Monday, June 17

ராமநாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள்!
பொதுவாக ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்நியாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து கேட்பதாக ஒரு ஐதீகம்.

இதனால்தான் துளசிதாசர் ஸ்ரீ ராமாயண பிரவசனம்(சொற்பொழிவு) தொடங்கும் முன்னர் பக்தர்களை பிரதட்சனமாக சுற்றி வருவாராம் .அங்கு பக்தர்களுடன் பக்தராக மாருதியும் எழுந்தருளிருப்பார் என்பதாலேயே அனுமனை வணங்கும் விதமாக துளசிதாசர் பக்தர்களை வலம் வந்து வணங்கியபிறகே, தனது சொற்பொழிவை துவக்குவாராம்.

அதனாலேயே, ராமநாமத்தை சொல்லும் முன்பாக அந்த இடத்தில் ஒரு சிறிய மனையைப்போட்டு அதன்மீது ஒரு சுத்தமான துணியை போர்த்தி ஒரு இருக்கை தயார்செய்துவைத்துவிட்டுத்தான் ராமாயண உபன்யாசம் துவக்கப்படுவது வழக்கம்.

நிச்சயம் அங்கு அனுமன் வந்து அந்த மனையில் அமர்ந்து ராமகாதையை மனம்குளிர்ந்து கேட்பார் என்பது இதுநாள் வரை பலரும் சொல்லக்கேட்டிருப்போம்.

ஆனால், நிஜத்தில் அப்படி ஒருக்காட்சியே அரங்கேறி பார்ப்பவர்களை சிலிர்க்கவைத்திருக்கிறது.

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நகரம்தான்  ரட்லம்(Ratlam).


 இங்கு காளிகாமாதா எனும் மிகவும் பிரபலமானதொரு கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு சமீபத்தில் ஸ்ரீராமாயண சரித்தித்தை உபன்யாசம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராமா..ராமா..என உபன்யாசகர் பாட ஆரம்பித்ததும்...அங்கே அழகான ஒரு வெண்குரங்கு வந்து அதை ரசிக்கத்தொடங்கிய அழகை நீங்களே பாருங்கள்!

மைக்கைப்பிடித்தபடி  ஸ்ரீராமன் புகழை கேட்கும் காட்சி

ஸ்ரீராமன் புகழ்பாடிய உபன்யாசகரை தழுவும் காட்சி

ஸ்ரீராமன் புகழ் பாடிய உபன்யாசகரை ஆசீர்வதிக்கும் காட்சி

ஸ்ரீராமனுடைய பாதங்களை மலர் எடுத்து பூஜிக்கும் காட்சி


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்ம மும் மரணமும் இன்றித்தீருமே
இம்மையே இராம என்றிரண் டெழுத்தினால்.....!

ஓராயிரம் மகப்புரி பயனை உய்க்குமே
சுராதிபர் செல்வமும் புகழும் நல்குமே
வீராய் எனும் பாவங்களை வேரறுக்குமே
இராம என் றொரு மொழி இயம்பும் காலையே...!

மும்மை சால் உலகுக்கு எல்லாம் 
மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப்பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான்...!

இப்படி ராமநாமத்தின் சிறப்புகளை கம்பர் பாடியதன் சுவையை இந்த வானரமும் அனுமனாகவே வந்து ரசிக்கிறதோ..!

11 comments:

Gayathri Shriram said...

nice bakthi

பிரபஞ்சவெளியில் said...

தங்கள் வருகைக்கும், பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி

Anonymous said...

Nothing is equal to rama namma and RamaBakthi

Anonymous said...

Nothing is equal to rama namma and RamaBakthi

Anonymous said...

Rama Nammamay Janma Rakshaga mandram

spiyengar said...

6Rama Lakshmana Janaki Jai Bolo Hanumanuki

Anonymous said...

Rama namaththin perumaiyai solla no words at all. JAI HANUMAN

Anonymous said...

Great

J.bhuvanendra Bhoopathy said...

Om sriram Jayram!Rama rama hare!

கோமதி அரசு said...

அருமை.

Anonymous said...

Wonderful. Rama naama is greater than Rama Himself.
It is proved once again that in all creatures the soul (aanma) is one and the same.