Wednesday, August 7

'முற்பிறவியில் நான்…' - நித்யாநந்தாவும், அதிசய சுடுநீரூற்றும்..!

பகவான் நித்யாநந்தா..!


இவரச்சுத்தி, சாமனியர்களால அவ்வளவு எளிதா நம்பமுடியாத, நிறைய அதிசயங்களும்,ஆச்சரியங்களுமான சம்பவங்கள் ஏராளமா நிரம்பி வழியுது.
முதல்ல இவரோட பிறப்பு..,

பகவான் நித்யாநந்தா

பகவான் நித்யாநந்தா

கேரளாவுல குயிலாண்டி(Quilandy) அப்படிங்கற ஒரு பகுதியில் இருக்குற காட்டுக்குள்ள விறகு பொறுக்க ஒரு அம்மா போயிருக்காங்க. அப்போ..கொஞ்சதூரத்துல ஒரு இடத்துல காகங்கள் உட்கார்ந்து ரொம்ப நேரமா கத்திகிட்டே இருந்திருக்கு. ஏன் இப்படி கத்துதுங்கன்னு கிட்டபோய் பாத்திருக்காங்க.
பகவான் நித்யாந ந்தா குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட இடம்

குயிலாண்டி காட்டுக்குள்(Quilandy)நித்யாநந்தா குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட இடம்

அங்க ஒரு  முந்திரி மரத்துக்குக் கீழே ஒரு அழகான குழந்தை இருந்துருக்கு. காகாங்களால அடையாளம் காட்டப்பட்ட அந்த குழந்தைய தூக்கிட்டு வந்தாங்க அந்த அம்மா. அவங்களுக்கு ஏற்கனவே, நிறைய குழந்தைங்க இருந்ததால, காட்டுல கிடைச்ச குழந்தைய தான் வேலை செய்த வக்கீல் வீட்டுல கொடுத்து வளத்திருக்காங்க.

வக்கீல், இந்த குழந்தைக்கு ராமான்னு பெயர் வச்சு வளர்த்து வந்திருக்காரு. குழந்தைக்கு 6 வயசு இருக்கும்போது காட்டுல இருந்து தூக்கிட்டு வந்த அந்த அம்மாவும்,அப்பாவும் இறந்துபோயிட்டாங்க. 

அதுக்கப்புறமா ராமுவ வக்கீலே தன் வீட்லயே நிரந்தரமா வச்சுக்கிட்டாரு. இந்த குழந்தையோட ஜாதகத்த பார்த்தவங்க நிச்சயம் இந்த குழந்தை ஒரு அவதாரபுருஷன்னு வக்கீல்கிட்ட சொல்லியிருக்காங்க.அதுக்குத் தகுந்த மாதிரி ராமுவ அந்த சின்னவயசிலயே உடுப்பிக்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு கூட்டிட்டு போயிருக்காரு வக்கீல்.

அங்க பல அதிசயமான தகவல்கள எல்லாம் சொல்லி வக்கீல பிரமிக்க வச்சிருக்காரு இந்த அவதாரச் சிறுவன் ராமு.

உடுப்பியில பெரும்பாலானவங்களுக்கு பிரபலமான கிருஷ்ணன் கோயில் தெரிஞ்சிருக்கும். ஆனா, அதே உடுப்பியில ரொம்பவே பழமையான ஆனந்தேஸ்வரா கோயில் ஒன்றும் இருக்கிறது. இது ஏறக்குறைய 12ம் நூற்றாண்டுல கட்டப்பட்ட கோயில்.

உடுப்பி ஆனந்தேஸ்வரா கோயில்

உடுப்பி ஆனந்தேஸ்வரா கோயில்

இந்தக் கோயில பார்த்ததுமே சிறுவன் ராமு, “…இந்தக் கோயில்முற்பிறவியில என்னோட மேற்பார்வையிலதான் கட்டப்பட்டது..”ன்னு சொல்ல வக்கீலுக்கு ஒன்னுமே புரியல.

உடுப்பி,ஆனந்தேஸ்வரா கோயில் வெளித்தோற்றம்

உடுப்பி ஆனந்தேஸ்வரா கோயில்(வெளித்தோற்றம்)

ஏன்னா…இந்தக் கோயில்ல ஒரு பெற்றோர் 12 வருஷம் பிள்ளைவரம் கேட்டு பிரார்த்தனை செஞ்சபிறகு பிறந்தவர்தான்…. ஸ்ரீமத்துவாச்சாரியார்.


ஸ்ரீமத்துவாச்சாரியார்

ஸ்ரீமத்துவாச்சாரியார்

அவர் வாழ்ந்த காலகட்டம் 12ம்நூற்றாண்டு.அதே மாதிரி  அவரோட 79வது வயசுல இந்தக் கோயில்ல இருந்தபடியே ஒரு உபநிஷத்துக்கு உரை சொல்லிட்டு இருக்கும்போது அவர்மேல பூமழை பொழிய, அப்படியே உடலோட அவர் மறைந்துபோனதாகவும், இன்னைக்கும் இந்தக் கோயில்ல அவர் மறைந்த இடத்த புனிதாமா கருதி வணங்கிட்டு இருக்காங்க.

அப்ப ஸ்ரீமத்துவாச்சாரியாருக்கும் அவதாரமாக வந்திருக்கும் இந்த சிறுவனுக்கும் என்ன தொடர்பு..?

அதுக்கு தகுந்த மாதிரி சின்னவயசில இருந்தே ராமுவோட நடவடிக்கைகள் ஆன்மதரிசனம் பெற்ற ஒரு மகானப்போலவே இருந்திருக்கு.

10வயசா இருக்கும்போது வக்கீல் இவர காசிக்கு அழைச்சிட்டு போயிருக்காரு.அங்க எல்லா இடத்தையும் பாத்துட்டு ஊருக்கு திரும்பலாம்னு புறப்பட்டப்போ, சிறுவன் ராமு வரமாட்டேன்னு சொல்லிட்டாராம்.

10வயசு சிறுவனை எப்படி காசியில் விட்டுட்டு வர்றதுன்னு வக்கீலுக்கு தயக்கம் இருந்தாலும், அவர் அவதாரம்னு உண்ரந்திருந்ததால அதுக்கு வக்கீல் ஒத்துக்கிட்டாராம். அதுமட்டுமில்ல..உங்களுக்கு என்ன பாக்கனும்னு நீங்க நினைக்கும்போது நான் அங்க உங்க முன்னாடி வருவேன்னு வாக்கும் கொடுத்தாராம்.

அதேமாதிரி,ஊருக்கு வந்து சில வருஷங்களுக்குப் பிறகு, உடல்நலமில்லாம படுத்துட்டாராம் வக்கீல்.தன்னோட கடைசிகாலம் நெருங்கிட்டத உணர்ந்து பையன பாக்கணுமேன்னு அவருக்கு தோணியிருக்கு. அடுத்த விநாடி..அங்கே..அந்த அவதாரச்சிறுவன் ராமு கண்முன்னே வந்து காட்சி தந்திருக்கிறார்.

"..உன்ன மனசால நினைச்ச உடனே நேர்ல வந்து காட்சி கொடுத்து சந்தோஷத்த கொடுத்ததால..நீ எப்பவுமே..நித்யானந்தா..நித்யானந்தா..!"-ன்னு ஆனந்தத்துல கூத்தாடியிருக்காரு வக்கீல்.
தனது ஆசிரமத்தில் பகவான் நித்யாநந்தா

ஆசிரமத்தில் பகவான் நித்யாநந்தா

நித்யானந்தம் என்றால் எப்போழுதும் நிலைத்திருக்கும் ஆனந்தம் என்பது அர்த்தம்..அதைத்தான் அவர் சொல்ல..அதுவே அவருக்கு பெயராகவும் மாறியது. அப்போது அவருக்கு வயது 20.

கேரளா காஞ்சன்காடுல கொஞ்சநாள் ஆசிரமம் வச்சி நிறையபேருக்கு ஆன்மபோதனைகளை செஞ்சிருக்காரு நித்யானந்தா. நிறையபேரோட நோய்களையும் தீர்த்து வச்சிருக்காரு.

ஹிமாலயாஸ் உள்பட இந்தியாவோட பலபகுதிகள்ல சுத்தி திரிஞ்சவரு ஒருகட்டத்துல மிகவும் சக்திவாய்ஞ்ச ஒரு இடத்துல உட்கார்ந்துட்டாரு. அதுதான் கணேஷ்புரி. 

மகாராஷ்டிரா மாநிலத்துல மும்பையில இருந்து ஒரு 2 மணி நேர பயணத்துல இந்த இடம் இருக்கு. இங்க ஒரு புராதானமான சிவன் கோயிலுக்குப் பக்கத்துல தன்னோட ஆசிரமத்த அமைச்சிக்கிட்டு பலருக்கும் ஆசி வழங்கிட்டு இருந்தாரு நித்யாநந்தா.

கணேஷ்புரியில இருக்குற இன்னொரு சிறப்பு  சுடுநீரூற்று.

பகவான் நித்யாநந்தா ஆசிரமம் கணேஷ்புரியில் இருக்கும் சுடுநீரூற்று

கணேஷ்புரி பகவான் ஆசிரமத்தில் இருக்கும் சுடுநீருற்று

எப்படிப்பட்ட நோயோட வர்றவங்களையும் இதுல குளிக்கச்சொல்லுவாராம்.அதோட நோயோட பாதிப்பு அவங்கள விட்டு பரிபூரணமா விலகிடும்.

அதனாலயே நிறையபேர் கணேஷ்புரிக்கு பகவான் நித்யாந்தாவத் தேடி வந்தபடியே இருந்தாங்க.

1961ம் வருஷம்,

தான் அடுத்தநாளே இந்த உடல விட்டுடப் போறதா முன்கூட்டியே தன்னோட பக்தர்களுக்கு அறிவிச்சாரு..பகவான் நித்யாநந்தா.

ஆகஸ்ட8ம் தேதி,

காலை 10.30மணி..

அந்த சின்ன உடலுக்குள்ள குடியிருந்த ஆன்மா..உடலவிட்டு வெளியேறி… தன்னோட எல்லைகள விரிவாக்கிக்கொண்டது….

இப்போதும் பகவான் நித்யாநந்தா இந்த உலகெங்கும் பரவியிருக்கிறார்…

சூக்கும ரூபமாக..

நாம் நினைத்தபோது வந்து உதவத் தயாராக இருக்கிறார்..

நாளை ஆகஸ்ட் 8ம்தேதி..காலை 10.30மணிக்கு..,

அவர் இந்த பிரபஞ்சவெளியில் கலந்ததை நினைவு கூறுவோம்..

நமது ஆன்மாவுக்கும் அவர் ஒளியாக இருந்து வழிகாட்டுவார்…

குருவே சரணம்…!


0 comments: