சத்திரம் வரை எல்லாமே தீர்மானிக்கப்பட்டவைதான்..
மனிதர்கள்,காய்கறிகள்,இந்த பிரபஞ்ச தூசு வரை,
-எங்கோ தொலைவில் இருந்து இசைக்கப்படும்,
ஒரு கண்ணுக்குத் தெரியாத மர்மஇசை நம்மையெல்லாம் ஆட்டுவிக்கிறது..
–ஆல்பரட் ஐன்ஸ்டின்)
அந்த கண்ணுக்குத் தெரியாத சக்திகிட்ட நாம நம்பள ஒப்படைச்சிடணும்.அதக்கப்புறமா, ஒரு புல்லாங்குழல் வழியா காத்து நுழைஞ்சி இனிமையான நாதமா வர்றமாதிரி நம்ம வழியா பல விஷயங்கள் நடக்கத்தொடங்கிடும்.
அப்படித்தான் இந்த ஜோதிட அற்புதங்கள் என் மூலமா, பலவிஷயங்கள வெளியுலகத்துக்கு தெரிவிப்பதா நான் நம்புறேன்.
ஜோதிடத்த நான் கத்துக்க தொடங்கினதுகூட அப்படி ஒரு நிகழ்வுதான்...,
'....அப்ப எனக்கு 18 வயசு. என்னோட அப்பா வாத்தியார்.
என்ஜினியரிங் படிக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா எங்கப்பாவோ கிராஜூவேஷன்தான்னு ஒரே பிடிவாதமா நின்னாரு.
அப்பதான் என்னோட சொந்தத்துல ஒருத்தர் "...தம்பி, உனக்கு இப்போ ஏழரை நாட்டு சனி நடக்குதுப்பா, அதனாலதான், இப்படியெல்லாம் நடக்குது.." ன்னு ஆறுதல் சொன்னாரு.
அதேமாதிரி,நான் ஆசைப்பட்ட என்ஜினியரிங் படிக்கமுடியல..
பிஎஸ்சி(பிசிக்ஸ்) தான் படிச்சேன்.
அப்பதான் எனக்கு முதமுதலா ஜோசியத்து மேல ஒரு ஆர்வம் வந்தது.
அது என்ன ஏழரை நாட்டு சனி..அது எப்படி என்னோட விருப்பத்துக்கு எதிரா செயல்படுதுன்னு தெரிஞ்சிக்க ஜோசியத்த படிக்க ஆரம்பிச்சேன்.
என்னோட சுயஜாதக ஆராய்ச்சியில ஈடுபட்டேன். அப்போதான் என்னால பல உண்மைகள புரிஞ்சிக்க முடிஞ்சது.
முதமுதலா என்னோட 23 வயசுல என் உறவுக்காரர் ஒருத்தர் தன்னோட மகனுக்கு திருமணம் ஆகுமான்னு கேட்டாரு.
அவரோட ஜாதகத்த பார்த்த நான் உங்க மகன் ஒரு விதவையவோ, இல்லன்னா ஒரு டைவர்சியையோதான் கல்யாணம் செய்வாங்கன்னு சொன்னேன்.
அவங்களுக்கு பயங்கர ஷாக்..ஆனா, கொஞ்சநாள்லயே நான் சொன்னமாதிரி
அவரோட மகன் ஒரு டைவர்சியதான் கல்யாணம் செஞ்சாரு.
அதேமாதிரி எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு தன்னோட பொண்ணுக்கு 45 வயசாயிடுச்சு....இனிமே, கல்யாணமாகுமான்னு கேட்டாரு.
அவங்க ஜாதகத்த பாத்துட்டு இவங்களுக்கு ஏற்கனவே, கல்யாணமான ஒருத்தரோடதான் கல்யாணமாகும்னு சொன்னேன்.
அந்த பெண் அப்போ எம்பில் படிச்சிட்டு இருந்தாங்க.அவங்களோட மாஸ்டரா இருந்தவருக்கும் அவங்களுக்கும் பழக்கமாயிருக்கு. அவருக்கு கல்யாணமாகி ரெண்டு பெண்பிள்ளைகளும் இருந்தது. இருந்தும் அவரைதான் இந்தப்பெண் கல்யாணம் செஞ்சிகிட்டாங்க.
கடையில ஒரு பொருள் வாங்கினா அதோட யூசர்ஸ் மேனுவல் தருவாங்களே, அதேமாதிரிதான் ஜோதிடமும்..
ஒரு மனுஷனோட யூசர்ஸ் மேனுவல்தான் அவனோட ஜாதகம்...,
ஆனா, இப்போ பெரும்பாலானவங்க ஜோதிடத்த பணம் பண்றதுக்கான ஒரு கலையா மாத்திகிட்டாங்க.
ஆனா, ஜோதிடம் நிராதரவானவங்களுக்கு உதவறதுக்கான ஒரு கலை.
பொதுவா ஜோதிட ஆய்வுக்கு இருவகையான பஞ்சாங்கங்களை பயன்படுத்துவோம். ஒன்னு வாக்கியப் பஞ்சாங்கம். மற்றொன்று திருக்கணித பஞ்சாங்கம்.ரெண்டுக்குமே 8 நிமிட வித்யாசம் இருக்கு.
என்னோட ஆய்வுபடி திருக்கணித பஞ்சாங்கமே கணிப்புகளுக்கு துல்லியமா இருக்கு.
திருமணத்திற்காக ஜாதகப்பொருத்தம் பார்க்கிறவங்க சில விஷயங்கள்ல்ல கவனமா இருக்கணும்..
திருமணத்துக்குன்னு பாக்குற பத்து பொருத்தத்துலயே நாடி பொருத்தம்னு ஒன்னு இருக்கு.
அதுல பிளட் குரூப் பத்தி தெளிவா இருக்கு. கணவன், மனைவி ரெண்டுபேருக்கும் பொருந்தாத பிளட் குரூப் இருந்தா குழந்தை பிறப்புல பிரச்னை இருக்கும்.(இதுபத்தி விரிவான பதிவு..பின்னர் எழுத உத்தேசம்)
அதுவும் இப்பவெல்லாம், முதல் குழந்தை பிறக்கறத வேண்டாம்னு தள்ளி போடறாங்க.அப்படி செய்யக்கூடாது.
முதல் குழந்தைய வேண்டாம்னு கலைச்சிட்டா, அதுக்குப்பிறகு அந்த பெண்ணோட உடம்புல ஒரு ஆண்டிபயாடிக் உருவாகி, அடுத்தகரு தங்காம, அதுவே கலைச்சிடும்.
இதனாலதான் முதல் கருவ தடுக்கவே கூடாது. அப்படியே பிரச்னை இருந்தாகூட இரண்டாவது குழந்தைக்குதான் அது வெளியே தெரியும்.
ஆனா, பெரும்பாலானவங்க..இப்ப பணத்துக்கு ஆசப்பட்டு சரியா பொருத்தம் பாக்காம, ஜோசியத்த ஒரு தொழிலா செய்யறாங்க..அதனாலதான் இப்படியெல்லாம் தப்பு வருது.
தனிமனித வாழ்க்கைய பத்தின எல்லா விவரங்களையும் ஜாதகத்து மூலமா துல்லியமா கண்டுபிடிக்கமுடியும்.
எந்த நோய் வரும்..வந்திருக்கிற நோய்க்கு செலவு செஞ்சு பாத்தா அது தீருமா..இப்படி பல விஷயங்கள ஜோசியம் மூலமா தெரிஞ்சிக்க முடியும்.(இதுவும் விரிவா..பலருக்கு பயன்படும் விதமா இன்னொரு பதிவு ..விரைவில்)
இப்படி தனிமனித வாழ்க்கை பத்தின ஜோதிட கணிப்புகள் செஞ்சிட்டு இருந்த நான் ஒரு கட்டத்துல இயற்கைச்சீற்றங்கள், வானிலை மாற்றங்கள் பத்தியும் ஜோதிடத்தின்மூலமா துல்லியமா கணிக்கமுடியம்ங்கறத என்னோட தொடர் ஆராய்ச்சி மூலமா தெரிஞ்சிகிட்டேன்.
தினமும் குறிப்பிட்ட நேரம் இந்த இயற்கைச்சீற்றங்கள் பத்தின என்னுடைய ஜோதிட ஆராய்ச்சிய செய்துகிட்டு இருக்கேன்.
சிலர் தங்களோட தனிப்பட தேவைகளுக்காகவும் ஜாதகத்தோட என்ன வந்து பாக்கறதுண்டு.
இதுல வெளிய சொல்லமுடியாத சில விவிஐபிக்களும் உண்டு.
பிரச்னைன்னு வர்றவங்களுக்காக, இறையருள் ஜோதிடத்தின் வழியா சில தீர்வுகள என்மூலமா நடத்திட்டு இருக்குன்னுதான் சொல்லணும்..!
....இப்படியாக ராமச்சந்திரனுடனான பேச்சு நீண்டபடியே போனது....,
தன்னை ஒரு Astro Meteorologist ன்னுதான் இவரு குறிப்பிடராரு...
ஜோதிடம் அப்படிங்கறதயும் தாண்டி..நம்மோட வேத முறையிலான ஜோதிட கணிப்புகளால ஒருத்தரு முன்கூட்டியே இயற்கை சீற்றங்களப் பத்தி கணிச்சு சொல்றாருங்கறது மட்டுமில்லீங்க....
இதன்மூலமா இயற்கைச் சீற்றங்களால ஏற்படும் உயிரிழப்புகள தடுக்கமுடியும் அப்படிங்கறதுதான்..இவர நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த நினச்சதோட நோக்கம்..!
உலகம் முழுவதிலுமான உயிர்களின் மீது அக்கறைகொண்ட எல்லாருமே...என்னைப்பொறுத்தவரைக்கும் ஞானிகள்தான்...அவர்கள் ஞானமடையாவிட்டாலும்கூட...,
14 comments:
hello sir...ur blog is something spl .very good messages. can u please let us know mr.ramachandran's phone no,or mail id.it ll be very useful to others.
thank you
வணக்கம்,வருகைக்கும், கருத்திட்டமைக்கும் நன்றி.பொதுவில் அவரது விபரங்களை கொடுப்பது அவருக்கு தொந்தரவாக அமைந்துவிடும்.தேவைப்படுபவர்கள் என்னை மெயில் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்..விபரங்களை அனுப்பி வைக்கிறேன்..நன்றி..!
வலைப்பக்கத்திலேயே வித்தியாசமான தகவல்கள். எனக்கும் அய்யாவிடம் ஒரு சில சந்தேகங்களைக் கேட்க வேண்டும் தகவல் அனுப்புங்கள் அய்யா, என்னுடைய மின்னஞ்சல் pandi29k@gmail.com. தங்களது தகவல் மற்றவர்கள் வாழ்விற்கு தொடர்ந்து வழிகாட்டடும். நன்றி அய்யா.
நல்ல பயனுள்ள அரிய தகவல்கள் உங்கள் தளத்தில் என்னைக் கட்டிப்போட்டுவிட்டது!
திரு.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வு முறையையும் அவர் விரும்பினால் அவரிடம் கற்றுக்கொள்ளக்கூடிய மானவனாக ஆசைப்படுகிறேன்! manivel393@gmail.com எனது மின்னஞ்சல் முகவரிக்கு அவரைத் தொடர்பு கொள்ள வழிகள் சொன்னால் மகிழ்வேன்!நன்றி!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...நீங்கள் கேட்ட தகவல் விரைவில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..நன்றி..!
திரு.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வு முறையையும் அவர் விரும்பினால் அவரிடம் கற்றுக்கொள்ளக்கூடிய மானவனாக ஆசைப்படுகிறேன்! paramasivan1978@yahoo.com எனது மின்னஞ்சல் முகவரிக்கு அவரைத் தொடர்பு கொள்ள வழிகள் சொன்னால் மகிழ்வேன்!நன்றி!
வணக்கம், உங்கள் மெயிலுக்கு விபரம் அனுப்பப்பட்டது, தொடர்பு கொண்டமைக்கு நன்றி
It is useful blog and may i know your contact details (email id). you may pl send the details to rshivaraaman@gmail.com
i don hav words to appreciate.persons like mrr ramachandran work a lot to find so much. but u work a lot to find them and give everyone no. u should get all goodness. SARVA ABHEESHTA SIDDHIRASTU
can u pl send nos of rambhav swami, ramachandran to mlmnr@ymail.com
திரு.இராமச்சந்திரன் அவர்களைத் தொடர்புகொள்ள முகவாியும், அலைபேசி எண்ணையும் vimalvikram@yahoo.com என்ற முகவாிக்கு அனுப்புங்கள் அய்யா.
வாழ்த்தும், பாராட்டுகளும்தான் இன்னும் சிறப்பானதை தேடும்படி என்னைத்தூண்டுகிறது.குருவருளுக்கு நன்றி.கருத்திட்ட rs,Grish G, vikram உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி,நீங்கள் கேட்ட தகவல்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பியிருக்கிறேன்.. நன்றி
திரு்ராமச்சந்திரன் முகவரி போன்நம்பர் தாருங்கள் ஐயா.என் மெயில் muraliiyer33@ gmail.com.பணிவான வணக்கங்கள்.நன்றி.
அன்பு மிக்க நண்பருக்கு நான் சென்னை ராஜ் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வருகின்றேன் . தங்களது எச்சரிக்கை பதிவை எங்களது ராஜ் தொலைக்காட்சியின் funnett சேனலில் பதிவிட திரு .ராமசந்திரன் அவர்களின் தொலைபேசி மற்றும் முகவரியை greatindian1001@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி தந்து உதவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
நன்றிகள் பல
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
ஏ .முருகன்
ராஜ் தொலைக்காட்சி
Post a Comment