தமிழ்நாட்டுல நிறைய ஊர்கள்ல இருந்து பாதயாத்திரையா திருமலை திருப்பதிக்கு நடந்தே போய் பெருமாள தரிசனம் செய்யற குழுக்கள் நிறைய இருக்காங்க. நீங்க பஸ்ல போகும்போது ரோட்டுல கும்பல்,கும்பலா மஞ்சள் வேட்டி,துண்டோட குழுக்களா சிலர் நடந்து போயிட்டு இருக்கறத பார்த்திருக்கலாம். அவங்க எல்லாம் இப்படி பாதயாத்திரையா திருமலை திருப்பதிக்கு போறவங்கதான்.
சென்னையில் மட்டுமே இப்படி திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரையா வருஷாவருஷம் போயிட்டுவரும் குழுக்கள் ஒவ்வொரு பகுதிவாரிய இருக்காங்க.
திருமலை திருப்பதி பாதயாத்திரை ரொம்பவே அற்புதமான அனுபவத்த தரக்கூடிய ஒரு பயண அனுபவம்.
இப்படி ஒரு அனுபவத்துக்காக எனக்குள்ளும் ஒரு தவிப்பு இருந்துட்டே தான் இருக்கு. (என்னோட தாத்தா வருஷாவருஷம் பாதயாத்திரையா திருமலைதிருப்பதிக்கு போய்வரும் பழக்கம்பத்தி சிறுவயசுல கேள்விப்பட்டதால வந்த ஆர்வமா இருக்கலாம்.)
2011 டிசம்பர்ல என் குடும்பத்தாருடன் நானும் இப்படி ஒரு பாதயாத்திரை குழுவினரோடு கலந்துகொண்டு பாதயாத்திரை புறப்பட தயாரானேன்.
இதுபற்றி அய்யா கவிஞர் பெருமாள் ராசு, அம்மா ஸ்ரீமஹாலட்சுமி அவர்கள் இருவரிடமும் தகவலைச்சொல்லி அனுமதி கேட்டேன்.
“..வேண்டுதல் எதுவும் இருக்கா”- ன்னு அம்மா கேட்டாங்க.
“இல்லம்மா..ரொம்பநாளா மனசுக்குள்ள போகனும்னு ஆர்வம் அதான்”-னு இழுத்தேன்.
அம்மா சிம்பிளாகவும், சூசகமாகவும் ஒரே வார்த்தையில சொல்லிட்டாங்க,"..கடைசிவரை நடந்துதான் வருவோம்னு எதுவும் சங்கல்பம் (உறுதி) எடுத்துக்காம போயிட்டுவாங்க.
உடல வருத்தி எதுவும் செய்யவேணாம்..உடல பத்திரமா பாத்துக்கங்க..எவ்வளவு முடியுமோ, அதுவரைக்கும் நடந்து போங்க..”ன்னு அம்மா சொன்னாங்க.
அவ்வளவுதான், எனக்கு ஒரே ஆர்வம்..நம்மால முடியாதா என்ன..பாத்துடுவோம்..அப்படின்னு நான் ஒரு பக்கம்.. எனக்கு மேல என்னோட மகன் பரத்சந்தர்(11வயசு). இதுல என்னோட மனைவி மட்டும்தான் நடக்கமுடியுமான்னு தெரியலன்னு கொஞ்சம் பயத்தோட இருந்தாங்க.
தடபுடலா புறப்பட தயாராயிட்டோம். 2011 டிசம்பர்29ம்தேதி புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில்ல இருந்து புறப்பட ஏற்பாடு ஆயிருந்தது.
மத்தியானம் 3 மணிக்கு புறப்படறதா இருந்தது. அப்பதான் ‘தானே’ புயலுக்கான மழை ஆரம்பமானது.
கொஞ்சநேரம் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு ஒரு வழியா மாலை 5.30 மணியளவுல எல்லாரும் நடக்கத் தொடங்கிட்டோம்.
அந்தக்குழுவ ஒரு 74 வயசு தாத்தாதான் தலைமை தாங்கி கூட்டிகிட்டுபோனாரு.
புரசைவாக்கத்துலயே மழை ஆரம்பமாயிடுச்சு..கொட்ற மழையில பரபரப்பான சென்னை சிட்டிய கடந்தது ஒரு வித்யாசமான அனுபவம்.
வழியில ஒரு கல்யாண மண்டபத்துல டிபனுக்கு ஏற்பாடு. நல்ல சுவையான சாப்பாடு. அங்கேயிருந்து சாப்பிட்டு முடிச்ச உடனே, புறப்பட்டு இரவு தங்குமிடமான காரனோடைக்கு புறப்பட்டோம்.
மழை விடாது பெய்தபடியே இருந்தது.
இரவு 11.30 மணிக்கு காரனோடை கல்யாண மண்டபத்தைப்போய் சேர்ந்தோம்.
அடுத்தநாள் காலைல 5மணிக்கெல்லாம் நடக்கத்தொடங்கிட்டோம்.
மழையினால..ரோடெல்லாம் கல்லும் மண்ணுமா இருந்ததால, எங்க மூணுபேரோட காலும் நல்லா பொத்து போயிருந்தது. நடக்கவே முடியல. அந்த குழுவுல வந்தவங்க செருப்பு போடலாம்னு சொல்லியிருந்தாங்க (பெரும்பாலானவங்க செருப்பு போட்டுட்டுதான் நடந்தாங்க), நான் வீம்புல முதல்முறையா போறோம்.., செருப்பெல்லாம் வேணாம்னு சொல்லி வெறுங்காலோட நடந்ததோட விளைவு..நைட்டே எங்க மூனு பேரோட காலும் நடக்கமுடியாதநிலைக்கு ஆயிட்டது.
காலைல, அந்த கால் வலியோட, நடக்கமுடியாம நடந்து, ஒருகட்டத்துல பெரியபாளையத்துக்கு கொஞ்சம் முன்னாலபோய் முடியாதுன்னு மூணுபேருமே சோர்ந்து போயிட்டோம்.
இதுக்குள்ள அந்த குழுவுல இருந்த எல்லாரும் எங்களைதாண்டி எங்கேயோ போயிட்டாங்க.
அதுக்குமேல ஒரு அடிகூட செருப்பில்லாம நடக்கவே முடியாதுன்ற நிலை எங்களுக்கு ..
மழையினால ஒரு வண்டிபோக்குவரத்துகூட அந்த வழியில இல்ல. எப்படி போறதுன்னு புரியாம நடுரோட்டுல நாங்க தயங்கி நிற்க…மழையோ அடிச்சு ஊத்துது..கால்வலியில உட்காரவும் இடமில்லாம..இன்னும் கொஞ்சம் போன அழுதுடுவோம் போல..தவிச்சிகிட்டு இருந்தப்போதான்..
…….பெருமாள் என்ன பண்ணுவார்னுதான் உங்க எல்லாருக்கும் தெரியுமே, இந்த பாதயாத்திரை கதைய நான் இதோட இப்ப நிறுத்திக்கிறேன்.
இத இப்ப சொல்ல வந்ததோட காரணமே வேற..
ஒரு 76 வயசு தாத்தா உள்பட 20பேர்..7 மாசத்துல…7 ஆயிரம் கிலோமீட்டர்… இந்தியா முழுக்க நடந்து, பாதயாத்திரையா வைணவ திருத்தலங்களான 108 திவ்யதேசத்துல 106 இடங்களுக்கு(மீதி 2 இடம் சொர்க்கமும்,பாற்கடலும்) செப்டம்பர் மாசம் புறப்படறாங்க..
இவர்களுக்கு நாம என்ன செய்யப்போகிறோம்..
வரலாற்றில் முதல்முறையாக..ஆழ்வார்கள்கூட செய்யாத செயல்..இவங்களுக்கு வாய்த்தது எப்படி..நாளை பார்க்கலாம்.
ஓம் நமோ வேங்கடேசாய..! |

0 comments:
Post a Comment