"…சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம்
சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும்.
அவ்வம்மையார்
பறவையைப் போல் வானத்தில் பறப்பார்.
ஒருமுறை யான்
வசித்த கல்லூரியின் மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம்
பறக்கிறது என்றால் விந்தையல்லவா?
அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானிகள் பலர்
சூழ்ந்து கொண்டு அம்மையார் நிலையை ஆராய்ந்தனர்.
அப்போது சென்னை
மியூசியத் தலைவராக இருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது.
அம்மையார் பறவை
இனத்தில் சேர்ந்தவர் என்றும் அவரிடம் பறவைக்குரிய கருவி காரண அமைப்புகள் சில உள்ளன
என்றும், ஊர்தல் (Evolution) அறப்படி அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்று
அவரால் விளக்கப்பட்டது.
அவர் விளக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லலை.
யான் தேசபக்தன்
ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்டாவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. அமரர் ராவ்
அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்.
பறவை நாயகியர்
நிலை மனோதத்துவத்திற்கு எட்டுவதா? எண்ணிப்பாருங்கள்…"
-இது 'உள்ளொளி' நூலில் தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள்
பறவை சித்தர் பற்றி எழுதிய குறிப்பு.
இப்படிக் குறிப்பிடப்படும் அந்த பறவை சித்தரின் பெயர் ஸ்ரீசக்கரை அம்மா..,
சிவனையும், ஸ்ரீசக்ரத்தையும் வழிபட்டு வந்ததால், இவருக்கு ஸ்ரீசக்ர அம்மா என்றிருந்த பெயர் மருவி, காலப்போக்கில் ஸ்ரீ சக்கரை அம்மாவாக மாறிப்போனது..,
அட்டமா சித்திகளில் ஒன்றான, லஹிமா எனும் காற்றில் பறக்கும் சித்து கைவரப்பெற்ற மகாயோகி இவர்.அப்படி இவர் பறந்ததால் அப்போது சென்னையில் ஏற்பட்ட பரபரப்பைத்தான் திருவிகவே தனது நேரடி சாட்சியமாக பதிவு செய்து வைத்திருக்கிறார்..,
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், அடிமுடிப்பரதேசி, போளூர் விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ ரமண மகரிஷி போன்றோருடன் ஸ்ரீ சக்ர அம்மாவிற்கு சந்திப்பு நிகழ்ந்தவைகளுக்கான ஆதாரங்கள் உள்ளன..,
அம்மா மஹாசமாதி அடைந்த பிறகு, இவரது சமாதிக்கு வந்த மஹாபெரியவா இங்கு ஐந்து நாட்கள் தங்கி இருந்து தவம் செய்திருக்கிறார்..,
எத்தனை பெரிய சக்திமையமாக அம்மாவின் மஹாசமாதி இருக்கும் என்பதை மஹாபெரியவா இந்த இடத்தை தேர்வு செய்ததிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம்..,
இத்தனை மகத்துவம் வாய்ந்த ஸ்ரீசக்ர அம்மாவின் மஹாசமாதி சென்னை திருவான்மியூரில் கலாஷேத்திரா ரோடில் அமைந்துள்ளது.
ஸ்ரீசக்கரத்தின் சக்தி பிரவாகமாக, திகழும் இந்த மஹாசமாதியில் அம்மாவின் சிலையுடன் ஒரு கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நாளை 29 (ஜூன்) காலை 7.30முதல் 9மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
நேரில் தரிசிக்க வாய்ப்பு இருப்பவர்கள் சென்று, ஸ்ரீ சக்ர அம்மாவின் பரிபூரண அருளை பெறுங்கள்..குருவே சரணம்..!
தொடர்புகொள்ள ; விஸ்வநாத குருக்கள் -9444017389
7 comments:
நல்ல தகவல்.ஸ்ரீசக்ர அம்மாப் ப்ற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி..!
நன்றி
டக்டர்.உமெஷ்
Thagalin anithu padivum padithu mudithuvitan. moondravathu kan nekalchum ungal eluthu vadivil koduthal nandru. aavaludan ungal eluthai padika kathu irukan. jjmmiuod
வணக்கம்
என்ன ஒரு ஆச்சரியம். இந்த பதிவு என் கண்ணில் பட்ட நாள் இன்று. இந்த பதிவு போட்டு சரியாக இன்றோடு 3 வருடம் ஆகிவிட்டது.
நன்றி
சாமிராஜன்
வணக்கம்
இந்த லிங்க்-இல் பாபாஜி தன்னை கண்டுபிடிப்பது பற்றி கூறி இருக்கிறார். http://prabanjaveliyil.blogspot.com/2013/09/blog-post_9.html
//"...என்னோட ரெண்டு பாதத்துலயும், கடைசி விரலுக்கு முந்தின விரல்,
மேல தூக்கினமாதிரி இருக்கும்.இதவச்சி நீ என்ன அடையாளம் கண்டுபிடிக்கலாம்..."னாரு./ -- பாபாஜி
//
ஆச்சரியம், எதேச்சையாக நான் ஸ்ரீ சக்ர அம்மாவின் பாதங்களை பார்க்கும் போது இவருக்கும் "கடைசி விரலுக்கு முந்தின விரல்,, மேல தூக்கினமாதிரி இருக்கிறது" என்னே ஒரு ஒற்றுமை.
நன்றி
சாமிராஜன்
Post a Comment