|
'தேவலோகத்துக்கு பறந்து சென்ற கருடன்'
|
"...வேதவிற்பன்னர்களும், பக்தர்களும் கூடி நின்னு, கருடனுக்கு எல்லா மரியாதையும் செஞ்சு, முறைப்படி எல்லா பூஜைகளையும் செஞ்சு, இதோ..இன்னைக்கு சாயந்திரம் 5 மணியில இருந்து, 6 மணிக்குள்ள அவர தேவலோகத்துக்கு வழியனுப்பி வச்சிருக்காங்க.
இந்த கலியுகத்துல மானுட குலத்தை பாவங்கள்ல இருந்து காப்பாத்தி, மோட்சத்துக்கு வழிகாட்டிட்டு இருக்கும் அந்த வேங்கடவனுக்கு பிரம்மா நன்றி தெரிவிச்சு இன்னையில இருந்து ஒரு 9 நாளுக்கு விழா நடத்தறாரு.
இதத்தான் பிரம்மோற்சவம்னு குறிப்பிடறாங்க.
இந்த விழாவுக்கு தேவலோகத்துல இருந்து, விழா நடத்துற பிரம்மா,இந்திரன், யமன், அக்னி, குபேரன்,வாயுதேவன், மற்றும் சப்தரிஷிகள், யோகியர், முனிகள்னு சகலமானவர்களும் கலந்துகொள்கின்றனர்.
அவங்கள எல்லாம் முறைப்படி விழாவுக்கு வரச்சொல்லி அழைக்கிறதுக்காகத்தான், இன்னைக்கு கருடன் புறப்பட்டு தேவலோகத்துக்கு போயிருக்காரு.
|
கருடன் இருக்கும் கொடியினை கொடிமரத்தில் ஏற்ற தயாராகிக்கொண்டிருக்கும் காட்சி
|
இன்னைக்கு ராத்திரியில இருந்தே திருமலை ஒரு தேவலோகம் மாதிரிதான் ஜொலிச்சிட்டு இருக்கு..இன்னும் எல்லா தேவர்களும் வந்து சேர்ந்ததும், திருமலை முழுக்க அற்புதமான வைப்ரேஷன் நிரம்பி வழியும்..,
ரிஷிகளும், யோகிகளும், தேவர்களும் நிரம்பி வழியும் இந்த 9 நாட்கள்ல, திருமலையில எதோ ஒரு இடத்துல அமைதியா உக்காந்து வேங்கடவன மனசுல பிரார்த்தனை செஞ்சுட்டு இருந்தாகூடப்போதும்...,
|
கருடனை தேவலோகத்துக்கு அனுப்புவதற்கான பூஜைகள்
|
இந்த மகான்களோட ஆசி நமக்கெல்லாம் பரிபூரணமா கிடைக்கும்..,போகமுடியலேன்னாலும் பரவாயில்ல..இருந்த இடத்துல இருந்தபடியேகூட 'ஓம் நமோ வேங்கடேசாய' -ன்னு மனசால அந்த வேங்கடவன நினைச்சு பிரார்த்தனை செய்யுங்க..,நீங்க வேற ஒரு ஆளா மாறுவீங்க..இதெல்லாம் வெறுமனே விளம்பரத்துக்காக செய்யப்படுகிற வெற்று விழாக்கள் இல்லீங்க..இதுக்கு பின்னால நிறைய சூட்சும மான சங்கதிகள் நிறைய மறைஞ்சு கிடக்கு.
|
...ஆரத்திய எடுத்துக்குங்க..
|
இதெல்லாம் சாமானிய மக்களான நம்மால புரிஞ்சிக்கமுடியாது. மானுட நலனுக்காக, ரிஷிகளும் ,முனிகளும், மகான்களும் இந்த திருமலையில நிறைய விஷயங்கள செஞ்சிக்கிட்டே இருக்காங்க.அதோட தொடர்ச்சிதான் இந்த பிரம்மோற்சவம்..இது ரொம்ப..ரொம்ப பவர்புல்..இவ்ளோமட்டும்தான், இப்போதைக்கு என்னால சொல்லமுடியும்..அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்..இந்த பூமிக்கு மட்டும் இல்லீங்க..இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கே தலைவன்தான் இந்த வேங்கடவன்..அவருக்கான இந்த விழா..நம்ம ஒவ்வொருத்தரோட நலனுக்காகவும், ஆன்ம முன்னேற்றத்துக்காகவும்தான் நடத்தப்படுது..நம்மோட அன்றாட தேவைகளுக்கான வேண்டுதல்களை மட்டுமே முன்வைக்காம, நம்மோட ஆன்ம முன்னேற்றத்துக்காகவும், இது போன்ற விழாக்களை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்..,
|
தங்கக்கொடிமரத்தின் அருகாமைக்காட்சி
|
அதனால, முடிஞ்சவங்க..திருமலைக்கு போயிட்டு வாங்க..அந்த அற்புத அதிர்வலைகள் உங்களுக்குள்ளும் சில மாற்றங்களை நிகழ்த்த, அந்த வேங்கடவன் அருள் புரியட்டும்..!
கோவிந்தா..கோவிந்தா..கோவிந்தா..குருவே சரணம்..!
4 comments:
வணக்கம்
அருமையான நிகழ்வை அழகாக பதிவின் மூலம் வெளிப்படுத்திய விதம் மிக அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க..உங்களோட வருகையும்,பாராட்டும்தாங்க இப்படியெல்லாம் எழுதுவதற்கான தூண்டுகோலா அமையுது..நன்றி..!
ஆத்மார்த்தமான அருமையாஅ பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
நன்றி..நன்றி..நன்றி..!
Post a Comment