![]() |
குருபரம்பரை |
ஹிமாலயாஸ்ல
என்னை மாதிரி நிறையபேர், ஆளுக்கு
ஒரு குருகிட்ட பயிற்சி எடுத்துட்டு இருந்த காலம் அது !
என்னோட குருவோ சில பயிற்சிகளுக்காக, வேறொரு குருகிட்ட கொஞ்சநாள் இருந்துட்டு
வரச்சொல்லி என்னை அனுப்பியிருந்தாரு.
ரிஷிகேஸ்ல ஒரு மலைக்குகையில எப்பவும்
தவம் செய்துட்டு இருப்பாரு அந்த சாமியாரு.
அவர
பார்க்கபோகனும்னா, கங்கை ஆத்த கடந்து
மலைமேல போகணும். ரொம்ப ஆபத்தான
இடமது.
அப்பவெல்லாம்
ரிஷிகேஸ்ல மக்கள் நடமாட்டமே பெரிசா இருக்காது .
சாமியார்
தவம் செஞ்ச குகைக்கு பக்கத்துல சின்னதா தென்னங்கீத்தால ஒரு கொட்டாய்
போட்டிருக்கும். அங்கதான் நாம
தங்கணும்.
திடீர்னு கூட்டம், கூட்டமா யானைங்க வந்து கொட்டாயில இருக்குற
தென்னங்கீத்துல பாதிய தின்னுட்டு போயிடும். குடிசை பாதி காணாம போயிருக்கும். புலிகள் வேற சுத்திகிட்டு இருக்கும்.
இப்படிப்பட்ட
இடத்துலதான் எங்களுக்கு பயிற்சி.
காலையில
சாமியோட போயி கங்கையில எல்லாரும் குளிச்சிடுவோம். அங்கயிருந்து திரும்பி வரும்போது
மலையில உயரமா இருந்த ஒரு மரத்துமேல
சாமி திடீர்னு 'சரசர'ன்னு ஏறத்தொடங்கினாரு.
அந்த
கிளையில மலைத்தேனீக்கள் பெருசா கூடு கட்டியிருந்தது.
நாங்க
எல்லாரும் பதறத்தொடங்கிட்டோம்.
தேனீ
டென்ஷனாகி கொட்டத்தொடங்கினா, தப்பிச்சு
ஓட அக்கம்பக்கத்துல வழியே இல்ல.
''வேணாம் சாமி, இது எல்லாமே
பயங்கரமான காட்டுத்தேனீ. கொட்டுனா
விஷந்தான். வேணாம் இறங்கிருங்க'' அப்படின்னு நான் மட்டும் கத்துனேன்.
கூட
வந்த சிஷ்யகோடிகள் அப்புறம்தான் எனக்கு விளக்கம் சொன்னாங்க,
''பல்லு வெளக்க எல்லாருமே இப்படித்தான் மரத்துல ஏறி,
குச்சி ஒடிக்கணும். அதனாலதான் சாமி மரத்துல ஏற்ராரு. பதறாதே''
டென்ஷனோட
மரத்தையே பார்த்துட்டு இருந்தேன். சாமியார்
குச்சி ஒடைக்கறதுக்கு முன்னால, அந்த
தேன்கூட்டு கிட்ட போனாரு.
நான்
திரும்ப, 'சாமீ..'ன்னு கத்த,
அவரு, ''அமைதியாயிரு..தேனீ கொட்டாம இருக்க ஒரு மந்த்ரம் இருக்கு. அத சொல்லிட்டு வந்துடுறேன் ''-னு சொல்லிட்டு, தேன்கூட்டு கிட்ட போயி ஏதோ முனுமுனுத்தாரு.
எனக்கு பயங்கர ஆர்வம் வந்துடுச்சு
இந்த
ஆன்மீக பயிற்சியில இதுவரைக்கும் நான் நிறைய சாமியார்கள்கிட்ட பயிற்சி எடுத்துட்டு
இருக்கறதால, அந்த சமயத்துல எனக்கு
இந்த மாதிரியான மந்திரங்கள் மேல ஒரு தனிஈடுபாடு இருந்துட்டு இருந்தது.
அப்போ
என்னோட வயசும் ரொம்ப குறைவு. அதனால, மந்திரங்கள நிறைய கத்துகிட்டு, நாம மத்தவங்ககிட்டபோயி மேஜிக் மாதிரி நிறைய
விஷயங்கள செஞ்சுகாட்டனும்னு எனக்கு ஆசை .
அதனால
மரத்துமேல சாமியார் செய்யறத எல்லாம் நான் கூர்ந்து கவனிச்சிட்டே இருந்தேன்.
சாமியார்
மந்திரங்கள சொல்லி முடிச்சிட்டு, அந்த
மரத்துல இருந்து குச்சிய ஒடச்சிட்டு கீழே இறங்கினாரு.
தேனீக்கள் அவர ஒண்ணுமே பண்ணல. எனக்கு ஆச்சரியமா இருந்தது.
கீழே
வந்ததும், ''..ம்..நீ போயி உனக்கு குச்சி
ஒடைச்சிட்டு வா'' அப்படின்னாரு சாமி.
இங்க
அவங்கவங்களுக்கு வேண்டியத அவங்களே செஞ்சிக்கணும்ங்கறதுதான் நடைமுறை.
நான்
பதறிட்டேன்.
'' என்ன சாமி, உங்களுக்கு
மந்திரம் தெரியும், எனக்கு தெரியாது. தேனீ என்னை கொட்டிடுமே...நான் எப்படி மேல ஏற்ரதுன்னு …?'' தயங்குனேன்.
உடனே
அவரு, ''நீ மரத்து மேல ஏறு,
உனக்கு நான் மந்திரத்த சொல்லித்தரேன்''னாரு.
பயந்துகிட்டே
மரத்துல ஏறினேன். கொஞ்ச உயரம்
போனதும்தான் தேன்கூடு பக்கத்துல தெரிஞ்சது. கொஞ்ச, கொஞ்சமா பயம்
அதிகமாச்சு.
''சாமி..சாமி..'' ன்னு நான் கதறத்தொடங்கிட்டேன்.
உடனே,சாமியாரு,'பதறாத..இப்ப நான்
சொல்றமாதிரி செஞ்சிட்டு, மந்திரத்த
சொல்லனும் புரியுதா..? அப்படின்னாரு.
புதுசா
ஒரு மந்திரத்த கத்துக்கபோறோம்கிற சந்தோஷம் ஒருபக்கம்..இந்த தேனீகொட்டுனா உயிரே போயிடுமேங்கிற பயம் இன்னொருபக்கம்.
குரு
தரையில நின்னுகிட்டு…நான் மரத்து
மேல…இப்படி ஒரு மந்தரோபதேசம் வேற
யாருக்கும் வாச்சிருக்குமான்னு தெரியல.
அப்பதான்
சாமியாரு சொல்லத்தொடங்குனாரு,'' அந்த
தேன்கூட்டுக்கு கிட்ட போ…தேனீக்களுக்கு
ரொம்ப நெருக்கமா போ. அதுகள நேருக்கு
நேரா பாத்து இப்ப நான் சொல்றத சொல்லு…'நீங்க இருக்குற இடத்துக்கு பக்கத்துலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். அதனால, நான் உங்கள தொந்தரவு செய்ய மாட்டேன். நீங்களும் என்ன தொந்தரவு செய்யாதீங்க' … அப்படீன்னு சொல்லு. அதுங்க
ஒண்ணும் செய்யாது.''
''சாமி..இதுவா மந்திரம்..?''இது நான்.
''நான் சொல்றத சொல்லு..குறிப்பா.. உன்னோட உதடு தேனீக்களுக்கு ரகசியம் பேசற அளவுக்கு நெருக்கமா இருக்கணும்..''
''சாமி…அதுங்களுக்கு
எப்படி ஹிந்தி புரியும்...?''
''அதுகளுக்கு இதயங்களோட மொழி தெரியும். அதனால, எல்லா மொழியும்
அவங்களுக்கு புரியும். நீ பேசு..''
பயந்துகிட்டே
சாமி சொன்னமாதிரியே செஞ்சேன். தேனீங்க
என்ன ஒண்ணுமே பண்ணல. நான் குச்சிய
ஒடைச்சிட்டு கீழே வந்துட்டேன்.
''எப்படி சாமி இப்படி அமைதியாயிடுச்சுங்க…!''
''அதுதான் இந்த மந்திரத்தோட சக்தி. இன்னொரு விஷயத்த நீ ஞாபகத்துல வச்சிக்கோ. இந்த மந்திரம் உனக்குமட்டும்தான் பலன்தரும். இத நீ வேற யாருக்கும் உபதேசிக்கக் கூடாது. ஜாக்கிரதை. இத நீ எப்பவும்
மறக்காம ஞாபகத்துல வச்சுக்கோ'' அப்படின்னாரு
சாமி.
'அப்ட மந்தரா' (apta mantra)
யாருக்கு
என்ன பிரச்னையோ அதுக்கு தகுந்த மாதிரி தவயோக குருக்கள் சாதாரண வார்த்தைகள்ல கூட
தங்களோட சக்திய புகுத்தி பிரத்யேக மந்திரங்களாக்கி தருவாங்க. அத நேரடியா அனுபவிக்கிற பாக்கியம்
கிடைச்சதும் எனக்கு சொல்ல முடியாத ஆனந்தம்.
அதுல
இருந்து நான் எங்க வெளியில போனாலும், ஊருக்கு வெளியில காட்டுப்பகுதிகள்லதான் தங்கறது வழக்கம். அங்கயும் இதுமாதிரி தேனீக்கள் இருக்குற
மரங்கள்ல ஏறி இந்த மந்திரத்த பல முறை ஜனங்க முன்னாடி
செயல்படுத்திக்காட்டியிருக்கேன்.
எல்லாரும்
என்னோட தவசக்திய புகழும்போது எனக்கு ரொம்ப கர்வமா இருக்கும். அப்போ புகழ்ச்சிக்கு மயங்குற என்னோட வயசும், முடிவுபெறாத தவபயிற்சிகளும்., இதுலயே நான் எல்லாத்தையும் அடைஞ்சிட்டதா ஒரு
திருப்திய எனக்கு கொடுத்தது.
இந்த
சமயத்துல தான் பஞ்சாப்ல என்ன பாத்து ஆசீர்வாதம் வாங்கவந்த ஒரு பக்தருக்கு இந்த
தேனீ மந்திரத்து மேல ரொம்ப ஆர்வம் வந்துடுச்சி
அவரு
என்கிட்டவந்து எனக்கு எப்படியாவது இந்த
மந்திரத்த சொல்லிக்கொடுங்கன்னு கெஞ்சி கேட்டுகிட்டாரு.
'இந்த
மந்திரம் உனக்கானது… இத வேற
யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு' சாமி எனக்கு சொன்னத நான் சுத்தமா மறந்தே போயிட்டேன்.
உடனே,,அந்த பஞ்சாபிக்கார்ருக்கு தேனீ மந்திரத்த
சொல்லிகுடுத்தேன்.
அவளோதான்…அவருக்கு தாங்கமுடியாத சந்தோஷம்.
எனக்கு
நன்றி சொல்லிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு ஓடிப்போன அந்த மனுஷன் உடனடியா இந்த
மந்திரத்த செயல்படுத்தி பாக்க தொடங்கியிருக்காரு.
நல்ல
மலைத்தேனீங்க இருக்குற காட்டுப்பகுதியில போயி மரத்துல ஏறி..தேன்கூட்டுக்கு பக்கத்துல முகத்த வச்சிகிட்டு....மந்திரத்தச்சொல்ல… சொல்ல…
அடுத்த விநாடி அவர விரட்டி.. விரட்டி… தேனீக்கள் கொட்டி
தீத்திருச்சு.
மனுஷன்
மயக்கமாகி கீழே விழுந்துட்டாரு. ஹாஸ்பிடல்ல
சேர்த்துட்டு எனக்கு தகவல் கொடுத்தாங்க..
அங்க
போயி பாத்தா… அந்த பக்தர் கோமாவுக்கு
போயிட்டாருன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க…மூணுநாளு ஆகியும் அவரு கண்ணு திறக்கல.
அநியாயமா
ஒரு பக்தர சோதனைக்கு ஆளாக்கிட்டமேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்.
ஒருவேள..இனி..பொழைக்கமாட்டாரோ...
நாமதான் இவர கொன்னுட்டமோன்னு..நினைச்சதும்,
என்னோட கலக்கம் அதிகமாகிடுச்சு.
உடனே, அந்த ஹாஸ்பிடல்ல இருந்துகிட்டே, எனக்கு இந்த மந்திரத்த உபதேசித்த சாமிய
நினைச்சு தியானிக்கத் தொடங்குனேன்.
எப்படியாவது
இந்த பக்தர காப்பத்துங்கன்னு தீவிரமா பிரார்த்தனை செஞ்சேன்.
திடீர்னு, அந்த ஹாஸ்பிடல்லயே சாமி எனக்கு முன்னாடி வந்து
நின்னாரு. ''என்ன வேலை செஞ்சு
வச்சிருக்கே நீ..
உன்னோட சக்திய
நிரூபிக்கறதுக்காக ஒருத்தன சாகற அளவுக்கு செஞ்சிட்டியே. இதுவே உனக்கு கடைசி பாடம். இந்த
ஆள் நாளைக்கு காலையில சரியாயிடுவாரு. ஆனா, உனக்கு நான் குடுத்திருந்த இந்த மந்திரசக்திய
நான் திரும்ப எடுத்துகிட்டேன். இனிமே, அது உனக்கும் வேல செய்யாது''
அப்படின்னு சொல்லிட்டு
அங்கேயிருந்து போயிட்டார.
மகான்களோட
சாதாரண வார்த்தைகள் கூட மந்திரம்தான்னு அப்பதான் எனக்கு புரிஞ்சது.
இப்படி
ஒரு தேனீ மந்திரத்த சொல்லிக்கொடுத்து, அது மூலமா ஒரு பாடத்த புரியவச்ச அந்த சாமியார் டாட் வாலா பாபா(TAT WALA BABA)
![]() |
TAT WALA BABA |
தன்னோட
குருமூலமா கிடைச்ச இந்த அனுபவங்கள பகிரங்கமா உலகத்தோட பகிர்ந்துகிட்டவர் சுவாமி ராமா.
![]() |
SWAMY RAMA |
ஹிமாலயாஸ்ல ஏராளமான குருக்கள்கிட்ட பல
அற்புதமான யோகசாஸ்திரங்கள கத்துகிட்டு, பின்னாள்ல உலகம் முழுக்க பிரபலமா இருந்தாரு சுவாமி ராமா.
--------------------தொடரும் குருபரம்பரை
0 comments:
Post a Comment