Monday, December 3

புத்தரின் போதிமர தரிசனம் - தொடரும் குருபரம்பரை

தொடரும் குருபரம்பரை

இந்தத் தொடரில் என்னுடைய பணி அவர்கள் என்னை எழுதத் தூண்டும்போது எழுதுவது மட்டுமே, மற்றபடி முன்கூட்டியே திட்டமிட்ட எதையுமே இங்கு செயல்படுத்தமுடிவதில்லை.
நானும் பலமுறை பலபுத்தகங்களை தரவிறக்கம் செய்து அவசரஅவசரமாக படித்து எழுத முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு பதிவேற்றமுடியாமல் ஆகிவிடும்.
அதனால், இப்போதெல்லாம், இயல்பில் விட்டுவிட்டேன். அது சிறப்பாகவே நடந்துவருகிறது, அப்படித்தான் இதுவும்...,


புத்தம் சரணம் கச்சாமி


குருபரம்பரையில் இடம் பெறவேண்டிய மிகமுக்கியமான ஒரு அம்சம் போதிமரம்.  சித்தார்த்தனாக இருந்தவர் கௌதம புத்தராக ஆன்மதரிசனம் பெற்ற இடம் புத்தகயா.

புத்தரின் ஆன்மதரிசனத்தின் சாட்சியாக இன்றும் பலருக்கு காட்சி தந்துகொண்டிருக்கிறது புத்தகயாவில் இருக்கும் இந்த போதிமரம் (வழக்கத்தில் இது அரசமரம்தான், புத்தபிரானால் இந்த மரத்திற்கும் கிடைத்த புனிதத்துவம்தான் போதிமரம் என்றழைக்கப்படுவதன் காரணம்).




இன்றும்  பிரபஞ்சசக்தியின் அதிர்வுகளுடன் பலரது ஆன்மதரிசனத்திற்கு இந்த இடம் வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.

மரங்களில் அரசமரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இரவு, பகல் என இருவேளையும் இந்த மரம் ஆக்சிஜனை வெளியிடுவதால் இது மரங்களுக்கு எல்லாம் அரசன்.
ஆம்,அதுமட்டுமல்ல ' மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் ' என கீதையில் கண்ணன் குறிப்பிட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


மனிதகுலம் தழைக்க வேதங்களை முதன்முதலில் எழுத்தில் கொண்டுவர காரணமாக இருந்தவர் ஸ்ரீகிருஷ்ணர்.
அத்தகைய வேதங்களை அவரவர் மொழியில் தரவேண்டும் என பாலி மொழியில் கொடுத்தவர் புத்தர்.
ஒருசேர ஸ்ரீகிருஷ்ணரையும், புத்தபிரானையும் நம் நினைவில் கொண்டுவர இந்த போதிமரம் நமக்கு உதவிக்கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் ஒளிரூபமாக அவரை இருந்த இடத்தில் இருந்தபடியே தரிசிக்க நமக்கு வாய்த்திருக்கும் நல்வாய்ப்பு இது!
தரிசிப்போம் புத்தபிரானை!

                                                          புத்தரை தரிசிப்போம்!






1 comments:

vv9994013539@gmail.com said...

Valuthukal. putharium arasamaratium tharisipoam.