Friday, May 15
Thursday, March 12
Monday, January 27
Sunday, September 9
கோவிந்தனிடம் என்ன வரம் கேட்கலாம்..! ஒரு பெரியவர் சொல்லிக்கொடுக்கும் ரகசியம்..!!
![]() |
| ஸ்ரீராமஜெயம் |
வயதான
தொண்டுகிழம்..எந்த நேரமும் உயிர் இந்த உடலை விட்டுப்பிரியலாம். தன்னலமில்லாத மனிதர்.
அதனால்தானோ என்னவோ, இந்த பிரபஞ்சமே அவருக்கு தனது ரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்திவிட்டது.
இயற்கையின் அதீதமான உண்மைகளை புரிந்துகொண்ட ஒரு மனிதன், தனக்குள்ளேயே அடங்கிவிடுவான்.
கடல் அலையின் ஆர்ப்பரிப்புகள் அடங்கினதைப்போல, அவருடய மனம் எப்போதும் ஒரு லயத்துக்குள்ளேயே
இருந்துவந்தது. பிரபஞ்ச ரகசியங்களை அறிந்த அந்த முதியவருக்கு நினைத்த நேரத்தில் அந்த
பிரபஞ்ச நாயகனும் வந்து தரிசனம் கொடுப்பார்.
ஒரு குறிப்பிட்ட
நிலையை கடந்துவிட்டால், தேவைகளுக்காக அந்த பிரம்மாண்ட நாயகனை நினைப்பது அற்றுப்போய்விடும்.
நமக்கான ஒரு சுகமான நட்பைப்போல நம் எல்லோருடனும் அந்த பிரபஞ்சநாயகன் வந்து உறவாடிவிட்டுப்போவார்.
அப்படித்தான்
தனிமையில் ஏகாந்தத்துடன் இருந்த பெரியவருக்கு முன்னால் வந்து நின்றார் பிரபஞ்ச நாயகன்.
ஒருவரையொருவர் காதலுடன் பார்த்து புன்முறுவல் பூத்துக்கொண்டனர். எல்லா சுவைகளுக்கும்
நாதன் அவன். அப்படி ஒரு தலைவனின் வருகை அந்த இடத்தையே கூடுதலாக மணக்கச்செய்யுமே. அப்படித்தான்
இருந்தது அந்த இடமும்.
காரணமில்லாமல்,
இருவரும் சிரித்துக்கொண்டனர். பேசிக்கொள்ள ஏதுமில்லை. எதிர் எதிரே அமர்ந்து சிறிதுநேரம்
ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக்கொண்டனர். தனது உயிருக்கு அந்த பிரபஞ்சநாயகனை உணவாக்கிக்கொடுத்துக்கொண்டிருந்தார்
அந்த பெரியவர்.
குறுகுறுவென
பார்த்துக்கொண்டே இருந்தால், நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்.
திடீரென சுதாரித்துக்கொண்ட
பிரபஞ்சநாயகன்,
'...சிறிதுநேரம் நாம் விளையாடலாமா..? என்று
கேட்டார்.
ஆதவனின் ஆசைக்கு அணைபோட முடியுமா. உடனே சம்மதித்தார் பெரியவர். இருவரும்
பகடை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தனர்.
![]() |
| திருமலை திருப்பதி மெயின் கோபுரத்திற்கு எதிர்புறம், ஹாதிராம் பாவாஜி பெருமானுடன் விளையாடிய காட்சி உருவகப்படுத்தப்பட்டுள்ளது. |
விளையாட்டின் ஊடே லேசான உரையாடல். அவற்றிற்கு
மென்மையாய் பதிலளித்துக்கொண்டே இருந்தார் பெரியவர்.
‘…கேட்டதைக்கொடுக்கும்
பிரபஞ்சநாயகன் உங்கள் முன்னே இருக்கிறேன். என்னிடம் கேட்பதற்கு உங்களுக்கு ஒன்றுமே
இல்லையா..’
ஏதோ ஒன்றை
யாசிப்பதைப்போல் இருந்தது நாயகனின் கேள்வி. உலகமே என்னிடம் எதையாவது கேட்டுக்கொண்டே
இருக்கிறது. உனக்கு மட்டும் என்னிடம் இருந்து கேட்க ஒன்றுமே இல்லையா என்கிற கவலை அதில்
இருந்தது.
‘…பரந்தாமா…இந்த
வயதான காலத்தில் எனக்கு என்ன வேண்டியிருக்கிறது. நினைத்தபோதெல்லாம் நீயே வந்துவிடுகிறாய்,
அதைவிட உயர்வானது வேற என்ன …?
இந்த ஒரே
கேள்வி நாயகனை மடக்கிப்போட்டுவிட்டது.
விடுவான
அந்த மதுசூதனன். ஆசைகளால் தூண்டில் போட ஆரம்பித்தான்.
‘..உங்களுக்கு
இந்த உலகிலேயே உயர்ந்த செல்வம் வேண்டுமா..கேளுங்கள் தருகிறேன்..’
‘..பாண்டுரங்கா..உனது
பலவிதமான பெயர்களை எனது நாவால் உச்சரிப்பதைவிட உயர்வான ஒரு செல்வத்தை உம்மால் கொடுக்கமுடியாது.
அது என்னிடம் நிறைய இருக்கிறது.’
‘..அப்படியானால்..உங்களுக்கு
ஆட்சி அதிகாரம் ஏதாவது..’
‘..இந்த
உடலையே இன்னும் இந்த உயிர் எத்தனை நாளைக்கு ஆளும் என்பது எனக்குத்தெரியாது. அப்படியிருக்க..இந்த
உயிர் தங்கியிருக்கும் உடலுக்கு ஒரு ஆட்சி அதிகாரம் கிடைத்து என்ன செய்யப்போகிறேன்..’
‘…உங்களின்
அன்புக்கு நான் எதையாவது தரவேண்டும் என்று துடிக்கிறேன். எனது தவிப்பு உங்களுக்கு புரியவில்லையா…’
என ஏக்கத்துடன் கேட்டான் பிரபஞ்சநாயகன்.
‘…செல்வமோ,
ஆட்சி அதிகாரமோ எனக்கு வேண்டாம் நாயகனே..’
‘..சொல்லுங்கள்…அப்படியானால்
நான் உங்களுக்கு என்னதான் தருவது..’
‘..எனக்கு
ஒன்றே ஒன்றுதான்..’
எதுவுமே
வேண்டாம் என்ற பெரியவருக்கு தனக்கு ஒரே ஆசை என்றதுமே கோபாலனுக்கு பேரானந்தம். இவரும்
ஆசையில் சிக்கிவிட்டார். என்ன கேட்கப்போகிறார் எனப் பார்ப்போம் என ஆவலுடன் அவர் பேசப்போவதை
எதிர்பார்த்து காத்திருந்தார்.
தயங்கித்தயங்கி
தனது எண்ணத்தை வெளிப்படுத்த தொடங்கினார் பெரியவர்.
‘…கோவிந்தா…எனது
உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி எனது நினைவு
இல்லாமல் போய் விடுகிறது. எப்போது வேண்டுமானாலும் எனக்கு முழுவதுமான நினைவு தப்பிப்போகலாம்.
அப்படி ஒருவேளை உன்னை நான் மறக்கும் நிலை வந்து நான் உன்னை நினைக்க மறந்துபோகலாம்..,
…நான்
நினைத்த நேரத்தில் எல்லாம் வந்து என்னைப் பார்த்துவிட்டுபோன நீ, என் நினைவு தப்பி உன்னை நான் முற்றிலுமாக மறந்துவிட்ட அந்த சமயத்திலும் நீ தான் என்னை
மறக்காமல் நினைவால் பற்றி இருக்கவேண்டும்.
என் நினைவு எனும் உறுப்பு செயலிழந்துபோனாலும், உனது நினைவிலாவது எப்போதும் நான் இருக்கவேண்டும்... பரந்தாமா..'
வேண்டுதலில்
விக்கித்துப்போனது பெரியவர் மட்டுமல்ல…அந்த கோபாலனும்தான். அப்படியே
ஆகட்டும் என மனமுருகி வரமளித்தார் ரங்கன்.
![]() |
| ஹாதிரம் பாபாஜி மடம், திருமலை |
அதுதான் இன்றுவரையிலும் அந்த பெரியவரின் புகழை கோவிந்தன் நினைவு கூர்ந்துகொண்டிருக்கிறார்.
இப்படி ஒரு வித்யாசமான வரம் கேட்ட அந்த பெரியவர்
ஹாதிராம் பாபாஜி. அவர்தான், திருமலை தேவஸ்தானம் உருவாவதற்கு முன் திருமலையின் பொறுப்புக்களை கவனித்து
வந்த ஒரு மகான்.
![]() |
| ஹாதிராம் பாபாஜி மடம், திருமலை |
திருமலை
திருப்பதியில் அவரது ஆசிரமம் இருந்த இடத்தில் இன்றும் வழிபாடுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
![]() |
| ஹாதிராம் பாபாஜி |
தேவைகள் தீரவே நாம் திருப்பதிக்கு சென்று வருகிறோம். ஆனால், அந்த கோவிந்தனின் நாமத்தை
சொல்லுவதே ஒரு மிகப்பெரிய செல்வம் என்றும், அவரை நினைத்துக்கொண்டிருப்பதே மிகப்பெரிய
அதிகாரம் என்றும் நம்பிய அந்த மகானுக்கு கோவிந்தன் திருமலையில் தனது சாம்ராஜ்யத்தில்
மிகப்பெரிய இடம் கொடுத்திருக்கிறார். இனியாவது கோவிந்தனுக்கு நன்றி சொல்லிப் பழகுவோம்.
![]() |
| கோவிந்தா..! |
இனி கோவிந்தனிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என
பாடிக் குதூகலிப்போம்.
Friday, May 25
வாங்க ஞானியாகலாம்..!
![]() |
| சித்தர்பூமி |
இங்கே உங்களோட பார்வைக்காக நம்மோட சித்தர்பூமி யூ டியூப் சேனலோட லிங் சிலதை இணைத்திருக்கோம். இனி, இந்த பிளாகிலும் தொடர்ந்து பதிவுகள் வெளியாகும்.
1. ஸ்ரீ பகவத் அய்யா
2. கவனகர் ராம கனக சுப்பு ரத்தினம் அய்யா
3.எழுத்தாளர் பாலகுமாரன்
4.சத்குரு ஸ்ரீ ராஜ்குமார் சுவாமிகள்
5.வாங்க ஞானியாகலாம்..!
6. சுவாமினி பிரமானந்தா
7.நடிகர் ஸ்ரீகாந்த்
Thursday, April 19
சித்தர் பூமி ...விரைவில்..!
2014 முதல் வேந்தர் டிவியில் வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சி மூன்றாவது கண். பல தடைகளையும், பல சிரமங்களையும் எதிர்கொண்டபடிதான் அந்த நிகழ்ச்சி உலக மக்களின் பார்வைக்கு சென்று சேர்ந்தது. இன்று உலகம் முழுக்க மூன்றாவது கண் நிகழ்ச்சிக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
மற்றவையெல்லாம் பொழுதுப்போக்கும் நிகழ்ச்சிகளாக இருக்க, மூன்றாவது கண் நிகழ்ச்சி மட்டும் பலரது துன்பங்களை போக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பலருக்கும் வழிகாட்டியிருக்கிறது. அதன் பிரதிபலனாக, மூன்றாவது கண் நிகழ்ச்சியை இனியும் வேந்தர் டிவியில் தொடர்வதில் சிக்கல்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
அதனால், தற்போது, ஒரு புதிய வாய்ப்பாக இணையத்தின் வழியாகவே உலகின் பார்வைக்கு நிகழ்ச்சியை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இனி, வெகு விரைவில் ’சித்தர் பூமி’ எனும் புதிய பெயருடன் நமது நிகழ்ச்சி உங்களது பார்வைக்கு வரவிருக்கிறது. சில தொலைக்காட்சிகளிலும் கூட நமது நிகழ்ச்சி குறித்து கேட்டுள்ளனர். எது எப்படி இருப்பினும் உடனடியாக, சித்தர் பூமி வெகு விரைவில் யூடியூப் வழியாக உங்களை வந்து சேரவிருக்கிறது.
சித்தர் பூமி இந்த யூடியூப் லிங்கில் இணைந்திருங்கள்..., நமது சித்தர் பூமி புதிய எபிசோட் வெகு விரைவில் அப்லோட் செய்யப்பட உள்ளது. நன்றி..,
மற்றவையெல்லாம் பொழுதுப்போக்கும் நிகழ்ச்சிகளாக இருக்க, மூன்றாவது கண் நிகழ்ச்சி மட்டும் பலரது துன்பங்களை போக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பலருக்கும் வழிகாட்டியிருக்கிறது. அதன் பிரதிபலனாக, மூன்றாவது கண் நிகழ்ச்சியை இனியும் வேந்தர் டிவியில் தொடர்வதில் சிக்கல்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
அதனால், தற்போது, ஒரு புதிய வாய்ப்பாக இணையத்தின் வழியாகவே உலகின் பார்வைக்கு நிகழ்ச்சியை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இனி, வெகு விரைவில் ’சித்தர் பூமி’ எனும் புதிய பெயருடன் நமது நிகழ்ச்சி உங்களது பார்வைக்கு வரவிருக்கிறது. சில தொலைக்காட்சிகளிலும் கூட நமது நிகழ்ச்சி குறித்து கேட்டுள்ளனர். எது எப்படி இருப்பினும் உடனடியாக, சித்தர் பூமி வெகு விரைவில் யூடியூப் வழியாக உங்களை வந்து சேரவிருக்கிறது.
சித்தர் பூமி இந்த யூடியூப் லிங்கில் இணைந்திருங்கள்..., நமது சித்தர் பூமி புதிய எபிசோட் வெகு விரைவில் அப்லோட் செய்யப்பட உள்ளது. நன்றி..,
Monday, October 26
Tuesday, June 23
இன்று, வேந்தர் டிவி, மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..ஓம்கார் ஸ்வாமிகள்..!
உங்கள் வேந்தர் டிவியில்..,
மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..,
இன்று இரவு 9.30 மணிக்கு..,
மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..,
இன்று இரவு 9.30 மணிக்கு..,
# தண்ணீரை மருந்தாக மாற்றும் மந்திரங்கள்..!
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் முன்னிலையில் நிரூபித்துக்காட்டிய சாமியார்.
வேதங்களில் மறைந்திருக்கும் ரகசியங்கள்..,
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் முன்னிலையில் நிரூபித்துக்காட்டிய சாமியார்.
வேதங்களில் மறைந்திருக்கும் ரகசியங்கள்..,
டெயில்பீஸ்; தண்ணீரை மந்திரிச்சுதான் நம்ம முன்னோர்கள் பயன்படுத்தி இருக்காங்க. அதை இன்னைக்கு எபிசோட்ல சயின்டிபிகலா, விளக்கியிருகாரு ஓம்கார் ஸ்வாமிகள். ஒவ்வொரு மந்திரத்துக்கும், தண்ணியில ஒரு வடிவம் உருவாகுது. அது பார்க்க வைர ஆபரணம் மாதிரி இருக்கு. இன்னைக்கு எபிசோட் பார்க்கிற எல்லாரையும் பிரமிக்க வைக்கும் அப்படிங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை.
![]() |
| வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 01 |
![]() |
| வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 02 |
![]() |
| வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 03 |
![]() |
| வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 04 |
![]() |
| வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 05 |
![]() |
| வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 06 |
![]() |
| வேந்தர் டிவி- மூன்றாவது கண் நிகழ்ச்சி 07 ..இன்று இரவு 9.30 மணிக்கு, வேந்தர் டிவி..மூன்றாவது கண் நிகழ்ச்சியில்..ஓம்கார் ஸ்வாமிகள் |
Sunday, May 17
காசியின் உண்மையான முகங்களைத் தேடி ஒரு பயணம்..!
பிணம் திண்ணும் அகோரிகள்.,
கஞ்சா புகைக்கும் சாமியார்கள்..,
எந்த நேரமும் பிணங்களை எரிக்கும் கங்கைக்கரை..,
இவையெல்லாம் தான் காசியா..,
இவை மட்டும்தான் காசியா..,
காசியின் உண்மையான முகங்களைத் தேடி ஒரு பயணம்..!
...திங்கள்(18மே) நாளை முதல்,
ஒவ்வொரு திங்கட்கிழமையிலும்
இரவு 9.30 மணிக்கு..,
உங்கள் வேந்தர் டிவியில்..,
THE REAL KASI..,
Moondravathu Kan -Exclusive
The Real Kasi 01
The Real Kasi 02
The Real Kasi 03
The Real Kasi 04
The Real Kasi 05
The Real Kasi 06
The Real Kasi 07
The Real Kasi 08
The Real Kasi 09
The Real Kasi 10
கஞ்சா புகைக்கும் சாமியார்கள்..,
எந்த நேரமும் பிணங்களை எரிக்கும் கங்கைக்கரை..,
இவையெல்லாம் தான் காசியா..,
இவை மட்டும்தான் காசியா..,
காசியின் உண்மையான முகங்களைத் தேடி ஒரு பயணம்..!
...திங்கள்(18மே) நாளை முதல்,
ஒவ்வொரு திங்கட்கிழமையிலும்
இரவு 9.30 மணிக்கு..,
உங்கள் வேந்தர் டிவியில்..,
THE REAL KASI..,
Moondravathu Kan -Exclusive
The Real Kasi 01
The Real Kasi 02
The Real Kasi 03
The Real Kasi 04
The Real Kasi 05
The Real Kasi 06
The Real Kasi 07
The Real Kasi 08
The Real Kasi 09
The Real Kasi 10
Tuesday, March 31
அடுத்த சில மாதங்களில்..இவையெல்லாம் தலைப்புச்செய்தியாகும்..! அகத்தியர் ஜீவநாடி அமானுஷ்யங்கள்..!!
இனிய உறவுகளுக்கு, அன்பு வணக்கங்கள்..,
நான் கொஞ்சநாளா, இந்தப்பக்கமே வராம இருந்துட்டேன். அதுக்கெல்லாம் உங்க கிட்டே வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். அதுக்கு காரணம் இருக்கு. சில மாதங்களா, வேந்தர் டிவியில மூன்றாவது கண் அப்படிங்கிற ஒரு நிகழ்ச்சிய பத்தி நீங்க எல்லாம் கட்டாயம் கேள்விப்படிருப்பீங்க. நான்தான் இந்த நிகழ்ச்சியோட இயக்குநர். அதனாலதான், கொஞ்சம் பிசி ஆகிட்டேன். ஆனா, இப்போ, எல்லாம் சித்தர்கள் வழிகாட்டுதலோட, சிறப்பா நடந்துட்டு இருக்கு. இந்த மூன்றாவது கண் நிகழ்ச்சியில, நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் பல கேரக்டர்ஸ் இதுவரைக்கும் வந்துபோயிருக்காங்க. அதுல, இன்னைக்கு வரவிருக்கிற ஒருத்தர் என்னை ரொம்பவே அசத்திட்டாரு. இவரோட predictions ரொம்பவே துல்லியமா இருக்கு. இவர்கிட்ட சில வருஷங்களுக்கு முன்னாடியே, நரேந்திரமோடிக்கு அவரோட குடும்பத்தார் ஜீவநாடி பார்த்திருக்காங்க. 8 வருஷத்துல பிரதமராவாருன்னு அதுல வந்தபடியே இப்போ மோடி பிரதமாகியிருக்காரு. இப்படி, இந்த ஜீவநாடி சொல்ற பாபு ரொம்பவே சிம்பிளானவரா இருக்காரு. இவருக்குள்ள அகத்தியர் வந்துதான் இப்படி வாக்கு சொல்றதா இவரு சொல்ராரு.
![]() |
| அகத்தியர் |
கிரந்த தமிழ்னு சொல்லிட்டு இவரு வித்யாசமான மொழியில பாட்டு படிச்சு, பலன் சொல்ல தொடங்குறாரு. அதெல்லாமே இன்ட்ரஸ்டிங்கான மேட்டர்தான் ...இன்னைக்கு முடிஞ்சா, தவறாம வேந்தர் டிவிய, ராத்திரி 9.30 மணிக்கு பாருங்க. இந்த எபிசோட்ல நம்ம மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக, ஒரு ஸ்பெஷல் பிரடிக்ஷன் பார்த்து சொல்லியிருக்காரு.அதுல சில பயங்கரமான விஷயங்கள் மறைஞ்சிருக்கு. இதெல்லாம்தான் அடுத்து வரும் மாதங்கள்ல மீடியாக்களால பரபரப்பா பேசும் விஷயங்களா இருக்கும்னு இவரு மூலமா அகத்தியர் சொல்லியிருக்காரு...இன்னைக்கு எபிசோட் பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க..!
இவரு நம்மோட மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக, ஸ்பெஷலாஒரு prediction பார்த்தாரு.அதுல இவரு சொல்லியிருக்கிறது இதெல்லாம்தான்..,
# ஒரு நடிகையோட திருமணம் தடை படும்..
# ஒரு நடிகர் கட்சி தொடங்குவார்
# ஒரு நடிகர் மரணம் அடைவார்..,
# ஒரு பெண் அரசியல் வாரிசுக்கு பிரச்னை வரும்
இப்படி தமிழகத்துல மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கும் சில விஷயங்களை கணிச்சு சொல்லியிருக்காரு.
இதெல்லாம் இந்த ஒன்றரை மாசத்துல நடக்கும்னு பாபு சொல்லியிருக்காரு.
இன்னைக்கு எபிசோட், ஒரு திரில்லிங்கான எக்ஸ்பீரியன்ஸ்..!
# ஒரு பெண் அரசியல் வாரிசுக்கு பிரச்னை..!
கட்சி தொடங்கவிருக்கும் ஒரு நடிகர்..!!
விவிஐபிக்கள் பார்த்து வியந்த
ஜீவநாடி ஜோதிடத்தின் அதிரடி கணிப்புகள்..!
கட்சி தொடங்கவிருக்கும் ஒரு நடிகர்..!!
விவிஐபிக்கள் பார்த்து வியந்த
ஜீவநாடி ஜோதிடத்தின் அதிரடி கணிப்புகள்..!
...மூன்றாவது கண் அனுபவங்களோடு மீண்டும் சந்திப்போம்.
Saturday, June 28
' சென்னையில் வாழ்ந்த பறக்கும் பெண் சித்தர்..! ' தமிழ்த்தென்றல் திருவிகாவே நேரில் பார்த்திருக்கிறார்..!!
"…சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம்
சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும்.
அவ்வம்மையார்
பறவையைப் போல் வானத்தில் பறப்பார்.
ஒருமுறை யான்
வசித்த கல்லூரியின் மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம்
பறக்கிறது என்றால் விந்தையல்லவா?
அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர்
சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர்.
அப்போது சென்னை
மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது.
அம்மையார் பறவை
இனத்தில் சேர்ந்தவர் என்றும் அவரிடம் பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன
என்றும், ஊர்தல் (Evolution) அறப்படி அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று
அவரால் விளக்கப்பட்டது.
அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லலை.
யான் தேசபக்தன்
ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்டாவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ்
அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்.
பறவை நாயகியர்
நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்…"
-இது 'உள்ளொளி' நூலில் தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள்
பறவை சித்தர் பற்றி எழுதிய குறிப்பு.
இப்படிக் குறிப்பிடப்படும் அந்த பறவை சித்தரின் பெயர் ஸ்ரீசக்கரை அம்மா..,
சிவனையும், ஸ்ரீசக்ரத்தையும் வழிபட்டு வந்ததால், இவருக்கு ஸ்ரீசக்ர அம்மா என்றிருந்த பெயர் மருவி, காலப்போக்கில் ஸ்ரீ சக்கரை அம்மாவாக மாறிப்போனது..,
அட்டமா சித்திகளில் ஒன்றான, லஹிமா எனும் காற்றில் பறக்கும் சித்து கைவரப்பெற்ற மகாயோகி இவர்.அப்படி இவர் பறந்ததால் அப்போது சென்னையில் ஏற்பட்ட பரபரப்பைத்தான் திருவிகவே தனது நேரடி சாட்சியமாக பதிவு செய்து வைத்திருக்கிறார்..,
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப்பரதேசி, போளூர் விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ ரமண மகரிஷி போன்றோருடன் ஸ்ரீ சக்ர அம்மாவிற்கு சந்திப்பு நிகழ்ந்தவைகளுக்கான ஆதாரங்கள் உள்ளன..,
அம்மா மஹாசமாதி அடைந்த பிறகு, இவரது சமாதிக்கு வந்த மஹாபெரியவா இங்கு ஐந்து நாட்கள் தங்கி இருந்து தவம் செய்திருக்கிறார்..,
எத்தனை பெரிய சக்திமையமாக அம்மாவின் மஹாசமாதி இருக்கும் என்பதை மஹாபெரியவா இந்த இடத்தை தேர்வு செய்ததிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம்..,
இத்தனை மகத்துவம் வாய்ந்த ஸ்ரீசக்ர அம்மாவின் மஹாசமாதி சென்னை திருவான்மியூரில் கலாஷேத்திரா ரோடில் அமைந்துள்ளது.
ஸ்ரீசக்கரத்தின் சக்தி பிரவாகமாக, திகழும் இந்த மஹாசமாதியில் அம்மாவின் சிலையுடன் ஒரு கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நாளை 29 (ஜூன்) காலை 7.30முதல் 9மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
நேரில் தரிசிக்க வாய்ப்பு இருப்பவர்கள் சென்று, ஸ்ரீ சக்ர அம்மாவின் பரிபூரண அருளை பெறுங்கள்..குருவே சரணம்..!
தொடர்புகொள்ள ; விஸ்வநாத குருக்கள் -9444017389
Thursday, June 26
அதிசய நிகழ்வின் வீடியோப்பதிவு...! ராம நாமத்தை நேரில் கேட்க வந்த குரங்கார் (அனுமன்)..!
'ராமநாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள்' (முந்தைய பதிவு)
இதுதான் நம்ம பிரபஞ்சவெளியில் பிளாக்ல இதுவரை எழுதப்பட்ட பதிவுகள்லயே, அதிகம் பேரால் ரசிக்கப்பட்ட ஒரு பதிவு..,
காரணம், இந்த படங்கள்ல இருக்குற பக்தி பலரையும் சிலிர்க்கவைத்தது..,
அப்படிப்பட்ட நிலையிலதான், இன்னைக்கு எதிர்பாராம,
அதே நிகழ்வோட ஆதாரமா,
அந்த ராமாயண உபன்யாசத்துக்கு குரங்குவந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் கிடைச்சது..,
புகைப்படங்களப்பாத்து நம்பிக்கை வராதவங்க கூட இந்த வீடியோவ பார்த்தா, நிச்சயம் பிரமிச்சுதான் போவாங்க..,
ஒரு சின்ன ரீகேப்;
இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஒரு முக்கிய நகரம் ரட்லம் (Ratlam). இங்கு ஊரின் மையப்பகுதியில காளிகாமாதா கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ ராமாயண சரிதம் உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது, யாருமே எதிர்பாராமல் திடீரென, மேடைக்கு வந்த ஒரு வெண்குரங்கு, சிறிதுநேரம் ராமாயண உபன்யாசத்தை மேடையில் அமர்ந்து கேட்டுவிட்டு, அந்த உபன்யாசகரை கட்டித்தழுவி, தலைமீது, கைவைத்து ஆசி கூறிவிட்டு, அங்கிருந்த ஸ்ரீ ராமர் படத்தை வணங்கிவிட்டு சென்றது..,
பார்த்து ரசியுங்கள்...ராமநாமம் ஜெபியுங்கள்..!
ஜெய்ராம்..ஸ்ரீராம்..ஜெய்..ஜெய்ராம்..!
Sunday, June 15
'வெள்ளிப்பேழையை பரிசளிப்பவர்தான் உனது குரு..!' வெளிநாட்டு அன்பருக்கு விவேகானந்தர் சொன்ன தீர்க்க தரிசனம்..!!
உலகம் ஓர் அற்புதம்…அந்த அற்புதம் எத்தனையோ கோணங்களில் எத்தனையோ முறைகளில்
வெளிப்படும் விதங்கள்கூட அதிசயங்களே…
அந்த அதிசயங்கள் பலநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஞானியாக, ஒரு
சித்தபுருஷனாக பூவுலகில் அவதரிக்கின்றன.
ராமனோ, கண்ணனோ, ஏசுவோ, நபிகளோ…அப்படி அவதரித்தவர்களே.
ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் அப்படி அவதரித்தவர்களே ஆவர்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
மாக்ஸ்முல்லர் என்ற மகான், “உலகில் மனிதனாகப் பிறப்பதோடு பாரதத்திலும்
பிறக்க வேண்டும். ஆன்மிக உலகில் பாரதத்திற்கு அப்படி ஒரு சிறப்பு உண்டு” என்று கூறினார்.
இந்த மண்ணில் எத்தனையோ சித்த புருஷர்கள்.
நரேந்திரன் என்ற சாதாரண மனிதன் சுவாமி விவேகானந்தனாக நிமிர்ந்ததும்
இங்குதான்- ராமகிருஷ்ண தேவர் கருணையால்!
அந்த விவேகானந்த சித்த புருஷனை உலக அரங்கினுக்கு அனுப்பிவைத்த பெருமையும்,
அந்த ஞானவள்ளல் நாடு திரும்பியதும் அரசரே முன்னின்று அடியார்கள் புடைசூழ வரவேற்ற பெருமையும்
இந்த மண்ணுக்கு உண்டு!
திக்குதிசை தெரியாத அமெரிக்க நாட்டில் அவருக்கு இந்த நாட்டின் சமயம் சார்ந்த
மடம் ஒன்றை சான்று கேட்ட சமயம், “அந்த நாய் அங்கேயே பனியில் விரைத்துச் சாகட்டும்”
(Let the dog freeze and die) என்று பதில் அளித்த தாம். ( இதனை எடுத்துக்
கூறியவர் லூயி ஃபிஷர்)
அச்சமயம் அவரை அடையாளம் கண்டுகொண்ட ஹார்வார்ட் பல்கலைக்கழக பேராசிரியர்
ரைட் விவேகானந்தரைப் பார்த்து, “ஐயனே உங்களைப் பார்த்து சான்றிதழ் கேட்பது சூரியனைப்
பார்த்து ஒளி வீச உனக்கென்ன தகுது இருக்கிறது என்று கேட்பது போல இருக்கிறது” என்றாராம்!
“To ask you, Swami, for credentials is like asking the sun to
state its right to shine”
என்று கூறுவிட்டு, அந்த சர்வ சமய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பாரோசுக்கு
தானே இவ்வாறு கடிதமும் எழுதினாராம்:
“நம்முடைய மிகவும் படித்த எல்லா பேராசிரியர்களையும் ஒன்றாகக்கூட்டினாலும்,
அவர்களைவிட, மெத்தப் படித்த மனிதர் இவர்…” என எழுதினாராம். அங்கு அவரது வாக்கெல்லாம்
ராமகிருஷ்ணரது வாக்காகவே இருந்தது.
அவரை சித்தபுருஷனென ஏன் கூறுகிறோம்?
ஒரு அமெரிக்க அன்பர் விவேகானந்தரை குருவாக ஏற்றுக்கொள்ள கேட்டுக்கொண்ட
சமயம், “உனக்கென குருநாதன் பிற்காலத்தில் வரப் போகிறார்” என்று கூறினாராம்.
அவரை எப்படி அடையாளம் காண்பது எனக் கேட்டபோது, “அவர் உனக்கு ஒரு வெள்ளிப்
பேழையை பரிசளிப்பார்” என்று கூறினாராம்.
அவர் கூறியதைப் போலவே பல
ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமெரிக்க அன்பருக்கு பரமஹம்ஸ யோகானந்தர் வெள்ளிப் பேழையைப்
பரிசாக அளித்தாராம்!
அந்த அமெரிக்க அன்பர் விவேகானந்தரின் தீர்க்க தரிசனத்தை வியந்தாராம்!
“கோடிக்கணக்கான மக்கள் பட்டினியாலும், பசியாலும், அறியாமையாலும் வாடும்வரை
யாருடைய வாழ்வையும் அழித்து தாம் கல்வி கற்றார்களோ அவர்களை கொஞ்சமும் நினைக்காத அவர்களை
துரோகிகள் என குற்றம் சாட்டுகிறேன்” என விவேகானந்தர் குமுறினார்.
ஒருமுறை விவேகானந்தர் ஐரோப்பா சென்றபொழுது, ஜெர்மனியில் வேதங்களை ஐம்பது
ஆண்டுகள் முயன்று மொழிபெயர்த்து புத்தகங்களாக்கிய மாக்ஸ்முல்லரையும், உபநிடதங்களையும்
கீதையையும் மொழிபெயர்த்த டஸ்கன் என்பவரையும் சந்தித்திருக்கிறார்.
(இந்த டஸ்கனின் மொழிபெயர்ப்பிலே திளைத்த ஸ்கோபன்ஹேவர் என்பவர் அவரது நூல்களை
தலையில் வைத்து தெருவெல்லாம் கூத்தாடினாராம்).
விவேகானந்தர் தம் கடைசி நாட்களில் இவ்வாறு கூறினார்:
“…இந்த உடம்பை பழைய, கிழிந்த சட்டையைப் போல களைந்து எறிந்தாலும், இந்த
உலகம் இறைவனோடு ஒன்றி இருப்பதை உணரும் வரை ஒவ்வொரு மனிதனையும் உள்நின்று ஊக்கிக் கொண்டே
இருப்பேன்…”
விவேகானந்த சித்த புருஷர் நம் மக்கள் மத்தியில் 150 ஆண்டுகள் முன் வாழ்ந்து
மறைந்தாலும் இன்றும் நம் மனதில் வாழ்கிறார்.
கட்டுரையாளர் அறிமுகம்: ஸ்ரீ இரா.பெருமாள் ராசு, ஆசிரியராக 40 ஆண்டுகள்
பணியாற்றி ஓய்வு பெற்றவர்; கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். கவிதை, ஓவியம் ஆகிய துறைகளில்
இன்றும் தொடர்ந்து ஈடுபடுபவர், திருவண்ணாமலை சித்தர் யோகி ராம்சுரத்குமார் அவர்களின்
அணுக்கத் தொண்டராக இருந்தவர், ஆனந்த விகடன் பத்திரிகையில் இவர் எழுதிய "மாத்தி
யோசி" தொடர் பிரபலமானது. 10 நூல்களை எழுதி இருக்கிறார்.
நன்றி : பாபாஜி சித்தர் ஆன்மீகம் - தீபாவளி மலர் - 2013
Tuesday, May 13
தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 24
"....இந்த ஊருக்கு ஏன் சென்னைன்னு பேரு வந்தது தெரியுமா..?
சென்னப்பநாயக்கர்னு ஆண்டாராம்..நோ..நாம வச்சிக்கிட்டோம்..,
சென்னை அப்டின்னு இருக்கும்.. அத பிரிச்சீங்கன்னா, செம்மையான நெய்னு அர்த்தம்..
செம்மையான நெய் எப்ப வரும் தெரியுமா..உடலிலே எந்த குறையும் இல்லாத பசுமாடு கன்றை
ஈன்ற பிறகு, முதல் 7 வாரத்தில் கிடைக்கக்கூடிய
பாலில் இருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு பேருதான் சென்னை..,
அப்படியாப்பட்ட பசுமாடுகள் மிகுந்த ஏரியாதான் இந்த சென்னையாம்..இது
நான் சொல்லல..கல்கி எங்க தன்னை பிறப்பிப்பதாக காட்டிக்கொள்கிறாரோ..
சென்னையின்னு அவரு குறிப்பிடல..அது வேற..ஏய்..நீ என்ன சென்னைன்னு புதுசா கதை உட்றனு நினைக்காவேணா..,
அவரு அப்படி குறிப்பிடுகிறார்…மூணுபக்கமும் கடல் சூழ்ந்திருக்கும்..அந்த இடத்திலே..அதற்கும் கீழே ரத்தக்களறியாக ஆகும்..ஸ்ரீலங்கா பிரச்னை..அதிகமான வலம்புரிசங்குகள் விளையும்..பே ஆப் பெங்கால்..,
சங்குன்னதும் ஒரு விஷயத்த சொல்லணும்..நம்ம ஆஸ்ரமத்துக்கு..நல்ல
ஒரு சகோதரி..மிகப்பெரிய ஒரு கிப்ட் கொடுத்தாங்க..அது ஒரு வலம்புரி சங்கு…,
அந்த பத்திரிகையில போட்டிருப்பேன்..விஷ்ணு சொல்றதா..ருக்வேதத்துல 8வது பரீட்சத்துல சொல்லுவாரு..என்னை
இந்தலோகத்தில் சங்காகவும், அல்லோகத்தில் சக்கரமாகவும் பார்க்கலாம்..,
ஆக்சுவலா,
சங்குன்னாலே..வலம்புரியா இருந்தாதான் பிராப்தம்..
வலம்புரின்னா,ரைட்..
இடம்புரின்னா, லெப்ட்..சங்கு பாத்தீங்கன்னா, மோர்ஆர் லெஸ் லெப்ட்டாதான் இருக்கும்..நோ..நோ..நீ வலம்புரிசங்காக என்னை காணும் பட்சத்தில் என்னை
பூலோகத்திலேயே பாத்துடலாம்..அப்படி இல்லன்னா, நீ மேல தான் வரணும்..சக்கரமாத்தான் பாக்கணும்..,
சர்ரா நமக்கு கிடைக்குமா..கிடைக்குமான்னா, ஒரு நாள்
கிடைச்சிருச்சி..,
இப்ப நம்ம ஆசிரமத்துல அந்த வலம்புரிசங்கு இருக்கு..உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது வந்து அந்த
வலம்புரிசங்கை பாருங்கள்..,
சரி சாமி..சந்தடி சாக்குல மார்க்கெட்டிங்கெல்லாம் பண்ணாதீங்க..இல்ல..,
கல்கி அவதாரம் பத்தி என்ன சொல்றீங்க..ஒண்ணுமில்ல..,
யார் யாரெல்லாம் கல்கி..
நாம கல்கின்னா, ஒரு குதிரையில கத்தி வச்சிட்டு வருவாரு..நோ..,
அவரு ஆழ்ந்து சொல்றது நீங்க புரிஞ்சிக்கணும்..,
அப்படியே வேறமாதிரி டிரான்ஸ்லேட் பண்ணனும்..,
சாமி..நாம கல்கி அவதாரமா எடுக்கலாமா.. எடுக்கலாமே..எப்ப..?
ஷாம்பு போட்டு குளிச்சிட்டு சலூனுக்கு போனீங்கன்னா, நீங்கதான் கல்கி..,
யாராவது போயிருப்பமா..,
இதுக்கு முன்னாடி ராமரே போயிருக்க மாட்டாரு..,
சரி..என்ன சாமி..உளர்றீங்க..நோ..நோ..பேக்ட்..,
கல்கின்னா,
என்ன..,
இப்படி நீங்க இருந்தா கல்கி..,
சவரம் பண்றவருக்கு அந்த இடம்தான் தொழில்..அந்த இடம்தானே தெய்வம்..அது அப்ப கோயில்தானே..அப்ப கோயிலுக்கு ஏன் பல்லு விளக்காம
போற..நிறைய பேரு இதுக்குன்னே சட்டை வச்சிருப்பான்..அத துவைக்கவே மாட்டான்..அங்க போயிட்டு அப்படியே..என்னவோ சலூன் கடைக்குப்போனா..வீட்ல உள்ள பெண்கள் எல்லாம்
பதறுவாங்க..அப்படியே தொடாத…தொடாதன்னு.. வாட்..நோ..அவன் கோயிலுக்கு போயிட்டு வர்றான்யா..அப்ப என்ன பண்ணனும்..போகும்போதே..அவரும் ஒரு மனிதர்தானே..அவன மதிக்கணும்..ஆசையா முடிவெட்டணும்..ஊருபட்ட அழுக்கோட போவான்..
அந்த சட்டையப்பாத்தா பரிதாபமான முறையில அவனுக்கே
இருக்கும்..பிச்சை போடற அளவுக்கு
போட்டுட்டு போவான் சட்டைய..சலூனுக்கு போடற சட்டையோட நம்மாளுங்க..கோயிலுக்கு முன்னால உக்காந்தா நிறைய சில்லற தேத்தலாம்..அந்தளவுக்கு போறாங்க..அப்படியெல்லாம் இருக்ககூடாது..,
அது ஒரு கோயில்..அது ஒரு மனிதநேயம்..நீங்க எங்கயும் இறைநேயம்
ஒண்ணு இல்ல பாருங்களேன்..மனிதநேயம்..,ஆண்கள்தாங்க அப்படி இருக்காங்க..பெண்கள் பாருங்க..பியூட்டி
பார்லர்க்கு போகும்போதே அழகாதான் போறாங்க..வெளியேவரும்போது அசிங்கமா
வறாங்க..,பெண்கள் எதாவது தப்பா நினைச்சிக்க போறாங்க..,
சரி..ரைட்..,
சரி சாமி வேற எப்படி நாம கல்கியாக மாறலாம்...?
என்னைக்காவது உங்கள..ரோடுல நீங்க போகும்போது 108டோ...ஒரு ஆம்புலன்சோ..உங்கள கடந்து செல்லும்போது..ஒரு நிமிஷம்…உங்களுக்கு எந்த தெய்வம் பிடிக்குதோ…பகவானே அந்த உயிர் திரும்பி நல்லபடியா வரணும்னு வேண்டிக்கிட்டீங்கன்னா நீங்கதான் கல்கி..,
ஆகையால..நீங்கள் அத்தனைபேருமே..பத்தாவது அவதாரத்தை எதிர்நோக்கி இருக்கவேண்டாம்..,
நீங்கள் அத்தனை பேருமே தசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி தான்…!"
..............நிறைவுபெற்றது..................நன்றி
என்னைக்காவது உங்கள..ரோடுல நீங்க போகும்போது 108டோ...ஒரு ஆம்புலன்சோ..உங்கள கடந்து செல்லும்போது..ஒரு நிமிஷம்…உங்களுக்கு எந்த தெய்வம் பிடிக்குதோ…பகவானே அந்த உயிர் திரும்பி நல்லபடியா வரணும்னு வேண்டிக்கிட்டீங்கன்னா நீங்கதான் கல்கி..,
ஆகையால..நீங்கள் அத்தனைபேருமே..பத்தாவது அவதாரத்தை எதிர்நோக்கி இருக்கவேண்டாம்..,
நீங்கள் அத்தனை பேருமே தசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி தான்…!"
..............நிறைவுபெற்றது..................நன்றி
Monday, May 12
தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 23
முந்தைய பதிவு (பாகம்22) ஸ்ரீவிஜயகுமார் சுவாமிகள் பேச்சு தொடர்கிறது..,
"...எந்த ஒரு மனிதனும் கடவுளைத்தேடி கண்டடைய முடியவே முடியாது..நீங்க தேடினீங்கன்னாவே மாட்னீங்க..,தேடறதுக்கு வந்து எங்கயோ மறைந்திருக்ககூடிய மறைபொருள் எல்லாம் அல்ல இறை தத்துவம்..,
"...எந்த ஒரு மனிதனும் கடவுளைத்தேடி கண்டடைய முடியவே முடியாது..நீங்க தேடினீங்கன்னாவே மாட்னீங்க..,தேடறதுக்கு வந்து எங்கயோ மறைந்திருக்ககூடிய மறைபொருள் எல்லாம் அல்ல இறை தத்துவம்..,
வேகண்டா இருக்கு..வாப்பா..தயவுசெய்து என்ன அலவ் பண்ணேன்..உள்ள அலவ் பண்ணு..கெஞ்சுது..இறை அனுபூதி கெஞ்சுது..நாம தயாரா இல்ல..நோ..,ஆகையால இப்ப நாம என்னா கத்துக்கணும்..அலவ் பண்ண கத்துக்கணும்..எந்த ஒரு விஷயத்தையும் அலவ பண்ண கத்துக்கணும்..ரைட் சாமி..,
அவதாரப்பெருமைகள்ல பாத்தீங்கன்னா,கிருஷ்ண அவதாரம் நடந்துகொண்டிருக்கும்போதே,
பலராம அவதாரம் நடந்துரும். ஆனா,
பலராம அவதாரம் என்னாத்துக்கு எதுக்குன்னு நம்ம நிறையபேருக்கு தெரியவே
தெரியாது..,பலராம அவதாரம்தான் இருக்குற அவதாரங்கள்லயே பெஸ்ட்
அவதாரம்..,இதுல பெஸ்ட்..பெட்டரு..இது சூப்பர் குவாலிட்டி..இது தரை டிக்கெட்..இது பர்ஸ்ட் கிளாஸ்ன்ல்லாம் பிரிக்கல..ஒரு பேச்சுக்கு சொல்றேன்..,
என்ன காரணம்னா, பலராம அவதாரத்துல எந்த ஒரு ஆயுத த்தையும் அவரு எடுக்கவே மாட்டாரு..
ஏர்கலப்பைய வச்சிருப்பாரு..பலராம அவதாரத்துல ஆழ்ந்து பாத்தீங்கன்னா, ஏர்கலப்பைய வச்சிருப்பாரு..என்ன சொல்றாரு..தசாவதாரங்கள்ல பாத்தீங்கன்னா,
எங்கயுமே எந்த ஒரு அவதாரத்துக்குமே வேலை கிடையாது..பலராம அவதாரத்துல மட்டும்தான் அவரு ஒர்க் பண்ணுவாரு..என்ன விவசாயி..,
மஹாவிஷ்ணு..அவதாரம் எடுக்கும்போது புரபஷனலா எடுத்தது பலராம அவதாரம்..என்ன சொல்றாரு..தம்பி..ஏர்முனைக்கு
எதிர்முனை எதுவுமே இல்ல..ஒரு பாட்டுல கூட வரும்..விவசாயத்த தயவுசெய்து கைவிட்றாத..பிளாட்டெல்லாம் அதிகமா போட்றாத..எதிர்காலத்துல வீடு இடிச்சி
விவசாயம் செய்யறமாதிரி ஆயிடும்..எப்படி..இப்ப பிளாட்டு போட்டுடற..ஓகே ரைட்…எதிர்காலத்துல என்னா ஆகும்..,வீட்ட இடிச்சி நீ விவசாயம் பண்ணுவே..அந்த நிலைமைக்கு வரக்கூடாது..,
நாங்கூட அறிவுறுத்துவேன்..இருக்கற புரபஷன்லயே..பகவானே
காட்டின புரபஷன்..விவசாயம்..,
இருக்குற தொழில்லயே பெரிய தொழில் விவசாயம்..நாங்கூட சொல்லுவேன்..நிறையபேரு வருவாங்க..என்ன
பண்றீங்க..சும்மா விவசாயம் பண்றேங்கம்பாங்க..யோவ்….அதான்யா பெரிசு…விசிட்டிங்கார்டு போடு..ராமசாமி,
கீழே விவசாயின்னு போடு..ஏன் போடமாட்டேன்ற..இசிட்..கம்ப்யூட்டர் இன்ஜினியர்னு போட்டுக்கிற..டாக்டர்னு போட்டுக்கிற..லொட்டு லொசுக்கெல்லாம் போட்டுக்கிற..,
சாப்பிட்டு ஆவனுமா எல்லா பயலும்..ஆகையால..போடு..
பேர போடு..விவசாயின்னு போட்டு விசிட்டிங்கார்டு அடி..கொடு..,
தட் இஸ் கால்ட் பை ரெவல்யூஷன்..,
இருக்கற அவதாரங்கள்லயே..இந்த ரெவல்யூஷன்..புரட்சின்னு
பாத்தீங்கன்னா,பலராம அவதாரம்..என்ன.
.எல்லாம் போதும்டா..ஞானமாவது கீனமாவது..வயிறு முக்கியம்டா..,
எப்படி...அது ஞானமெல்லாம் பாத்துக்கலாம்...நாளைக்கு..நாளான்னிக்கு பாத்துக்கலாம்..ஒன்னும் பிரச்னையில்ல..சாப்பாட்டுக்கு என்ன வழி இப்ப..விவசாயத்த தயவுசெய்து
கைவிட்றாத..அதைத்தவிர வேற ஒண்ணும் பண்ணமுடியாது..தட் இஸ் த பஸ்ட் புரபஷன்..காட்றதுதான் பலராம அவதாரம்..ரைட்சார்..,
முடிவா என்ன..கல்கி..கல்கி அவதாரத்த நான் எப்ப எடுக்கப்போறேன்..
நான் சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்..,
...............நாளை தொடரும்,
...............நாளை தொடரும்,
Subscribe to:
Posts (Atom)



























