Thursday, August 8

நித்யாநந்தா மஹாசமாதி தினம் - இன்று

1961ம் வருஷம்..,

ஆகஸ்ட் 8ம்தேதி..இதேநாள்

காலை 10.30 மணி..,

பகவான் நித்யாநந்தா மஹாசமாதி ஆன தினம்,



இந்த நாள்ல நாம எல்லாரும் அவருபத்தி நினைக்கணும்ங்கற ஒரே நோக்கத்துக்காகதான், இத்தனநாளா அவருடனான அனுபவங்கள தொடரா எழுதிட்டு வந்தோம்.

எந்த நோயா இருந்தாலும் அத தீர்த்துவைக்கறதுல வல்லவருங்க இவரு.

இன்னைக்கு காலை 10.30மணிக்கு..,

உலகத்தின் எந்த மூலையில இருந்தாலும் பகவான் நித்யாநந்தாவ நினச்சு பிரார்த்தனை செஞ்சுக்கோங்க..உங்களோட உடல்நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு உடனே ஒரு தீர்வு கிடைக்கும்..நோய் தீரும்..வேற எந்த பிரச்னையாக இருந்தாலும்..அது எல்லாமே  அவரோட அருளாசியினால சட்டுனு இருந்த இடம் தெரியாமல் மறைஞ்சிபோகும்.

சென்னையில இருக்குறவங்க இன்னைக்கு காலையில ஹீலர் லதா கபாலீஸ்வரன் அவங்களோட வீட்ல நடக்குற பூஜையில கலந்துக்கலாம்.

காலைல இருந்தே பகவானோட விக்ரகத்துக்கு மலர் அலங்காரமெல்லாம் செய்யப்படும். ஆனா, அபிஷேகம் மிகச்சரியா காலை 10.30 மணிக்குதான் தொடங்க உள்ளது.முடிஞ்சவங்க வாங்க.

அதே மாதிரி இன்னைக்கு பகவானோட மஹாசமாதி தினத்த முன்னிட்டு சாயந்திரம் 5.30மணியில இருந்து இரவு 8.30 மணி வரைக்கும் திநகர் தியாகராய ஹால்ல  இலவச தியான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. அனுமதி இலவசம்..இதுலயும் அவசியம் கலந்துக்கோங்க..ஏன்னா..இது ரொம்பவே பவர்புல்லான ஒரு விஷயம்.

மாஸ் ஹீலிங், கிரிஸ்டல் ஹோமம் இதெல்லாம் உங்களுக்கும் உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் அளப்பறிய சக்திய கொடுக்கும்.
இதுமட்டும் இன்னைக்கு போதுமா..?

பகவான் நித்யாநந்தாவப் பத்தி இவ்வளவு பேசின நாம அவரையும்,அவரு சமாதியான இடத்தையும் தரிசனம் செய்யாம இருந்தா அது அவ்வளவு முழுமையடைஞ்சதா இருக்காது.

குருக்களோட சமாதியில அவங்களோட வைப்ரேஷன நிச்சயமா உணரமுடியும்.

அதனால..பகவான் நித்யாநந்தாவோட கணேஷ்புரி ஆசிரத்துல எடுக்கப்பட்ட சில வீடியோக்களையும் பாருங்க..

பகவான் நித்யாநந்தா உயிருடன் இருக்கும்போது எடுக்கப்பட்டவை உள்பட மிகவும் அரிதான 9 வீடியோபதிவுகள்

'..மகாலட்சுமியோட ரூபம்ங்க அவரு..' இப்படித்தான் லதா சொல்றதா இந்தப்பதிவ ஆரம்பிச்சோம். சரியா இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கோம். திரும்பவும் எல்லாருக்கும் எல்லா செல்வங்களையும் தர்ற அதே வார்த்தையோட இந்த தொடர்பதிவ முடிக்கலாம்னு நினைக்கிறேன்.,

'..மகாலட்சுமியோட ரூபம்ங்க அவரு..'

குருவேசரணம்..!

1 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.