வாங்க..இப்போ நான் சொல்லப்போறது எல்லாமே நேரடியா என்னோட அனுபவங்கள்...நான் நேரடியா உணர்ந்ததுக்கு சாட்சிகள் தேவையில்ல...ஆனா, இப்போ நான் சொல்லப்போற எல்லாமே சத்தியமானவை.
இத நான் உணர்ந்த தருணம் ரொம்பவே அற்புதமானது..,
அந்த சமயத்துல வார்த்தைகள்ல விவரிக்க முடியாத உன்னதமான தியானநிலையிலயே நான் தொடர்ந்து இருக்கத் தொடங்கினேன்.
அப்போதான் என்னால சில குறிப்பிட்ட நிலைகளுக்கெல்லாம் போக முடிஞ்சது.
தியானத்துல படிப்படியா வெவ்வேற இடங்களுக்கு நான் டிராவல் செஞ்சப்பதான் என்னோட முற்பிறவி ரகசியங்கள் எல்லாம் எனக்கு கொஞ்ச கொஞ்சமா
காட்சிகளா தெரிய ஆரம்பிச்சது.
அத
பார்க்க பார்க்க எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருந்தது.
இப்ப எனக்கு கிடைச்சிருக்குற இந்த ஞானத்திற்கு அடிப்படையே நான் பலபிறவிகளா சேகரிச்ச
அறிவுதான்.
அது ஒவ்வொரு
பிறவியிலயும் மேலும், மேலும்
செரிவடைஞ்சு இப்போ ஞானமா மலர்ந்திருக்கு.
14 நூற்றாண்டுகளுக்கு முன்..
அதாவது
4 ம் நூற்றாண்டுல..அதாவது கி பி440ல இருந்துகி.பி 528க்குள்ளே தான்
எனக்கும் அவருக்கும் சந்திப்பு ஏற்பட்டுச்சு..அவரு போதிதருமர்!
போதிதருமர் |
இந்த 21ம் நூற்றாண்டுல ஒரு தமிழ் சினிமா மூலாமாத்தான் அவர நீங்கள்லாம் தெரிஞ்சிகிட்டீங்க..ஆனா.. அவரு எவ்ளோ பெரிய ஞானின்னு உங்களுக்கெல்லாம் தெரியுமா ?
கி.மு.563 ல இருந்து கி. மு 483. இதுதான் புத்தர் வாழ்ந்ததா சொல்லப்படுற காலகட்டம்.
கௌதம சித்தார்த்தன் ஞானத்ததேடி எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு ஒரு கட்டத்துல புத்தகயாவுல போதிமரத்தடியில ஞானமடைஞ்சாரு.
அதுக்கு அப்புறமா அவரோட போதனைகள அடிப்படையா வச்சு உருவான புத்தமதம் உலகம் முழுக்க பரவத்தொடங்குச்சு.
ஆனாலும், அந்த சமயத்துல பெண்கள் ஞானத்தைத்தேடி தவ வாழ்க்கையில ஈடுபடுறதுல புத்தருக்கேகூட ஒருவித தயக்கம் இருந்ததா சொல்லப்படுவதுண்டு.
ஆனா, புத்தருக்குப்பிறகு அவரோட போதனைகளால ஒரு பெண் ஞானமடைஞ்சு பலருக்கு வழிகாட்டி ஒரு குருவா உயர்ந்தாங்க..
அந்த பெண்தான் ..பிரஜ்நதாரா (Prajnatara)
புத்தரோட வழி வந்த ஞானி புண்யமித்ரா(Punyamitra) அப்டிங்கறவருதான் இவங்களோட குரு.
ஊர் ஊரா சன்னியாசியா சுற்றித் திரிஞ்சிட்டு இருந்த பிரஜ்நதாரா ஒருகட்டத்துல காஞ்சிக்கு வந்தாங்க.
காஞ்சிபுரத்துல அப்போ பல்லவ மன்னர் சிம்ஹவர்மன் அரசாட்சி செஞ்சிட்டு இருந்தாரு. அவரோட மூன்றாவது மகன்தான் போதிதாரா(Bodhitara).
இவருக்கு பிரஜ்நதாரா தியான பயிற்சிகள் எல்லாம் சொல்லிகொடுத்து
வழி காட்ட , 7வயசு சிறுவனா இருக்கும்போதே ஞானமடைஞ்சிருக்காரு போதிதாரா.
அதன்பிறகுதான் அவரோட பேரு போதிதருமர்னு மாற்றப்பட்டிருக்கு.
சின்னவயசுலயே போதிதருமரு தற்காப்புக்கலைகள புதுசுபுதுசா உருவாக்கி அதுல நல்ல பயிற்சியில இருந்திருக்காரு. இப்போதைய காஞ்சி மாநகர்லதான் தன்னோட தற்காப்புக்கலை பயிற்சிகள செஞ்சிருக்காரு.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் |
ஒருகட்டத்துல பரபரப்பான காஞ்சியில இருந்து ஆந்திராவுல இருக்குற நாகார்ஜூனகொண்டா என்கிற ஸ்ரீபர்வத மலைப்பகுதிக்குப் போயி வஜ்ரகாய நிலைய அடையறதுக்கான சில விசேஷமான பயிற்சிகள எடுத்திருக்காரு.அது மூலமா ஒரு விசேஷமான சக்தியும் அவருக்கு கிடைச்சிருக்கு.
நாகார்ஜூனகொண்டா, ஆந்திர மாநிலம் |
வஜ்ரகாய நிலைய அடைஞ்சவங்கள எந்தவிதமான நோயோ ,விஷமோ பாதிக்காது. அப்படி ஒரு நிலைய அடைஞ்சவருதான் போதிதருமர்.
(Research by Babu T. Raghu, The Founder of Sailum Zen Monastery in Bangalore).
தன்னோட 150வது வயசுல தனது குருவான பிரஜ்நதாரா கொடுத்த ஒரு வித்யாசமான பொறுப்ப நிறைவேத்தறதுக்காக போதிதருமர் சீனாவுக்கு புறப்பட்டுப்போனாரு.
புத்தருக்கு பின்னாடி 600 வருடங்கள் கடந்து ஓடிப்போச்சு. ஏராளமான புத்த சன்னியாசிகள் சீனாவுக்கு போயும் அதுவரைக்கும் அங்க ஆயிரக்கணக்கான மடாலயங்களும், சன்னியாசிகளும் மட்டும்தான் உருவானாங்க.
ஒருத்தர்கூட ஞானமடையல. அப்போதான் பிரஜநதாரா " போதிதருமா உடனே,நீ சீனாவுக்கு போ. உன்னாலதான் அங்க இருக்கிறவங்களுக்கு ஞானத்தை உணர வைக்க முடியும்" னு சொல்லி அவர அனுப்பிவைச்சாங்க.
அந்த வகையில சீனாவுக்குப்போன முதல் ஆன்மஞானி போதிதருமர்தான் !
அங்க ஒரு குகையில போதிதருமர் தொடர்ந்து 9 வருடங்கள் தவம் செஞ்சதப்பத்தியும், அந்த குகையோட வீடியோகாட்சிகளையும் ஏற்கனவே நம்மோட முந்தைய பதிவுல படிச்சிருப்பீங்க.
குங்பூ கலையை உருவாக்கியவர், ஜென் புத்தமதத்தை தோற்றுவித்தவர்ன்னு அவருக்கு நிறைய பெருமைகள் கிடைச்சது.
தற்காப்புக்கலைகள் மூலமா உடலையும் மனதையும் ஆன்மாவையும் உணரவைத்து ஞானமடைச் செய்யும் ஒரு புது வித்தையை சீனாவிற்கு போதிதருமர் அறிமுகம் செஞ்சு வச்சாரு.
அது இன்னைக்கு ஜப்பான்லயும் பரவி போதிதருமரோட புகழ சொல்லிட்டு இருக்கு.
பேக் டு பிளாஷ்பேக்..
என்னோட முற்பிறவிகள்ல ஒருபிறவியில எனக்கும் போதிதருமருக்கும் நல்ல அறிமுகம் இருந்தது.
நானும் அவரும் ஏறக்குறைய ஒரு மூணு மாசம்
ஒன்னா நிறைய இடங்களுக்கு சுத்தியிருக்கோம்.
என்னைமாதிரியே அவருக்கும் என் மேல பிரியம் அதிகம். அதனால நல்லா பழகினாரு.
அதுக்கு ஒரு முக்கியமான ஒரு காரணம் இருந்துச்சு. மத்தவங்களமாதிரி நான் அவருகிட்ட எதுபத்தியும் கேள்வி கேட்கறதேயில்ல.
அதுபத்தி அவரே என்கிட்ட ஒருமுறை சொல்லியிருக்காரு.
"நா பாத்ததுலயே நீ ஒருத்தன் மட்டும்தான்
இதுவரைக்கும் எங்கிட்ட எந்தக் கேள்வியும் கேட்காதவன். எங்க போனாலும் கேள்வி, யாரப்பாத்தாலும்
சந்தேகம்ன்னு எதையாவது கேட்கிறதால எனக்கு கேள்விகள்னாலே எரிச்சலடைய செய்யுது.
நீ ஒருத்தன்தான் அப்படி என்ன கேள்விகளால
எரிச்சல்படுத்தாதவன்" அப்படின்னாரு.
உடனே, நான், "அதுக்கு ஒரு காரணம் இருக்கு"
போதிதருமர்,"என்ன அது?"(இவருமட்டும் கேள்வி கேக்கலாமா..?)
நான்,"எங்கிட்ட
பதில்கள் மட்டும்தான் இருக்கு, அதனாலதான் நான் யாரையும் கேள்வி கேட்கறதேயில்ல. உங்ககிட்ட எதாவது கேள்வி இருந்தா கேளுங்க. இல்லைன்னா அமைதியா இருங்க"
இப்படி
சொல்லி முடிச்சதுதான் தாமதம், உடனே, அவரும் சிரிக்க நானும் சிரிக்க அந்த இடமே ரம்மியமானதா மாறிடுச்சு.
ரெண்டுபேரும் ஒரே நிலையில இருக்கறதாலதான்
இப்படி ஒரு அனுபவம்.
அதுக்குப்பிறகுதான்
அவரு தன்னோட பயணத்துல என்னையும் தொடர்ந்து அவரோட இணைஞ்சு வரும்படி கூப்பிட்டாரு.
"நீங்க கூப்பிட்டு அத நான் முடியாதுன்னு சொல்றதுக்காக என்னை நீங்க பொறுத்துதான் ஆகனும்.
எனக்குன்னு ஒரு தனி வழி இருக்கு. அதனால, இனியும் நான் உங்களோட வரமுடியாது. இந்த இடத்துல இருந்து நாம
ரெண்டுபேரும் பிரிஞ்சுடலாம்"னு சொன்னேன்.
அவரால
நம்பவே முடியல. இதுவரைக்கும் அவரு
யாரையும் தன்னோட வரச்சொல்லி கூப்பிட்டதே இல்ல.
அவ்வளவு
ஏன், அந்த காலகட்டத்துல சீனப்பேரரசனான
வூ,
முதன்முதலா சீனாவுக்கு வந்த
போதிதருமர பார்க்க வந்தாரு.
புத்தமதத்த
சீனாவுல பரப்பறதுக்காக அதுக்கு முன்ன அங்க வந்த
புத்த சாமியார்களுக்கெல்லாம் பேரரசரான வூ சிறப்பான வசதிகள செய்துகொடுத்து
கவனிச்சிருக்காரு.
அதே மாதிரி
போதிதருமரையும் தன்னோட அரண்மனைக்கு வரும்படி கூப்பிட்டாரு.
ஆனா, இவரோ
அந்த இடமெல்லாம் நமக்கு செட்டாகாது.
எனக்கு இந்த மலையும், காடும்தான்
சவுகரியமா இருக்கும்ன்னு மறுத்துட்டாரு. அப்படி பேரரசர் கூப்பிட்டே மறுத்தவருக்கு அவர் கூப்பிட்டு நான் வரலன்னு
சொல்லி மறுத்தது ஆச்சரியமா இருந்தது.
அவரலயே நான் சொன்னத நம்ப முடியல.
அப்போதான்
நான் சொன்னேன், "உங்கள மறுத்து யாரும் இதுவரைக்கும் பேசினதேயில்ல. அதனால,நீங்க மறுக்கறதோட ருசிய இதுவரைக்கும் அனுபவிச்சதேயில்ல. அதுக்காகத்தான் நான் இப்ப உங்களோட அழைப்ப மறுத்தேன். நான் புறப்படுறேன்"
அப்படின்னு சொல்லிட்டு அவர்கிட்ட இருந்து விடைபெற்று என்னோட வழியில நான் பயணத்தை தொடங்கிட்டேன்.
இது எல்லாமே 1400 வருஷங்களுக்கு முன்னால...
ஏன்னா..நான் இந்த பூமிக்கு வந்துபோன காலகட்டம் 19 ம் நூற்றாண்டு
-(19 ஜனவரி 1931 முதல் 11டிசம்பர் 1953வரை)
இப்படிக்கு
என்னோட உண்மையான அனுபவங்கள உங்களோடு பகிர்ந்துகொள்ளும்
-ஓஷோ
ஓஷோ |
0 comments:
Post a Comment