Sunday, August 4

நித்யாநந்தாவைப் பார்த்த முதல்நொடி – ஒரு பக்தையின் பரவசம்!

இந்தப் பதிவோட ஆரம்பம் இங்கே
குரு தன்னை ஆகர்ஷித்த அந்த சிலிர்ப்பூட்டும் தருணத்த விவரிக்கத் தொடங்கினாங்க..லதா கபாலீஸ்வரன்.


Latha Kabaleeswaran
“….அப்போ, எனக்கு  8 வயசு இருக்கும்…ஒருநாள்…திடீர்னு எனக்கொரு எண்ணம் வந்தது. இன்னும் கொஞ்ச நாள்ல நம்மத் தேடி யாரோ ஒரு குரு வரப்போறாரு அப்படின்னு தோனுச்சு. அப்போலயிருந்து, நான் ஒவ்வொருத்தரையா பாக்கும்போது..இவருதான் நம்மோட குருவா..இல்லன்னா இவரான்னு சொல்லி..எந்த குருவோட போட்டோவ பாத்தாலும் நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.

ராமகிருஷ்ணர்..ரமணர்..ஷீரடி சாய்பாபா..இப்படி ஒவ்வொருத்தரோட படத்தையும்…அதல இருக்குற அந்த மகான்களோட உருவத்தையும் உன்னிப்பா கவனிச்சிகிட்டே  இருப்பேன..ஆனா, ஒருகட்டத்துல..இல்ல..இல்ல…இவங்க..இல்ல..எனக்குன்னு ஒருத்தர் வருவார்னு சொல்லி நினைச்சுகிட்டு, காத்திருக்கத் தொடங்கினேன்.

நான் இவங்கள எல்லாம் மகான் இல்லன்னோ..வேண்டாம்னோ புறக்கணிக்கல..ஒரு திருவிழாவுல தன்னோட பெற்றோர தொலைச்சிட்ட குழந்தை எப்படி யார் வந்து ஆறுதல் சொன்னாலும் தன்னோட அழுகைய நிறுத்தாம ,தன்னோட அப்பா,அம்மாவ தேடுமோ..அதுமாதிரிதான்..எனக்கு மனசுக்குள்ள இருந்த தேடல்..தவிப்பு..ஏறக்குறைய காணாமப்போன ஒரு குழந்தையோட அழுகைமாதிரிதான்…என்னோட குரு எங்கே..என்ன ஏத்துக்க எப்போ வருவாரு…இந்த நினைப்போடயே காலம் உருண்டோடுச்சு.

எனக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறந்தாச்சு.ஜோதிடம்,ஹீலிங் பற்றியெல்லாம் நான் பயிற்சி  எடுத்துட்டு இருந்த சமயமது. புதுசா வந்த ஒரு குருகிட்ட நான் ஹீலிங் பயிற்சிக்காக போயிருந்தேன்.

அது 1999ம் வருஷம்..,(அப்போ எனக்கு வயசு 34)

அங்கதான் நான் முதமுதலா அவரப் பார்த்தேன்(போட்டோவுலதான்)..  வார்த்தைகள்ல விவரிக்கமுடியாத உணர்வு…உடம்பெல்லாம் சிலிர்த்துட்டது..பேச எனக்கு வார்த்தைகளே வரல…இவருதான்..இவருதான்…நான் இத்தனை வருஷமா காத்துட்டு இருந்தது இவருக்காகத்தான்..அப்படின்னு வாய்விட்டு கத்தனும்போல இருந்தது.

Bhagavan Nityananda

அதுதான் பகவான் நித்யாநந்தா..! அற்புதங்கள் தொடரும்..,காத்திருங்கள்..! 


0 comments: