Monday, August 26

'தீ இவரைத் தொடுவதில்லை..,' வெளிநாட்டினர் ஆய்வு செய்த சாமியார்..!

' யாகத்தீக்குள் ராம்பாவ் சுவாமிகள் '

சமீபத்துலதான் இவரப்பத்தி நினைவு வந்தது..,

ஃபயர்யோகி (FIRE YOGI)…இப்படித்தான் அவர குறிப்பிடுவாங்க,

அவரோட பேரு, ராம்பாவ் சுவாமிகள்..!


ராம்பாவ் சுவாமிகள்

தஞ்சாவூரச் சேர்ந்தவரு..,

இவரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இவரு நடத்தும் 14 மணி நேர தொடர்யாகம்..!

நாலடிக்கு, நாலடியில யாகசாலை அமைச்சு, விநாயகருக்கு ஒரு ஸ்பெஷல் யாகம் நடத்துவாரு..,

அந்த யாகத்துல போட   50 கிலோ நெய், 400 கிலோ மரக்குச்சி, 200 கிலோ அருகம்புல், 400 வரட்டி, 4000 கொழுக்கட்டைன்னு எக்கச்சக்கமான பொருட்கள தயார் பண்ணி வச்சிருப்பாங்க..,


' யாகம் வளர்க்கும் ராம்பாவ் சுவாமிகள் '

இந்த யாகசாலையில நல்லா தீ வளர்த்து, அதுல எல்லா பொருளையும் அக்னிக்கு அர்ப்பணம் செஞ்சிட்டு, கடைசியா, தானும் அந்த தீயில படுத்துக்குவாரு…,

ஆனா, திகுதிகுன்னு, எரியற தீ ஜீவாலை இவரமட்டும் எதுவுமே செய்யாது.
இதகேள்விப்பட்டு, வெளிநாட்டுல இருந்து ஒரு டீம் வந்து, இது எல்லாத்தயும் ஷூட் பண்ணாங்க..,(இது 2002ல..அப்பவே சாமியாருக்கு வயசு 63..)

ராம்பாவ் சுவாமிகள் தன்னோட உடம்புல ஒரு சாதாரண ஷால் மட்டும்தான் சுத்திட்டு தீயில இறங்குவாரு..அந்த ஷால்ல எதேனும் ஸ்பெஷல் தீப்பிடிக்காத பொருள் கலந்திருக்குமான்னு கூட வெளிநாட்டு லேபுக்கே அனுப்பி டெஸ்ட் செஞ்சு பாத்தாங்க..,

ஆனா, அது சாதாரண ஷால்தான்னு ரிப்போர்ட் வந்திருச்சு..,

ராம்பாவ் சுவாமிகள், தீயில   இப்படி இறங்குறத, இதுவரைக்கும் கடந்த 45 வருஷத்துல ஒரு ஆயிரம் முறை செஞ்சிருப்பாராம்..அவரது உடம்புல ஒரு சின்ன தீக்காயம் கூட ஏற்பட்டதில்ல..

அதுமட்டுமில்லாம, 28 வருஷமா, தினமும் ரெண்டு வாழைப்பழமும், ஒரு டம்ளர் பாலும் மட்டும்தான் இவரோட உணவு, தண்ணியும் சிலதுளி மட்டும்தான்..,(பூஜையின்போது, உள்ளங்கையில விட்டு தீர்த்தம் அருந்துவது மட்டும்தான்)

தினசரி இவரு தூங்கறதும் 3 மணிநேரம் மட்டும்தானாம்..,

எப்படி இதெல்லாம் சாத்தியம்னு, எல்லாவிதமான மருத்துவ பரிசோதனையும் நடத்திபாத்தாங்க…,

கடைசியா, இதுக்கெல்லாம் காரணம் ராம்பாவ் சுவாமிகளோட யோகசக்திதான்னு இப்ப நிரூபிக்கப்பட்டிருக்கு..,

ராம்பாவ் சுவாமிகள் பத்தி வெளிநாட்டினர் நடத்துன அந்த ஆய்வு பத்தி விரிவா ஒரு டாக்குமெண்டரி படம் எடுத்து அதுல தங்களோட ஆச்சரியங்கள பதிவு பண்ணியிருக்காங்க.., (The Fire Yogi)

"...ஒரு குறிப்பிட்ட மந்திரத்த ஜெபிக்கும்போது, நானே, அந்த அக்னியாக மாறிடறதால, எனக்கு தீயால பாதிப்பு ஏற்படறதில்ல..." ன்னு ராம்பாவ் சுவாமிகள் சொல்லியிருக்காரு.

யோகத்தின் மூலமா நம்ம உடம்புல  பிராணசக்திய அதிகரிக்கச் செய்யறது மூலமா, இப்படி பல அதிசயங்கள செய்யமுடியும்னும் ராம்பாவ் சுவாமிகள் சொல்லியிருக்காரு.

தீ ஜீவாலைக்குள்ள  படுத்தும்  ராம்பாவ் சுவாமிகள, தீ எதுவுமே செய்யல..அப்படிங்கறத மட்டுமே, ஒரு ஆச்சரியமான நிகழ்வா, இங்க பதிவு செய்யவரல...,

பிரணவசக்தி மூலமா, இதவிட உச்சத்த ஒவ்வொரு மனிதனும் பெறமுடியும்ங்கறதுக்கான ஒரு உதாரணம்தான் இந்தப்பதிவு.

பொதுவா, மிகப்பெரிய ஞானிகள், இந்த மாதிரியான அற்புதங்கள் நிகழ்த்தறத விரும்பமாட்டாங்க, ஏன்னா, மேஜிக் மாதிரியான அற்புதங்கள சில பயிற்சிகள் மூலமா யோகபயிற்சியில இருக்குற யாராலயும் செய்யமுடியும், 

ஆனா, அடுத்தவங்கள பிரமிக்க வைக்கற, இதுமாதிரியான செயல்களால, முக்கியமான இலக்கான, ஞானத்தை அடைதல் அப்படிங்கறதுல இருந்து யோகபயிற்சியாளனோட கவனம் சிதறடிக்கப்படும்..,

அதனாலதான், ஞானமடைஞ்ச மகான்கள், இதுமாதிரியான, சின்ன, சின்ன அற்புதங்கள் செய்யுற ஆற்றல ஒரு யோகபயிற்சியாளன், கடந்து வரணும்னு வலியுறுத்துவாங்க..,

ஞானத்தின் பாதையில,வழிநெடுக, எத்தனையோ ஆச்சரியங்களும், அதிசயங்களும்,  காத்திருக்கு..,

ஒரு நீண்ட பயணத்துல வழியிலயே வேடிக்கை பாத்துட்டு நின்னுட்டோம்னா, போய்சேர வேண்டிய இடத்துக்கு போகமுடியாதுன்னு, உணர்த்தறதுக்காகத்தான் இந்தப்பதிவு..!

டெயில்பீஸ்;

ராம்பாவ் சுவாமிகளுக்கு, இப்போ வயசு 78.., இதோ இப்ப தான் சிங்கப்பூர்ல இந்த ஸ்பெஷல் யாகத்த முடிச்சிட்டு ஊர் திரும்பி இருக்காரு. இன்னும் ஒரு மாசம் மட்டும்தான் தஞ்சாவூர்ல இருப்பாராம். திரும்பவும் விநாயகர் சதுர்த்தி முடிஞ்சதும், வட இந்தியா பயணம் செய்யப்போறாராம்.

இவர் இந்த யாகம் செஞ்சா, அந்த இடத்துல மழை வரும்...அதுமட்டுமில்லாம, பலவிதமான மூலிகைகள போட்டு பலமணிநேரம் இந்த யாகம் நடத்தறதால, உடல்நல பிரச்னைகள், நோய் போன்றதற்கும் இது கண்கண்ட தீர்வாக இருப்பதா பலரும் உணர்ந்திருக்காங்க.., 

14 மணிநேரம் தொடர்ந்து செய்யப்படுகிற யாகம் இதுன்றதால, இதுக்கு அதிகமா செலவு ஆகுமாம்...அப்படியும் இந்த விநாயகர் ஹோமத்த செய்யணும்னு விரும்பறவங்களுக்குதான் இப்போ ராம்பாவ் சுவாமிகள் இத செய்து கொடுத்திட்டு இருக்காரு..,


5 comments:

பழனி. கந்தசாமி said...

ராம்பாவ் சாமி இப்ப எந்த ஊர்ல இருக்காரு. பாக்கணுமே.

Ramani S said...

ஆச்சரியமான அதிசயமான தகவல்
பகிர்வுக்கு நன்றி

பிரபஞ்சவெளியில் said...

வருகைக்கும்,கருத்திட்டமைக்கும் நன்றி..! ராம்பாவ் சுவாமி பத்தி தகவல உறுதி செய்துவிட்டுச் சொல்கிறேன்..நன்றி..!

பிரபஞ்சவெளியில் said...

ராம்பாவ் சுவாமிகள்...இப்போ, தஞ்சாவூர்லதான் இருக்காரு, முகவரி, போன் நெம்பர் தேவைப்படுகிறவர்கள் மெயிலில் தொடர்புகொள்ளவும்..நன்றி

காமக்கிழத்தன் said...

ராம்பாவ் சாமியை விமர்சிப்பது இந்தப் பின்னூட்டத்தின் நோக்கம் அல்ல.

என் அனுபவத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

‘குதிவாதம்’ என்று ஒரு நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தூங்கி எழுந்தவுடன் குதிகாலைத் தரையில் ஊன்றவே முடியாது. அப்படி ஒரு கொடூர வலி. நேரம் ஆகஆகக் கொஞ்சம் வலி குறையும் அவ்வளவுதான்.

என் 30 ஆவது வயதில் இது நேர்ந்தது. என் தந்தை, கொல்லிமலை மூலிகை வைத்தியர் ஒருவரிடம் அழைத்துப் போனார்.

ஒரு வாணலியில் எண்ணை கொதித்துக் கொண்டிருக்கிறது.

வைத்தியர் என் பாதம் முழுக்க ஒரு மூலிகைச் சாற்றைப் பூசுகிறார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, என் குதிகாலை [நான் பயந்து நடுங்கிக்கொண்டிருக்க] கொதிக்கும் எண்ணைக்குள் அமுக்கிச் சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கிறார்.

நம்புங்கள். சுடு எண்ணை என் காலைக் கொஞ்சமும் சுடவே இல்லை.

அப்புறம் கொஞ்ச நாட்களில், குதிவாதமும் குணமாகிவிட்டது.

ஒரு அம்மையார்,[ஊர் ,பெயரெல்லாம் நினைவில்லை] கொதிக்கும் எண்ணைக்குள் கையை அமுக்கிப் பலகாரம் போட்டதெல்லாம் செய்தித்தாள்களில் வந்தது எனக்கு நினைவிருக்கிறது.

இந்த அபூர்வ மூலிகைகள் பற்றி, மக்களுக்கு ஏதும் தெரியாது என்பதை இவர்களெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்பது என் சந்தேகம்.

ஒரு தகவலாக மட்டுமே இதை எடுத்துக் கொள்ளுங்கள்.