Tuesday, December 11

ஓஷோவின் பிறந்தநாள்

உலகம் முழுக்க பலருக்கு ஆன்மதரிசனத்த போதிச்ச பகவான் ஓஷோவுக்கு இன்னைக்கு பிறந்தநாள். ஒவ்வொரு கணமும் அவர் மூலமா உலகம் முழுக்க பலருக்கு இன்னைக்கும் அவரோட தொடர்பு கிடைச்சிகிட்டேதான் இருக்கு. ஓஷோ மாதிரியான ஞானிக்கெல்லாம் உடல் ஒரு கருவி மட்டும்தான். அவரோட பேச்சுகளும், புத்தகங்களும் கூட ஒரு சாதாரண மனிதனுக்கு அவரோட அருகாமைய உணரவைக்கக்கூடிய அபூர்வ சக்தி பெற்றவை. அந்த மாபெரும் ஞானி, ஆன்மப்பேரொளி பகவான் ஓஷோ இந்த உலகத்துக்கு ஆசானாக வந்துதித்த இந்த நாளில் அவரை வாழ்த்துவோம்...தொடர்ந்து இந்த மானுடகுலத்துக்கு ஞான வழி காட்ட வேண்டுவோம்..!
                                                 
                                                               HAPPY BIRTHDAY OSHO


 
மிகவும் அரிய வீடியோவான இது 1972ல் அவரது பிறந்தநாள் விழாவின்போது எடுக்கப்பட்டது. (இதில் வீடியோ மட்டும்தான் பதிவாகியுள்ளது, ஆடியோ இல்லை )

நீங்களும் இந்த மகானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மகிழுங்கள். உங்களுக்குள்ளும் ஒரு ஆன்மவெளிச்சம் பரவுவதை உணருங்கள்.
குருபரம்பரையின் மிகமுக்கியமான ஒரு குரு ஓஷோ!
வணங்குவோம்! வாழ்த்துவோம் அவரை!

Tuesday, December 4

திருமலைக்கு வரும் காணிக்கைகள் பாகம்-01

ரொம்பநாளாகவே திருமலைக்கு வரும் காணிக்கைகளப்பத்தி எழுதணும்னு விருப்பம் இருந்துட்டே இருந்தது. பத்திரிகைகள்ல வரும் செய்திய பார்க்கற எல்லாருக்குமே, அந்த காணிக்கைய பத்தின ஒரு மலைப்பு மனசுல எழுவதுண்டு. அத பாக்கணும்னு எல்லாருமே ஆசைப்படுவாங்க. அதற்கான முதல் முயற்சி பெருமாள் அருளால இன்னைக்குதான் உத்தரவாகியிருக்கு.
திருமலை திருப்பதியில பெருமாளுக்கு வரும் வித்யாசமான காணிக்கைகள பத்தி இந்தத் தொடர் உங்களுக்கு விளக்கமாக சொல்லும்.


பெருமாளுக்கு காணிக்கையாக்கப்பட்ட தங்கச்சங்கு

 

டிசம்பர் 3ம்தேதியான நேற்று, திருமலை திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீகாஞ்சி சங்கர மடம் சார்பாக ஒரு கிலோ எடையுள்ள தங்கச்சங்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.இதன் மதிப்பு ரூ.30 லட்சம். விசேஷநாட்கள்ல சுவாமிக்கு இந்த தங்கச்சங்கின் மூலமாக அபிஷேகம் செய்யப்படும்னு தேவஸ்தானம் அறிவிச்சிருக்கு.
இதுக்கு முன்னாடி (இப்பதான் கொஞ்சநாளுக்கு முன்னால) எல்லாரையும் ஆச்சரியப்படுத்துன ஒரு காணிக்கை யாரோ ஒரு பக்தர் பெருமாள் உண்டியல்ல மூன்று தங்கசிலைகளை காணிக்கையா செலுத்தியிருந்தாரு.(தன்னோட பெயரை வெளியிட விரும்பாத  சென்னை பக்தர்)

திருமலை உண்டியலுக்கு காணிக்கையாக வந்த அந்த மூன்று  தங்கவிக்ரகங்களில்
முதலாவது ஸ்ரீவெங்கடேஸ்வரா  விக்ரகம் 2கிலோ571கிராம் எடை கொண்ட தங்கத்தாலானது. இந்த விக்ரகத்தில் 1014 வைரம், 552 ரூபி, 197 பச்சைக்கல்,1நீலக்கல் பதிக்கப்பட்டிருந்தது.

இரண்டாவதாக ஸ்ரீ பத்மாவதி தாயாரின் சிலை 101கிராம் தங்கத்தாலானது.

மூன்றாவதாக ஸ்ரீ லட்சுமிதேவியின் சிலை 81கிராம் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது.

ஆக மொத்தம் இந்த மூன்று சிலைகளும் சேர்த்து 

 

இவற்றின் மதிப்பு  ஒரு கோடியே இருபத்தைந்து லட்சத்து இருபத்தேழு ஆயிரத்து எண்ணூறு ரூபாய்!(Rs.1,25,27,800.00/-) 


காணிக்கையா வந்த அந்த மூன்று விக்ரகங்களை இந்த வீடியோவுல பாருங்களேன்!       

 

 

 

 

 

     ஓம் நமோ வேங்கடேசாய !








Monday, December 3

புத்தரின் போதிமர தரிசனம் - தொடரும் குருபரம்பரை

தொடரும் குருபரம்பரை

இந்தத் தொடரில் என்னுடைய பணி அவர்கள் என்னை எழுதத் தூண்டும்போது எழுதுவது மட்டுமே, மற்றபடி முன்கூட்டியே திட்டமிட்ட எதையுமே இங்கு செயல்படுத்தமுடிவதில்லை.
நானும் பலமுறை பலபுத்தகங்களை தரவிறக்கம் செய்து அவசரஅவசரமாக படித்து எழுத முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு பதிவேற்றமுடியாமல் ஆகிவிடும்.
அதனால், இப்போதெல்லாம், இயல்பில் விட்டுவிட்டேன். அது சிறப்பாகவே நடந்துவருகிறது, அப்படித்தான் இதுவும்...,


புத்தம் சரணம் கச்சாமி


குருபரம்பரையில் இடம் பெறவேண்டிய மிகமுக்கியமான ஒரு அம்சம் போதிமரம்.  சித்தார்த்தனாக இருந்தவர் கௌதம புத்தராக ஆன்மதரிசனம் பெற்ற இடம் புத்தகயா.

புத்தரின் ஆன்மதரிசனத்தின் சாட்சியாக இன்றும் பலருக்கு காட்சி தந்துகொண்டிருக்கிறது புத்தகயாவில் இருக்கும் இந்த போதிமரம் (வழக்கத்தில் இது அரசமரம்தான், புத்தபிரானால் இந்த மரத்திற்கும் கிடைத்த புனிதத்துவம்தான் போதிமரம் என்றழைக்கப்படுவதன் காரணம்).




இன்றும்  பிரபஞ்சசக்தியின் அதிர்வுகளுடன் பலரது ஆன்மதரிசனத்திற்கு இந்த இடம் வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.

மரங்களில் அரசமரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இரவு, பகல் என இருவேளையும் இந்த மரம் ஆக்சிஜனை வெளியிடுவதால் இது மரங்களுக்கு எல்லாம் அரசன்.
ஆம்,அதுமட்டுமல்ல ' மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் ' என கீதையில் கண்ணன் குறிப்பிட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


மனிதகுலம் தழைக்க வேதங்களை முதன்முதலில் எழுத்தில் கொண்டுவர காரணமாக இருந்தவர் ஸ்ரீகிருஷ்ணர்.
அத்தகைய வேதங்களை அவரவர் மொழியில் தரவேண்டும் என பாலி மொழியில் கொடுத்தவர் புத்தர்.
ஒருசேர ஸ்ரீகிருஷ்ணரையும், புத்தபிரானையும் நம் நினைவில் கொண்டுவர இந்த போதிமரம் நமக்கு உதவிக்கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் ஒளிரூபமாக அவரை இருந்த இடத்தில் இருந்தபடியே தரிசிக்க நமக்கு வாய்த்திருக்கும் நல்வாய்ப்பு இது!
தரிசிப்போம் புத்தபிரானை!

                                                          புத்தரை தரிசிப்போம்!