Saturday, October 6

'11 வயது சிறுவனின், 700 வருடங்களுக்கு முந்தைய முற்பிறவி அனுபவம்!' -தொடரும் குருபரம்பரை -பாகம்-03

வேப்பமரத்தடியில மக்கா பாபா காத்துகிட்டு இருந்தது ஒரு சிறுவனுக்காகன்னு சொல்லியிருந்தோமே அந்த சிறுவனோட பேரு ராஜா.வயசு 11!


தாத்தா வயசுல இருக்குற ஒரு சாமியாருக்கும், பேரன் வயசுல இருக்குற ஒரு சிறுவனுக்குமான சந்திப்புல நமக்கு என்ன தெரிஞ்சுக்க வேண்டியிருக்குஇருக்குங்ககுருபரம்பரையோட பல சூட்சுமங்கள நாம இதுல புரிஞ்சிக்கலாம்.


Magga Baba

மக்கா பாபா(Magga Baba)!

இங்க எப்படி கையில எப்பவும் விசிறியோட இருந்தவர விசிறி சாமியாருன்னு அடையாளப்படுத்தினமோ, அதேமாதிரிதான் எப்பவும் டீகுவளைய கையில வச்சிட்டு இருந்ததால குவளைய(மக்கு) குறிப்பிடும்படியா மக்கா பாபான்னு ஆயிட்டாரு.

இவர மதராசி பாபான்னு அங்க இருந்தவங்க குறிப்பிட்டிருக்காங்க. சென்னையிலிருந்து இமயமலைக்கு போன இவரு அங்க இருந்து வட இந்தியாவுக்குபோயிசிறுவன் ராஜாவோட ஆன்மதரிசனத்துக்கு குருவா இருந்து உதவியிருக்காரு.


அந்த கிராமத்துல மக்கா பாபாவ பொறுத்தவரைக்கும் பேசத்தெரியாத, காதுகேக்காத ஒருமாதிரியான ஆளாத்தான் எல்லாரும் அவர பார்த்துட்டு இருந்தாங்க.ஆனாலும் அவருகிட்ட ஏதோ ஒரு சக்தி இருக்கிறதா நம்பி அவர ஒரு சாமியாரா கும்பிட்டாங்க.

ஒருநாள், வேப்பமரத்தடியில இருந்த மக்கா பாபாவ எல்லாரும் வேடிக்கை பார்த்திட்டு இருந்த சமயத்துலதான்  முதன்முதலா அவர பாத்திருக்காரு சிறுவன் ராஜா.   ஆனா, அந்த  முதல் சந்திப்புலயே சில சூட்சுமமான விஷயங்கள் ரெண்டுபேருக்கும் நடுவுல நடந்திருக்கு.

அவரோட கண்ண நேருக்குநேரா பார்த்ததுமே,   ''இன்னைக்கு ராத்திரி வா..உன்கிட்ட பேசனும்''னு மக்கா பாபா சொன்னமாதிரி ராஜாவுக்கு தோணியிருக்கு.

அதே மாதிரி அன்னைக்கு ராத்திரி 2மணிக்கு வேப்பமரத்தடிக்கு போயிருக்காரு சிறுவன் ராஜா.

சாக்குபைய போத்திட்டு படுத்திருந்தாரு மக்கா பாபா. எதிரில குளிருக்காக நெருப்பு எரிஞ்சிட்டு இருந்தது.

சிறுவன் ராஜா வந்தத பார்த்து எழுந்திரிச்ச மக்கா பாபா அந்த இரவே அதிரும்படியா குலுங்கி,குலுங்கி சிரிச்சிருக்காரு. அதப்பாத்து ராஜாவும் சிரிக்க அந்த இடத்தோட தன்மையே மாறிப்போயிருக்கு

தனக்கு பக்கத்துல வரும்படி பாபா கூப்பிட ராஜா பக்கத்துல போயிருக்காரு. எதுவோ ஒண்ணு தன்னை அவர நோக்கி இழுக்கறதாவும் உணர்ந்திருக்காரு சிறுவன் ராஜா.

''ஹூக்லிபூக்லிடக்லி…''ன்னு எதையோ புரியாம கத்தப்போறாருன்னு அந்த வேடிக்கையான மொழிய கேக்க ஆவலா இருந்த ராஜாவுக்கு அடுத்து பாபா திடீர்னு நல்லா பேசனத கேட்டதும்  ஆச்சரியம் தாங்கமுடியல.


''எனக்கு பேசத்தெரியுங்கறத யாருக்கும் சொல்ல வேண்டாம். இப்ப எல்லாரும் பார்த்துட்டு இருக்கிற ஆள் இல்ல நீ. அத உனக்கு நினைவுபடுத்தறதுக்காகத் தான்  நான் இப்போ உங்கிட்ட பேசவேண்டியிருக்கு''


இதுவரைக்கும் பேசவேத்தெரியாதவர்ன்னு  ஊரே நெனச்சுகிட்டு இருந்த மக்கா பாபா அவ்வளவு அழகா தன்கிட்ட பேசினத ஆச்சரியமா பாத்துகிட்டே இருந்தாரு  சிறுவன் ராஜா.

ரெண்டுபேரோட கண்கள் ஒண்ணையொண்ணு சந்திச்சது. சில நிமிடம் மௌனம்.

நாம சொல்ல நினைக்கிறத மொழிகளைவிட மௌனம்தான் மிகச்சரிய கொண்டுபோய் சேர்க்கிறதாக ஞானிகள் உறுதியா நம்பறாங்க.
அதேதான் இங்கேயும் நடந்தது. பல செய்திகள் சூட்சுமா ரெண்டுபேருக்கிடையிலயும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

சிறுவன் ராஜாவுக்கு மக்கா பாபாவுக்கு பக்கத்துல இருக்கிறப்போ ஒருபுதுவிதமான புத்துணர்ச்சிய உணர்ந்திருக்காரு. பலநாட்களா குளிக்காத பாபாமேல இருந்து ஒருவிதமான சுகந்தமணம் வீசறதையும் ஆச்சரியமா பாத்திருக்காரு.

அடுத்ததா பாபா திரும்பவும், '' எனக்கு பேசத்தெரியும்ங்கறத ஊர்ல யார்கிட்டயும் சொல்லக்கூடாது. நான் பைத்தியம், காது கேக்காத ஊமைன்னே ஜனங்க நினைக்கட்டும். நான் சாகறவரைக்கும் இது ரகசியமாவே இருக்கட்டும். அதுதான் எனக்கு இந்த ஊர்மக்கள்கிட்ட தங்கியிருக்க சவுகரியமா இருக்கும்'' ன்னு சொல்ல,

ராஜாவும் ''நான் யாருகிட்டயும் சொல்லமாட்டேன் கவலைப்படாதீங்க''ன்னு வாக்கு கொடுத்திருக்காரு.

அதுக்குப்பிறகு, ரெண்டுபேரும் அமைதியா கொஞ்சநேரம் பேசாம உட்கார்ந்திருந்திருந்தாங்க. அந்த சமயத்துல ஒரு ஆழந்த அமைதியும் பெரும்சக்தியையும் தனக்குள்ள மீண்டும் உணர்ந்திருக்காரு சிறுவன் ராஜா

இதுதான் ரெண்டுபேருக்குமிடையிலான முதல் சந்திப்பு.

அடுத்தடுத்தநாட்கள்லயும் இந்த ராத்திரி சந்திப்புகள் தொடர்ந்தன.  

அந்த சிறுவனுக்கு அவன் யார்ங்கறத சின்ன,சின்ன சம்பவங்கள் மூலமா புரியவச்சிகிட்ட வந்த மக்கா பாபா, ஒருநாள் அந்த சிறுவன்கிட்ட பகிரங்கமா அந்த பிரபஞ்ச ரகசியங்கள சொல்லத்தொடங்கினாரு.

 ''நாம ரெண்டுபேரும் 700 வருடங்களுக்கு முன்னாடி திபெத்துல லாமாக்களா பிறந்திருந்தோம். குகைகள்ல ஒன்னா தவம் செஞ்சிருக்கோம். இன்னும் சிலநாள்ல கொஞ்ச,கொஞ்சமா உனக்கு பழைய சம்பவங்கள் எல்லாமே நினைவுக்கு வந்துடும்...

...நீ இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், இன்னும் ரெண்டு பாபாக்கள் வந்து உனக்கு மத்தத நினைவு படுத்துவாங்க. அதுல ஒருத்தர் பாகல் பாபா, இன்னொருத்தர் மஸ்தோ பாபா...

...அதனால, இனியும் விளையாட்டுதனமா இருக்கறத விட்டுட்டு  கவனமா படிப்ப முடி. நீ பல மொழிகளயும் குறிப்பா, எல்லாநாட்டு மொழிகள் மட்டுமில்லாம, உலகம் முழுக்க இருக்கற எல்லா தத்துவங்களையும் கற்றுக்கொள். இது எல்லாத்தையும் புத்தகங்கள ஒருமுறை பார்த்தாலே போதும், அது உனக்கு புரிஞ்சிடும். ஏன்னா, எல்லாமே நீ முன்னாடி பிறவியிலயே படிச்சிட்டே.இனிமே, படிக்க எதுவுமே இல்லங்கற வரைக்கும் எல்லாத்தையும் படிச்சிடு...

... மேற்கத்திய நாடுகளுக்கும் கிழக்கத்திய நாடுகளுக்கும் இடையிலிருக்கும்  இடைவெளியை குறைக்கவேண்டியவன் நீதான். தூக்கத்திலிருக்கிற விழிப்புணர்ச்சியற்று இருக்கிற ஏராளமானவர்களை தட்டி எழுப்ப வேண்டியவன் நீ....

...இது எல்லாமே உன்னால் உனது தியானத்தின் மூலமாக சாத்தியமாகும்.அந்த சக்தியை நீ அடைந்ததுமே, தியானத்திலேயே முழுவதுமாக மூழ்கிவிடாமல், இந்த உலகிற்கும் மனிதகுலத்திற்கும் அன்பையும், கருணையையும் வழங்கி, அவர்களையும் உன்னால் முடிந்த அளவிற்கு கரையேற்ற வேண்டும்.

மக்கா பாபா சொன்னது எல்லாமே நடந்தது.

அந்தச்சிறுவன் வேறு யாருமல்லஅவர்தான் ஓஷோ..!

 
OSHO
இன்னைக்கும் சூட்சுமவெளியில உயிர்ப்போட இருந்தபடி ஆன்மப்பேரொளியா உலகம் முழுக்க பலருக்கு வழிகாட்டிக்கிட்டு இருக்கும் ஓஷோவுக்கும்   மக்கா பாபா(Magga Baba)வுக்குமான தொடர்பு நம்மளப்போல சாதாரணமானவர்களால அவ்வளவு எளிதா புரிஞ்சிக்கமுடியாது.ஆனாலும் இந்த குருபரம்பரை அனுபவம் நமக்கு ரொம்பவே அவசியம்.
 


--------------------தொடரும் குருபரம்பரை


0 comments: