Tuesday, March 31

அடுத்த சில மாதங்களில்..இவையெல்லாம் தலைப்புச்செய்தியாகும்..! அகத்தியர் ஜீவநாடி அமானுஷ்யங்கள்..!!

இனிய உறவுகளுக்கு, அன்பு வணக்கங்கள்..,
நான் கொஞ்சநாளா, இந்தப்பக்கமே வராம இருந்துட்டேன். அதுக்கெல்லாம் உங்க கிட்டே வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். அதுக்கு காரணம் இருக்கு.  சில மாதங்களா, வேந்தர் டிவியில மூன்றாவது கண் அப்படிங்கிற ஒரு நிகழ்ச்சிய பத்தி நீங்க எல்லாம் கட்டாயம் கேள்விப்படிருப்பீங்க. நான்தான் இந்த நிகழ்ச்சியோட இயக்குநர். அதனாலதான், கொஞ்சம் பிசி ஆகிட்டேன். ஆனா, இப்போ, எல்லாம் சித்தர்கள் வழிகாட்டுதலோட, சிறப்பா நடந்துட்டு இருக்கு. இந்த மூன்றாவது கண் நிகழ்ச்சியில, நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் பல கேரக்டர்ஸ் இதுவரைக்கும் வந்துபோயிருக்காங்க. அதுல, இன்னைக்கு வரவிருக்கிற ஒருத்தர் என்னை ரொம்பவே அசத்திட்டாரு. இவரோட  predictions ரொம்பவே துல்லியமா இருக்கு. இவர்கிட்ட சில வருஷங்களுக்கு முன்னாடியே, நரேந்திரமோடிக்கு அவரோட குடும்பத்தார் ஜீவநாடி பார்த்திருக்காங்க. 8 வருஷத்துல பிரதமராவாருன்னு அதுல வந்தபடியே இப்போ மோடி பிரதமாகியிருக்காரு. இப்படி, இந்த ஜீவநாடி சொல்ற பாபு ரொம்பவே சிம்பிளானவரா இருக்காரு. இவருக்குள்ள அகத்தியர் வந்துதான் இப்படி வாக்கு சொல்றதா இவரு சொல்ராரு. 
அகத்தியர்
கிரந்த தமிழ்னு சொல்லிட்டு இவரு வித்யாசமான மொழியில பாட்டு படிச்சு, பலன் சொல்ல தொடங்குறாரு. அதெல்லாமே இன்ட்ரஸ்டிங்கான மேட்டர்தான் ...இன்னைக்கு முடிஞ்சா, தவறாம வேந்தர் டிவிய, ராத்திரி 9.30 மணிக்கு பாருங்க. இந்த எபிசோட்ல நம்ம மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக, ஒரு ஸ்பெஷல் பிரடிக்‌ஷன் பார்த்து சொல்லியிருக்காரு.அதுல சில பயங்கரமான விஷயங்கள் மறைஞ்சிருக்கு. இதெல்லாம்தான் அடுத்து வரும் மாதங்கள்ல மீடியாக்களால பரபரப்பா பேசும் விஷயங்களா இருக்கும்னு இவரு மூலமா அகத்தியர் சொல்லியிருக்காரு...இன்னைக்கு எபிசோட் பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க..!
இவரு நம்மோட மூன்றாவது கண் நிகழ்ச்சிக்காக, ஸ்பெஷலாஒரு prediction பார்த்தாரு.அதுல இவரு சொல்லியிருக்கிறது இதெல்லாம்தான்..,
# ஒரு நடிகையோட திருமணம் தடை படும்..
# ஒரு நடிகர் கட்சி தொடங்குவார்
# ஒரு நடிகர் மரணம் அடைவார்..,
# ஒரு பெண் அரசியல் வாரிசுக்கு பிரச்னை வரும்
இப்படி தமிழகத்துல மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கும் சில விஷயங்களை கணிச்சு சொல்லியிருக்காரு.
இதெல்லாம் இந்த ஒன்றரை மாசத்துல நடக்கும்னு பாபு சொல்லியிருக்காரு.
இன்னைக்கு எபிசோட், ஒரு திரில்லிங்கான எக்ஸ்பீரியன்ஸ்..!
# ஒரு பெண் அரசியல் வாரிசுக்கு பிரச்னை..!
கட்சி தொடங்கவிருக்கும் ஒரு நடிகர்..!!
விவிஐபிக்கள் பார்த்து வியந்த
ஜீவநாடி ஜோதிடத்தின் அதிரடி கணிப்புகள்..!
...மூன்றாவது கண் அனுபவங்களோடு மீண்டும் சந்திப்போம். 

12 comments:

My Mobile Studios said...

eluthu payanam thodra vaalthukal. serial varanala unga program paka mudivathu ilai. vaaipu kidithathil tirupathi, jathaga kanipu, vellure thanner lingam parthan. tu r

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ரூபன் said...

வணக்கம்
வியப்பாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதியை விரைவில்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Natarajan Subramanian said...

நிகழ்ச்சிகள் மிகவும் அற்புதமாகவும் வியப்பாகவும் அமானுஸ்யங்கள் நிறைந்ததாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த பணி.

Natarajan Subramanian said...

நிகழ்ச்சிகள் மிகவும் அற்புதமாகவும் வியப்பாகவும் அமானுஸ்யங்கள் நிறைந்ததாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த பணி.

பிரபஞ்சவெளியில் said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..!

பிரபஞ்சவெளியில் said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..!

rajan said...

SIR, Excellent work.

pls kindly give JEEVANADI BABU contact details.

thanking you

rajan.r
rajanprofitz@gmail.com

padma kumar said...

Sir,
Vellore மாவட்டம் வாலாஜா தாலுகா வில் , சாது சுப்பிரமணி அவர்களை பதினைந்து வருடங்களாக அகத்திய சித்தர் ஆட்கொண்டு, தன்னை நாடி வரும் நோயாளிகளின் முகத்தை பார்த்து , நோயின் தன்மை மற்றும் வேறு எந்த மருத்துவ முறையினாலும் கண்டு அறியமுடியாத நோயின் மூல காரணத்தை செய்யுள் வடிவிலே மிக துல்லியமாக எடுத்து உரைத்து , சித்தா மற்றும் வர்மா முறையினை பயன்படுத்தி , பிணியினை போக்கி வருகிறார்.
பொருளாசை, இன , மத, சமுதாய பேதம் இன்றி மனித நேயத்துடன் சாது சுப்பிரமணி அவர்களை இந்த தொண்டினை செய்து வருகிறார். பத்து வருடங்களாக எந்த மருத்துவராலும், குணப்படுத்த முடியாத என் நோயினை சுப்பிரமணி அய்யா அவர்கள் குணப்படுத்தினார். என்னை போன்று மற்றவர்களும் பயன் பெரும் வண்ணம் தங்களுடைய நிகழ்ச்சி தொகுப்பில் சாது சுப்பிரமணி அவர்களை பற்றி எடுத்துரைக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

சாது சுப்பிரமணி அவர்களும் camera முன்பு , அகத்தியர் அருளால் நோயாளிகளை குணப்படுத்தும் முறையை செய்து காட்ட விருப்பம் தெருவித்துள்ளர்.தொடர்புக்கு . 98409 66364,98426 14064

Padmakumar,
99404 64864

ram prasath said...

Padma Kumar sir, Kudos to your helping mind. Not many people in this world will do this. Let god keep you without any trouble and happy always.

Regards,
Ram

naveen shankar said...

# ஒரு நடிகையோட திருமணம் தடை படும்..
# ஒரு நடிகர் கட்சி தொடங்குவார்
# ஒரு நடிகர் மரணம் அடைவார்..,
# ஒரு பெண் அரசியல் வாரிசுக்கு பிரச்னை வரும்
Above predictions ellamey nadandhicha anybody tell me

Sai Keerthi said...

There are no specific charges. You can keep Dakshina as you wish.