Friday, August 9

77வயது பெரியவரின்….7ஆயிரம் கிமீ..பாதயாத்திரை-108 திவ்யதேச தரிசனம்!

நான் திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரை போன கதைய உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

ஓம் நமோ வேங்கடேசாய..!

நாங்க திருமலைக்கு பாதயாத்திரை போனபோது அந்தக் குழுவுக்கு தலைமை தாங்கி அழைச்சிட்டுபோனவரு ராமய்யா. அவருக்கு அப்போவே வயசு 74.

இதோ..இப்போ அதே பெரியவரோட தலைமையிலதான் இந்த பாதயாத்திரை திட்டம் தயாராகியிருக்கு. இப்போ அவருக்கு வயசு 77

ராமய்யா இதுவரைக்கும் 44 வருஷங்களா தொடர்ந்து சென்னையில இருந்து திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரை போய் வந்திட்டு இருக்காரு.

இந்த பாதயாத்திரையோட ஆதிமூலம் ரொம்ப சுவாரசியமானது.

புண்ணிய ஷேத்திரங்களுக்கு பாதயாத்திரையா போயிட்டு வரும் பழக்கம் காலம்காலமா இருந்துட்டுதான் இருக்கு.நடுவுல கொஞ்சகாலம் அந்த நடைமுறை பழக்கத்துல இல்லாம போயிருக்கு.

திரும்பவும் பாதயாத்திரைய இங்க தென்னந்தியாவுல இருந்து வட இந்தியா வரை போறது கடந்த 200 வருஷங்களாதான் தொடங்கியிருக்கு.
அதையும் தொடங்கி வச்சவரு மஹாபெரியவா.


ஹரஹர சங்கர..ஜெயஜெய சங்கர..!

அவர்தான் ராமேஸ்வரத்துல இருந்து காசிக்கு பாதயாத்திரை செஞ்சி இத தொடங்கி வச்சிருக்காரு.

அதுக்குப்பிறகுதான் பக்தர்களுக்கும் பாதயாத்திரை போகலாம்னு தோனியிருக்கு.

அப்படி இத தொடங்கினவருதான் அரு.சோமசுந்தரன்.இவருக்கு இப்ப 77வயசு.

இதுவரைக்கும் 24 பாதயாத்திரைகள நடத்தி முடிச்சிருக்காரு.

இப்ப அடுத்ததா இந்தியா முழுக்க இருக்கற ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்யதேசங்களுக்கு ராமய்யா தலைமையில் ஒரு குழு பாதயாத்திரை போக முடிவெடுத்திருக்காங்க.

திவ்ய தேசங்கள் அப்படிங்கறது பெருமாள் குடிகொண்டிருக்கிற ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 வைணவத் (நன்றி; விக்கிபீடியா) திருத்தலங்களைக் குறிக்கும்.

இந்த பாதயாத்திரை 7 மாசம் , ரெண்டு பிரிவா செயல்படுத்த திட்டம் போட்டிருக்காங்க. 

முதல்ல ஒரே மூச்சுல எல்லா இடத்துக்கும் போய்வரத்தான் திட்டம் தயாராச்சு. அதுக்குள்ள கேதர்நாத்ல ஏற்பட்ட பெரும்பாதிப்பு பாதயாத்திரை திட்டத்துல சிலமாற்றங்கள செய்யும்படி ஆயிருச்சு.

இப்போ..முதல் பிளான்படி செப்டம்பர் 9ம்தேதி கேரளாவுல தொடங்கி மூணுமாசம் நடந்து டிசம்பர் 5ம்தேதி திருப்பதியில முதல் கட்டத்த முடிக்கிறாங்க.

அடுத்ததாஇரண்டாம் கட்ட பாதயாத்திரைய பிப்ரவரி இரண்டாம் வாரத்துல தொடங்கறாங்க.

ஏன்னா இப்ப கேதர்நாத் பாதிப்புகளால அங்க சீரமைப்பு வேலைகள் நடந்துட்டு இருக்கறதால அங்க இருக்கற இரண்டு திவ்யதேசங்களான பத்ரிநாத் தேவபிரயாகைக்கு உடனே, போகமுடியாத நிலை. அதனால இப்படி பாதயாத்திரைய இரண்டு பிரிவா பிரிச்சிருக்காங்க.

இரண்டாவது பிரிவுக்கான பாதயாத்திரை வரைபடம் அச்சிடும்வேலை நடந்திட்டு இருக்கு. அது அடுத்த கட்டமா வெளியிடப்பட உள்ளது.

இப்போ முதல் பாதயாத்திரையோட டீடெய்ல்டு பிளான் 9 பக்கம் கொண்ட பெரிய கேட்லாக்கா அச்சிட்டு வெளியிட்டு இருக்காங்க.அதோட முதல் பக்கம் இதோ..

அழைப்பிதழ் முதல் பக்கம்
அவங்க நடக்கப்போற பிளான பார்க்க விரும்பரவங்களுக்காக மத்த 8 பக்கத்த இங்கே ஸ்கேன் செஞ்சு போட்டிருக்கேன். 

Dropbox  இங்கயிருந்து டவுன்லோட் செஞ்சு பாருங்களேன்.. பாக்கற நமக்கே மூச்சு முட்டும்.

ராமய்யா தலைமையில 19பேர் கொண்ட குழு இந்த பாதயாத்திரை செய்ய இருக்காங்க. இதுக்கான தேவைகள்னு ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கு. அதுக்கு எவ்வளவு செலவு ஆகும்னும் பட்ஜெட் தயாரிச்சிருக்காங்க.அந்த பட்டியலும் உங்கள் பார்வைக்கு…இங்கே.

பாதயாத்திரை செலவுபட்ஜெட்
இந்த லிஸ்ட்ல டிக் அடிச்சிருக்கற பொருட்களை சிலர் கொடுக்க முன்வந்து பணத்த கொடுத்துட்டாங்க.மீதமிருக்கற பொருட்கள்தான் அவர்களுக்குத் தேவை.

இந்த பிரமாண்டமான பாதயாத்திரையில, புண்ணிய காரியத்துல நாமும் பங்கெடுத்துக்க முடியும். இன்னமும் அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களுக்கு பணம் கொடுப்பதன் மூலம் 108 திவ்யதேசங்களுக்கு சென்றுவந்து மகத்தானபேறு நமக்கு கிடைக்கும்.

அதுமட்டுமில்லாம, பணம் கொடுக்கிறவர்களுடைய பெயர் விவரங்கள பதிவு செஞ்சு வச்சு, பாதயாத்திரை முடிஞ்சு திரும்பிவந்து, 108 திவ்யதேச பிரசாதங்களையும் இந்த பாதயாத்திரை கைங்கர்யம் செஞ்சவங்களுக்கு கொடுக்க திட்டமிட்டிருக்காங்க.

அதனால, இது இந்த 19 பேரும் நமக்கு கொடுத்திருக்கிற மிகப்பெரிய வாய்ப்பு. நம்மால முடிஞ்சத இந்த குழுவினருக்கு கொடுத்து பெருமாளோட அனுக்கிரகத்த பெறுவோம்.

இந்த குழுவினர  மஹாபெரியவாளே பாராட்டி ஆசி வழங்கியிருக்கார். அப்போ அவர் சொன்னது,

“…திரேத யுகத்துல, துவாபர யுகத்துல எல்லாம் ஆயிரம் வருஷம் தவமிருந்தாங்க. அஸ்வமேத யாகம் செஞ்சாங்க.வாஜ்பேய யாகம் எல்லாம் செஞ்சாங்க.ஆனா, இந்த கலியில அதையெல்லாம் செய்ய வாய்ப்புகள் இல்ல. அதனால, அந்த யாகங்களுக்கு, தவத்துக்கெல்லாம் ஈடானது புண்ணியஷேத்திரங்களுக்கு பாதயாத்திரை போறது. அதனால,நீங்க ஒவ்வொருமுறை பாதயாத்திரை போகும்போதும் காஞ்சிமடத்துல வந்து தங்கி ஆகாரம் எடுத்துட்டுதான் போகனும்”

அதனால,நாமும் இந்த புண்ணிய கைங்கரியத்துல பங்கெடுப்போம்.திட்டச்செலவு பட்டியல்ல இருக்குற ஏதாவது ஒரு செலவினத்தையும் அப்படியே நீங்க ஏத்துட்டும் செய்யலாம். இல்லைன்னா, பாதயாத்திரை குழுவுக்கான தினசரி உணவுக்கும் பணம் கொடுக்கலாம். இந்த பாதயாத்திரை குழுவுக்கு நேரடியா வங்கிகணக்கு மூலமாவும் பணம் செலுத்தலாம்.அதன் விவரம் இங்கே.


பாதயாத்திரைக்கு நீங்களும் பணம் செலுத்தும்வசதி

நேரடியா வங்கிக் கணக்குலயும் செலுத்தலாம்.இல்லன்னா, பாதயாத்திரை குழு செயலாளர் கண்ணன்,மொபைல் –  9444854711 இந்த எண்ல கூப்பிட்டும் கொடுக்கலாம்.

இன்னொரு விஷயம் நேரடியா வங்கியில் பணத்த செலுத்தரவங்க, கண்ணனோட மொபைலுக்கு உங்களோட விலாசத்தயும்,பணம் செலுத்துல விவரத்தையும் ஒரு SMS அனுப்பிடுங்க. அப்பதான் 108 திவ்ய தேசத்தோட பிரசாதம் உங்க வீடு தேடி வரும்.

அப்புறமா..இதுல இன்னொரு சுவாரசியமான ஒரு விஷயத்த நான் உங்களுக்கு சொல்லியே ஆகனும். இந்த பெரியவர் ராமய்யா நடையுல கொஞ்சமும் சளைத்தவரே இல்ல.

இத நானே நேரடியா பாத்திருக்கேன். வழக்கமா ஒவ்வொரு நியூ இயருக்கும் இவரோட குழு, திருமலைக்கு சென்னையில இருந்து டிசம்பர்29ல பாதயாத்திரை தொடங்கி ஜனவரி முதல்தேதி திருச்சானூர், இரண்டாம்தேதி திருமலை போயிட்டு வருவாரு.இப்படி 44 வருஷமா போயிட்டு இருக்காரு. அப்படின்னா, இப்ப இவரு இந்த 7 மாச பாதயாத்திரையில இருக்கறதால டிசம்பர் திருமலை பாதயாத்திரை போகமாட்டாருதானேன்னு நான் சாதாரணமா கேட்க, நான் எதிர்பாக்காத பதில் வந்தது.

அது என்னன்னா இந்த 7 மாச பாதயாத்திரையில இருக்குற இவரு,டிசம்பர் 5ம்தேதி இவங்களோட முதல்கட்ட பாதயாத்திரை  திருப்பதியில முடிஞ்சிடுது. அதனால, வழக்கம்போல  டிசம்பர்29 அன்னைக்கு சென்னையில இருந்து திருமலைக்கு பாதயாத்திரையா போய் பெருமாள தரிசிக்க போறாரு ராமய்யா.
இந்த குழுவுல இருக்குற ஒவ்வொருத்தருமே இப்படித்தான். இந்தக்குழுவோட செயலாளரா இருக்குற கண்ணன் இதுவரைக்கும் போன பாதயாத்திரைகளோட பட்டியல் இது.

ராமேஸ்வரத்துல இருந்து காசிக்கு..

இந்தியா முழுவதும் 13 மாநிலங்கள் வழியாக நடந்து 12 ஜோதிர்லிங்க தரிசனம்.. 

தேவார பாடல்பெற்ற திருத்தங்கள் 276, இதுல 274 பாதயாத்திரையா போய் பாத்தாச்சாம்..அப்போ ஏன் இன்னும் மீதி இரண்டுன்னு கேக்கறீங்களா..?
அது கடல் கடந்து போய்தான் பாக்கணுமாம்..ஏன்னா அது ரெண்டும் இருப்பது இலங்கையில..

இப்படி இவங்களப்பத்தி சொல்லிக்கிட்டே போலாம்..

அதுமட்டுமில்ல..இப்ப இவங்க பாதயாத்திரை செய்யுற இந்த 108 திவ்யதேசத்திற்கும் இதுவரை ஆழ்வார்கள் கூட இப்படி போனதில்லை.(உடனே,யாரும் சண்டைக்கு வறாதீங்க) ஒரே ஆழ்வார் இப்படி 108 திவ்யதேச பாதயாத்திரை போனதில்லன்னு சொல்லவறேன்.அப்படிப்பாத்தா..இந்த 19பேரும்கூட நாம வாழ்ற காலத்துல இருக்குற ஆழ்வார்களாத்தான் நான் கருதுகிறேன்..ஆண்டவனின் அடியவர்கள் எல்லாருமே ஆழ்வார்கள்தான்..

இதுமட்டுமில்லாம இந்தக்குழுவோட  பாதயாத்திரைய தினமும் லைவா (வீடியோவா இல்லைங்க..போட்டோவா…முடிச்சு வந்தபிறகு வீடியோ) நம்ம பதிவுகள்ல போட ஏற்பாடு செஞ்சுட்டு இருக்கோம்..,

இறையருளும், குருவருளும் கூடினால் எல்லாமே சிறப்பா நடக்கும்.

வாங்க..நாமளும் இந்தக்குழுவோட சேர்ந்து 108 திவ்யதேசங்களுக்கும் பாதயாத்திரை போவோம்..மானசீகமாக..

0 comments: