![]() |
Rang Avadhoot Maharaj |
ரங்
அவதூத் மகராஜ் .
இவரைப் போன்றவங்களைபத்தி வெறும் தகவல்களா தெரிஞ்சிக்கிறதவிட, இவங்களோட அனுபவங்கள்தான் நமக்கு ரொம்பவே முக்கியம். அதுதான் குருபரம்பரைய நாம புரிஞ்சிக்கிறதுக்கு உதவியா இருக்கும்.அதனால, எழுத்துல ஒரு தொடர்ச்சிய எதிர்பாக்காம, கூடவே வாங்க, நாம போகவேண்டிய இடம் வந்துடும்.
முதல்ல ரங் அவதூத் மகராஜ், அடுத்ததா இவரு..!
இவரைப் போன்றவங்களைபத்தி வெறும் தகவல்களா தெரிஞ்சிக்கிறதவிட, இவங்களோட அனுபவங்கள்தான் நமக்கு ரொம்பவே முக்கியம். அதுதான் குருபரம்பரைய நாம புரிஞ்சிக்கிறதுக்கு உதவியா இருக்கும்.அதனால, எழுத்துல ஒரு தொடர்ச்சிய எதிர்பாக்காம, கூடவே வாங்க, நாம போகவேண்டிய இடம் வந்துடும்.
முதல்ல ரங் அவதூத் மகராஜ், அடுத்ததா இவரு..!
அழுக்கு
சாக்கு, கையில 'மக்கு'ன்னு சொல்லபடுகிற ஒரு
டீக்குவளை. எந்நேரமும் அந்த
வேப்பமரத்தடியில்தான் வாசம்.
எங்கேயிருந்து
வந்தாரு. எப்ப வந்தாருன்னு
ஊர்க்காரங்க யாருக்கும் தெரியாது.
ஜனங்கள
பொறுத்தவரைக்கும் அவருக்கு காது கேக்காது, பேசத்தெரியாது. ஏறக்குறைய
பித்துக்குளி. புரியாத பாஷையில
அப்பப்போ கத்துவாரு. திடீர்னு சில
சமயங்கள்ல கல் எடுத்து வீசத்தொடங்கிடுவாரு.
ஆனாலும்,எல்லாரையும்
ஏதோ ஒண்ணு காந்தம் மாதிரி அந்த மனிதரை நோக்கி இழுத்தது. அதுதான் என்னண்ணு யாருக்கும் புரியல.
எப்பவும் அவர சுத்தி ஜே ..ஜேன்னு கூட்டம் சுத்தி நின்னுட்டு இருக்கும்.
வர்றவங்க
அவரபாத்து தங்களோட பிரச்னைகள சொல்லுவாங்க.
''ஹிக்காலால் ஹூ..ஹூ…ஹூ..குலு…ஹிக்கா..ஹீ…ஹீ…!''
இப்படி
எதாவது ஒரு புரியாத சத்தம்தான் பதிலா
கிடைக்கும்.
வர்றவங்க
தங்களுக்கு கிடைச்ச ஒரு ஆசீர்வாதமா இத
எடுத்துக்குவாங்க.
அடுத்து,நான் சொன்னது புரிஞ்சதான்னு கேக்கற மாதிரி,
''ஹீ…ஹி..ஹி..?''-ன்னு ஒரு சத்தம் எழுப்புவாரு.
![]() |
Magga Baba |
எதிர்ல
இருக்கறவங்க புரிஞ்சதா தலையாட்டிகிட்டே அவரோட ஆசீர்வாதத்த வாங்கிக்குவாங்க.
அவர்
அப்படி பேசினாலே, நாம அவருகிட்ட
சொன்ன விஷயம் நல்லபடியா நடக்கும்ங்கிறது, பலரோட நம்பிக்கை.
தனக்கு
தரப்படற எல்லாத்தையுமே அவரு அந்த டீ மக்குலதான் போடச்சொல்லுவாரு. சாப்பாடு, காசு எல்லாமே. எப்பவும் அத (மக்கு) சுத்தபடுத்திகிட்டே
இருப்பாரு.
அதேநேரம், மக்குல என்ன விழுந்தாலும், அது அங்க இருக்குற பிச்சக்காரங்களுக்குதான். தனக்குன்னு எதையுமே அதுல இருந்து எடுக்க
மாட்டாரு.
அவருகிட்ட
எல்லாருக்கும் புடிச்ச இன்னொரு விஷயம், எதுக்குமே அவர் முடியாது, இல்லங்கற
மாதிரி சொன்னதே இல்ல. யாராவது
திடீர்னு வருவாங்க. ஒரு
சைக்கிள் ரிக்க்ஷாவுல அவர தூக்கி உக்கார வச்சிகிட்டு அவங்களோட இடத்துக்கு அழைச்சிட்டு
போயிடுவாங்க.தங்களோட வீடு, கடைகளுக்கெல்லாம் அவர அழைச்சிட்டு போயிட்டு திரும்பவும்
வேப்பமரத்தடிக்கு கொண்டுவந்து விட்டுட்டுப்போவாங்க. எதுக்கும் அவரு தன்னோடைய விருப்பு,வெறுப்ப வெளிப்படுத்தினதே இல்ல. எல்லாருடைய
விருப்பத்துக்கும் அவர் ஒரு கைக்குழந்தை.
அந்த
ஊரப்பொறுத்தவரைக்கும் தினந்தோறும் வேப்பமரத்தடியில அவர் இருக்கணும். எப்பவும் அவர பாக்கணும். அதையே ஒரு பாக்கியமா நினைச்சாங்க.
இப்படி
இருந்த சமயத்துலதான் ஒருநாள், காலையில
எல்லாரும் வந்துபார்த்தப்ப வேப்பமரத்தடி காலியா கிடந்தது. ஜனங்களுக்கு
அவரு இல்லாம என்னவோ போல ஆயிடுச்சு. எப்படி
இருந்தாலும் சாயந்திரத்துக்குள்ள வந்துடுவாருன்னு இருந்தாங்க.
ஆனா, வரல. ஊரே பதட்டமாயிடுச்சு. இளவட்ட
பசங்க அங்கயிங்க விசாரிச்சு உண்மைய கண்டுபுடிச்சிட்டாங்க. பக்கத்து
ஊரச்சேர்ந்தவங்கதான் சாமியார திருடிட்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சது.
ஊரே
கூட்டமா திரண்டு பக்கத்து ஊருக்கு போனது. எதிர்பார்த்த மாதிரியே அந்த ஊர் ஜனங்களோட சாமியார் இருந்தாரு. உடனே, போனகூட்டம் சாமியார குண்டுகட்டா தூக்கி ரிக்ஷாவுல போட்டுகிட்டு புறப்பட, அந்த இடத்துல பெரிய பிரச்னை ஆரம்பமாயிடுச்சு. அந்த
ஊர்க்காரங்க சாமியார விடமுடியாதுன்னு மறுக்க, இவங்களோ இவரு எங்க சாமியார்ன்னு சண்டை போட அந்த இடமே களேபரமானது.
இவ்வளவு
பெரிய கலாட்டாவுல தனக்கு எதுவுமே தொடர்பில்லாதவரப்போல
சாமியார்
அமைதியா இருந்தார்.
சாமியார்கிட்ட போலீஸ் விசாரிச்சது, '' நீங்க என்ன சொல்றீங்க, அதுபடிதான்
நாங்க முடிவு செய்யமுடியும்''
''யுட்டிலீ….ஃபுட்டிலீ…ஷூட்டிலீ…! ''-இது சாமியார் கொடுத்த பதில்.
''இந்தாளு என்ன பைத்தியமா? யுட்டிலீ….ஃபுட்டிலீ…ஷூட்டிலீ…! அப்படின்னா
என்னன்னு யாருக்காவது தெரியுமாயா? நாங்க
என்னன்னு ரிப்போர்ட்ல எழுதறது?''
ஒரு முடிவும் எடுக்கமுடியாம போலீஸ் அவரு இப்ப இருக்கற இடத்துலயே விட்டுட்டுபோங்கன்னு , வந்த ஜனங்கள விரட்டிடுச்சு. வருத்தத்தோட ஊர்திரும்பினவங்க சாமியார எப்படியாவது அங்கயிருந்து மீட்டுடணும்னு திட்டம்போட்டாங்க.
ஒரு முடிவும் எடுக்கமுடியாம போலீஸ் அவரு இப்ப இருக்கற இடத்துலயே விட்டுட்டுபோங்கன்னு , வந்த ஜனங்கள விரட்டிடுச்சு. வருத்தத்தோட ஊர்திரும்பினவங்க சாமியார எப்படியாவது அங்கயிருந்து மீட்டுடணும்னு திட்டம்போட்டாங்க.
மறுநாள்
ராத்திரியோட ராத்திரியா…அந்த
பக்கத்து ஊர்ல இருந்த சாமியார தூக்கி ரிக்ஷாவுல வச்சி இவங்க ஊருக்கு எடுத்துட்டு
வந்துட்டாங்க.
இப்போ..திரும்பவும் வேப்பமரத்தடியில சாமியாரோட அந்த
வித்யாசமான ஒலிக்குறிப்புகள் அழகான பட்டம்பூச்சிகளப்போல பறக்கத்தொடங்கிடுச்சு.
''..@..!..*..ஹிக்காலால்.....ஹூ..ஹூ…ஹூ.....குலு…ஹிக்கா.....ஹீ…ஹீ…!..@..!..* ..ஹீ…ஹி..ஹி..?..@..!..*..யுட்டிலீ….ஃபுட்டிலீ…ஷூட்டிலீ…! ..@..!..*..'
எதிர்காலத்தில
உலகம் முழுக்க வலம்வந்த ஆன்மப்பேரொளி…அந்த கிராமத்தில அப்போதான் ஒருசிறுவனாக
வளர்ந்துட்டு இருந்தாரு. அவர சந்திக்கிறதுக்காகவே வேப்பமரத்தடியில
வாழ்ந்துட்டு இருந்தவருதான் இந்த பெரியவர் -மக்கா பாபா. அப்படின்னா…அந்த சிறுவன்..?
………………தொடரும் குருபரம்பரை
0 comments:
Post a Comment