Tuesday, January 7

உற்சவர் உலா வந்தால் தீவிபத்து - திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள்


ஓம் நமோ வேங்கடேசாய..!

HAPPY NEW YEAR 2014..!

இந்த வருஷத்தப்பொருத்தவரைக்கும், நானே எதிர்பாராத பல மாற்றங்கள் என்னோட வாழ்க்கையில நடந்திருக்கு. எப்போதும் உடன் இருந்து என்னை வழிநடத்தும் குருவருளே அதற்குக் காரணம்..குருவே சரணம்..!

சமீபத்துல, தீடீர்னு திருமலை திருப்பதி கோயில் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதரோட ஒரு தொடர்பு கிடைச்சது.


 திருமலை திருப்பதியில இருக்குற தீர்த்தங்களப்பத்தி ஒரு நிகழ்ச்சி தயாரித்து  நீ வெளியிட வேண்டும்னு என்னோட குரு கவிஞர் பெருமாள்ராசு ஐயா அவர்கள் என்னிடத்தில்,என்னைக்கு சொன்னாரோ, அதுல இருந்தே, இப்படித்தான் திருமலை சம்மந்தமான, பல அரிய தகவல்கள் எனக்கு, தானாகவே, கிடைச்சிட்டு வருது. 

பல மகான்கள் வியந்த அந்த திருமலை திருப்பதியோட தீர்த்த விபரங்கள் எனக்கு கிடைக்க தொடங்கினதே கூட ஒரு அற்புதம்தான்..!

அப்படித்தான், டாக்டர் ரமண தீட்சிதரோட தொடர்பு கிடைச்சதும், திருமலை திருப்பதி பத்தி அவரோட ஆழமா பேசப்பேச,அவர் சொன்ன பல அற்புதமான தகவல்கள் என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்துச்சு..

உடனே, இத எளிமையா, வணிக நோக்கமெல்லாம் இல்லாம, பக்தர்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கமுடியுமான்னு யோசிச்சேன்..அதுக்கும் பெருமாளே வழி காட்டினாரு..

இதோ..இந்த புத்தாண்டு தினத்தில இருந்து, நிகழ்ச்சி  தந்தி டிவியில ஒளிபரப்பாகத் தொடங்கிடுச்சு..

திருமலை திருப்பதி- பிரபஞ்ச ரகசியங்கள் அப்படின்னு நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டி உங்க முன்னாடி தவழவிட்டாச்சு..

இதுல டாக்டர் ரமண தீட்சிதர் பத்தி உங்களுக்கெல்லாம் ஒரு சின்ன அறிமுகம் தேவை..

இவர் மைக்ரோ பயாலஜியில டாக்டரேட் முடிச்சிருக்காரு. விஞ்ஞானியா வேலை செய்ய வரும்படி பல வெளிநாடுகள்ல இருந்தெல்லாம், வந்த வேலைவாய்ப்புகள மறுத்துட்டு, 

திருமலை திருப்பதி கோயில்ல இவங்க குடும்பத்துக்கென்று இருக்கும் பரம்பரை அர்ச்சகர்  உரிமை மூலமா, திருமலை திருப்பதி கோயில்  பிரதான அர்ச்சகரா வேலை பாத்துட்டு இருக்காரு. 

ஒரு விஞ்ஞானியா இருக்கறதவிட தினந்தோறும், திருமலை கோயிலுக்குள்ள போயி பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யறத மிகப்பெரிய பாக்கியமா நினைக்கிறாரு. 

பலரும், நொடிப்பொழுதுகூட பார்க்கமுடியாத பெருமாளோட, தான் தினம்தினம் மணிக்கணக்கில் கூட இருப்பதே, இந்த உலகவாழ்க்கைக்கு போதுமானதுன்னு இவரு பெருமிதமா சொல்றாரு.

தொழிலதிபர் அம்பானி, பிரதமர் மன்மோகன்சிங், நடிகர் அஜித், இப்படி எந்த விவிஐபி பிரமுகர் திருமலை திருப்பதி கோயில் தரிசனத்துக்கு வந்தாலும் பிரதான அர்ச்சகரான டாக்டர் ரமண தீட்சிதர் மூலமாகத்தான்  அவர்களுக்கு தரிசனமும், மரியாதைகளும் செய்யப்படுவது வழக்கம்.

இந்த அளவுக்கு முக்கியத்துவம் இவருக்கு இருப்பதற்குக் காரணம் இவர் வெறுமனே, பிரதான அர்ச்சகர் அப்படின்றதால மட்டுமில்லீங்க, திருமலை திருப்பதி கோயிலில் கடைபிடிக்கப்படும் வைகானச ஆகமத்திலும் இவர் நிபுணத்துவம் பெற்றவர் அப்படின்றதாலதான்..,

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மனிதரை சந்திப்பதே மிகவும் சிரமம், ஆனால், அவரோ என்னைப்போன்ற  ஒரு சாதாரண ஆளின் சொல்லுக்கு மதிப்புகொடுத்து எனக்கு நேரம் ஒதுக்கி ,இப்படி ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என்ற எனது ஆலோசனையை ஏற்று, அதற்கு ஒத்துழைப்பு நல்குவதாக ஒப்புதலும் அளித்தார்.

சொன்னபடியே, செய்தும் காட்டினார்.., ஆம்..படப்பதிவின்போது, டாக்டர் ரமண தீட்சிதரின் எளிமையும், தன்மையோடு பேசும் பாங்கும்,  அவரது ஒத்துழைப்பும் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது.

அந்த பெருமாளே அவர்மூலமாக பல அரிதான தகவல்களை வெளிப்படுத்துவதாகத்தான் நான் கருதுகிறேன்.

நாமறிந்த திருப்பதியில் நாம் அறியாத தகவல்களை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்...இதுவரை பெருமாளின் மீது, தீராத காதலோடு, பக்தி மட்டுமே கொண்டு வணங்கி வரும் கோடானுகோடி பக்தர்களுக்கு வேங்கடவனைப்பற்றி விரிவாக விளக்கிச்சொல்லி, இன்னும் நெருக்கத்தை, புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் இந்த முயற்சியின் நோக்கம்..!


புத்தாண்டு முதல் வாரந்தோறும் தந்தி டிவியில் சனி, ஞாயிறு கிழமைகளில், காலை  உதயம் புதிது நிகழ்ச்சியில் சுமாராக காலை 7.10 முதல் 7.15க்குள் திருமலை திருப்பதி பிரபஞ்ச ரகசியங்கள் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியிருக்கிறது. 

உலகம் முழுக்க வியாபித்திருக்கும் பக்தர்களும் இந்த நிகழ்ச்சி குறித்து உங்களது ஆலோசனைகளை எனக்கு எழுதுங்கள்.., 

நீங்களும் கூட திருமலை திருப்பதி குறித்து உங்களுக்கு ஏற்படும் கேள்விகளை எனக்கு எழுதலாம், 

அதற்கான  பதிலைப்பெற்று  நிகழ்ச்சியில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும்..,

வேங்கடவனைப்பற்றி பேசுவதுகூட , கோவிந்த நாம சங்கீர்த்தனம் போல, இறைபணிதான்.., எனவே, வாருங்கள்..உங்களோடு கைகோர்த்து இந்த நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக்கலாம்..!

புத்தாண்டு தினத்தன்று , வெளியான முதல் நிகழ்ச்சி இதோ..!

இதில், திருமலை, திருப்பதி கோயிலுக்குள் இருக்கும் சிலைகளைப்பற்றின பல அரியதகவல்களை பதிவு செய்திருக்கிறார் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர்..!

600 ஆண்டுகளுக்குமுன், குகையில் கண்டெடுக்கப்பட்ட சிலை..!

உற்சவர் உலா வந்தால் கிராமங்களில் தீவிபத்து..!


-நன்றி..தந்தி டிவி 

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மகிழ்ச்சி... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

வேங்கடவனைப்பற்றி பேசுவதுகூட , கோவிந்த நாம சங்கீர்த்தனம் போல, இறைபணிதான்..,

தங்கள் சிறப்பான பணிக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

பிரபஞ்சவெளியில் said...

திண்டுக்கல் தனபாலன், இராஜராஜேஸ்வரி..உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..நன்றி..நன்றி

தில்லை கோவிந்தன் வகையறா said...

மிக்க உபயோகமுள்ள தகவல்கள். மிகவும் நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

kannan said...

மிகவும் அருமை