'மகாலட்சுமியோட
ரூபம்ங்க அவரு..'
இப்படித்தான்
ஆரம்பிச்சாங்க அந்த அம்மா..
அவங்கதான் லதா கபாலீஸ்வரன்.
இந்த வலைப்பதிவுல உங்களோட வலதுபக்கத்துல இருக்குற விளம்பரம்(இது இலவசமாக வெளியிடப்படுகிறது)தான் இந்தப்பதிவோட ஆரம்பம்.
2ம் தேதி ..நான் என்னோட ஆபீஸ்ல பேப்பர் பார்த்துட்டு இருந்தப்போதான் இந்த விளம்பரம் என்னோட பார்வையில பட்டது.
இதுல முக்கியமா என்னோட கவனத்த ஈர்த்தது அதுல இருந்த பகவான் நித்யாநந்தா..
நித்யாநந்தாவின் சிலைக்கு அபிஷேகம் செய்கிறார் லதா |
சிலமாசங்களுக்கு
முன்னாலயே இவரப்பத்தி எழுத ஏராளமான தகவல்கள எடுத்துப்படிச்சும்..அத எழுத முடியல..
நான்தான் ஏற்கனவே பதிவுகள்ல சொல்லியிருக்கேனே..இது எதுவுமே என்னோட முயற்சிகளால நடக்கறதில்லே..அடுத்த பதிவு என்னன்னு என்னால எப்பவுமே முடிவு செய்ய முடிஞ்சதில்ல..நானே வலிஞ்சு எதையாவது எழுதனும்னு ஆர்வகோளாறுல முயற்சித்தாலும் அது முட்டிகிட்டுதான் நிக்கும்.
அப்படித்தான் முதல்ல நித்யாநந்தாவப்பத்தி எழுத எடுத்த முயற்சியும் பாதியிலயே நின்னுபோச்சு..
இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்துலதான்,
அவரோட படத்த போட்டு ஒருத்தர் விளம்பரப்படுத்தியிருந்தாங்க.
சென்னையில இவருக்கு பக்தர்கள் இருக்காங்களா..எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாத்தான் இருந்தது.
லதா கபாலீஸ்வரன்..ஜோதிடத்துல இருந்து ஹீலிங், மற்றும் தியானம் மூலமாவும் எல்லாபிரச்னைகளுக்கும் வெவ்வேற வழிகள கையாண்டு தீர்வு சொல்வதா விளம்பரத்துல சொல்லியிருந்தாங்க.
எனக்கு அவங்க சொன்ன தகவல்கள விட நித்யாநந்தாவோட இவங்களுக்கு ஏற்பட்ட முதல் அனுபவத்த தெரிஞ்சுக்கணும்னு ஆர்வமா இருந்தது.
அவங்களுக்கு போன் பண்ணினேன்.
உடனே, மறுநாள் 3ம்தேதி மதியம் ஒருமணிக்கு சந்திக்கலாம்னு நேரம் ஒதுக்கினாங்க.
ரொம்பவே ஆர்வத்தோட காத்திருந்தேன்.
3ம்தேதி மதியம் சாலிகிராமத்துல இருக்குற அவங்க வீட்டுக்கு நேர்ல போயிருந்தேன்.
வீட்டுக்குள்ள நுழையும்போதே..
நம்ம வரவேற்குற விதமா ஹால்லயே இருந்தாரு..நித்யாநந்தா..!
பரஸ்பர
அறிமுகம்..உபசரிப்புகள் எல்லாம்
முடிஞ்சதும்..
ரெண்டுபேரும் குரு-சிஷ்ய அனுபவத்த பேசத்தொடங்கினோம். இனி..அவங்க சொல்லச்சொல்ல எதிர்ல இருந்த நான் ஆச்சரியத்தோட கேட்டுகிட்டு மட்டுமே இருந்தேன்..அற்புதங்கள் தொடரும்..காத்திருங்கள்..!
ரெண்டுபேரும் குரு-சிஷ்ய அனுபவத்த பேசத்தொடங்கினோம். இனி..அவங்க சொல்லச்சொல்ல எதிர்ல இருந்த நான் ஆச்சரியத்தோட கேட்டுகிட்டு மட்டுமே இருந்தேன்..அற்புதங்கள் தொடரும்..காத்திருங்கள்..!
0 comments:
Post a Comment